Wednesday, December 21, 2011

“பிங்க் கலர் ஜட்டியும், பெண்களின் உரிமையும்”.


மங்களுர் அம்னீஷியா பப்பில் நடத்தப்பட்ட பெண்கள் மீதான ஸ்ரீராமசேனாவின் தாக்குதலுக்குப் பிறகுதான் “பப்” என்கிற வார்த்தை பரவலாக பொதுஜனங்ககளுக்கு பழக்கப்பட்ட வார்த்தையாக அறிமுகமாகியிருக்கிறது.

பப் தாக்குதலை முன்னின்று நடத்திய ராமசேனையின் தலைவர் முத்தாலிக், “இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கிற விதமாக, பெண்கள் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் ஆபாசநடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று விளக்கமளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பு நெருப்பைப் பற்றவைத்துவிட்டது.

கலாச்சாரசீரழிவு என்கிற பெயரால் பெண்ணினத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல் இந்த மண்ணுக்குப் புதிதல்ல.

“திருமணத்துக்கு முன்பாக பெண்கள் உறவு கொள்வதில் தவறில்லை, ஆனால் அந்த உறவு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்” என்று கருத்து சித்தரிக்கப்பட்டு வழக்குகள் பாய்ந்தன.

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை “சானிய மிர்சா” மைதானத்தில் விளையாடுகிறபோது உள்ளாடை தெரிய அணிகிற குட்டைப்பாவாடை, தங்களது இனத்தின் கலாச்சார சீரழிவிற்கு அடிகோள் என்று மிரட்டிப் பணியவைக்கப்பட்டு டிரவுசர் அணிந்து ஆடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“பெண்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் பயில்கிற பள்ளிகளை குண்டு வைத்துத் தகர்ப்போம்” என்று தாலிபான் பகுதிகளிலும், “எந்த மதர்ஷாவிலும் ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கூடாது” என்று உத்தரப்பிரதேசத்திலும், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட கலாச்சாரம்தான் காரணமாக சொல்லப்பட்டது.

என்ன கலாவோ என்ன சாரமா ஒன்றும் புரியவில்லை.

பப் தாக்குதலில் தவறில்லை என்று நியாயப்படுத்தும் முத்தாலிக் “பார்கள் மற்றும் பப்கள்” இரண்டுமே இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானவை என்று கூறுகிறாரா? அல்லது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிற அவற்றுள் பெண்கள் நுழைவதும் குடிப்பதும் கூத்தாடுவதும்தான் தவறு என்கிறாரா? அப்படியானால் பப்களுக்கு அனுமதி வழங்கும்போது “பெண்களுக்கு அனுமதியில்லை” என்று உத்தரவிடச் சொல்லி அரசாங்கத்திடம்தான் அவர் சண்டை போடவேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு…. பெண்களின் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்து அடிப்பதைமட்டும் இந்தியக் கலாச்சாரம் கௌரவமாக ஏற்றுக்கொள்ளுமா என்பதையும் அவர்தான் விளக்க வேண்டும்.

என்னதான் நவநாகரிக காலமாக இருந்தாலும், போதை தலைக்கேறிய நிலையில் போவோர் வருவோருடனெல்லாம் அரைகுறை ஆடையுடன் தனது பெண் ஆடுவதை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதற்காக முத்தாலிக் பாணியில் முயற்சிப்பது சரியல்ல.

இப்படிப்பட்ட சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க என்ன வழி என்று ஆராய்ந்து தீர்வு காண முயற்ச்சிக்க வேண்டுமே தவிர… அதை விடுத்து, “பெண்களைத் தாக்கியவர்களுக்கு பாடம்புகட்டும் வகையில், பெண்கள் அணியும் ஜட்டிகளை… அதிலும் குறிப்பாக பிங்க் கலர் ஜட்டிகளை, அந்த அமைப்பின் தலைவருக்கு காதலர் தினத்தன்று பரிசாக அனுப்பிவைப்போம்” என பெண்கள் அமைப்பின் தலைவி நிஷா சுஷானி எடுத்த முடிவு எந்த வகையில் சேர்த்தி எனத்தெரியவில்லை.

இரு தரப்புக்குமே எதிர்ப்பைக்காட்ட எத்தனையோ விதமான நியாயமான வழிமுறைகள் இருக்கும்போது, அடிப்பேன் உதைப்பேன் என்பதும்…அடிக்கிற மடையர்களுக்கு நான் அணியும் ஜட்டியை அனுப்புவேன் என்பதும்… இரண்டுமே முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

ஜட்டிகளை அனுப்பச்சொல்லும் முடிவை எத்தனை குடும்ப்பப்பெண்கள் இன்முகத்தோடு வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை. பார்வையில் படும்படி உள்ளாடை வெளியே கொடியில் காய்வதைக்கூட விரும்பாத பெண்களா… பப்ளிக்காக நான் போட்டிருக்கிற ஜட்டியை அவிழ்த்துத்தருவேன் என்பதை ஒப்புக்கொள்வார்கள்? என்ன மடத்தனம்?

அப்படி அனுப்பி வைக்கப்படுகிற ஜட்டிகளில் ஒன்றைக் கையிலெடுத்து, அடடா… இதுதான் நிஷாஅணிந்திருந்த ஜட்டியா? சைஸ் என்ன? நல்லா வாசமாத்தான் இருக்கு என்று யாராவது ஒருவன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால்…. அது எவ்வளவு அவமானம் என்பதை அவர்கள் உணராமல் போனது அதிசயம்தான்.

“பிங்க் கலர் ஜட்டிகளை” அவர்கள் தேர்வு செய்யக்காரணம் , பிங்க் கலர் என்பது முட்டாள்தனத்தைக் குறிக்கும் என்பதால். யாருடைய முட்டாள்தனத்தை என்பதுதான் கேள்வி. இன்று ஜட்டியை அனுப்பத் துணிந்தவர்கள் நாளை நாப்கினையும் அனுப்பத் துணிந்துவிடக் கூடாதே என்பதுதான் நமது பயமெல்லாம்.

2 comments:

  1. Nothing wrong in sending even naphkins to fools like Muthalik.

    ReplyDelete
  2. Nothing wrong in sending even naphkins to fools like Muthalik.

    ReplyDelete