Friday, June 17, 2011

கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?

போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச , தற்காலிக பாதுகாப்பையே தருகின்றன.

‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களை குடிக்க வைக்கிறது.

கோக்கில் போலி வந்தால் அது மக்களை பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது.

கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள்.

குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.

கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு




நடிகர் கமலஹாசன் உண்மையில் நாத்திகரா? இல்லை நாத்திகர் போல் நடிக்கிறாரா?

-மதன், சென்னை

ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஒரு முற்போக்காளன் நாத்திகனாக இருக்க வேண்டியது கட்டாயம்; ஆனால் நாத்திகனாக இருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாகவோ, முற்போக்காளராகவோதான் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.

தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் கிடையாது. ‘கடவுள் இல்லை’ என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை புரிந்தவர்கள். புரியாதவர்கள். அவ்வளவுதான்.

‘கமலஹாசன் நாத்திகரா?’ என்று கேட்டு இருக்கிறீர்கள்.
‘கமலஹாசன்’ அல்ல; ‘கமல்ஹாசன்’ என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதான் அவர் கமலஹாசன் (KAMLAHASAN). அதன் பிறகு அவர் கமல்ஹாசன் (KAMALHASAN).

எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த ‘நாத்திகர்’ தன் பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.

‘கமலஹாசன் உண்மையில் நாத்திகரா?’இந்தக் கேள்வியை நீங்கள் கமலிடமே கேட்டிருந்தால், அவர் நாயகன் திரைப்படத்தில்,“தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்ட பேரனை பார்த்து, “தெரியலையேப்பா…” என்று ‘தெளிவாக’ பதில் சொன்னாரே…அதுபோன்ற வசனத்தைதான் பதிலாக அளிப்பார்.

அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கண்டிப்பாக இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. அதை அவருடைய படங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் விஸ்பரூபமாக எடுத்து நின்ற ‘தசவதாரம்’ அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது.

சரி, இப்ப நீங்களே சொல்லுங்கள், கமல்ஹாசன் நாத்திகரா? ஆத்திகரா?

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

இன்று புதிய இளம் இயக்குநர்கள் சினிமாவில் தரமான படங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்கள் அவைகளை காலி செய்துவிடுகிறதே?
ரஜினி, விஜய் இவர்களைவிட இந்த சினிமாவை திருத்த வந்திருக்கிற இந்த சீர்திருத்த இளம் இயக்குநர்களை நினைச்சாதான் நமக்கு அடிவயித்த கலக்குது.

இவுங்க சினிமா மொழியை பத்தி சிலாகிச்சி பேசுறாங்க… அதெல்லாம் நல்லதான் இருக்கு. ஆனால், அவுங்களோட சொந்தக் கருத்து இருக்கு பாருங்க… பார்ப்பனிய இந்துக் கண்ணோட்டமும் அனைத்து விதமான ஆதிக்கத்தையும் ஆதரிக்கிற பிற்போக்கு நிறைந்த பயங்கரவாதமா இருக்கு.

இவர்களுக்கும், ‘நவீன பாணி சினிமா’ என்ற பெயரில் இஸ்லாமியர் எதிர்ப்பு படங்களை எடுத்த மணிரத்தினத்திற்கும்; ஒரு சின்ன வித்தியாசம்தான்;

ஒரு படத்தில் வடிவேலுவைப் பாத்து மனோபாலா சொல்லுவாரே: ‘அவன் பயங்கர கருப்பா இருப்பான். நீ கருப்பா பயங்கரமா இருக்கே’ என்று, அது போன்ற வித்தியாசம்தான்.

ஆள் கடத்தல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற போலிஸ்காரர்கள் செய்கிற கொலைகளை நியாயப்படுத்தி, அவர்களை தியாகிகளை போல் காட்டுகிற கவுதம் மேனன், மிஷ்கின் – இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுகிற ராதாமோகன், இவர்களின் படங்களைவிட ரஜினி படமும், விஜய் படமும் எவ்வளவோ பரவாயில்லை.

விட்டா, இந்த சீ்ர்திருத்த செம்மல்கள், இலங்கை ராணுவத்தின் கொலைவெறியைக்கூட நியாப்படுத்தி படம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

ஆமாம், ரீட்டமேரியையும், வீரப்பனுககு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், மலைவாழ் பெண்களையும் இன்னும் தாழ்த்தப்பட்ட மிக எளிய பெண்களையும் வன்புணர்ச்சி செய்து கொலையும் ஆள் கடத்தலும் செய்த போலிஸ்காரர்களை, தியாகிகளாக காட்டுகிற இவர்கள், ராஜபக்சே ராணுவத்தின் கொலைவெறியை நியாயப்படு்த்தி படம் எடுப்பதற்கு எல்லாத் தகுதிகளும் நிறைந்தவர்கள்.

இவர்கள் படங்களோடு ஒப்பிடும்போது, ‘சரோஜா“ படத்தை ‘புரட்சிகர’ படம் என்றே சொல்லலாம்; அந்தப் படம், பொண்ண கடத்துனது பூரா போலிஸ் கும்பல்தான் என்று காட்டியது.

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

ஒரு படத்தின் பின்னணி இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியத்துவம் தரும்?


படத்திற்கான பின்னணி இசை, படம் எடுத்து முடித்தவுடன் சேர்ப்பது மட்டுமல்ல; படம் எடுப்பதற்கு முன்பே பின்னணி இசையை முடிவு செய்யவேண்டும்.

இந்கக் காட்சிக்கு இந்த வசனம் முக்கியம்; இந்தக் காட்சிக்கு வசனத்தை விட இசைதான் முக்கியம்; என்று திரைக்கதையிலேயே எழுதியிருக்கவேண்டும். இசையமைப்பாளரை மனதில் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதைதான் மிக நேர்த்தியான திரைக்கதை.

சில உணர்வுகளை வார்த்தைகளைவிட இசை நுட்பமாக சொல்லும் என்கிற புரிதல் இயக்குநருக்கு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பின்னணி இசை சிறப்பாக அமையும்.

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்; பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’.

பின்னணி இசையின் மூலமாக பல நுட்பமான தனிமனித உணர்வுகளை மட்டுமல்ல, அரசியல் ரீதியான செய்திகளையும் சொலல முடியும்; என்று உணர்த்தியப் படம் கமல்ஹாசனின் ‘ஹேராம்’. இந்த இரண்டு படத்திற்கும் இசை, இசைஞானி இளையராஜா.

*

‘தினமணி‘ என்கிற விஷ விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் என்று இதுபோன்ற காரணங்களுக்காக திமுகவை பழிவாங்கிவி்ட்டதாக அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டவர்கள் பெருமிதத்தோடு இருக்கிறார்கள்.


ஆனால், பார்ப்பனர்களின் அரசியலை மேல் சொன்ன இந்தக் காரணங்கள் எப்போதும் தீர்மானிப்பதில்லை. அவர்கள் திமுகவை எப்போதும் தங்களுக்கு எதிரான கட்சியாகத்தான் கருதுவார்கள். மாறாக, அதிமுகவை அதுவும் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதை தங்களின் கட்சியாகவேதான் கருதுகிறார்கள்.

போன முறை ஜெயலலிதா ஆட்சியில் உணவு பொருட்களின் விலை ஏற்றம், லஞ்சம் அதிகரிப்பு, ஈழ மக்களின் துயரம் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதுக்கூட அவர்கள் அதிமுகவைத்தான் ஆதரித்தார்கள். ஆக, அவர்கள் எதற்காக திமுகவை எதிர்க்கிறார்கள், அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டுப்போல் தினமணியின் இந்த தலையங்கம் திகழ்கிறது,

‘சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை. ……………………………………………

சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள்தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.‘ (9-6-2011 தினமணி தலையங்கம்)

தினமணியின் இந்த உண்ர்வுதான் ஒட்டு மொத்தப் பார்ப்பனர்களின் உணர்வு. அதாவது பெயரளவில்கூட பெரியாரை ஆதரிப்பதை பார்ப்பனர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது.

இதில் காமராஜரை உயர்த்தி எழுதி திராவிட இயக்கத்தை எதிர்ப்பது என்பதுதான் பார்ப்பன தந்திரம். காமராஜரின் சிறப்பபு என்று தினமணி குறிப்பிடுபவது முழுக்க முழக்க பெரியாரால் செய்யப்பட்டது என்பதை மறைத்து எழுதுகிறது தினமணி.

சரி, தினமணி சொல்வதையே முழு உண்மை என்றே ஒத்துக்கொள்வோம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தது ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

சொந்தக் கட்சியிலேயே காமராஜ்க்கு எதிராக சதி செய்து அவரை அவமானப்படுத்தி அவர் முதல்வர் ஆவதை தடுத்தது, ராஜாஜியா? பெரியாரா? திராவிட இயக்கமா?

‘பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சிஅடைவதுதான் சரி.‘ என்கிறது தினமணி. விஷ விதை என்று அது குறிப்பிடுவது பெரியாரைத்தான்.

தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட பிஞ்சுகளின் கல்வியைத் தடுத்து, குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜி விச விதையா?

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அதை நிறுத்தி, ராஜாஜி ஆட்சியை ஒழித்து, காமராஜ் ஆட்சியை கொண்டுவந்து கிராமப்புற பள்ளிக்கூடங்களை கொண்டுவந்த பெரியார் விச விதையா?

சரி, கட்டாயக் கல்வித் திட்டத்தை காமராஜ் கொண்டு வந்ததாகவே வைத்துக் கொள்வோம், அப்போது அதை எதிர்த்தது, பெரியாரும் திராவிட இயக்கமுமா? ராஜாஜியும் பார்ப்பனர்களுமா?

காமராஜ் மீது தினமணி கொண்ட பாசம் உண்மை என்றால், காமராஜ்க்கு எதிராக சதி செய்த ராஜாஜியை ஏன் கண்டிக்க மறுக்கிறது தினமணி?

இதற்கு தினமணி பதில் சொல்லவேண்டும்? அல்லது, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்குகிற தினமணி கட்டுரையாளர்களான சூத்திரர்களாகவது பதில் சொல்ல வேண்டும்.

பார்ப்போம் அவர்களின் யோக்கியதையை.

தொடர்புடையவை: 

ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?” அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன். …

தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ்

என்னைத் தொட்டு தாலி கட்டினவர்" அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, "எனக்கு தாலிபிச்சை தாங்க?" என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம்.

அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்தாராலும் குத்தப்படுகின்றன. 'குடும்ப பெண்கள்' என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் எங்கு வகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் தாலி அணிந்தவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள். படு நல்லவர்கள் என்ற தோற்றம் சில நேரங்களில் வெறும் தாலி என்ற அரணால் மட்டும் நிர்ணயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது பையனுக்கு கால்கட்டு, பெண்ணுக்கு நூல்கட்டு. கால்கட்டு கண்ணுக்கு தெரியாது. நூல்கட்டு கண்ணுக்கு தெரியும்.

தெருநாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் வித்தியாசப்படுத்த நாயின் கழுத்தில் லைசன்ஸ் வைத்துக் கட்டுவார்கள். தாலியைப் பற்றி நினைக்கும் போது இந்த நாய் லைசன்ஸ் தான் கண் முன் வந்து நிற்கும்.பெண்களை திருமணம் ஆனவள், இவள் திருமணம் ஆகாதவள் என்று வகைப்பிரித்த ஆணாதிக்கம், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காமல் சுதந்திரமாக அலையவிட்டார்கள். இதனால் தெருப்பொறுக்கிக்கும், நல்லவனுக்கும், திருமணம் ஆனவனுக்கும், திருமணம் ஆகாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் தாலியும் அதை சார்ந்த திருமண முறைகளும் மறுபரிசீலனை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோமென நினைக்கிறேன்.

நேற்று முன் தினம் சிங்கை தமிழ் சேனல் வசந்தம் சென்ட்ரலில் "திருமணமான பெண் தாலி அணிய வேண்டியது அவசியமா?" என்ற கேள்வி பொதுமக்கள் முன் வைக்கப்பட்டது.

"இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ்,எனக்கு இதில் விருப்பமில்லை" என்று ஒரு பெண்மணியும்

"ஒரு பெண் தாலி அணிந்தால் தான் திருமணம் ஆனவளா? மனது ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் அடையாளக்குறி எதற்கு?" என்று இளம்பெண்மணியும்

"தாலி என்பது ஒரு பெண்ணுக்கு உயிர். அது கணவன் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அதை சுமப்பது பெண்களின் கடமை" என்று கொஞ்சம் வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள்.

அதில் கருத்து தெரிவித்த நிறைய ஆண்களின் தொனி எப்படி இருந்ததென்றால் "அது எப்படீங்க?. பெரியவங்க கூடி மந்திரம் சொல்லி எல்லாரும் வாழ்த்தி பெண்ணிற்கும் கட்டும் தாலியில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா? இல்லையென்றால் அர்த்தமில்லை என்றால் அது இக்காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமா? தாலி என்பது அவசியம்".

தாலி என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறதென்று புரியவில்லை. திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டும் போது ஏன் ஆணால் பெண் தொட்டுத் தாலி கட்ட இன்றுவரை சம்மதிக்கவில்லை? தெள்ளத்தெளிவாக இதில் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களைப் பற்றியும் வலைப்பூக்கள் சொல்வதை நாம் எல்லோரும் அறிவோம். அதுவும் வெறும் ஆணாதிக்கத்தை நிலைநாட்ட மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் "தாலி என்பது மட்டுமே லைசன்ஸ் டூ செக்ஸ்" ஆகி விடாது. தாலி என்பது திருமணத்தை வலியுறுத்தி முன்னிறுத்தப்பட்ட வரட்டு குறியீடு. மொத்தத்தில் திருமணமே லைசன்ஸ் டூ செக்ஸ் தான். எனக்கு இந்த வகை "லைசன்ஸ் டூ செக்ஸ்"ஸில் ஆட்சேபம் எதுவுமில்லை. என்னைப் பொருத்தவரையில் திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண் இருவரின் அன்பின் அடிப்படையில் ஒழுக்கம்+சுயக்கட்டுப்பாடு என்ற இருவருக்குமான மீயூசுவல் அண்டஸ்டாங்கில் வரும் ஒப்பந்தமே தவிர வேறு எதுவுமில்லை. திருமண முறைகள் கடுமையாக மறுபரீசலனைக்கு உட்படுத்தவேண்டுமே தவிர திருமணம் என்ற ஒப்பந்தத்தை அல்ல என்பது என் கருத்து."லைசன்ஸ் டூ செக்ஸ்" என்ற வார்த்தைகளில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. செக்ஸ் இன்றி இன உற்பத்தி ஏது? திருமணம் லைசன்ஸ் டூ செக்ஸாக இருப்பதில் ஆட்சேபம் ஏதுவுமில்லை.

தாலி வேலி என்று நினைத்தால் அந்த வேலியை சுற்றி மண்டியுள்ள மூட நம்பிக்கைகள் ஏராளம். கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிட்டு விட்டு குங்குமத்தை தாலியில் வைத்துக் கொள்வதை சகஜமாக காணலாம். தாலியில் குங்குமம் வைத்தால் புருஷன் நீடுழி வாழ்வார் என்பது நம்பிக்கை என்பார்கள்.தாலியில் குங்குமம் வைக்காமல் புருஷன் வாயில் சோறு வைத்தாலே அவன் நீடுழி வாழ்வான் என்பது தான் உண்மை. சுமங்கலி பூஜை என்ற கூத்து ஒன்று நடக்கும். தாலி கெட்டிப்பட நடத்தும் பூஜையாம் அது. ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லாமல் நடக்கும் பூஜை அதை. தாலி கழன்று விட்டாலோ அறுந்து விட்டாலோ கணவனுக்கு உடனடியாக ஏதாவது நடக்கும் என்பது அதீத நம்பிக்கை.

தமிழ்படங்களில் தாலி செண்டிமெண்டை பார்ப்போம். 'அந்த 7 நாட்கள்' என்ற படத்தில் பாக்கியராஜ் தான் காதலித்த பெண்(அம்பிகா) மற்றொருவரை கட்டாயத்தால் திருமணம் செய்துக் கொள்கிறாள்.கணவனுக்கு இந்த பெண்ணின் காதல் விசயம் தெரியவர பாக்கியராஜையே நினைத்து உருகும் அவளை ஒப்படைக்க பிராயசித்தம் எடுக்கிறான் அந்த கணவன். க்ளைமாக்ஸ் காட்சியில் "கட்டிய தாலியை எடுத்து கீழே வைத்து விட்டு என்னுடன் வா" என்று பாக்கியராஜ் அம்பிகாவைப் பார்த்து சொல்ல, அதுவரை கட்டிய கணவனுடன் வாழாமல் மனதால் பாக்கியராஜ்ஜையே நினைத்து உருகும் அம்பிகாவுக்கு தாலியை பற்றி பேசியதும் மிராக்கிளாக தாலிப் பற்றிய பிரஞ்ஞை தொற்றிக் கொள்ள தாலியை பிடித்து கதறி கட்டிய கணவனை தெய்வமாக மதிக்க ஆரம்பிப்பாலாம்.அழுகையில் பிச்சி உதறுவாள். கடைசியில் பாக்கியராஜ் "பார்த்தீங்களா!இது தான் தாலியோட மகிமை.இது தான் தமிழச்சியின் பண்பாடு" என்று நீளமான வசனம் பேசி அரங்கில் பலத்த கைத்தட்டல்களோடு வெளியேறுவார். அந்த படம் சிறந்த படம். சக்கைப் போடு போட்ட படம். மக்கள் மனதில் இருக்கும் உணர்வே சினிமாவில் பிரதிபலிக்கும் என்ற போது அந்த தாலி செண்டிமெண்ட் படம் வெற்றிப்பெற்றதில் வியப்பேதுமில்லை.

கணவன் கொடுமைக்காரனாக இருந்தால் உச்சகட்டமாக கதாநாயகி கதாநாயகனின் முகத்தில் தூக்கி எறிவது தாலியை தான்.பின்னனி இசை பிரளயாமாக ஒலிக்கும்.திரையில் காண்பிக்கப்படும் எல்லோர் முகத்திலும் ஓர் அதிர்ச்சி. அது வேறு எதுவுமில்லை. நாயகி திருமண ஒப்பந்தத்தை முறிக்கிறார் என்பதை திருமணத்துக்கு குறியீடாக பயன்படுத்தும் தாலியை தூக்கி எறிவது மூலம் இயக்குநர் சொல்கிறாராம். இராம.நாராயணன் படத்தில் அம்மையில் விழுந்து துடிக்கும் கணவனுக்காக தாலியை கடவுளுக்கு முன் ஏந்தி கணவனுக்காக துடிக்கும் பெண்கள் ஏராளம்.

அண்மையில் 'வாசிப்போம் சிங்கப்பூர்' விளைவாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் அறிமுகம் அவரின் "தேடி..." கதைத்தொகுப்பின் வாயிலாக கிடைத்தது. அருமையான எழுத்தாளர் அவர். இன்று கணியில் தமிழ் படித்துக் கொண்டிருப்பதற்கு வித்திட்ட பிரம்மா அவர். அந்த கதைதொகுப்பில் இருந்த ஒரு கதை தாலியையும், திருமண முறைப் பற்றியும் சிந்திப்பதாக இருந்தது.

அந்த கதையில் நாயகி சிறுவயதில் தந்தையால் சித்ரவதைக்கு உட்படும் அம்மாவை பார்த்து பார்த்து திருமணம் என்ற உறவில் நம்பிக்கையற்றுப் போகிறாள். ஒரு ஆணை நண்பணாகவே மட்டுமே பார்க்க முடியுமே தவிர சுதந்திரத்தை பரிகொடுக்கும் திருமணம் என்ற பந்தத்தால் ஒருவனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என சாடுகிறாள். ஆயினும் ஒருவனுடன் காதல் வசப்படுகிறாள். அவள் அவனிடம் திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வதென்றால் சரி, இல்லாவிட்டால் நட்பை துண்டித்துக் கொள்ளவும் தயார் என்று உறுதியாகக் கூறுகிறாள். இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒருவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்றும்,இருவரும் வேறு வேறு சுதந்திரத்துடன் ஒன்றாக வாழ்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.

திருமணம் என்ற முடிச்சில்லாமல் இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பிக்கின்றனர். இருவரும் சந்தோசமாகவே காலத்தை கழிக்கின்றனர். சில வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக வாழ்க்கையை கழித்தாலும் இருவரிடம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும் அந்த பெண் தன் கணவன் மற்றவர்கள் புகழும்படி ஒன்றை செய்து விட்டு வரும்போது அவரை பாராட்ட வேண்டுமென நினைக்கும் போது அவளின் ஈகோ தடுக்க, வாழ்த்து சொல்ல முடியாமல் தவிக்கிறாள். அதே போல் அனைவரும் மெச்சும் படி இவள் ஒரு காரியம் செய்து விட்டு வரும் போது மற்றவர்கள் பாராட்டுவதை விட கூட ஒன்றாக வாழ்பவன் வாழ்த்துச் சொல்லி இவள் முதன்முதலாக கேட்க வேண்டுமென தவிக்கிறாள். தினமும் "நீ சாப்பிட்டாயா? ஏன் இவ்வளவு நேரம் முழுத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவன் கேட்கவில்லை. இவள் அதையெல்லாம் எதிர்பார்க்கிறாள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கலாம், அன்பின் பரிமாற்றத்தைச் சுதந்திரம் என்ற பெயருக்கு பலி கொடுக்காமல் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினனக்கிராள். அதற்காக தன் லட்சியத்தை பலிக் கொடுத்து விடலாமா என்று கூட யோசிக்கிறாள். இங்கேயும் அவளின் ஈகோ தடுக்கிறது. தன் வயிற்றில் வளரும் அவனின் கரு வந்தாவது இருவருக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.

திருமண பந்தத்தில் அன்பும் அனுசரனையும் பரிவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் போது தாலி என்ற பெண்ணின் மீதுள்ள ஆணாதிக்க குறியீடு தேவையில்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு&Disclaimer: இந்த தலைப்பில் என் கருத்தைச் சொன்னது சரியா? தவறா? என்று யோசிக்கவில்லை. நான் குடும்பம் என்ற சூழலில் புரட்சிக்காரன் அல்ல. நானும் தாலி கட்டி தான் மனைவியை கூட்டி வந்தேன். இன்னும் அவர்கள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஊருக்கு உபதேசமா? என்று உள்மனம் குத்தினாலும், என்னால் என் பெற்றோர்களையும் சுற்றங்களையும் பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் எனக்கு நானே கோழையாக தெரிந்தாலும் என் பிள்ளைகளின் வழியாக அவர்களிக்கு சுதந்திர சிந்தனைகளை ஊட்டி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கருத்தைச் சொன்னேன்.

நானும் "தாலி அணிவது தேவையா?" என்ற முக்கியமான கேள்வியை என் மனைவியிடமும் கேட்டு வைத்தேன். "தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது. தாலியால் இப்படி கூட ஒரு பயன் இருக்கிறதா?

உங்கள் கருத்தை அறிய ஆவல்.

காதல்+திருமணம்=விவாகரத்து?

இன்றைய தேதியில் மிகவும் முக்கியமான விவாதம்.

கணேசனும், தாராவும் சூப்பரா விவாதம் பண்றாங்க. ஆனா தாரா சொன்னதுதான் லேசா இடிக்குது. நான் என் கணவரை காதலிக்கத் தொடங்கியபோது, அது திருமணத்தில் முடியுமா என்று கூட எனக்குத் தெரியாது. பல வருடங்கள் காத்திருந்துதான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அதெப்படி? காதலிக்கும்போது அவர் காதலன்தானே? கல்யாணம் முடிந்தால்தானே கணவன்? தாராக்கா (நான் சின்னப்பொண்ணு தான்) எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்.

பத்மா சொல்றாங்க திருமணத்திற்கு 18 பொருத்தம் வேண்டுமென்று...நான் கேள்விப்பட்டு 18 பத்தாகி, ஆறாக சுருங்கிப் போயிடுச்சின்னு. எனக்கென்னவோ எல்லாமே ஏழாம்பொருத்தமாகத்தான் தெரியுது.

சரி சின்னப்பொண்ணு என்னதான் சொல்ல வர்றேன்னா...

1. திருமணம் என்றால் என்ன?
விவாகரத்துக்கு முன்னால் போடப்படும் (ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண், ஆ(பெ)ண்-ஆ(பெ)ண்) வாழ்க்கை ஒப்பந்தம்

2. திருமணத்தில் எந்தனை வகை உண்டு?
லாங்-டெர்ம், ஷார்ட்-டெர்ம் (ஒப்பந்தக்காலத்திற்கும் ஓர் ஆயுள் உண்டல்லவா?)

3. எப்படி காதல் திருமணத்தைக் குறிப்பிடுவது?
திருமணத்தால் காதல் முடிவதில்லை அல்லது காதல் திருமணத்தில் முடிவதில்லை (காதலித்தவரையே கைப்பிடிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும்)

Zimbly மலையாளி

இதை எப்படிங்க தமிழ்ப்படுத்துறது...அதான் அப்படியே

1) Name the wonly part of the werld, where Malayalis don't werk hard?

Kerala 

2) Why did the Malayali buy an air-ticket? 

To go to Thuubai (dont break ur heads its... Dubai ), zimbly to meet 
his ungle in the Gelff (Gulf). 

3) Why do Malayali's go to the Gelff? 
To yearn meney. 

4) What did the Malayali do when the plane caught fire? 
He zimbly jembd out of the vindow. 

5) Why did the Malayali go to the concert in Rome ? 
Because he wanted to hear pope music. 

6) What is Malayali management graduate called? 
Yem Bee Yae. 

7) Why did his wife divorce him? 
Because he was louwing another woman. 

8) Who found out that? 
His aandy. 

9) What does a Malayali do when he goes to America ? 
He changes his name from Karunakaran to Kevin Curren. 

10) What does a Malayali use to commute to office everyday? 
An Oto. 

11)Who is Malayali's fyamousu eactor and aectress? 
Geedha, Revadhi, Zilgsmidha end Ambiga.



VEERY VEERY IMBORDANT 


mail to: 
10 Malayalis & you will receive cocunod oil 
20 Malayalis and you will receive benena chips 
40 Malayalis you will receive appams 
100 Malayalis and you will get free land near the rice field behind the 
lungi factory with additional incentive of a whole mondh's supply of 
cocunud oil and benena chips free ...

கல்யாணம் ப்ரீசெக்ஸா, லைசென்ஸ் டூ செக்ஸா?

அவர் ஒரு ஆண் நண்பர். வயதில் மிகவும் மூத்தவர். இன்னும் மணமாகாமல் இருப்பவர். இலக்கின்றி ஒடிக்கொண்டிருந்த பேச்சு திருமணம் நோக்கி சென்றது. ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவரது சொந்த விஷயம். அதிகப்பிரசங்கித்தனமாக நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. அவராகவே தொடர்ந்தார், 'கல்யாணமென்றால் என்னங்க? ப்ரீ செக்ஸ்தானே?' பொட்டிலடித்தாற் போல இருந்தது.

ஒரு பெண் நண்பர். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்ற தலைப்பில் சுவாரஸியமாக பேசிக்கொண்டிருந்தோம். அவர் கூறினார், 'ஆதிகாலத்தில் ஆணைத்தக்க வைத்துக் கொள்வதில் பெண்களிடம் பெரும் போட்டியே நடந்தது. இது ஒரு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். அதன் தொடர்ச்சியே கணவனை, மகனென்ற பாத்திரத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சி. மற்ற பெண்கள் யாராயினும், அது கணவனின் தாயாரேயிருந்தாலும் மீட்டெடுக்கும் முயற்சி தொடருகின்றது'. அப்படியா'வெனும் ஆச்சர்யம் என்னை ஆட்கொண்டது.

தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ் படித்தேன். தாலி, சடங்கு, சம்பிரதாயம், பெண்ணியம், சம உரிமை, ஊக்கு ஸ்டாண்ட் என ஏகப்பட்ட விடயம் இப்பதிவில் விரவிக் கிடப்பினும் முக்கியமான சாரம்சம் என்னவெனில், 'இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ், இதில் எனக்கு விருப்பமில்லை', என்று ஒரு பெண் அளித்த கருத்து. ஆண்கள் 'dick-headed' என்று முதல் பத்தி வரை நம்பியிருந்தேன். அப்படியெனில் பெண்கள் சிந்தனை என்ன? நீ மேலே பார்த்தால் நான் கீழே பார்ப்பதுதான் சரி என்பதா?

இன்னும் எவ்வளவு நாள்தான் மாயையிலேயே உழன்றுகொண்டிருப்போம்? எத்தனை படங்களில் காட்டியிருப்பார்கள் முதலிரவு சீன்கள்? 'புருஷன் மனங்கோணாம நடந்துக்கம்மா', என்று சீண்டி, பால்குவளையோடு சோடித்த படுக்கையறைக்கு அனுப்பும் ஆயாக்களை நினைத்தால் ஆயாசமாக இருக்கின்றது. சரிநிகர் சமானம் தேடும் பெண்கள் 'If men are dick-headed, we are clit-headed' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனரா? 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' என்று நாமும், ஆண்களின் தவறான தேடுதலுக்கு இரையாகி விட்டோமோ?

மனு தர்மம் நான் படிக்கவில்லை. ஆனால் பிராமண ஸ்தீரிகளும் சூத்திரரே என்னும் பொருள்பட எழுதுயுள்ளமையாக கேள்விப்பட்டேன். சென்ற கவிதையில் 'விளைநிலத்தை விருத்தியாக்கு', என்ற வரி அதிலிருந்தே எடுக்கப்பட்டது.

நான் குறிப்பிட்ட மேற்கோள்கள் தனது வாழ்க்கையை தானே சுயநிர்ணயம் செய்து கொள்ளும்/கொள்ளக்கூடிய ஆண்/பெண்'களிடமிருந்து வந்தவையே.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தற்கால சமுதாய சூழ்நிலையில் கல்யாணமென்பது என்ன?

ப்ரீசெக்ஸா, லைசென்ஸ் டூ செக்ஸா இல்லை வேறேதாவது அர்த்தமுண்டா?

- குழப்பமுடன்,

சிலப்பதிகாரம் -(நாவல் வடிவில்) By கே ஜி ஜவர்லால் - எனது பார்வையில்

என்னைப் பொருத்த வரை தமிழ் காப்பியங்களை நாவலாக்கும் முயற்சியில் எழுதுவதில் கஷ்டமானது மிகவும் சிம்பிளான சிலப்பதிகாரம்தான். :)


சின்னக் குழந்தையாக பாட்டி கதையாகக் கேட்டு 'தசரத ராஜாவுக்கு ராமர்,பரதன்,லச்சுமனன்,சத்ருக்கனன் அப்படீன்னு நாலு பிள்ளைங்க.ராமர் வில்லை படார்னு ஒடைச்சி சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டார்.ராவணன் சீதையைத் தூக்கிட்டு பறந்து போயிட்டான்.ராமர் சண்டை போட்டு ராவணை ஜெயிச்சு சீதையக் கூட்டிக்கிட்டு வந்தார் " என்று மழலை மாறாமல் ராமாயணத்தை கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ராமாயணம் நம்முடன் பயணப்பட ஆரப்பித்து விடுகிறது- சினிமாவாக, டி வி சீரியலாக ,நாடகமாக ,பிரசங்கமாக,பட்டிமன்றமாக, புத்தகமாக,பாட்டாக இன்னும் எத்தனையோ வழிகளில்.

அதே போல "கண்ணகி..கண்ணுல கண்ணீரோட.. தலை விரி கோலமா.. கையில சிலம்போட.."என்று சொல்லக் கேட்ட கதை வடிவிலும்,
"காவலனே அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை நீதி கேட்டு வந்திருக்கிறேன் என்று உன் மன்னனிடம் போய் சொல்" என்று பத்தாம் வகுப்பில் நல்லா தமிழ் பேசும் பார்க்க நல்லாவும் இருக்கும் ஃபிகரை வைத்து ஸ்கூலில் போடும் ஆண்டுவிழா ட்ராமா மூலமாகவும்.,
தமிழ் பரிட்சையில் "பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்" என்று மனப்பாடம் செய்து எழுதி மார்க் வாங்கிய போதும்
அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஆன பின் "கற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா" போன்ற பட்டிமன்றங்கள் மூலமும்
ஏதோ ஒரு ராத்திரியில் தூக்கம் வராமல் ஆக்சிடென்டலாக பொதிகை சானலில் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரியைப் பார்த்து " மாசறு பொன்னே , வலம் புரி முத்தே" என்று பாடும் படம் மூலமாகவும் ஏதோ ஒரு விதத்தில் சிலப்பதிகாரம் தமிழர் எல்லோருக்கும் அறிமுகம் ஆகியே இருக்கிறது.

இப்படி ஏற்கனவே அறிமுகமான ஒரு கதையை மீண்டும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் எழுத வேண்டும் என்பதனால்தான் நாவல் வடிவில் எழுதுவதில் கஷ்டமானது சிலப்பதிகாரம் என்று மேலே சொன்னேன். இதைக் கவனமாகக் கையாண்டு ஜவ(ஹ)ர் சிலப்பதிகார நாவல் வடிவை நன்றாகவே எழுதியிருக்கிறார்.பாராட்டுக்கள்

கதா பாத்திர அறிமுகத்திலேயே அந்தப் பாத்திரங்கள் பற்றி நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான சில விடயங்களை இட்டு அது ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி அறிமுகமாகச் செய்து நாவலினுள் புகும் ஆர்வத்திற்கு அழகாகத் தூண்டில் போட்டிருப்பதற்கு ...சபாஷ்.
ஆனால் இப்படி பாத்திர அறிமுகத்தில் வீசிய அனைத்துக் கேள்விகளுக்கும் நாவலில் அழகாக பதிலளித்திருந்தாலும் "இளங்கோ அடிகள் " கதையில் தோன்றும் காட்சி எது ? என்று கேட்டுவிட்டு அதற்கு அவர் நாவலில் பதில் சொல்லியிருப்பதாக நினைவில்லை.
ஒவ்வொரு பகுதி முடிவிலிம் ஒரு சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போடும் சாண்டில்யனின் ஸ்டைலில் பகுதிகள் முடிவை அமைத்திருப்பது நன்றாகவே இருக்கிறது.

கதையோட்டத்தினைக் கெடுக்காதவாறு தத்துவ விசாரங்களை அங்கங்கே அள்ளித் தெளித்துள்ள விதம் அருமை.படிக்கவும் நன்றாக இருக்கிறது.கவுந்தி அடிகள் கோவலனுக்கு சொல்லும் அறிவுரைகள் யதார்த்தம்.

நிறைய காட்சியமைப்பு வர்ணனைகள் சிறப்பாகவும் நயமாகவும் இருந்தாலும் ( குறிப்பாக கோவலன்,கண்ணகி முதலிரவு) சில இடங்களில் நேரடி மொழி பெயர்ப்பு மாதிரி அப்படியே பதவுரை எழுதிருப்பது தவிர்த்திருக்கலாம்.
உதாரணம் "முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம், வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது. " என்பதனை அப்படியே"சங்கும் , முரசும், மத்தளமும் முழங்கியது. வெண்குடைகள் சூழ்ந்து வந்தன.மன்னன் உலா வருவது போல மங்கல நாண்(தாலி) நகரெங்கும் ஊர்வலமாகச் சென்றது.நிறைவாக மண்டபத்தை அடைந்தது." என்று கோனார் தமிழ் உரை எழுதுவதை தவிர்த்து அவர் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் என்பது என் எண்ணம்.

அதே போல கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் மாதவி , கோவலனைத் தவிர வேரொருவனரை மனதாலும் நினையாமல் வாழ்ந்தவள் என்று படித்திருக்கிறேன் ஆனால்"போதாக்குறைக்கு ஆண்கள் அவளை ரசித்த போதெல்லாம் மாதவி உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது " (இது கோவலனுடன் அவள் வாழ்ந்த பிறகு நடக்கிறது)என்பது போன்ற சில , படித்ததற்கு முரணாக இருப்பது போல் தோன்றுகிறது.

நான் முன்னமே சொன்னது போல் தெரிந்த கதை என்பதால் இந்த நாவல் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் சாத்தியம் இருக்கிறது.

இது ஜவ(ஹ)ரின் முதல் முயற்சியா தெரியவில்லை.If so, very very good effort.

எது எப்படி இருந்தாலும் நாவல் வடிவாக அனைவரும் படிக்கும் படியாக சிலப்பதிகாரம் ஒரு"சிறப்பதிகாரமாகவே" வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் கே ஜி ஜவர்லால்.

நயன்தாராவின் அங்கங்கள். ஒரு சிறப்பு பார்வை

பிரபுதேவாவுடனான காதலைக் கைவிடுமாறு திரையுலகப் பெரியவர்கள் கூறும் அட்வைஸ்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி விட்டாராம் நயன்தாரா.


நயன்தாரா- பிரபுதேவா காதல் என்பது பழைய செய்தி. இப்போது இருவரும் குடும்பம் நடத்தவே ஆரம்பித்து விட்டனராம். ஈசிஆர் சாலையில், தனி வீடு ஒன்றை வாங்கி நயன்தாராவுக்கு பரிசாக அளித்துள்ளாராம் பிரபுதேவா. அங்குதான் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

இந்தக் காதலைப் பிரிக்க மனைவி ரமலத் கடுமையாக முயன்றும் முடியவில்லை. இதனால் திரையுலகப் பெரியவர்களை அணுகி பஞ்சாயத்து பேசுமாறு கோரி வருகிறார். அவருக்காக சிலர் பஞ்சாயத்தும் பேசிப் பார்த்தனர். ஆனால் அதை பிரபுதேவா கேட்பதாக இல்லையாம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மூத்த நடிகை நயன்தாராவை அணுகிப் பேசிப் பார்த்தள்ளார். இதெல்லாம் வேண்டாம், நல்ல பெண் நீ. நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள் என்றெல்லாம் கூறிப் பார்த்தாராம்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நயன்தாரா, இப்போது உங்களது காலம் போல இல்லை. எங்க காலம் இப்படித்தான் என்று கூறி தனது நிலையை தெளிவாக்கி விட்டு கிளம்பிப் போய் விட்டாராம்.

அறிவுரை கூறிய நடிகைக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட்டாராம்.