Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, November 15, 2011

புதிய திட்டங்கள் 43 - முதல்வர் ஜெயலலிதா முன்னேற்றம்.


* கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும். 

* நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

* பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.

* சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

* கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.

* உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.

* அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.
* கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

* ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


* ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.


* காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.


* தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.


* பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.


* திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.


* சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.


* வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


* வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


* பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.


* நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.


* கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.


* தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.


* தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.


* தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.


* தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


* பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.


* எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.


* கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


* புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.


* மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.


* திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


* தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும்.


* கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.


* அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.


* மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.


* தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


* பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும்.


* திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும்.


* மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.


* அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.


* கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.


* தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.


Wednesday, July 6, 2011

ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!

ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.


இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன், அந்த நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் என்று தெரிகி்றதி.

2ஜி விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்தும் விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து மாறனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
 

இந்த ஊழல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் விவரங்களை இனறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்த ஊழலில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிப்போம். இந்த ஊழல் குறித்த முழு விசாரணையும் 3 மாதத்தில் முடிவடையும்.

2ஜி விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம்.

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தராமல் தயாநிதி இழுத்தடித்தார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த ஆக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கியதும் தெரிய வந்துள்ளது. இதனால் 2ஜி விவகாரத்தில் அவரது பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஏர்செல்லுக்கு உரிமம்..இழுத்தடித்தார் தயாநிதி-முன்னாள் செயலாளர்:

இந் நிலையில் 2003-04ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று அவரது முன்னாள் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

தனது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனம் பலன் அடைய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்காமல் தயாநிதி இழுத்தடித்தார் என்று நிருபேந்திர மிஸ்ரா சிபிஐ விசாரணையில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தயாநிதியின் பெயரை 2ஜி விவகாரத்தில் சிபிஐ சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே அந்த நிறுவனத்துக்கு 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடும் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தயாநிதியின் முன்னாள் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Saturday, July 2, 2011

அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவதின் முதல்கட்டமாக கேபிள் டிவி நிறுவனத்தை தன் கட்டுப்பாடில் இயங்கும் உள்துறைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அரசு கேபிள் டிவி பக்காவாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார். 

கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.
எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார். 

கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர். 

கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார். 

இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும், அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

Tuesday, June 21, 2011

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

தமிழகத்தில் முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2 வருட உத்தரவாதத்துடன் கூடிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இலவசமாக வினியோகிக்கப்படவுள்ளன. இவற்றைத் தயாரித்து வழங்குவது குறித்து இவற்றின் தயாரிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இத் திட்டம் செப்டம்பர் 15ம் முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து முதற்கட்டமாக 25 லட்சம் மிக்சிகள், 25 லட்சம் கிரைண்டர்கள், 25 லட்சம் மின் விசிறிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மிக்சிகள் வாங்க ரூ.500 கோடியும், கிரைண்டர்கள் வாங்க ரூ.600 கோடியும், மின் விசிறிகள் வாங்க ரூ. 250 கோடியும் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தயாரித்து வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டெண்டர்களை சமர்பித்துள்ளன. இந்த டெண்டர்கள் ஜூலை 11ம் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே கிரைண்டர், மிக்சி, பேன் தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு இன்று ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் வீரசண்முகமணி தலைமையிலான அதிகாரிகளும் நிறுவனங்களின் அதிபர்களும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மிக்சியுடன் 2 ஜார்கள் வழங்கப்பட வேண்டும், இதில் ஒரு ஜார் 1 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், மற்ற ஜார் 400 மில்லி கொள்ளளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும், இந்த ஜார்கள் தரமான ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட வேண்டும், மிக்சியின் திறன் 550 வாட் இருக்க வேண்டும் என மிக்சியின் தரத்தை உறுதிப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை முன் வைத்துள்ளது.

அதே போல கிரைண்டர் டேபிள் டாப் வகையிலானதாக இருக்க வேண்டும், 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், டிரம் தரமான ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், இதன் திறன் 150 வாட் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

மின் விசிறி டேபிள்பேனாக வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இன்றைய கூட்டத்தில் மிக்சி மற்றும் மின் விசிறிக்கு டெல்லி, மும்பை, குர்காவ்ன் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். 
கிரைண்டருக்கு கோவை பகுதியைச் சேர்ந்த நிறுவன அதிபர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இலவசம்..புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன:

இந் நிலையில் கிரைண்டர், மிக்சி, மின் விசிறி ஆகியவை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகம், மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து ரேஷன் கார்டுகள் வழங்குவதை முறைப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை ரேசன் கார்டுகள் உள்ள 1 கோடியே 83 லட்சம் குடும்பத்தினருக்கு கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.

Sunday, June 19, 2011

முந்தைய அரசின் திட்டங்களை நிறுத்தியதால் ரூ.6,000 கோடி மிச்சம்

முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்துவதால் கிடைக்கும் 6,000 கோடி ரூபாய் நிதியை, புதிய திட்டங்களுக்கு செலவிட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை முடிந்துவிட்டதாலும், இந்தாண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களை, புதிய அரசு நிறுத்திவிட்டதாலும், புதிய அரசுக்கு நிதிச்சுமை குறைந்துள்ளது.தி.மு.க., அரசு, இலவச கலர் "டிவி' திட்டத்துக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு, 509 கோடி, பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு 70 கோடி, நமக்கு நாமே திட்டத்துக்கு 50 கோடி, சமத்துவபுரங்கள் அமைக்க 75 கோடி, இலவச காஸ் திட்டத்துக்கு 140 கோடி, நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்க 50 கோடி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 750 கோடி ரூபாய் என, ஒவ்வொரு ஆண்டும் செலவழித்து வந்தது.

இவற்றில், காஸ், சமத்துவபுரங்கள், நமக்கு நாமே, கலைஞர் காப்பீடு, கலர் "டிவி' போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இது தவிர, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் முடிவடைந்து விட்டன. எனவே, ஆண்டுதோறும் இவ்வகையில் செலவழித்து வந்த தொகை 3,000 கோடி ரூபாய் வரை மிச்சமாகி உள்ளது.

இது தவிர, புதிய தலைமைச் செயலகம் வளாகம் கட்ட இந்த நிதியாண்டில் 244 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னையில் கோட்டூர்புரத்தில் கடந்தாண்டு, 179 கோடி ரூபாயில் நூலகம் கட்டியது, புதிய பஸ்கள் வாங்க 250 கோடி, கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு 350 கோடி, பள்ளி குழந்தைகளுக்கு, "டிக்ஷனரி' வழங்க 10 கோடி ரூபாய் போன்ற செலவுகளை, புதிய அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை.

கடந்த நிதியாண்டுடன் பல்வேறு திட்டங்கள் முடிந்ததால், அந்த நிதியை வைத்து, இந்த ஆண்டில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு செயல்படுத்தியது. இதன்படி, இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்கு 2,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இது தவிர, பேரூராட்சிகளில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர, 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டது. வீடு வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டு, பசுமை வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முந்தைய அரசு திட்டங்களுக்காக செலவழித்து வந்த நிதி, தற்போது மிச்சமாகி உள்ளது. இதை வைத்து, புதிய திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த உள்ளது.ஏற்கனவே, முந்தைய அரசு, பொது வினியோகத் திட்டத்தில் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி, மளிகை பொருட்கள், பருப்புகள் போன்றவற்றை வழங்க, 4,000 கோடி ரூபாயை மானியமாக வழங்கி வந்தது.

அதே திட்டங்களை புதிய அரசு தொடர்ந்த போதிலும், இலவச அரிசி திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், கூடுதலாக 500 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டியிருக்கும். இது தவிர, படித்த பெண்கள் திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபாயுடன், தாலிக்கு தங்கம் வழங்குதல், மீனவர்களுக்கான உதவித் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துதல், முதியோர் உதவித் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்துதல் போன்ற திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது.முந்தைய அரசும் இத்திட்டத்துக்கு 1,421 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. தற்போது, மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கிய 200 ரூபாயை, மாதம் 400 ரூபாயாக உயர்த்தியுள்ளது. எனவே, புதிய அரசுக்கு கூடுதலாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் வழங்க வேண்டியிருக்கும்.


இதுதவிர, செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து, இலவச லேப்-டாப், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டங்களை, புதிய அரசு செயல்படுத்த உள்ளது. இவற்றை, முந்தைய அரசு செலவழித்த நிதியை மிச்சப்படுத்துவதால், ஓரளவு சமாளிக்க முடியும். எனினும், பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டியிருக்கும். எனவே தான், பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது, லேப்-டாப் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி உதவியை கோரியுள்ளார். எனினும், தற்போதுள்ள நிதி ஆதாரங்களை கொண்டு, புதிய திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்த முடியும். தற்போதுள்ள நிலையில், பெட்ரோல் விலை 67 ரூபாயாக உயர்ந்துள்ளதால், அதில் 27 சதவீதம் விற்பனை வரியாக தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இதனால், அரசின் வருவாய் உயர்ந்துள்ளது என்பதும், தமிழக அரசின் நிதி வலுவாக இருப்பதற்கு காரணம்.

Friday, June 17, 2011

‘தினமணி‘ என்கிற விஷ விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் என்று இதுபோன்ற காரணங்களுக்காக திமுகவை பழிவாங்கிவி்ட்டதாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டவர்கள் பெருமிதத்தோடு இருக்கிறார்கள்.


ஆனால், பார்ப்பனர்களின் அரசியலை மேல் சொன்ன இந்தக் காரணங்கள் எப்போதும் தீர்மானிப்பதில்லை. அவர்கள் திமுகவை எப்போதும் தங்களுக்கு எதிரான கட்சியாகத்தான் கருதுவார்கள். மாறாக, அதிமுகவை அதுவும் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதை தங்களின் கட்சியாகவேதான் கருதுகிறார்கள்.

போன முறை ஜெயலலிதா ஆட்சியில் உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதுக்கூட அவர்கள் அதிமுகவைத்தான் ஆதரித்தார்கள். ஆக, அவர்கள் எதற்காக திமுகவை எதிர்க்கிறார்கள், அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டுப்போல் தினமணியின் இந்த தலையங்கம் திகழ்கிறது,

‘சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை. ……………………………………………

சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள்தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.‘ (9-6-2011 தினமணி தலையங்கம்)

தினமணியின் இந்த உண்ர்வுதான் ஒட்டு மொத்தப் பார்ப்பனர்களின் உணர்வு. அதாவது பெயரளவில்கூட பெரியாரை ஆதரிப்பதை பார்ப்பனர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது.

இதில் காமராஜரை உயர்த்தி எழுதி திராவிட இயக்கத்தை எதிர்ப்பது என்பதுதான் பார்ப்பன தந்திரம். காமராஜரின் சிறப்பபு என்று தினமணி குறிப்பிடுபவது முழுக்க முழக்க பெரியாரால் செய்யப்பட்டது என்பதை மறைத்து எழுதுகிறது தினமணி.

சரி, தினமணி சொல்வதையே முழு உண்மை என்றே ஒத்துக்கொள்வோம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தது ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

சொந்தக் கட்சியிலேயே காமராஜ்க்கு எதிராக சதி செய்து அவரை அவமானப்படுத்தி அவர் முதல்வர் ஆவதை தடுத்தது, ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

‘பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சிஅடைவதுதான் சரி.‘ என்கிறது தினமணி. விஷ விதை என்று அது குறிப்பிடுவது பெரியாரைத்தான்.

தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட பிஞ்சுகளின் கல்வியைத் தடுத்து, குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜி விச விதையா?

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அதை நிறுத்தி, ராஜாஜி ஆட்சியை ஒழித்து, காமராஜ் ஆட்சியை கொண்டுவந்து கிராமப்புற பள்ளிக்கூடங்களை கொண்டுவந்த பெரியார் விச விதையா?

சரி, கட்டாயக் கல்வித் திட்டத்தை காமராஜ் கொண்டு வந்ததாகவே வைத்துக் கொள்வோம், அப்போது அதை எதிர்த்தது, பெரியாரும் திராவிட இயக்கமுமா? ராஜாஜியும் பார்ப்பனர்களுமா?

காமராஜ் மீது தினமணி கொண்ட பாசம் உண்மை என்றால், காமராஜ்க்கு எதிராக சதி செய்த ராஜாஜியை ஏன் கண்டிக்க மறுக்கிறது தினமணி?

இதற்கு தினமணி பதில் சொல்லவேண்டும்? அல்லது, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்குகிற தினமணி கட்டுரையாளர்களான சூத்திரர்களாகவது பதில் சொல்ல வேண்டும்.

பார்ப்போம் அவர்களின் யோக்கியதையை.

தொடர்புடையவை: 

ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?” அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன். …

Monday, June 13, 2011

மாறன குடும்ப சொத்தில் மாயம் 2130 கோடி

கடந்த பத்தே நாட்களில் இவ்வளவு பெரிய தொகை, மாறன் சகோதரர்களின் சொத்திலிருந்து மாயமாகியிருக்கின்றது!

மும்பை, இந்தியா: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை சிறைக்கு அனுப்புமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ருபாவை மாயமாக மறைய வைத்திருக்கின்றது!

அதாவது, கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபா குறைந்திருக்கின்றது.

மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று, சன் டீ.வி. நெட்வேர்க். மற்றையது, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ். இந்த இரு நிறுவனங்களின் மொத்த பங்குகளிலும், மாறன் சகோதரர்களின் வசமிருப்பவை எவ்வளவு?

சன் டீ.வி. நெட்வேர்க் – 77%. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் – 38.61%.
இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும், முன்பு பங்குச் சந்தையில் நல்ல கிராக்கியுடன் இருந்தன. அதற்குக் காரணம், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர், அவரது தாத்தா தமிழக முதல்வர். இதனால், போட்டி நிறுவனங்களை வியாபார ரீதியாக வீழ்த்தக்கூடிய அரசியல் செல்வாக்கு.

முதலில் தமிழக ஆட்சி கைவிட்டுப் போயிற்று.

அப்படியிருந்தும், தயாநிதி மாறன் மத்திய அரசில் செல்வாக்கான அமைச்சராக இருந்ததால், பங்குகள் நல்ல விதமாகத்தான் ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தன.

இப்படியான நேரத்தில்தான் தயாநிதி மீதான பகீர் குற்றச்சாட்டுகள் வெளியாகின. வெளியான குற்றச்சாட்டுகள் இறுகவும் தொடங்கின. தயாநிதிமீது சி.பி.ஐ விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாத் திசையிலுமிருந்து வரத்தொடங்கின.

அடுத்த கட்டமாக, தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தயாநிதி தீகார்வரை போகக்கூடும் என்ற வதந்திகளும் எழுந்தன.

இந்த நிலையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் சரியத் தொடங்கின. அதில் முதலீடு செய்திருந்தவர்கள், தமது முதலீட்டை மாற்றத் தொடங்கினார்கள்.

இம் மாதம் (ஜூன்) 1ம் தேதி, பங்குச் சந்தை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 377.40க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 41.10.

இதன் பின்னர்தான் தயாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சூடு பிடிக்கத் தொடங்கின. இந்த வாரத்துக்கான பங்குச் சந்தை நேற்று (10ம் தேதி) மாலை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 307.15க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 34.05!

இதன் அர்த்தம் என்னவென்றால், மேற்படி இரு நிறுவனங்களின் புக்-வேல்யூவும் முறையே 19, 17 சதவீதங்கள் குறைந்துள்ளன. அவற்றில் மாறன் சகோதரர்களின் பங்குகள் முறையே 77, 38.61 சதவீதங்கள்.

மாறன் சகோதரர்கள், கடந்த 10 நாட்களில், தமது வர்த்தகச் சொத்தில் 2130 கோடி ரூபா தொகையை இழந்திருக்கின்றனர்.

இவ்விரு நிறுவனத்தின் பங்குகளும், பங்குச் சந்தை புரோக்கர்களிடையே ‘ஹாட்-பிக்” என்ற வகையில் கடந்த மாதத்தில் இருந்தன. இந்த மாதம் ‘எபவுட் கோல்ட்-ரேட்டட்” நிலைக்குச் சென்றிருக்கின்றன.

ஏதாவது அதிசயம் நடந்தால்தான், இவை பழைய நிலையை எட்டிப் பிடிக்க முடியும்!

Saturday, June 11, 2011

உருகுதே மருகுதே கனியை (மொழி) கண்டதாலே...?


என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.

கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்’’ என்று பேசினார்.

Friday, June 10, 2011

காவி மயமாக போகும் இந்தியா, கருவறுக்கப்போகும் காங்கிரஸ்



‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய(அ)யோக்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.

2. சாத்வி ரிதம்பரா

3. ஆர்.எளி.எளி.அமைப்பினர்

4. இந்து அமைப்புகள்.


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்., இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய (அ)யோக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா? இந்த அரசாங்கம் எதற்கு.

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.

பார்பன பத்திரிக்கைகளும் ஒத்து ஊதுகிறது.

Thursday, June 9, 2011

கருணாநிதியை விமர்சித்ததை தவிர்த்திருக்கலாமே ஜெயலலிதா

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்ததை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்;தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.பொது எதிரியான போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.

மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்கவில்லை என்ற ஆராய்ச்சியிலா இறங்குவது?மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறு மொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே!மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகிவிடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சியினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதலமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை. இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் உதவும்; மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு செய்யுமா மத்திய அரசு? என்று கேட்டுள்ளார் வீரமணி.'முன்னேற்றம் ஏற்படாது'இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும்.இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார் அவர்.

Wednesday, June 8, 2011

கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து; சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் ஆய்வு - ஆளுனர் உரை

தமிழகத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஆளுனர் உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. புது பொது மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.

* மெட்ரோ ரயில் பணிகள் காலதாமதமாவதால், சென்னையில் 111 கிலோமீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படும்.

* சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். நான்கு இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்.

* சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அதன் பாடத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்

கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன. 200 கோடி திருடின கனிமொழி மட்டும் பாலியல் விமர்சனத்துக்கு உள்ளாவது நமக்குள் இருக்கும் பெண்களை ஒழுக்க குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பார்க்கும் விருப்பத்தை காட்டுகிறது.

ஒரு பெண் தவறு செய்தால் அவளது பாலியல் ஒழுக்கத்தை விசாரணை செய்து தொடர்ந்து அதே மர்மத்தில் தொடர்ந்து தாக்குவது ஒரு பொதுப்புத்தி. இலக்கியம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், இணையத்தில் புழங்கும் பண்பட்ட பன்னாட்டு குமாஸ்தாக்கள் அனைவரிடமும் வேறுபாடின்றி நாம் காண்பது தன்னை மேலாக நினைக்கும் ஒரு சட்டாம்பிள்ளையைத் தான்.
 பண்பாடும், வாசிப்பும், அது சார்ந்த உரையாடல்களும் வெறும் பொழுதுபோக்கோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. முன்பு கற்காலத்தில் இருந்து இரும்புகாலத்திற்கு மனிதன் பரிணமித்தான் என்றால் அது வெறும் இரும்பை பயன்படுத்தினதால் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அஸ்தமித்த சூரியன் உதிக்காது

தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

சட்டசபையில், மேலவை வேண்டாம் என்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:கடந்த, 1986ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சட்ட மேலவையை நீக்கும் தீர்மானம், இந்த சட்டசபையில் நிறைவேறியது. பின், இத்தீர்மானம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்கப்பட்டு, தமிழக சட்ட மேலவையை நீக்கும் சட்டம், 1986, ஆகஸ்ட் 30ம் தேதி அங்கீகரிக்கப்பட்டு, அந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.எம்.ஜி.ஆர்., நிறைவேற்றிய அந்த சட்டத்திற்கு எதிராக, 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேலவையை தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றினோம். 1996ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும், மேலவையை கொண்டு வர முயற்சித்தது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.கடந்த, 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, சட்ட மேலவையை கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதற்கான சட்டத்தையும் இயற்றியது. எனினும், சட்ட மேலவைக்கான தொகுதி வரையறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் தடையாணை பிறப்பித்துள்ளதால், மேலவை தேர்தல் நடைபெறாத சூழல் தற்போது உள்ளது.


மேலவை தேவை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்வர், "அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனைகளை கூறும் வகையில், சட்ட மேலவையை விரைவில் கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டார்.இப்போதுள்ள சட்டசபையிலேயே வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றோர் இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களும், இங்கு இடம் பெற்றிருக்கின்றனர்.சாமானியர்களையும் சட்டசபை உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., தான். அப்படியிருக்கும்போது, சட்ட மேலவையை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?


இந்த தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில், மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவர் மகன் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன. மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி.குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுபவர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், சட்ட மேலவையை தி.மு.க., கொண்டு வந்ததே தவிர, பல தரப்பட்டவர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல.கடந்த ஆண்டு மேலவை தொடர்பான விவாதத்தில், செங்கோட்டையன் பேசும்போது, "இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் இதைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன?' என கேட்டதற்கு, "இது யாருக்கு கடைசி காலம் என்பதை, நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்' என, கருணாநிதி கூறியிருக்கிறார். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், சட்ட மேலவை தேவையில்லை என்று மக்களும் ஆமோதித்திருக்கின்றனர்.


நாட்டில் உள்ள, 28 மாநிலங்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான், சட்ட மேலவை உள்ளன. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில், சட்ட மேலவை கிடையாது. இதிலிருந்தே, மேலவை வேண்டும் என்ற கருத்து, எந்தளவிற்கு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை அறியலாம்.முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரும், ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை என கருதப்படும் மேலவை தேவையற்றது என, திட்டவட்டமாக கூறியுள்ளனர். அவர்கள் வழியை பின்பற்றி, மேலவை தேவையில்லை என்ற தீர்மானத்தை, உறுப்பினர்கள் முன் வைத்தோம். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, "இனிமேல் மேலவை வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுங்கள்' என்றார்.எனக்கு தெரிந்தவரை, மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க., தான். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன், அஸ்தமனமானது தான்; இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது; உதிக்கவே உதிக்காது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தாராளமயக் கொள்கை

சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று சர்வதேச அளவில் நிகழும் நிதித்துறை முறைகேடுகளை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியா வில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய்க் கணக்கில் 9,58,500 கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி 1991 ஆம் ஆண்டுக்குப் பின் வெளியேறியுள்ளது. அதாவது 1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகமயக் கொள்கைகளை அதிரடியாக இந்தியாவில் புகுத்திய பிறகே இது நிகழ்ந்துள்ளது. ஆக 60 ஆண்டுகளில் கடத்தப் பட்ட பணத்தில் 3 இல் 2 பங்கு 20 ஆண்டு களில் உலக மயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட போது வெளியேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புள்ளி விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடுகளுக்கு சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டுகளில் அதாவது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்ற ஆண்டுகளில் ஆண்டொன் றுக்கு சராசரியாக 72000 கோடி ரூபாய் வெளி யேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள செய்தியும் இதை உறுதி செய்கிறது.

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான எஸ்.பி. சுக்லா கூறுகிறார்: நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. தாராளமயக் கொள்கைகள் அமல் படுத்துதல் துவங்கப்பட்ட பிறகு ஊழல் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் காரணம் - சந்தையே அரசாங்கத்துக்குள் நுழைந்ததனால்தான். அரசாங்கக் கொள்கைகளையும், அரசு நிர்ணயிக்க வேண்டிய விலைகளையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக் கும் நிலைக்கு உயர்ந்துவிட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுதல் மற்றும் அரசு நடவடிக்கைகளிலேயே தொழில் நிறுவனங்களே நேரடியாக ஈடுபடுகின்றன. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆட்சி அமைப்பு முறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றன.
அரசு அமைப்பு முறைக்குள்ளேயே அவைகள் தலையிடுவதற்கான உதாரணமாக, பா.ஜ.க. ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை எஸ்.பி. சுக்லா உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் அலைபேசி சேவையை நடத்துவதற்கான அனுமதியை அளிப்பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந்தன. ஆனால் அந்த ஏலத் தொகைக்கு லாபம் ஈட்ட முடியாது என்பதை அவை உணர்ந்த பிறகு, மீண்டும் அராசங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்துவிட்டன. அதனால் ஏலத் தொகையைவிட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடர அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? ஏலத் தொகையைக் கட்ட முடியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துவிட்டு, அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமையான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏல நிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங்களே குறைந்த கட்டணத்தில் அலைபேசி சேவையை நடத்த அனுமதிக்கப்பட்டன.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக லாவணி பாடி வந்த தொழில் நிறுவனங்கள், உலகமய, தாராளமயம் கொள்கைகள்தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவித்து விட்டதாக பேசி வந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தால் தாராளமய யுகத்தில் ஊழலுக்கான பாதைகள் தான் மாறியுள்ளன என்றும், அதன் அதி தீவிரமும் அது எட்டும் தொலைவும் அதிகரித் துள்ளன என்கிறார் சுக்லா. பர்மிட் லைசென்ஸ் ஆட்சியின்போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதனை சட்டப்பூர்வ மாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்சமட்ட அளவுக்கு கெண்டு சென்றது உலகமய, தாராளமயக் கொள்கைகளே என்று குறிப்பிடும் முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் பின்வருமாறு கூறுகிறார்:

தாராளமயக் கொள்கைகள் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முந்தைய பர்மிட் - லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப்பட்டது. ஏனெனில் அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராள மயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு பிரம்மாண்டமான ஊழல்கள் மூலம் தான் அரசியல்வாதிகளால் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலமே அது சாத்தியமாயிற்று. தாராளமயமாக்க லுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவேதான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர் கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கைகளையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் முறியடித்து மக்கள் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் கொள்கைகளுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரே வழியாகும்.

ஒரு மோடிக்குள் மூன்று கருணாநிதிகள்

சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முனவந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சை யான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்ட தாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப் பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது. அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார்? என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட் டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார்.இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக் கிறார். பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகை யாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப் பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டு களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.

• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மை யினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற் கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம் களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.

• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.

• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர் களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெரு மளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.

• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.

• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்ட தில் ஊழல்கள் நடந்தன.

• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.

• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங் களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தி யுள்ளார்.

• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.

• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.

• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.

• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.

• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர் களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டி களும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா

Sunday, June 5, 2011

இலவச “லேப்-டாப்” திட்டத்துக்கு ரூ.291 கோடி ஒதுக்கீடு



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளார்.

பதவி ஏற்பு அன்றே இலவச அரிசி, தாலிக்கு தங்கம் உள்பட 7 நலத்திட்டங்களுக்கு உத்தரவிட்டு ஜெயலலிதா கையெழுத்திட்டார். மீதம் உள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தந்த துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து பிளஸ்-1, பிளஸ்-2, மாணவ -மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவ-மாணவிகளுக்கு இலவச “லேப்-டாப்” வழங்கும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

ஜூன் முதல் ஆகஸ்டு வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ -மாணவிகளின் முழுமையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர தரமான “லேப்-டாப்” வழங்குவது, இதற்காக தேவைப்படும் நிதி ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முழுமையான எண்ணிக்கை தெரிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

இது தவிர 10-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை மாணவர்கள் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் திருமண உதவி திட்டத்தில் இனி தாலிக்கு தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-வது வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி ரூ.25 ஆயிரத்துடன் தாலி செய்ய 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தில் உதவி பெற முடியும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 69 ஆயிரத்து 832 பெண்கள் பண உதவி பெற்றனர். தற்போது தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு இதற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, May 26, 2011

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?


திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

Thursday, May 19, 2011

கலெக்டர் கார் சிறுமி காலில் ஏறிய கொடுமை

கரூர் கலெக்டர் கார் மாரியம்மன் கோவிலில், அங்கப் பிரதட்சணம் செய்த சிறுமியின் காலில், ஏறியது. 

கரூர், இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் மேகலா (12). லாலாப்பேட்டை அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு, தன் தாத்தாவுடன், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில், அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு படுத்தார். 

அப்போது, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்ள, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, "ஸ்கார்பியோ' காரில் வந்தார். கோவிலுக்கு முன் பக்தர்கள் நெரிசல் நிறைந்த, குறுகலான பாதையில், கலெக்டர் கார் வந்தது. 
அந்தப் பாதையில், அங்கப் பிரதட்சணத்துக்கு மேகலா படுத்திருந்ததை கவனிக்காத கார் டிரைவர், அவர் கால் பாதம் மீது காரை ஏற்றி, சிறிது தூரம் சென்று நிறுத்தினார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் பதறியபடி ஓடி வந்தனர். "ரேடியல்' டயர் என்பதால், சிறுமியின் காலில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. 

காரை விட்டு இறங்கிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மேகலாவிடம் நலம் விசாரிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறி விட்டு, "விறுவிறு'வென கோவிலுக்குள் சென்றுவிட்டார். கலெக்டரின் அலட்சிய போக்கால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை பத்திரிகையாளர்கள் கவனித்துவிட்டதால், சிறுமியை கலெக்டர் காரில் ஏற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

கேரளாவின் 21வது முதல்வர். உம்மன் சாண்டி பதவியேற்றார்

கேரளாவின், 21வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, 72 இடங்களிலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 68 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதன்மூலம், நான்கு இடங்களில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று, மிகச் சிறிய பெரும்பான்மை மூலம், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில், அமைச்சரவையை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டதால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, கூட்டணி கட்சிகளுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக முடிவை ஏற்படுத்தினார். அமைச்சரவை மற்றும் இலாகா பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுக்கு இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கேரளாவின், 21வது முதல்வராக, உம்மன் சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குஞ்சாலிக் குட்டி மற்றும் கே.எம்.மணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி.மோகனன் (எஸ்.ஜே.டி), ஜேக்கப் (கேரள காங்கிரஸ்-ஜே), கனேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி), சிபு பாபி ஜான் (ஆர்.எஸ். பி.,-பி) ஆகியோரும், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.கவர்னர் ஆர். எஸ்.கவாய், இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

வரும் 23ம் தேதி, அமைச்சரவை மேலும் விரிவு படுத்தப்படுகிறது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த ஒருவரும், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.உம்மன் சாண்டியின் எளிமை: கேரள முதல்வராக பதவியேற்றுள்ள உம்மன் சாண்டி (67), மிகவும் எளிமையானவர். கட்சித் தொண்டர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, நெருக்கமாக பழகக் கூடியவர். மாணவ பருவத்தில் இருந்தே, காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களான கருணாகரன், அந்தோணிக்கு பின், கட்சித் தொண்டர்களிடையே உம்மன் சாண்டி செல்வாக்கு பெற்றவராக இருந்ததால், 2004ல், காங்கிரஸ் மேலிடம், இவரை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது.கேரள மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் சார்பில், ரமேஷ் சென்னிதலா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, கூறப்பட்டது. இருந்தாலும், உம்மன் சாண்டி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகளை, தனது சாமர்த்தியத்தால், திறமையாக கையாண்டு, சுமுக முடிவை ஏற்படுத்தினார்.குஞ்சாலிக் குட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் குஞ்சாலிக் குட்டி, புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அந்த பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் வெற்றி பெற்று, அமைச்சராகியுள்ளார்.கடந்த தேர்தலில், இவரது கட்சி ஏழு தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில், 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 20ல் வெற்றி பெற்றுள்ளது. "என் மீது கூறப்பட்ட புகார்கள் பொய் என, இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்' என, குஞ்சாலிக் குட்டி பெருமிதத்துடன் கூறினார்.

நடிகருக்கு அமைச்சர் பதவி :கேரள காங்கிரஸ் (பி) சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கனேஷ் குமாருக்கு, அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர், கார்யஸ்தன், போர் பிரண்ட்ஸ், ஜனகன், உஸ்தாத் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும், "டிவி' சீரியல்களிலும் நடித்துள்ளார்.கடந்த, 2001ல், அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசில், இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, இரண்டாவது முறையாக, இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போதைய அமைச்சரவையில் புது முகமாக இடம் பிடித்துள்ளவர், சிபு பாபி ஜான். கடந்த, 2001 தேர்தலிலும், இவர் வெற்றி பெற்றபோதும், தற்போது தான் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பி.டெக்., படித்தவர்.