Friday, June 10, 2011

இந்த குழந்தைகளை பார்த்துவிட்டு படியுங்கள் (BABY DOWN SYNDROME)




தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள். நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.

இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்ச்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி / யோகா / வர்மம் ] இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை. இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்
இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?.

காவி மயமாக போகும் இந்தியா, கருவறுக்கப்போகும் காங்கிரஸ்



‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய(அ)யோக்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.

2. சாத்வி ரிதம்பரா

3. ஆர்.எளி.எளி.அமைப்பினர்

4. இந்து அமைப்புகள்.


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்., இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய (அ)யோக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா? இந்த அரசாங்கம் எதற்கு.

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.

பார்பன பத்திரிக்கைகளும் ஒத்து ஊதுகிறது.

இத இத இதத்தானே எதிர்பாத்தீங்க நீங்க...

ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது. 

பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.

ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.

92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.

ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான். 

உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான். 

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

மங்கை ஒரு மாங்கனி


பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

கவர முயற்சிக்க வேண்டாம்
இது என்ன விளையாட்டு? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள்

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

புதிதாக சிந்தியுங்கள்

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

தோற்றம் முக்கியம்

என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மன ஆழம்

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள். இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன்

காதல் மனைவியின் இரண்டாவது திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முதல் கணவனின் கண்களை பெண்ணின் அண்ணன் கைகளால் தோண்டி எடுத்த கொடூரச் செயல் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்தவர் ரகு (24), ஜிம் இன்ஸ்ட்ரக்டர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுஷாவை (23) காதலித்தார். ரகுவிடம் வசதியில்லை என்ற காரணத்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள அனுஷா வீட்டில் மறுத்தனர். இந்நிலையில் ரகுவும், அனுஷாவும் வீட்டைவிட்டு ஓடிப்போய் தர்மஸ்தலாவில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஊர் திரும்பியவுடன் அனுஷா குடும்பத்தார் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ரகுவையும் நைய்யப் புடைத்தனர். அனுஷாவுடன் சேர ரகு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு முறை 30 பேர் கொண்ட கும்பல் அவரைக் கொலை செய்ய முயன்றது. ஆனால் ரகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இனியும் அனுஷாவுடன் சேர்வோம் என்ற நம்பிக்கையை இழந்த ரகு தனது தாயுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஷா வீட்டில் உள்ளவர்கள் ரகுவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அனுஷாவுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், கடைசியாக ஒரு முறை வந்த பார்க்குமாறும் நல்லவிதமாக பேசியுள்ளனர்.

இதை நம்பி ரகு தனது நண்பர்கள் ராமு, நிதேஷ், கிஷோர் ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொள்ள சென்னபட்டனா சென்றார். அவர்கள் புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

பின்னர் தான் தங்களுக்கு வலைலவிரிக்கப்பட்டதையே அவர்கள் உணர்ந்தனர். அந்த 4 பேரையும் அனுஷா அண்ணன் அன்ஜன் கௌடாவின் ஆட்கள் தாக்கினர். ரகுவையும், ராமுவையும் ஆட்டோவில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சென்றனர்.

அங்கு அன்ஜன் கௌடா இனி என் தங்கையின் மீது உன் பார்வை படக்கூடாது என்று கூறி ரகுவின் இரண்டு கண்களை பிடுங்கி எடுத்துள்ளார்.

ரகுவை போலீசார் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயாவில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையின் சேர்மன் புஜங்செட்டி ரகுவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டார்.

ரகுவின் வலது கண் 100 சதவீதமும், இடது கண் 95 சதவீதமும் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை

திறன் இருக்காது என்று புஜங்செட்டி தெரிவித்தார்.




ராம்நகர் தனிப்படை அனுஷாவின் மாமாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அன்ஜன் உள்ளிட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கணினி காதலால் கசிந்துருகி...

ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல் களையும் தெரிந்து கொள்ளலாம். 

* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ! மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.

* பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம். 

* ஒரு பெரிய வேர்ட் பைலை எடிட் செய்கிறீர்கள். இன்னொரு அவசர காரியத்தை மேற்கொள்ள பைலையும் வேர்டையும் மூடிச் செல்கிறீர்கள். திரும்ப சில மணி கழித்து வந்து வேர்டையும் அந்த பைலையும் திறந்து எடிட் செய்திட உட்கார்ந்தால் கடைசியாக எங்கு எடிட் செய்தோம் என்று நினைவில்லை. கவலை வேண்டாம். ஷிப்ட் + எப் 5 (Shift + F5) அழுத்துங்கள். இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்கு கர்சர் செல்லும். மறுபடியும் அழுத்தினால் அதற்கு முந்தைய எடிட் இடத்திற்குச் செல்லும். இப்படியே மூன்று இடத்திற்குச் செல்லும். அதன்பின் அழுத்தினால் என்ன ஆகும்? மீண்டும் விட்ட இடத்திற்கே வரும்.

* கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனை யேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது. எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது. என்ன செய்யலாம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?

CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். ஒரு கட்டம் எழுந்து வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப் பட்டிருக்கும். அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள். இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும். இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள். 

* உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.

கன்னிப்பெண் காணும் கனவு

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.




இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.
இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

தாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவி எரித்துக் கொலை

தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.


Badmini, Subbaiya Pandian and Shenbagavalli
கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.