|
Wednesday, December 21, 2011
Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்
பிளாக் வைத்திருக்கும் அனைவருக்கும் அலெக்ஸா தரவரிசையில் முன்னனியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்க்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதித் தள்ளுவோம். ஆனாலும் தரவரிசை மெதுவாக தான் ஏறும். உங்களுக்காக இதை எழுதுகிறேன்.
பின் வருவனவற்றை செய்து. உங்கள் ரேங்க் ஏறுவதைப் பாருங்கள்.
- முதலில் உங்கள் தளத்தை Alexa.com 'ல் Register செய்துக் கொள்ளுங்கள்.
- Alexa.com 'ஐ உங்கள் Browser' ன் Home Page ஆக பயன்படுத்துங்கள்.
- உங்கள் Browser 'ல் Alexa Toolbar 'ஐப் பயன்படுத்துங்கள்.
- Alexa Widget 'ஐ உங்கள் தளத்தின் Home Page 'ல் பயன்படுத்துங்கள்.
- உங்கள் தளத்திள் Alexa Review Widget 'ஐ சேருங்கள். பதிவை படிக்க வருபவர்களுக்கு உங்கள் தளம் பிடித்திருந்தால் Alexa 'வில் Review எழுதுவார்கள்.
- இதனால் தரவரிசையில் வேகமாக முன்னேரலாம்.
- Alexa 'வை பற்றி உங்கள் பிளாகில் ஒரு பதிவாவது எழுதுங்கள். Alexa 'வில் தரம் எகிறும்.
- உங்கள் தளத்திள் வாரத்திற்க்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.
- நேரம் இருந்தால் மற்றவர் பதிவுகளுக்கு கருத்துரை எழுதுங்கள்.
இந்த எட்டு கட்டளைகளை பின்பற்றினால் அலெக்ஸா தரவரிசையில் நீங்களும் முன்னேறலாம். நன்றி...
|
விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை
வரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம்.
இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது.
|
கிழமைகள் ஏற்பட்டது எவ்வாறு?
நாட்களுக்குப் பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில், நாட்களுக்குப் பெயர் கிடையாது. அதற்குக் காரணம் என்ன? மனிதன், வாரத்தைக் கண்டுபிடிக்கவில்லையா?
பண்டைய நாட்களில் காலத்தை மாதங்களாகவே பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் இருந்தன.அத்தனை நாட்களுக்கும் பெயர் வைப்பதற்குச் சாத்தியப்படவில்லை.
மனிதர்கள் நகரங்களை அமைத்தபிறகு வாணிபம் செய்வதற்கு, அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தனியாக ஒருநாள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கினார்கள்.
பண்டைக் காலத்துப் பாபிலோனியர் ஒவ்வொரு 7-வது நாளையும் வணிகத்துக்கும், மத விஷயங்களுக்கும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யவில்லை.
யூதர்களும் பாபிலோனியர்களின் உதாரணத்தைப் பின்பற்றினர். ஒவ்வொரு 7-வது நாளையும் மத விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு வாரம் பிறந்தது. வாரம் என்பது இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம். வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் பெயர் வைத்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் எண்களாகவே அமைந்திருந்தன. சனிக்கிழமைக்குப் பிறகுஅவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு வந்து சனிக்கிழமையுடன் முடித்தனர். அவர்களுடைய திட்டப்படி ஞாயிறு முதல் நாளாகவும், சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் அமைந்தன.
வாரத்துக்கு 7 நாட்கள் என்ற முறையை எகிப்தியர்களும் கடைப்பிடித்தனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. வாரத்தின் நாட்களுக்கு அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர். எகிப்தியர்கள் வைத்த பெயர்களை ரோமானியர்கள் பின்பற்றினர். சூரியனின் பெயர் ஞாயிறு. சந்திரனின் பெயர் திங்கள். மார்ஸ் அல்லது டியூ, ரோமானியர்களின் போர்த் தெய்வம். அந்தப் பெயர் செவ்வாய்க்கிழமை ஆயிற்று. `மெர்க்குரி’ தெய்வத்தின் மற்றொரு பெயர் (ஓடன்) புதன்கிழமை ஆயிற்று. `தர்’என்பது ரோமானியர்களின் இடித்தெய்வம். அது `தர்ஸ்டே’ ஆயிற்று. அதாவது வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்தப் பெயர் எப்படி வந்தது? `ப்ரிக்’ என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர், `ப்ரைடே’, அதாவது வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமைக்கு வந்தது.
|
மாணவர்களை கொடூரமாக அடிக்கும் ஆசிரியர்கள்! வீடியோ இணைப்பு
மாணவர்களை கொடூரமாக அடிக்கும் ஆசிரியர்கள்! வீடியோ இணைப்பு
|
கேபிளின் வரலாறு பாகம் 1
இது என் கதையல்ல.. ஆனால் என் கதையாகவும் இருக்கக்கூடும். வேண்டுமானால் தமிழ் வலைப்பதிவுலகில் எழுதப்படும் ஆட்டோ பிக்ஷனாகக்கூட இருக்ககூடும். கடந்த இருபது வருடங்களில் நம்மிடையே வாழ்வில் ஒரு அங்கமாய் போன ஒரு தொழிலை பற்றியும், அதை சார்ந்த ஒருவனின் வாழ்க்கையை பற்றியது இக்கதை. இது பல சமயங்களில் அபுனைவாகவும், புனைவாகவும் கூட இருக்கக்கூடும் என்பதை உங்களுக்கு நினைவுறுத்தவே இந்த முன்னறிவிப்பு.
கேபிளின் கதை-1
என் கண்ட்ரோல் ரூமிலிருந்து கொத்தாய் ஒயர்கள் ஒரு பெரிய ஓட்டையின் வழியாய் வெளியேறி, இடது வலது என பார்க்காமல், ஆக்டபஸின் கைகள் போல எதிர் ப்ளாட் மொட்டைமாடிக்கும், பக்கத்து பிளாட் மாடிக்கும், பத்தடி இரும்பு போஸ்டிற்குமாய் பரந்து அங்கிருந்து மேலும் மாடிகளுக்கும், பல போஸ்ட் கம்பங்களுக்குமாய் ஆக்கிரமித்து, அடுத்த வீடு, அடுத்த திருப்பம், அடுத்த தெரு, என்று இரை தேடும் பாம்பு போல போய்க் கொண்டேயிருந்தது.
எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் இந்த இருபது வருடங்களில். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு, ஒரு ஹாபியாக வீடியோ கேசட் வாடகை விட ஆரம்பிக்க, மெல்ல அத்தொழில் நிரந்தரக் கடையாய் மாறி, வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் வர ஆரம்பித்த அடுத்த ஜெனரேஷன் தொழில் தான் இந்த கேபிள் டிவி. வீடியோ பார்லர் வைத்திருந்த போது கூட யாரும் செய்யாத ஒரு விஷயம், நான் கேபிள் டிவி தொழில் செய்ய ஆரம்பித்த போது, செய்தது... ஊரே சிரித்தது.
”இஞ்ஜினியரிங் படிச்சிட்டு இப்படி டெக்குல படம் போட்டு வீடு வீடா வசூல் பண்ணப் போறேன்னு சொல்றியே இது தேவையா?” என்று கேவலமாய் என்னை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் ஏராளம்.
நான் அப்போதெல்லாம் அவர்களிடம் சொல்லும் ஒரு விஷயம் எதிர்காலத்தில் இந்த தொழில் இன்னும் முப்பது நாற்பது வருடங்களுககு கோலோச்சப் போகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த தொழில் செய்ய பல பெரிய தொழிலதிபர்கள் நுழைந்து உனக்கு எனக்கு என்று போட்டிப் போடப் போகிறார்கள். அன்று நான் இருப்பேனோ இல்லையோ..? நிச்சயம் இந்த தொழில் இருக்கும் என்பேன். சிரிப்பார்கள்.
சினிமா என்ற ஒரு விஷயம் தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று இருந்த காலத்தில், கருப்பு வெள்ளை டிவி, பிறகு கலர் டிவி என்று வளர்ச்சியடைந்தது. அப்படி வளர்ந்த காலத்தில் சினிமாவுக்கு எமனாய் வந்தது விடியோ எனும் ஒரு விஷயம். மெல்ல அந்த வீடியோ தொழிலை ஆக்கிரமித்து, ஒரு இடத்திலிருந்து வீடியோ டெக்கின் மூலம் படம் போட்டால் வீடுகளில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் ஆயிரம் பேரின் வீட்டிற்கு படம் காட்ட முடியும் எனும் போது வீடியோ கேசட்டின் ஆதிக்கம் ஒழிந்து, கேபிளின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. வீட்டிலிருந்தே தினமும் காலையும் மாலையும் படம் பார்ப்பது ஆரம்ப காலத்தில் ஆடம்பர விஷயமாயத்தான் மக்கள் கருதினார்கள். ஆனால் எத்தனை நாள் தான் இப்படி தூர்தர்ஷன் காட்டும் தில்ரூபாவையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற விஷயம் மெல்ல கேபிளின் மேல் பார்வையை திருப்பியது.
இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளாளான ஆண்டெனாவினால் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக் கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டிவியை ட்யூன் செய்து படம் பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. ”ஐ.த்தோடா” என்று கிண்டலடித்தார்கள்.
வயலும் வாழ்வும், ஒளியும் ஒலியும், சனிக்கிழமை திரைப்படம் என்கிற விஷயங்கள் எல்லாம் உலக அதிசயமாய் இருந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி தெரிகிறது என்பதற்காக, பத்தடி உயர இரும்பு கழியில் பெரிய ஆண்டனாவை வைத்து, சிக்னலை இழுக்க, மேலும் ஒரு பூஸ்டரை போட்டு, நடுநடுவே அலையடிக்கும் ரூபவாஹினியில் போடும் தமிழ் படங்களை பார்ப்பதற்கு ஆவலாய் அலைந்த காலத்தை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
தமிழ் நாட்டை பொறுத்த வரை கேபிள் டிவி தொழில் செய்பவரை ஆரம்ப காலத்தில் கேபிள் டிவிக்காரர்கள் என்று அழைத்திருந்தாலும், சாட்டிலைட் ஒளிபரப்பில் தமிழில் முன்னோடியான சன் தொலைக்காட்சி வந்ததும் தமிழ் நாடு பூராவும் கேபிள்டிவி தொழில் செய்பவர்களை சன் டிவிக்காரர்கள் என்று அழைப்பது இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் தான் எவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் வளரும். வளர்ந்து கொண்டேயிருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி கிடையாது. இது முற்று பெறும்போது உலகமும் முற்று பெற்றுவிடுமோ என்ற அச்சம் மனதில் தோன்றியது.
இன்றைய நிலையில் தமிழ் சேனல்கள் என்று எடுத்துக் கொண்டால் சன் குழுமம், கலைஞர் டிவி குழுமம், ராஜ் டிவி குழுமம், ஜெயா டிவி குழுமம் என்று லிஸ்ட் எடுத்துக் கொண்டாலே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் சேர்ந்துவிடும். இன்ன பிற ஒற்றை சேனல்களை கணக்கெடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஐம்பது சேனல்கள் வரிசையில் வந்துவிடும். இதுதவிர ஒவ்வொரு ஊரிலும உள்ள லோக்கல் சேனல்கள் எனப்படும் சேனல்களை கணக்கிலெடுத்தால் நூற்றுக்கும் மேற்படும். முக்கியமாய் நம் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் சுமார் 30க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
இப்படி தமிழில் மட்டுமே இவ்வளவு சேனல்கள் இருக்க, ஒவ்வொரு தேசிய, மாநில மொழிகளுக்கும் டஜன் கணக்கில் கொத்து கொத்தாய் டிவிக்கள் சேனல்களால் நிரம்பி வழிகிறது. முதல் முதலாய் கேபிள் டிவி என்று எப்போது எங்கே ஆரம்பித்தார்கள்? எப்படி இதன் டெக்னாலஜி வளர்ந்தது? எப்படி இவ்வளவு சேனல்கள் நடத்த முடிகிறது? இந்த சேனல்களை எப்படி கேபிளின் வழியே ஒளிபரப்புகிறார்கள்? பே சேனல்கள் எனப்படும் கட்டண சேனல்கள் எப்படி பணம் வசூல் செய்கிறார்கள்? எவ்வளவு கோடி ரூபாய்கள் இந்த கேபிள் தொழிலில் புரள்கிறது தெரியுமா? எத்தனை பெரிய நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறது? அனலாக் நெட்வொர்க், டிஜிட்டல் நெட்வொர்க் என்றால் என்ன?. கண்டிஷனல் ஆக்ஸஸ் என்றால் என்ன? செட்டாப்பாக்ஸ் முறையில் எப்படி கையாளப்படுகிறது? எம்.எஸ்.ஓ என்றால் என்ன? எம்.எஸ்.ஓ தான் எல்லாருக்கும் சிக்னல் கொடுக்கிறார்கள் என்றால் ஆப்பரேட்டர்கள் எனும் நம் ஏரியாவில் இருக்கும் ஆப்பரேட்டர்கள் என்ன செய்கிறார்கள்?
கேபிளின் ஆதிக்கத்தை டி.டி.எச் எனப்படும் வீட்டிற்கு நேரடியாய் ஒளிபரப்படும் டெக்னாலஜி வந்ததினால் கேபிள் டிவியின் நிலை என்னவாகும்? எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு அரசியல் தமிழ் நாட்டு கேபிள் டிவி தொழிலில் இருப்பது எதனால்?. இந்த அரசியல் பின்னணியால் பாதிக்கப்ப்ட்ட ஆப்பரேட்டர்கள் கதி? இதில் புரளும் பணம் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை ஒரு கேபிள் டிவி அதிபரின் பார்வையில் ஒரு ஆட்டோ பிக்ஷனாக இப்புத்தகத்தின் மூலம் பார்க்கலாம்.
|
தியேட்டர்களில் இனி நைட் ஷோ இல்லை!
பெண்களின் பாதுகாப்பை கருதி, சினிமா தியேட்டர்களில் இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. அவை காலை – பகல் – மாலை – இரவு என நான்கு காட்சிகள்.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் – மாலை – இரவு என தினமும் 3 காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இரவு 10-30 மணி காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இரவு காட்சி முடியும் போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவு காட்சிக்கு வருவதில்லை.
இதனால், தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நிறைய தியேட்டர்களில் இரவு காட்சிக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே வருகிறார்கள். தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில், இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. நிரந்தரமாக அந்த காட்சியை ரத்து செய்வது பற்றி, தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
|
Text Animation உருவாக்க உதவும் தளம்
Animation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம்.
அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.
Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.
நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.
|
நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு கல்யாணம்
கலியாணவீட்டில் அழுது அழுது தாலி கட்டும் மாப்பிளை!! (வீடியோ இணைப்பு)
அட வீட்டாரின் மிரடட்ல் வற்புறுத்தலினால் மனசுக்கு பிடிக்காத பொண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும்கொடுமை .
கண்ணீர் விட்டு கதறி அழுது தாலி கட்டும் மாப்பிளை ...அட சீ இந்தகாலத்துல இப்படியும் ஒரு கல்யாணமா ..!
காணொளி பார்த்தல் நீங்களும் சிரிப்பீர்கள் .
|
ரஜினி - கமல் இணைகின்றனர் : ஷங்கர் இயக்குகிறார்
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான ஸ்கிரிப்ட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம். அனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ‘நண்பன்Õ பட ரிலீசுக்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் ‘கோச்சடையான்Õ படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார். இதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது.
இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ‘ராணாÕ படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
பிரபல நடிகை கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: மாட்டுவாரா காதலன் ???
பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதியூஷாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டிக்கு தண்டனை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல் பூக்கள் படங்களில் நடித்தவர் பிரதியூஷா. கடந்த 2002-ல் பிரதியூஷா ஐதராபாத்தில் காரில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் பிரதியூஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை கொலை வழக்காக மாற்றினார்கள். கற்பழித்து பிரதியூஷாவை கொன்று இருப்பதாக கூறப்பட்டது.
பிரதியூஷாவுடன் கவலைக்கிடமான நிலையில் அவரது காதலன் சித்தார்த் ரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரதியூஷாவை சித்தார்த் கொலை செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சித்தார்த் குணமாகி வீடு திரும்பினார்.
இந்த வழக்கில் மற்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருந்தது. பிரதியூஷா கொலை செய்யப்பட்டதாகவும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணைகள் முடிந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
பிரதியூஷா கொலையில் சித்தார்த் மாட்டுவாரா என்பது இந்தத் தீர்ப்பில் தெரியவரும்.
|
அழியும் நிலையில் நோக்கியா
கையடக்கத்தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நொக்கியா முதற்தடவையாக அப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது. கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது.
அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் அப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நொக்கியாவிற்கு பாரிய அடியாகும்.
மேலும் தென்கொரிய நிறுவனமான செம்சுங் நொக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது அதன் நிலை இதைவிட சிக்கலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் நொக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்பிள் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமை பிரதான காரணமாகும்.
இதனோடு நொக்கியா இன்று வரை தனது ‘சிம்பியன்’ இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு பிரதான காரணமாகும்.
இதனைத் தவிர்க்கவே நொக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நொக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.
சீன நிறுவனமான ‘ZTE’ மற்றும் ‘RIM’ இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நொக்கியாவிற்கு மேலும் சவாலாளிப்பதாகவுள்ளது.
நொக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தினை உபயோகிப்பதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் காணாமல் போகும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.
|
டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்
தற்கால உலகில் அதி வேகமாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றது இணையம். இணையம் மக்களுக்கு நல்ல விடயங்களை எடுத்துச் சென்றாலும் கூட இளைய தலைமுறைகளை சின்னாபின்னமாகச் சீரழித்து அவர்களின் வாழ்க்கையை குழிதோண்டிப் புதைக்கின்றது.
இதற்குக் காரணம் பெற்றோர்கள். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்து கல்வி பயில்கின்றார்கள் என்ற நினைப்புடன் நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றோர்களின் பிள்ளைகள் இணையம் மூலம் தங்களது கன்னித் தன்மைகளையிழந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு சமூகத்தைச் சீரழிக்கும் சில இணையத்தளங்களை உலாவ விடுவது, அவர்களின் கலாசாரத்திற்கு அது ஒத்துழைக்குமே தவிர எமது கலாசாரத்திற்கும் அதற்கும் வெகுதூரம்.
இருந்தும் எமது இளம் சமுதாயம் அதனை நோக்கித்தான் தற்போது முன்னேறி வருகின்றது. இதனால் எம் கலாசாரம் காலாவதியாகி விடும் அபாயம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க சட் றூம் என்று சில கேடிகளால் உதயம் பெற்றிருக்கும் இவ்வாறான வலைதளங்கள், பல குடும்பங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பாவனைகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒரு போதை எனவும் இதனைக் கூற முடியும். அந்தளவுக்கு கணவன் இல்லாத வேளைகளில் மனைவியும், மனைவி இல்லாத வேளைகளில் கணவனும் பெற்றோர்கள் இல்லாவேளை பிள்ளைகளும் வேறு நபர்களுடன் சட் அடித்துப் பின் கற்பழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான சட் றூம் இணையத்தளங்கள் மூலம் தங்களது அந்தரங்க உறுப்புக்களை பிறருக்குக் காட்டுவதுடன்,
அவர்களின் அந்தரங்க உறுப்புக்களைத் தாங்கள் பார்த்து ரசிப்பதும் நாளாந்தம் நடைபெற்று வந்து தற்போது வழமையாகி விட்ட ஒன்று. எனினும் இத்துடன் இந்தச் சட் நின்றுவிடாது, றூம் போடும் அளவுக்கு ஒரு முன்னேற்றகரமான வேலையைச் செய்து வருகின்றது. குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இளைஞர், யுவதிகளே இந்தச் சீர்கேட்டில் முதன்மைவாதிகளாகத் திகழ்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கலாசாரம் கவிழ்ந்து விட்டது என்றும், கப்பல் ஏறுகின்றது என்றும் புலம்பெயர் நாடுகளில் புலம்பிக் கொண்டு, தாங்கள் சட் அடிச்சு, றூம்போட்டு கலாசாரத்தைக் காலாவதியாக்குகின்றீர்கள். இவ்வாறு சட் றூம் இணையங்களில் சட் அடித்து, அந்தரங்க உறுப்புக்களைப் பரிமாறிக் கொண்டவர்களின் ஏராளமான வீடியோக்கள் எம்வசம் உள்ளன. அதாவது, ஒரு நண்பன் தனது சட் றூமில் உள்ள நண்பியின் மேல் பக்கத்தை பதிவு செய்து தனது இன்னொரு நண்பனுக்குக் காட்டும் பட்சத்தில் அதனைப் பார்த்த இந்த நண்பன் நீ மேல்பக்கம்தான் காட்டுகின்றாய், நான் கீழ்ப் பக்கத்தையும் காட்டுகின்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு பெண்களின் கற்பை ஏலம் விடுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு இந்தச் சட்றூமை இயக்கும் நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் சீனா நாட்டில் இருப்பதும், குறைந்த கட்டணத்தில் இந்த வசதிகளைச் செய்து, பயனாளிகள் அதில் தரவேற்றம் செய்வதை இரகசியமாகப் பதிவு செய்து இந்தியாவில் இருக்கும் நீலப்படம் எடுக்;கும் நிறுவனங்களுக்கு விற்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தே விபச்சாரம் செய்யும் பெண்களாக, ஆண்களாக மாறுகின்றனர் நம் இளையோர்.
இருந்தும் இவ்வாறு நடப்பது இந்தப் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தெரியாது. தங்களின் உடல் எத்தனையோ பேரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது என்பது இவர்களுக்குத் தெரியாது. தான் ஒருவருடன்தான் சட் அடிச்சதாக நினைக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்பட்ட காணொளிகளை நாம் இதில் தரவேற்றம் செய்வோமாக இருந்தால், எத்தனையோ குடும்பங்களின் தராதரம் கெட்டு, நீதிமன்ற வாசல் செல்லக் கூடிய நிலைக்குத் தள்ளி விடும்.
இருந்தும் ஆதாரங்களுக்காக நாம் சிலவற்றை இவ்விடத்தில் பிரசுரிக்கின்றோம். இவ்வாறு பிரசுரிப்பது இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறாதிருப்பதற்காகவும், பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு அக்கறை உணர்வு வரவேண்டும் என்பதற்காகவுமே. இது இவ்வாறிருக்க இவ்வாறான இணையங்கள் மூலம் பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவ் இணைய நிர்வாகிகள், அப் பெண்களை மடக்கி அவர்களுடன் சட் அடிப்பதுபோல் நடித்து,
பின் அவர்களின் அந்தரங்க உறுப்புக்களை அவ் வீடியோச் சட் மூலம் காண்பிக்குமாறு கேட்டு, அதனை காணொளியாகப் பதிவு செய்து வெளியிடங்களுக்கு உலாவ விடுவதும் அண்மைய நாட்களில் நடந்தேறியுள்ளது. எனவே இவ்வாறான சட் அடிக்கும் இணைய நிறுவனங்களின் உரிமையாளர்களே இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், பெண்களின் ஆபாச காணொளிகளையும் பதிவெடுத்துத் தரவேற்றம் செய்கின்றனர்.
எனவே பெற்றோர்களாகிய நீங்கள், பிள்ளைகள் மேல் முழுமையான கண்ணோட்டத்தினை வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்திருந்தால் அடிக்கடி அப் பக்கமாக வந்து போனால் கூட இவ்வாறான சீரழிவுகளை இயன்றவரைக் குறைத்துக் கொள்ள முடியும். எனது பிள்ளை இவ்வாறு செய்யாது என்று மட்டும் நீங்கள் நினைத்தால் அதுதான் முட்டாள்தனம். ஏனெனில் ஏமாற்றுக்காரர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அல்லவா? இதேவேளை எமது இணையத்தின் புலனாய்வு செய்திப் பிரிவால் தரப்பட்ட தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இச் செய்தியை நாம் தரவேற்றத் தயார் நிலையில் இருந்தபோது, மேற்படி சட் றூம் நிர்வாகியினால் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்று தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தொடர்பான பெயர், விபரங்கள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்புக்காரணங்களுக்காக நாம் இவ்விடத்தில் பிரசுரிக்கவில்லை. அத்துடன் 21 வயது நிரம்பிய ஒரு இளைஞன் எமது புலனாய்வுச் செய்திப் பிரிவிடம் தான் இதுவரைக்கும் 200 ற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்த்து விட்டேன் என ஒரு சாதனையாளன் போல் தெரிவித்துள்ளார்
எனவும் எமது புலனாய்வுச் செய்திப் பிரிவு தெரிவிக்கின்றது. இதேநேரம் இவ்வாறான சட் றூம் வைத்திருக்கும் உரிமையாளர்களும் தங்கள் அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்களுக்குக் காட்டிய காணொளிகளும் எமது செய்திப் பிரிவிடம் உள்ளது. தேவை ஏற்படின் அதனையும் நாம் தரவேற்றம் செய்வோம். அத்துடன் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இனிவரும் காலங்களில் இப் பகுதியில் இடம்பெறும். இதேவேளை இத் தகவல்கள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது வேதனைப்பட வைப்பதற்காகவே அல்ல. மாறாக ஒரு விழிப்புணர்வுக்காகவே என்பதையும் நாம் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
|
பாஸ்போர்ட் APPLY செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது,நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உருவாக்கிய அந்த சகோதரர்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிர்க்குள் செல்வோம்
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறுநாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும,உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM)தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை,முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும்,ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
|
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?)
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
(அது ஹோம் கேபினேட் இல்லை.. பங்களா கேபினேட்)
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!
(நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்)
42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
(அப்படி புதைத்துவிட்டுத்தான் வதைத்துகொண்டு இருக்காங்களா?)
அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.
(உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே... )
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.
(ஆஹா.. நல்லதொரு குடும்பம்.. பல்கலை கலகம் இல்லா கழகம்)
இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
(எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. ஆனால் மன்னரின் வாரிசுகள் எல்லோரும்னு திருத்திக்கோணும் போல... )_
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.
( தந்தை மகனுக்காற்றும் உதவி..?)
தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!
(ஐம்பெருங்காப்பியங்கள் மாதிரி அவ்வளவு சீக்கிரம் இவங்களை அழிக்கவே முடியாது போல இருக்கே..?)
குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.
( தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி ....)
ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.
( ராசாத்தி உங்களை நம்பி இந்த கோதைப்பொண்ணு இருக்குதுங்கோ.. ஒரு வார்த்தை சொல்லீட்டாக்கா , மினிஸ்டர் போஸ்ட் கிடைக்குமுங்கோ..)
ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
( போயஸ்க்கு ஒரு சசிகலா... கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி ...?)
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.
(ஹூம்.. ஒரு செல்வியோட அக்குறும்பையே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னொரு செல்வியா? )
கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!
( சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் ,. முடிவே இல்லாதது...)
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
( சொல்ல மறந்த சோகக்கதை..?)
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
(வாலி, வைரமுத்து மாதிரி ஜால்ரா அடிக்க யாராலும் முடியலையே... )
தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!
(சிங்கம் ஒன்று புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.. நமக்கு கெட்ட காலம்.. )
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.
உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
( ஜெயில் பாட்டு ஓ வந்ததென்ன கிழ மானே சுச்சூச்சுசூ...அதைக்கேட்டு பெயில் தந்ததென்ன ....)
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
(ராடியா ராடியா நீராராடியா......சகுனி போல் வளரும் ராடியா....உள்ளே தள்ள சி பி ஐ இல்லையா...?)
கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
(நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்...கலைஞர் )
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
(ஃபிரீயா விடு ஃபிரீயா விடு மாமூ.. நேர்மைக்கு இல்லை கேரண்டி... )
தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
(ஒரு தாதா தாத்தாவை வென்ற கதை...? )
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
(கொலை கொலையா தந்திரிக்கா,, கோர்ட்டை கோர்ட்டை சுத்திவா...)
ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
(உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல...)
மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!
(கொடூரக்குற்றங்கள்....அந்தரத்தில் நிற்கும் நீதி..? )
மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
( காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. )
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
( வேர் ஈஸ் த பார்ட்டி.. அட உங்க வீட்ல பார்ட்டி... )
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
(ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? )
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!
யாருக்கு ஜாமீன்?யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல...
அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.
( வந்தாள் எழிலரசியே.. இனி என்றும் அவர் ஆட்சியே... )
ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.
தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
( தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி.. கேப்பமாரி...)
|
கல்லூரியில் ராகிங் : மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் 4 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு வசதியாக பாளை ஐகிரவுண்டில் மாணவர்களுக்கு 'இளவரசர் மாளிகை' என்ற பெயரிலும் மாணவிகளுக்கு 'இளவரசிகள் மாளிகை' என்ற பெயரிலும் தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியிலுள்ள மாணவ, மாணவிகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விடுதி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு ஏப்ரல் 23ல் விடுதி விழா நடந்தது. விழா முடிந்ததும் ஒவ்வொவரும் வீடுகளுக்கும் விடுதிக்கும் திரும்பினர். விழா மகிழ்ச்சியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு மாணவிகள் விடுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த 3 மாணவிகளை உடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் பின்னர் மாணவர்களின் மிரட்டலுக்குப் பணிந்தனர். இதன்பிறகு மாணவர்கள் அந்த மாணவிகளை நிர்வாணமாக நடனமாட கூறி வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி அவர்களும் நடனமாடினர். இதை தங்களது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். தொடர்ந்து விடுதிக்குள் வந்த சில மாணவிகளிடமும் மாணவர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.
இதை பார்த்த மாணவி ஒருவர் துணிச்சலாக பெற்றோருக்கும் பேராசிரியர் களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார். விடுதிக்குப் பேராசிரியர்கள் வருவது தெரிந்ததும் மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர்கள் அங்கிருந்து நழுவினர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் குழு அமைக்கப் பட்டு மாணவிகளிடமும் அத்துமீறிய மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை குழு நடவடிக்கையில் இரண்டு மாதம் காலதாமதம் ஏற்பட்டதால் பா.ஜ.க சார்பில் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடந்தது. பின்னரே ஏப்ரல் 23ந்தேதி நடந்த சம்பவத்திற்கு ஜுன் மாதம் 10ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கல்லூரி நிர்வாகம் பிரச்சனையை அப்படியே மறைக்க எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. இதனால் கல்லூரி வளாகத்திற்குள் கசிந்த விவகாரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜனும், காவல்துறை அதிகாரிகளும் இச்சம்பவத்தில் மாணவிகள் ராக்கிங் செய்யப்பட்டனரா? என விசாரிக்க உத்தரவிட்டனர். இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரன் மற்றும் விசாரணை குழுவினரிடம் நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் நேரில் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டார். அப்போது நடந்த சம்பவங்களையும் இதுவரை மாணவ, மாணவிகளிடம் நடத்தப் பட்ட விசாரணை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக mbbs மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள்பாலவிக்னேஷ், சுந்தரவேல், கமலேஷ்குமார், மற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவரும் ஆக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரனிடம் கேட்ட போது, "மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். முதற்கட்டமாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், "இச்சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டது. அத்துமீறி நடந்த மாணவர்களைக் காப்பாற்ற சிலர் முயற்சித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முழுவிபரத்தையும் கூறியும் மாணவர்கள் மீது எதிர்காலம் நலன்கருதி நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. இவர்களைத் தண்டிக்காமல் விட்டு விட்டால் இதே தவறு மீண்டும் தொடரும். எனவே மற்றவர்களுக்குப் பாடமாக அமைய சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
|
மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் : நெஞ்சை தொடும் சம்பவம்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.
இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.
வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க..
சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.
அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை.
ஆனால் அந்த மலையளியோ..என்ட அச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றிக் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.
கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு. அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம்.
அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்டபடியே அங்கிருந்து நகர்ந்து போனார்.
|
துபாய் இளவரசர் இங்கிலாந்து பெண்ணுடன் ரகசிய திருமணம்: கோர்ட்டில் வழக்கு
துபாய் இளவரசர் ஷேக் அகமது பின் சயீத் அல்- மக்தும் (53). கோடீசுவரரான இவர் எமிரேட் ஏர்லைன்சின் தலைவராகவும் இருக்கிறார். இவர் லண்டனை சேர்ந்த நவின் எல். காமல் (35) என்ற பெண்ணை கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
காமல் உள்கட்டமைப்பு அலங்கார வடிவமைப்பாளராகவும் முன்னாள் மாடல் அழகியாகவும் இருந்தார். இவருடன் குடும்பம் நடத்திய இளவரசர் மக்தும் ஒரு ஆண் குழந்தையும் பெற்று கொண்டார். பின்னர் காமலை விட்டு பிரிந்து விட்டார்.
அதை தொடர்ந்து லண்டன் கோர்ட்டில் காமல் வழக்கு தொடர்ந்தார். அதில், ரகசிய திருமணத்தை முறித்து கொள்வதற்காக அவர் ஆண்டுக்கு ரூ.7 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், அவருடன் ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு இளவரசர் மக்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
|
மனைவியின் "அந்த" இடத்துக்கு பூட்டு போட்டுவிட்டு போன கணவன்
கற்புப் பட்டி திறந்து கிடந்ததால் மனைவியை தாக்கியவருக்கு 7 மாத சிறை!!
வெளியூருக்குச் செல்லும்போது மனைவியின் கற்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மனைவிக்கு 'கற்புப் பூட்டு' பொருத்தப்பட்ட பட்டியொன்றை அணிவித்து சென்ற நபர் ஒருவர், திரும்பிவந்தபோது அக் கற்புப் பூட்டு திறந்து இருந்ததை கண்டு அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
இந்நபருக்கு மனைவியை தாக்கிய குற்றத்தற்காக 7 மாத சிறை தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவின் தென்பகுதியில் உள்ள செங்குடு தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்த ஹீ ஸென் (வயது 29) என்பவருக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது."செய்தி நியூயாழ்.கொம்"
மனைவி மீது சந்தேகம் கொண்ட ஹீ ஸென், பாலியல் உறவுகொள்வதைத் தடுக்கும் 'கற்புப் பட்டி' எனப்படும் இப்பட்டியை தான் வெளியூருக்கு செல்லும் போது மனைவியான ஸியாவோ டியானுக்கு (வயது 20) அணிவித்து சென்றுள்ளார்.
ஓர் நாள் இரவு திரும்பி வந்து பார்த்தபோது ஸியாவோ டியானிற்கு தான் அணிவித்து சென்ற கற்புப் பட்டி திறந்திருந்தமையை அவதானித்து ஹீ ஸென், ஆத்திரமடைந்து அவரை தாக்கியுள்ளார்.
ஆனால், உண்மை என்னவென்றால், ஹீ ஸென் அவசரத்தில் அப்பூட்டை ஒழுங்காக பூட்டாமல் சென்றுவிட்டாராம். திரும்பி வந்தபோது அது திறந்திருப்பதைக் கண்டு, அவர் மனைவியை சந்தேகப்பட்டுவிட்டார்.
'அவர் தொழிலை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில் கற்புப் பட்டியை முறையாக பூட்டாமல் சென்றுவிட்டார். ஆனால் யாரும் இதைப்போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டியதில்லை. நான் ஒரு அடிமையில்லை. இது உண்மையில் மிக மோசமானது' என்று நீதிபதியிடம் ஸியாவோ டியான் தெரிவித்தார்.
செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!
|
பந்தயத்தில் தோற்றதால் நிர்வாணமாக வீடு சென்ற இளம்பெண்(பட இணைப்பு)
போலந்து நாட்டில் எல்க் எனும் 45 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் வீதியில் நிர்வாணமாக நடந்து சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-
சீட்டு கட்டு விளையாடும் பழக்கம் உள்ளவர் எல்க் என்ற இந்த பெண்மணி. இவ்வாறு சீட்டு விளையாட்டில் தான் தோல்வியை தழுவியதனால் வீட்டுக்கு செல்ல ஆயத்தமான இந்த பெண் வீடுவரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக பொலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பெண்ணை கைது செய்த பொலீசார் அவரை 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.
|
Subscribe to:
Posts (Atom)