Sunday, March 6, 2011

இதயம் சில உண்மைகள்!


1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய
உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)
சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -
நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட
சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது
நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த
சத்தம் உருவாகிறது

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்


*+-+
சில வண்ண அட்டைப்படங்கள் ...........
http://farm2.static.flickr.com/1065/729656299_d493d29968_o.jpg
பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )



சோழ வீதி நாடகம்,



வத்திய தேவனின் குதிரை..



குந்தவி தேவியும் வானதியும் 


சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :

வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும் 


பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)

சோழ சாம்ராஜ்ய கொடி
 
வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும்

அன்பில் அநிருத்த பிரம்மராயர்



மதுராந்தகச் சோழன்

நந்தினி 



வந்தியத்தேவன்
சோழ சாம்ராஜ்யம்

USB சாதனங்களை எப்படி disable/enable செய்வது


நண்பர்களே! நாம் யுஎஸ்பி போர்ட்டின் மூலம் பலசாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். உதாரணம் பென்டிரைவ், புளூடூத், போன்றவை. இதனை நாம் விரும்பும் போது மட்டும் பயன்படுத்தி மற்ற நேரங்களில் இந்த சாதனங்கள் கணிப்பொறியில் இயங்கா வண்ணம் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.

01

1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில் மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.

12
  
2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான   (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR 
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்

02


13


14


15


16

3.நண்பர்களே!  இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi  என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

17

4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.

18

5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

19
6. 4 என்று டைப் செய்தபிறகு ok- கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.

7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை என்று கொடுத்து ok  செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enableசெய்ய இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது. ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில்ஓகே எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன் செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.
20
நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?

காலை உணவை, தவிர்க்க கூடாது



இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம். எனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும். குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர். சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.
ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த <உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.

எழுத்தாளர் சுஜாதாவின் மின்நூல்கள்



http://www.freetamilbook.com/Portals/0/sujatha.jpeg 
நண்பர்களே! எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சில நூல்கள் உங்களுக்காக.
இவை அனைத்தும் இணையத்திலிருந்து பெறப்பட்டவை.

சுஜாதா - கொலையுதிர்காலம் 

http://www.mediafire.com/?w93xkvto8y3x88q

சுஜாதா -  பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம் 
http://www.mediafire.com/?eaa4ydu1b61o0n9
சுஜாதா - Dr. நரேந்திரனின் வினோத வழக்கு 
http://www.mediafire.com/?0jzjigmdnx4
சுஜாதா -  கடவுள் வந்திருந்தார் 
http://www.mediafire.com/?ujhmn3mkqzl

நன்றி:http://tamil-ebooks.webs.com

தூங்கும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்




மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். சிலர் தூக்கம் பெரிதல்ல உழைப்பே பெரிது என்ற இலட்சிய வாழ்க்கை வாழ்பவரும் உண்டு. பலவாறான தூக்கத்திற்கு பயன்கள் என்ன ? தீமைகள் என்ன ? இவ்வாறு தூக்கத்தின் சந்தேகங்கள் பலவாறு இருக்கிறது.
தூக்கம் குறித்து யாருக்கும் உறுதியான நிலை தெரிந்தபாடில்லை. இந்நிலையில் அனைவருக்கும் உதவும் வகையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., இணையதளத்தில் பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் , டாக்டர்கள் கூறும் அறிவுரைகளையும் தொகுத்து தளத்தின் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தூக்கத்திற்கென கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டுள்ள கிளினிக் சென்டர் கோ. ஆர்டினேட்டர் டாக்டர் . டேனியல் கிரிப்க் கூறுகையில் ; பலர் வீக்எண்ட் நாளில் அதிகம் தூங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்படி தூங்கி எழுந்தவர்கள் பலர் இன்று மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறுகின்றனர். நன்றாக இருந்தது என யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் டாக்டர்கள் பலர் மருத்துவ துறையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த தூக்க பாதிப்பை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு யாரும் முன்விழைவதில்லை. நீண்ட நேரம் தூங்குவதால் அவரது பழக்கவழக்கமே மாறிவிடுகிறது.நீண்ட தூக்கத்திற்கு பின்னர் எழுந்ததும் தூக்க நிலையே நீடிப்பதாக உணரப்படுகிறார்கள்.
சிக்காகோ நகர்ப்புற 25 வயது இளைஞர் ஒருவர் தூக்கம் குறித்து கூறுகையில் தான் சரியான அளவு தூங்கி எழுந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறு, சுறுப்பாக இருக்கிறது. அதிகமாக தூங்கி எழுந்தால் அந்தநாள் முழுவதும் படு சோம்பேறியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பணியில் இருக்கும் போது டே லைட் சிஸ்டம் படி வரும்போது சிலர் கூடுதலாக தூங்க வேண்டியுள்ளது. இந்நேரத்தில் 5 முறை அலாரம் அடித்தாலும் எழுந்திருக்க முடியவில்லை என்கிறார் ஒரு அமெரிக்கவாசி. இதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு வார இறுதி நாளில் 12 மணி நேரம் தூங்குவதாக சிலர் சொல்கின்றனர். இவ்வாறு 12 மணி நேரம் தூங்கியதால் நன்றாக இருந்தது என்று கூறமுடியாது என்கின்றனர் .
இது குறித்து இல்லினாய்ஸ் நகர டாக்டர் . லிசாஷிவ்ஸ் கூறுகையில்; அதாவது சிலர் தூக்க வியாதி (தூக்க போதை ) கொண்டவர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் தூங்கி கொண்டே இருக்க விரும்புவர். விழித்திருந்தாலும் தூங்கும் மன நிலையில் இருப்பர். இது மிக மோசமானது எப்போது என்ன செய்வான் என்றே தெரியாது.
கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) : அளவுக்கதிகமான தூக்கம் உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். இது ஆயுள் நாளையும் குறைத்து விடும். இது குறித்து ஆய்வாளர் மைக்கேல் பிரேயூ கூறுகையில் ; சில ஆய்வுகள் மூலம் இதுதொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அதாவது நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்திற்குள்ளாவர். இதனையே பிரிட்டிஷ் ஆய்வும் தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
குறைவான தூக்கம் எப்படி இருக்கும்: ஒருவருக்கு குறைவான தூக்கம் இருந்திருந்தால் , தூக்கத்திற்கு பின்னரும் அவர்கள் களைப்பாகவே இருப்பர். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குரிய தூக்கநேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும். குறைவான தூக்கம் குறித்து ஒருவர் கூறுகையில் குவானிட்டி ஆப் ஸ்லீப் , குவாலிட்டி ஆப் ஸ்லீப் என்கிறார். இதுதான் அழகான தூக்கம் என்கிறார்.
90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும் இதன்படி ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மரபு வழி பண்பியல் காரணமாகவும் இந்த பிரச்னை சிலருக்கு வரலாம். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். அதிகம் தூங்காதே., குறைவாகவும் தூங்காதே ., தூங்கு ., உறக்கத்திற்கும் இருக்குது விதி

பழைய லண்டன் - படங்கள்


1886இல் வந்த London Town என்ற சிறுவர் புத்தகத்திலிருந்து. படங்களை வரைந்தவர் Thomas CraneEllen Houghton. வெளியீடு: Marcus Ward & Co., லண்டன். இதே ஓவியர்களின் Abroad என்ற புத்தகத்தைப் பார்த்தபோது நான் பார்த்ததிலேயே மிக அழகான புத்தகம் அதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் புத்தகம் அதை மிஞ்சுகிறது

.
londontown4