மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் போனில் பேசுவதை விட, குறுஞ்செய்தி அனுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.காரணம் அந்தளவுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலமாக உள்ளது. நாம் பிசியான நேரங்களில் இருப்பதை நம்மை தொடர்பு கொள்பவருக்கு நாசுக்காக தெரிவிக்க இந்த குறுஞ்செய்தி சேவை உதவி செய்கிறது.
சில பேர்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத பல விஷயங்களை மொபைல் மூலம் தெரிவிக்க இந்த குறுஞ்செய்தி சேவை உதவுகிறது.குறிப்பாக காதலிப்பவர்கள் மொபைலில் பேசுவதை விட குறுஞ்செய்தி மூலமாக பேசிக்கொள்வது தான் மிகமிக அதிகம்.இதற்கு காரணம் வேறு சொல்ல வேண்டுமா என்ன?
இப்படி மனித வாழ்க்கையில் கூடவே வரும், மௌனமாய் சாகசம் செய்யும் ஒரு மனிதனைப்போல நம்மை பின் தொடர்வது தான் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவை.
அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுபவத்தை நாம் இன்னும் புதுமையாக மேற்கொள்ள உதவுவது தான் Affle Limited நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் S.M.S 2.0
குறைந்தபட்சம் ஜி.பி.ஆர்.எஸ் வசதி கொண்ட கலர் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த அப்ளிகேஷன் ஒரு புதுமையான எஸ்.எம்.எஸ் அனுப்பும் அனுபவத்தை தரும் என்றால் அது மிகையாகாது.காரணம் பொதுவாக நாம் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது மிகவும் சாதாரணமாக லட்டர்களை மட்டுமே டைப் செய்து அனுப்புவோம்.
அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
இந்த அப்ளிகேஷனை நாம் நமது மொபைலில் பயன்படுத்துவதன் மூலம்
# லட்டர்களை ( TEXT ) கலரில் டைப் செய்து அனுப்பலாம்.
# உங்கள் குறுஞ்செய்தியை பெறுபவரின் மூடுக்கேற்ற மாதிரியான,அல்லது நீங்கள் அனுப்பும் செய்தியின் தன்மைக்கேற்ற Smileys களை இணைத்து அனுப்பலாம்.
# ஒவ்வொரு முறையும் குறுஞ்செய்தி அனுப்பும் போது அதன் பின்பக்கத்தின் வண்ணத்தை
( BACKGROUND COLOUR) மாற்றி அனுப்பலாம்.
# நீங்கள் நினைக்கும் நேரத்தில் தானாக எஸ்.எம்.எஸ் செல்லும்படி செட் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.அதேபோல உங்கள் குறுஞ்செய்தியை இமெயிலாக மாற்றி அனுப்பலாம்.
# இதில் இருக்கும் சர்ச் ( SEARCH ) வசதி மூலம் நாம் இணைய தேடல்,நீங்கள் வைத்திருக்கும் ஆபரேட்டர் தரும் வசதிகளை தேடும் வசதி,நகரத்தை தேடும் வசதி,வேலை தேடுதல், வீட்டுமனை தேடுதல் போன்ற சேவைகளை மேற்கொள்ள முடியும்.
பின்குறிப்பு : இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் தான். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் போர்ட்டலுக்கு சென்று அங்கேயும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நோக்கியா, சோனிஎரிக்சன்,சாம்சங் கம்பெனிகளின் பெரும்பாலான மாடல்களை இந்த அப்ளிகேஷன் ஆதரிக்கிறது.
# எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் எஸ்.எம்.எஸ் திரையில் சினிமா, விளையாட்டு, அரசியல்,கல்வி,பேஷன்,வணிகம் சம்பந்தமான அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக படித்து மகிழலாம்.
|