துபாய் இளவரசர் ஷேக் அகமது பின் சயீத் அல்- மக்தும் (53). கோடீசுவரரான இவர் எமிரேட் ஏர்லைன்சின் தலைவராகவும் இருக்கிறார். இவர் லண்டனை சேர்ந்த நவின் எல். காமல் (35) என்ற பெண்ணை கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
காமல் உள்கட்டமைப்பு அலங்கார வடிவமைப்பாளராகவும் முன்னாள் மாடல் அழகியாகவும் இருந்தார். இவருடன் குடும்பம் நடத்திய இளவரசர் மக்தும் ஒரு ஆண் குழந்தையும் பெற்று கொண்டார். பின்னர் காமலை விட்டு பிரிந்து விட்டார்.
அதை தொடர்ந்து லண்டன் கோர்ட்டில் காமல் வழக்கு தொடர்ந்தார். அதில், ரகசிய திருமணத்தை முறித்து கொள்வதற்காக அவர் ஆண்டுக்கு ரூ.7 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், அவருடன் ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு இளவரசர் மக்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment