Tuesday, March 8, 2011

மொபைலில் வரும் விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு


 உங்கள் மொபைலில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற நிறுவன சிம்கார்டு உபயோகிப்பவர்கள் தேவையில்லாத வரும் விளம்பர அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு உங்கள் மொபைலில் இருந்து START DND என்று மெஸேஜ்  டைப் செய்து 1909 என்ற் எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்கள்  நிறுத்தப்படும். 


அல்லது

வோடாபோன் உபயோகிப்பவர்கள் இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்தால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்எம்எஸ் நிறுத்தப்படும் சுட்டி 

ஏர்டெல் உபயோகிப்பவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்களுக்கான சுட்டி 

ஏர்டெல் லேண்ட்லை உபயோகிப்பவர்களுக்கான சுட்டி 
BPL Mobile - சுட்டி 
BSNL Mobile - சுட்டி
Aircel Chennai - சுட்டி
Aircel Tamilnadu - சுட்டி
TATA Indicom - சுட்டி
Idea Cellular - சுட்டி
MTNL Delhi - சுட்டி
MTNL Mumbai - சுட்டி
Relaince Mobile - சுட்டி
Spice Punjab - சுட்டி

உங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய



உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். 
பயன்கள் :
  • உங்கள் கணினியை பற்றி முழு தகவல்களையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதி அதுவும் சரியாக. 
  • உங்கள் கணினி எந்த பெயரில் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து IP முகவரி, OS, RAM, PROCESSOR, WINDOWS KEY , MONITOR, BROWSER, இப்படி அடுக்கி கொண்டே செல்லலாம். 
  • மேலும் நம் கணினியில் எந்தெந்த மென்பொருட்கள் நிறுவி உள்ளோம் அதனுடைய versons என்ன என்றும் காட்டுகிறது.
  • மறைந்துள்ள மென்பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது.
  • மற்றும் கணினியில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவலையும் காட்டுகிறது. 
  • இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.
  • அளவு 1MB யை விட சிறியது. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
பயன் படுத்தும் முறை


  • கீழே உள்ள download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  
  • நேரடியாக ரன் செயுங்கள். உங்கள் கணினி ஸ்கேன் ஆகி வரும். 
  • மேலே உள்ள மூன்று பட்டன்களை தேர்வு செய்து கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 
 
 

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver



நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.


பயன்கள் :
  • இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை. 
  • நாம் எந்த ப்ரோக்ராமில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்க படும். 
  • இந்த மென்பொருளை Install செய்ய தேவையில்லை, நேரடியாக இயக்கி கொள்ளலாம்.
  • சிறிய அளவே உடையது(768 kb) .தரவிறக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். 

உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற பைலை நேரடியாக உபயோகிக்கலாம்(Install செய்ய வேண்டியதில்லை). அந்த பைலை இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.  

  • Save Interval:  இந்த விண்டோவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.  
  • Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
  • முடிவில் Hide என்பதை கிளிக் செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும். 
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த ப்ரோக்ராமில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும் இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

Important Note : நீங்கள் Browsing ஆரம்பிப்பதற்கு முன்னாள் இந்த மென்பொருளை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வலை பக்கங்களையும் சேமிக்க ஆரம்பிக்கும். அப்புறம் தேவை படும் போது இயக்கி கொள்ளுங்கள்

எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்


சில தளங்களில் போட்டபிள் மென்பொருள் கிடைக்கும் ஆனால் எல்லா மென்பொருளுக்கும் கிடைக்குமாவென்றால் இல்லை என்பதாக பதில் இருக்கும் ஆனால் இங்கு நீங்கள் விரும்பும் எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் அதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது ஆனால் பதிவின் நீளம் கருதி இப்போடு ஒன்றை மட்டுமே எழுதுகிறேன் மேலும் இந்த பதிவின் வரவேற்பை பொறுத்து அடுத்த வழிமுறையும் விரைவில் எழுதப்படும் சரி விஷயத்துக்குள் செல்வோம் நீங்கள் இந்தகையடக்க மென்பொருள் மாற்றி தரவிறக்கவும் இதன் அளவு 7எம்பி-க்கும் குறைவே இதை வின்ரார் கொண்டு விரித்ததும் படத்தில் இருப்பது போல இருக்கும் இது விலையுள்ள மென்பொருள்தான் ஆனால் நான் கொடுத்துள்ளது கிராக் செய்யப்பட்டது தான் இதுவும் ஒருவகை குற்றமே இனி உங்கள் எலியால் இருமுறை கிளிக்கவும் புதிய சிறிய விண்டோ திறக்கும் இதனுள்ளேயே இன்ஸ்டாலேசன் மற்றும் இதற்கான கீயும் இருக்கிறது.


இப்போது நீங்கள் Serial என்பதை கிளிக்கினால் ஒரு நோட்பேட் திறக்கும் அதில் ஐந்து சீரியல் எண்கள் இருக்கிறதா அதில் முதலாவதாக இருக்கும் கீ எண் தான் நமக்கு தேவையானது அதை காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


இனி Install என்பதை கிளிக்கவும் இப்போது ஒரு புதிய விண்டோ திறக்கும்.


இனி I accept the terms in the License agreement என்பதன் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் குறி ஏற்படுத்தி பின்னர் Next என்பதை கிளிக்கவும்.


இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Serial Number என்பதில் நீங்கள் முன்னமே காப்பி எடுத்த சீரியல் எண்ணை முதல் கட்டத்தில் ஒட்டவும் இரண்டாவதாக கீழே இருக்கும் கட்டத்தில் உங்கள் விருப்பம் போல ஒரு பெயரை கொடுத்ததும் Install என்பதை கிளிக்கவும் கணினி பற்றி தெரியாதவர்களும் இதை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை விளக்கவும் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்.


இனி மென்பொருளில் கம்பைள் செய்யப்பட்டவைகளி உங்கள் கணினிக்கு காப்பியாகி கொண்டிருக்கும் Next என்பது எனாபிள் ஆனதும் Next கொடுக்கவும்.


இப்போது உங்கள் மென்பொருள் இன்ஸ்டாலேசன் முடிந்தது என்பதாக தோன்றும் இனி நீங்கள் Finish என்பதை கிளிக்கவும் அவ்வளவுதான் இன்ஸ்டாலேசன் முடிந்துவிட்டது.


இனி நீங்கள் உங்கள் கணினியின் Start ->Programs -> VMware -> ThinApp Setup Capture என்பதை கண்டுபிடித்து புரோகிராமை திறக்கவும்.


இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Next என்பதை கிளிக்கவும்.


திறக்கும் இந்த விண்டோவிலும் ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை Next என்பதை கிளிக்கவும்.



இனி இப்படியாக இருக்கும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம் தானகவே அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும்.



இந்த பக்கம் வந்தவுடன் இந்த விண்டோவே மினிமைஸ் செய்துவிட்டு நீங்கள் எந்த மென்பொருளை போர்ட்டபிளாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள், நிறுவி முடித்ததும் இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் மினிமைஸ் செய்து வைத்திருந்த விண்டோவை மேக்சிமைஸ் செய்து Next என்பதை சொடுக்கவும்.



இந்த பக்கம் வந்தவுடன் நீங்கள் நிறுவிய மென்பொருளின் ஸ்நாப்ஷாட் எடுக்க தொடங்கிவிடும் முடிந்ததும் தானகவே அடுத்த பக்கத்திற்கு செல்லும்.


இனி இப்படியாக பக்கம் இருக்கும் அதில் நீங்கள் நிறுவிய மென்பொருளின் .Exe மட்டும் தெரிவு செய்யவும் அதிகபட்சம் முதலாவதாக இருக்கும் மற்றவை தேவையில்லை, தெரிவு செய்ததும் Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.


இந்த பக்கத்தில் USB flash / poratble media (stored in directory with application) என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.


இந்த பக்கத்தில் Merged isolotion mode என்பதை தெரிவு செய்து Next கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.


இப்போது திறந்திருக்கும் விண்டோவில் Project Location என்பதை பிரவுஸ் செய்து நீங்கள் மாற்றும் போர்ட்டபிள் மென்பொருள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்யவும் அடுத்து அதன் கீழே இருக்கும் No compression (fastest for testing builds) என்பது தெரிவாகியிருக்கிறதா என பார்த்துக்கொண்டு Next என்பதில் கிளிக்கி அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.


இனி இப்படியாக வந்ததும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானாக நாம் மாற்ற விரும்பிய மென்பொருளில் ரிஜிஸ்டரி குறிப்புகளை சேமித்ததும் அடுத்த பக்கம் சென்றுவிடும்.


இனி இப்படியான இறுதி பக்கம் வந்ததும் Build Now என்பதை கிளிக்கவும் இதன் மூலம் நமது போர்ட்டபிள் மென்பொருள் கம்பைள் செய்யப்பட்டுவிடும் அல்லது Browse Project என்பதை கிளிக்கி திற்க்கும் போல்டரில் build என்கிற பேட்ச் பைல் இருக்கும் அதை இருமுறை கிளிக்குவதன் மூலமாகவும் கம்பைள் செய்யலாம் அவ்வளவுதான்.


இப்போது உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் bin எனும் போல்டரின் உள்ளே தயாராய் இருக்கும் அங்கு உங்கள் போர்ட்டபிள் மென்பொருள் தவிர மற்ற அனைத்தையும் அழித்து விடுங்கள் அது எதுவும் தேவையில்லை மேலும் நீங்கள் ஏற்கனவே நிறுவிய மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் போர்ட்டபிள் மென்பொருளை இயக்கவும், நீங்கள் போர்ட்டபிள் மென்பொருள் இயக்க தொடங்கியதும் சில போல்டர்கள் உருவாகும் அதை நீங்கள் அழித்தலும் மீண்டும் மென்பொருள் இயக்க தொடங்கியதும் அதேபோல போல்டர்கள் உருவாகும் எனவே அந்த போல்டரில் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் திறந்து Hiden கொடுத்து ஓக்கே கொடுத்து விடவும்.


இணைப்பை சொடுக்கி மென்பொருளை பதிவிறக்கி பயன்படுதவும்

மிகவும் பயனுள்ள மென்பொருள் - CASE CHANGER



நாம் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அவசர அவசரமாக ஏதாவது டாகுமென்ட் உருவாக்கும் போது நாம் பெரிய எழுதுக்களில்(UPPER CASE) அடிக்க வேண்டியதை எல்லாம் சிறிய எழுத்துக்களில்(lower case)  மறந்து டைப் செய்து விடுவோம். அல்லது இடையிடையே சேர்க்க வேண்டிய பெரிய எழுத்துக்களை அவசரத்தில் சேர்க்க மறந்திருப்போம் இது போன்ற சமயங்களில் நாம் டைப் செய்ததை அழித்து திரும்பவும் டைப் செய்வதற்கு பதில் அதை அப்படியே நாம் சரி செய்து கொள்ளலாம்.
இந்த வேலையை சுலபமாக செய்ய CASE CHANGER என்ற இலவச மென்பொருள் உள்ளது.  
பயன்கள்
  • ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் முன்னர் பெரிய எழுத்துக்களை அடிக்க தவறினால் "SENTENCE CASE" என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளவும்.
  • அனைத்தையும் பெரிய எழுத்துக்களிலேயே அடித்து விட்டால் அதை சரி செய்ய "lower case" or "tOgGle cAsE" என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளலாம்.
  • பெரிய எழுத்திக்களில் அடிக்க வேண்டியதை சிறிய எழுத்துக்களில் அடித்து விட்டால் சரி செய்ய "UPPER CASE" or "tOgGle cAsE" என்ற பட்டனை அழுத்தி திருத்தி கொள்ளவும்.
  • தலைப்பை சரியாக அடிக்க தவறினால் "Tittle Case" உபயோகிக்கவும்.
  • மற்றும் மிகச்சிறிய அளவே உடைய இலவச மென்பொருள்.
  • இதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை நேரடியாக உபயோகிக்கலாம்.
உபயோகிக்கும் முறை:
  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • Zip பைலை extract செய்த பின்னர் மென்பொருளை நேரடியாக இயக்கலாம்.
  • நீங்கள் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த இடத்தில் டைப் செய்து காப்பி செய்த அடுத்த வினாடியே இந்த மென்பொருளில் வந்து விடும் பேஸ்ட் செய்ய வேண்டியதில்லை. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கும்.
  • இங்கு உங்களுக்கு தேவையான பட்டனை அழுத்தி நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
  • இணையத்தில் காப்பி செய்தால் கூட இந்த மென்பொருளில் வந்து விடும்.
 
(அல்லது)

 

50GB வரை இலவச ஆன்லைன் ஸ்டோரேஜ்-50 GB,free online storage




நாம் தகவல்களை கணினியில் சேமித்து வைப்போம் ஆனால் அது முழுக்க முழுக்க பாதுக்காப்பானது கிடையாதுஅதுவும் மற்றவர்கள் நமது தகவல்களை திறந்து பார்க்கவும் வாய்ப்பு உண்டு. நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் இருக்கும் கணினி என்றால் பாதுகாப்பு மிக மிக குறைய்வு அதுவும் கணினி த்டீர் என செயலற்று போனால் நமது தகவல்கள் அழிந்து போகவும் வாய்ப்பு அதிகம். அதனால் நாம் நமது தகவல்களை சேமிப்பதற்கு இதுவரையில் CD , USB , போன்றவைகளை தான் பயன்படுத்தி வந்தோம். 
ஆனால்இவை அனைத்தையும் விட மிகவும் பாதுகாப்பானது நமது தகவல்களை ஆன்லைனில் சேமித்து வைப்பது. அதற்க்கு http://www.adrive.com/என்ற இந்த இணையத்தளம் மிகவும் பாதுக்காப்பானதாக உள்ளது. அது மட்டிமின்றி 50 ஜி.பி அளவிலான சேமிப்பு வசதியை இலவசமாக வழங்குகிறது. இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி அதன் பிறகு நாம் விரும்பும் தகவல்களை அதில் சேமித்து வைக்கலாம். ஆன்லைனில் இருப்பதால் நமது தகவல்களும் பாதுக்காப்பாக இருக்கும்.  நாமும் நமது தகவல்களை பற்றிய எந்த வித கவலையும் இன்றி இருக்கலாம். நாம் நமது கணினியில் இருந்து அழித்துவிட்டால் கூட இதில் சேமித்தது இருக்கும்எனவே பாதுக்காப்பான சேமிப்பை விரும்புபவர்களுக்கு ஏற்ற வசதி என்பதில் சந்தேகமே இல்லை. 
அது மட்டுமின்றி நாம் யாருக்காவது பெரிய அளவிலான file களை அனுப்ப நினைத்தால் முடியாத பட்ச்சத்தில் அதை நாம் இந்த இணையத்தளத்தில் சேமித்து வைத்து விட்டு நம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு இந்த இணையத்தளத்தின் நமதுusername  , password  ஐ கொடுத்தால் அவர்கள் இந்த இணையத்தளத்தில் உள்ள நமது கணக்கினுள் சென்று அந்த file ஐ டவுன்லோடு செய்து எடுத்து கொள்ளலாம். திருமண வீடியோக்கள்குழந்தைகளின் பிறந்தநாள் வீடியோக்கள் போன்றவற்றை நாம் நம் உறவினர்களோடும்நண்பர்களோடும் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று இதுவரையில் தவித்திருப்போம் ஆனால் இப்போது இந்த இணையத்தளம் மூலம் அதற்கும் ஒரு வழிபிறந்தாச்சு இல்லையா. 
www.mozy.com  என்ற இந்த இணையத்தளம் 2GB வரையிலும் இலவசமாக ஆன்லைனில் தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது. http://www.4shared.com/  என்ற இந்த இணையத்தளம் 25GB வரையிலும் இலவசமாக ஆன்லைனில் தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது. 
நாம் இந்த வசதியை பயன்படுத்த வேண்டுமெனில் இந்த இணையத்தளங்களில் இலவசமாக உறுப்பினர் ஆவதன் மூலம் நாம் இந்த வசதிகளை பெறலாம்.

நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!



Super DVD Creator 9.8
Super DVD Creator 9.8 Build 20080323
 நண்பர்களே! நீங்களே வீடியோ டிவிடி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. சூப்பர் டிவிட் கிரியேட்டர். என்பதுதான் அது.
உதாரணமாக உங்களிடம் இது போன்ற வீடியோ கிளிப்ஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
VTS_01_1.VOB
VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
ஆனால் இப்படி இருந்தால் டிவிடி பிளேயரில் படம் ஓடாது. இது போன்ற பைல்களை நீங்கள் வெவ்வேறு டிவிடி-களில்  இருந்து காப்பி செய்து வைத்திருக்கலாம். இவை அனைத்தையும் ஒரே வீடியோ டிவிடி-யாக மாற்றி தர இம்மென்பொருள் உதவும்.
                                       இம்மென்பொருளை தரவிறக்க:

இது ஒரு டிவிடியை உருவாக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்கிறது
இப்போது எப்படி ஒரு டிவிடி-யை உருவாக்குவது என்று பார்ப்போம்...

01. இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கினால் கீழ்கண்ட விண்டோ வரும்.
 இதில் டிவிடி கம்பைலர் என்பதை தேர்வு செய்யுங்கள்




02. இரண்டாவதாக வரும் விண்டோவில் தோன்றும் படங்களை தேர்வு செய்து
பின்னனி படமாக மெனுவிற்கு அமைத்துக் கொள்ளலாம். இதில் உங்கள் விருப்பமான படங்களையும் பிரவுஸ் செய்து கொடுக்கலாம்


இதில் கீழ் இருக்கும் பிளஸ் குறியில் கிளிக் செய்யுங்கள்


 03. அடுத்து வரும் விண்டோவில் இப்படி பைல்களை தேர்வு செய்து ஒப்பன் என்று கொடுங்கள்.




04.தேர்வு செய்த பைல்கள் இப்படி ஒப்பன் ஆகி காட்சியளிக்கும்

இதில் நெக்ஸ்ட் என்பதை தேர்வு செய்யுங்கள் 


05.இந்த விண்டோவில் ஸ்டார்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்



06.ஸ்டார்ட்டை தேர்வு செய்த பிறகு இப்படி ஒரு மெசேஜ் வரும் நேரடியாக டிவிடி-ல் பதிவு செய்ய விரும்பினால் யெஸ் என்றும் தற்காலிகமாக போல்டரில் சேமிக்க விரும்பினால் நோ என்றும் கொடுங்கள்.பொதுவாக நோ என்று கொடுத்து போல்டரில் சேமித்து பிறகு டிவிடியில் நீரோ போன்ற மென்பொருள் மூலமாக பதிந்து கொள்வது நல்லது.





 07. சிறிது நேரம் காத்திருங்கள். அதாவது கீழ்கண்ட விண்டோ வரும் வரை. இந்த விண்டோ வந்த பிறகு ஸ்டார்ட் பட்டனுக்கு மேலா உள்ள விஓபி என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோ சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்யலாம். அல்லது அனைத்து விண்டோவையும் குளோஸ் (மூடி விட்டு)செய்து விட்டு நேரடியாக சேமிக்கப்பட்ட போல்டரை திறந்து கொள்ளலாம்




08. சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்தால் இப்படி இருக்கும்



நண்பர்களே! என்னால் முடிந்த வரை விளக்கி விட்டேன். உங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் கூறுங்கள். இதே போன்ற வேலைகளுக்கு இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன. எனக்கு தெரிந்து விஓபி கிளிப் பைல்களை இவ்வளவு விரைவாக வீடியோவாக மாற்றித் தரும் மென்பொருள் வேறு இல்லை என்றே நினைக்கிறேன் . அப்படி வேறு இருந்தால் கூறுங்கள். நானும் அறிந்து  கொள்வேன்.

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க:


ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர், பெயின்ட், எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல்.இன்னும் பல எக்ஸ்பியில் உள்ள புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள்.ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு எக்ஸ்பியிலேயே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான் சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான கமாண்ட் ஆனது நம்முடைய விருப்பப்படி இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் அல்லவா? அதற்கு உதவ ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அப்படியே ரன் செய்து இயக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், மிகவும் உபயோகமானது ஆகும். இப்போது வழிமுறைகளை பார்க்கலாம்.


1.பதிவிறக்கம் செய்த சிப் பைலை எக்ஸ்ட்ராட் செய்து கொள்ளுங்கள். போல்டரில் உள்ள exe பைலை ரன் செய்தால கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் select-ஐ தேர்வு செய்யவும்

2. தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான மென்பொருளின் போல்டரை ஓப்பன் செய்து கொள்ளவும்


3.உதாரணத்திற்கு நான் cclener-மென்பொருளை ஓப்பன் செய்துள்ளேன்.பிறகு மென்பொருளின் exe-கோப்பை மட்டும் செலக்ட் செய்து ஓப்பன் என்று கொடுக்கவும்




4.அப்படி கொடுத்த பிறகு கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் input the alias என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கவும்.நான் cclener என்பதை சுருக்கமாக cc என்று கொடுத்துள்ளேன்.பிறகு Add என்ற பட்டனை அழுத்தவும்



5.உங்கள் செயல் வெற்றிகரமாக செயல்பட்டதை உணர்த்தும் விதமாக ஓரு செய்தி இப்படி தோன்றும். இதில் ok- கொடுக்கவும்.பிறகு விண்டோக்களை மூடி விடவும் அல்லது குளோஸ் செய்யவும்.




6. ஸ்டார்ட் மெனு சென்று ரன்-ஐ திறந்து கொள்ளுங்கள்.அல்லது windowskey+R ஐ அழ்த்தி ரன்-ஐ திறக்கலாம்.இதில் நீங்கள் ஏற்கனவே alias பகுதியில் மென்பொருளுக்கு வைத்த பெயரை டைப் செய்து ஓ.கே கொடுக்கவும்.




7.அவ்வளவுதான் இப்போது நீங்கள் தேர்வு செய்த மென்பொருள் ஓப்பனாகி விடும்.



நண்பர்களே! எனக்குத் தெரிந்தவரை விளக்கியிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி

மென்பொருளை தரவிறக்கம் செய்ய:

போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!


நண்பர்களே! நாம் இயங்கு தளத்தில் போல்டர்களை அதிகமாக கையாளுகிறோம்.  இதில் நம்முடைய கோப்புகளை வகையாக பிரித்து வைத்து பயன்படுத்துகிறோம். இந்த போல்டர்கள் அனைத்தும் ஒரே வண்ணமாக அதாவது இயல்பு நிலையில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நம் விருப்பப்படி வண்ணம் மாற்றினால் எப்படி இருக்கும்.வகை வாரியாக வண்ணம் கொடுத்தால் பார்க்கும் போதே புரிந்து கொள்ளலாம் அல்லவா?

இதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவுகிறது.பதிவிறக்க இங்கு கிளிக் செய்க.

இந்த மென்பொருளை நிறுவிய பிறகு ஏதாவது ஒரு போல்டரின் மீது ரைட் கிளிக் மெனுவில் கீழே உள்ள படத்தின் படி போல்டர் ஹைலைட் என்று இருக்கும்.


இதை கிளிக்கினால் அல்லது மவுஸ் கர்சரை அதன் மேல் கொண்டு சென்றால் பல வண்ணங்களில் போல்டர்கள் இருக்கும். இதில் நீங்கள் தேர்வு செய்யும் வண்ணம் உங்கள் போல்டருக்கு வந்திருக்கும். 
இந்த மென்பொருள் மூலம் நான் சில போல்டர்களின் வண்ணங்களை மாற்றி இருக்கிறேன்.அதன் படம் கீழே.