Monday, December 12, 2011

தினமும் ஒரே மாதிரியா 'இருப்பது' போரடிக்குதா?


உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும். இப்படி இருக்கையில் தாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும் சமாச்சாரமாகிவிடும். உப்புச்சப்பில்லாமல் ஏனோதானோ வென்றுதான் இருக்கும் வாழ்க்கையும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்கொண்டு படியுங்கள்.

மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்

உங்களுடைய படுக்கையறையை தினம் தினம் புதிதாக உற்சாகமூட்டும் வகையில் அலங்கரிக்கலாம். உள் அலங்காரம், மின்விளக்குகள், அறையில் உள்ள படுக்கைகள் என இடம் மாற்றி அலங்கரிக்கலாம். இதனால் புதிதாக ஒரு இடத்தில் இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படும்.

பிஸியில் மறந்துவிட வேண்டாம்

எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்து விட்டு துணையை கவனிக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினாலே துணையை சந்தோஷப்படுத்த முடியும். அவ்வப்போது ரொமான்ஸ் மூடு ஏற்படும் வகையில் சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடலாம். இது இரவு நேர விளையாட்டிற்கு ஒத்திகை பார்த்ததைப் போல இருக்கும்.

புதிய இடம் புதிய வாழ்க்கை

தினமும் ஒரே அறையில் இருப்பது போராடிக்கத்தான் செய்யும். எனவே இடத்தையும், ஊரையும் மாற்றுங்கள். ஹோட்டல் அறையில் புதிய சூழலில் உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அள்ளிக்கொண்டு போகும்.

துணையை உற்சாகப்படுத்தலாம்

இயந்திரத்தனமாக ஈடுபடுவதை விட அவ்வப்போது துணையை உற்சாகப்படுத்த கொஞ்சம் கற்பனாசக்தியை பயன்படுத்துங்கள். இது உங்கள் துணையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உறவின் போது ஒரே மாதிரியாக செயல்படுவதை விட துணையை ஊக்கப்படுத்தி அவருடைய செயல்படுகளுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும்.

மின்னஞ்சலில் தினம் ஒரு புத்தகம் படிப்பதற்கு

புத்தகம் படிப்பதற்கு மிக சுலபமான வழியைக் காட்டுகிறது டிப்ரீட் இணையத்தளம்.

ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம். அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம்.

ஆனால் உடனடியாக இல்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக, அது இந்த தளத்தின் சிறப்பு.

படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி, இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி கொண்டே இருக்கும்.

மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும். மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும்.

இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்த புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும், அதன் பிறகு நாள்தோறும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும்.

தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.

வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே இபுக் வடிவிலானவை.

இந்த பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும்.

புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.

மிகவும் தீவிர புத்தக புழுக்கள் கூட இந்நேரங்களில் புத்தகத்தை வாங்கி வைத்து விட்டு உடனே படிக்க முடியாமல் திண்டாடுவது உண்டு. சராசரி வாசகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோம்பல் வேலை பளு என பல காரணங்களால் எடுத்த புத்தகத்தை முடிக்க முடியாமல் முழித்து கொண்டிருப்பார்கள்.

இதற்கான அழகான தீர்வாக தான் டிப்ரீட் புத்தகங்களை ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறந்து. அந்த காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்த காலத்தில் மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து விடலாம்.

உங்களுக்கு தெரியுமா?

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.

3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும். 

4.லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
5.விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியா வில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

தொடாமல் நான் மலர்ந்தேன்!


ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். 

அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள்

பூக்களின் வாசம் தரும் இதம்

மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள். 

அருகாமையில் அமருங்கள்

துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
திராட்சையும் ஸ்ட்ராபெரியும்

காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பறவையின் இறகு

பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்

தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர். 

இந்த வழிமுறைகளை நீங்கள் அப்ளை செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு வேண்டியது தானாகவே கிடைக்கும்.

நான் +2 படிக்கும் யுவதி. பெயர் சொல்ல விரும்பவில்லை.

நான் +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர்ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா சிறுவயதிலே இருந்து என் தங்கையை தன்னுடைய காம உணர்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார். சிலமுறை நானும், அவர் உணர்ச்சிக்கு பலியாகி இருக்கிறேன்.

வயதுக்கு வந்த பிறகு, என் தங்கை அவரிடமிருந்து சாமர்த்தியமாக விலகி விட்டாள்; ஆனால், என்னால் முடியவில்லை. அவர் என்னை, இன்றும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறார். அவரது கை, என் உடலில் படாத இடம் இல்லை. உடலுறவைத் தவிர மற்றதெல்லாம் செய்கிறார்; என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கி தருகிறார். செலவுக்கு பணம் கொடுக் கிறார். என்னை அவருடைய மனைவி போல உபயோகப்படுத்திக் கொள்கிறார். சில சமயம் நான் மறுத்தால், அழுது விடுகிறார். அந்த அழுகைக்கு நான் பணிந்து விடுகிறேன். 

எங்களை, அவருடைய மனைவி உட்பட யாரும் சந்தேகப்படவில்லை; அந்த மாதிரி நடந்து கொள்கிறார். சிலசமயம் நான் அவரை, "இதெல்லாம் செய்கிறீர்களே... உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?' என்று கேட்டால், "இதிலென்ன குறைந்துவிடப் போகிறது. உன்னை என்ன கெடுத்து விட்டேனா... இல்லையே! சும்மா தடவுவதாலும், கிஸ் கொடுப்பதாலும் எனக்கு இன்பம், உனக்கு இன்பம்; பேசாமல் போ...' என்று சொல்கிறார். நான் செய்வது பயங்கர குற்றம் என்று எனக்கே தெரிகிறது. சிறு குழந்தையிலிருந்து அவர் என்னை வளர்த்ததால், அவரிடம் எனக்கு எவ்வித கூச்ச உணர்வும் வர மாட்டேன் என்கிறது. இதிலிருந்து நான் மீள்வது எப்படி? தயவு செய்து வழி சொல்லுங்கள். ஆனாலும், அவர் மிக நல்லவர், இந்த விஷயத்தை தவிர! 

அன்புள்ள மகளுக்கு —

நீயும், உன் தங்கையும் பரிதாபத்திற்குரிய முட்டாள் பெண்கள். கதிரியக்கக் குட்டையில் குளிக்கும் கிராமத்து சிறுவன் போலிருக்கிறாய். கசாப்புக்கடைக்காரன் வீட்டில் வளரும் பண்டிகை வான்கோழி போலிருக்கிறாய்.

நீயும், உன் தங்கையும் பக்கத்து வீட்டு மாமாவின் காமவெறிக்கு, ஆறு - ஏழு ஆண்டுகளாக இரையாகி வந்திருக்கிறீர்கள்; இது, யார் தவறு?
முழுக்க, முழுக்க உன் பெற்றோர் தவறுதான். தன்னுடைய வீட்டில் என்ன நடக்கிறது? பக்கத்து வீட்டுக்கு போய், நம் மகள்கள் என்ன செய்கின்றனர் என்பதை, குறிப்பாக, உன் தாய் கண்காணிக்காமல் இருப்பது அவலமான விஷயம். உன் தந்தை வீட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரிய பூஜ்யம் என நினைக்கிறேன். உன் தாயார் ஒரு ஆடம்பரப் பிரியை அல்லது சினிமா, கோவில் கிறுக்கராய் இருப்பார் என யூகிக்கிறேன். செக்ஸ் புறத்தாக்குதலுக்கு உட்பட்டுவரும் மகள்களின் உடல், முகமாற்றத்தை உன் தாயால் ஏன் அனுமானிக்க இயலவில்லை? உங்களுக்கும், உங்களது தாயாருக்கும் சரியான செய்தி தொடர்பு இல்லாததற்கு யார் காரணம்?
மகளே... உன்னுடைய விஷயத்தில் இரண்டாவது குற்றவாளி பக்கத்து வீட்டு மாமிதான். கணவனின் கயமைகளை மோப்பம் பிடித்து, அவனது தவறு செய்யும் இரு கைகளை ஒடித்திருக்க வேண்டும். செய்த தவறுக்கு பிராயசித்தமாக அவன் காலம்பூராவும் ஒரு மாற்றுத் திறனாளியாக அலையட்டுமே.

பக்கத்து வீட்டு மாமா - மாமிக்கு குழந்தைகள் இல்லையா, பக்கத்து வீட்டு சகோதரிகள் நம் வீட்டுக்கு வந்து, நம் அப்பனுடன் விகற்பமாக பழகிவிட்டு போகின்றனரே என்று அவர்கள் யோசிக்கவில்லையா?

மூன்றாவது குற்றவாளி, உன் தாயும், நீயும். விவரம் தெரியாத வயதில் அவனுக்கு உடன் பட்டீர்கள். இப்போது, உன்னை விட இளையவள் விபரீதம் புரிந்து, விலகி விட்டாள். நீயோ இன்னும் அந்த அசிங்கத்தை பூசி நிற்கிறாய். குடிநோயாளி போல அவனது ஈனச்செயல்களுக்கு உன் உடம்பு அடிமையாகி விட்டது.

நான்காவது குற்றவாளி நீங்களிருக்கும், தெருவின் மக்கள். எங்கிருந்தோ தீய்ந்து போன வாசனை கிளம்புகிறதே என அவர்கள் ஏன் மோப்பம் பிடிக்கவில்லை?

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உன் தாயாரிடம் தனியாக முறையிட்டு, நீங்கள் அவரின் வீட்டுக்கு போகாமலும், அவர்கள் உங்கள் வீட்டுக்கு வராமலும் இருக்கும்படி செய்ய வேண்டும்.

மாமா என்ற உறவுப் பெயரில் ஒளிந்திருக்கும் காமக் கொடூரனை கடுமையாக எச்சரி. இனி, தவறான எண்ணத் துடன் நெருங்கினால், போலீசில் புகார் செய்வோம். மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தகுந்த தண்டனை பெறுவாய். உன் குடும்பம் சிதறிப் போகும் என எச்சரி.

மஞ்சள், சந்தனம், வேப்பிலை, துளசி, செம்பருத்தி பூக்கள் இட்ட நீரை தலைக்கு குளித்து, கந்தசஷ்டி கவசம் கூறி, சூன்யக்காரனின் பிடியிலிருந்து உடலையும், மனதையும் விலக்கு. 

அந்த காமக் கொடூரன் உன் உடலை, ஐந்தாறு வருடங்களாக தவறான வழிகளில் பயன்படுத்தி இருக்கிறான். அதனால், நீ எதிர்காலத்தில் எந்த ஆணின் மீதும் எளிதில் வசப்படுவாய். ஒரு பிசாசிடமிருந்து விலகி, இன்னொரு பிசாசிற்கு இரையாகி விடக் கூடாது நீ. ஆகையால், அடுத்த எட்டு வருடங்களுக்கு அவர்களிடம் எச்சரிக்கையாக பழகு. மனதை அடக்கி, படிக்க முடியவில்லை என்றால், அடுத்த மூன்று வருடங்களுக்கு பிறகு பட்டப்படிப்பு முடித்த பிறகு, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து கொள்.

இக்கடிதமும், கடிதத்திற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி. உங்களின் எந்த வயது பெண் குழந்தைகளுடனும், எந்த புனிதமான உறவையாவது சொல்லி பழக நினைக்கும் எந்த வயது ஆண்களையும் விலக்கி வையுங்கள். தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, ஒன்றுவிட்ட மூத்த சகோதரர்கள் உறவுமுறைகளில் வரும் ஆண்களும் கூட ஆபத்தானவர்களே!
பத்து வயது நிரம்பி விட்டால், பெண் குழந்தைகளிடம் தாய்மார்கள் பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விட வேண்டும்.

இனாமாகத்தான் கிடைக்கிறது என்றாலும்.....

ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு, "உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?' என்று கேட்டான் ராஜா. "நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு வந்து சொல்கிறோம்...' என்றனர். 
வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம், "பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு வேண்டுமென்று சொல்லவா?' என்று கேட்டார் ஒரு புலவர். 
"தினம், நாலு படி பால் கொடுக்கச் சொல்லுங்கள்...' என்றாள் ஒரு புலவரின் மனைவி. 

மற்றொரு புலவரின் மனைவி, "மாடும், கன்றுமே கொடுக்கச் சொல்லுங்கள்...' என்றாள். அதன்படியே ராஜாவும் உத்தரவு போட்டான்.

அதன்படி, ஒரு புலவரின் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்தது. புலவரின் மனைவி தினமும் பால், தயிர், வெண்ணை, பால் பாயசம் என்று விதவிதமாக சாப்பிட்டாள்.

மற்றொரு புலவரின் வீட்டுக்கு மாடும், கன்றும் வந்தன; புலவரின் மனைவிக்கு சந்தோஷம்.

உடனே, மாட்டுக்கு ஒரு கொட்டகை போடச் சொன்னாள். தினமும் அதற்கு வைக்கோல், புல் கட்டு வாங்கிப் போட வேண்டியிருந்தது. தினமும் கொட்டகையை, சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. பால் கறக்க ஒருவனை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
ஒரு நாள் வருவான், ஒரு நாள் வராமலே விட்டு விடுவான். அன்றைக்கு கன்றுக் குட்டிக்கு தான் பால் கிடைக்கும். பால் கறக்க சொம்புடன் போனால், மாடு உதைக்கும். அன்றைக்கு பால் அவ்ளோதான். 

தினமும் இப்படி மாட்டுடன் போராட வேண்டியிருந்தது. மற்றொரு புலவர் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்து விடுவதைக் கேள்விப்பட்டு, கணவரிடம், "நீங்களும் ராஜாவிடம் போய் தினமும் பால் அனுப்பச் சொல்லுங்கள்...' என்றாள்.அதற்கு அந்தப் புலவர், "மீண்டும் ராஜாவிடம் போய் அப்படி கேட்க முடியாது. ஒரு முறை கேட்டபடி அவர் கொடுத்து விட்டார். மீண்டும் போய் அது வேண்டாம், இது வேண்டும் என்று சொல்ல முடியாது...' என்று சொல்லி விட்டார். இப்போது புலவரின் மனைவி மாட்டையும் கட்டி, சாணியையும் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு புலவரின் மனைவியோ தினமும், நாலு படி பால் வாங்கி இஷ்டம் போல் பயன்படுத்துகிறார்.

அதாவது, இனாமாக கிடைக்கிறது என்றாலும், நாம் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் முன்னதாகவே தீர்மானம் செய்வது நல்லது.

அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்கும்- கேரள அமைச்சர் எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 10 நாட்களுக்குள் தீர்வு காணவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள நிதித்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தலைவருமான கே.எம்.மாணி பாலக்காடு அருகேயுள்ள மன்னார்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

கேரளா பின்வாங்காது

முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து அணு அளவு்ம் அரசு பின்வாங்காது. புதிய அணைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இடத்தில் அணைகட்ட யாருடைய முயற்சியும் தேவையில்லை. முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் 10 நாட்களுக்குள் மத்திய அரசு சுமுகமான ஒரு முடிவை எடுக்காவிட்டால் கேரள காங் (எம்) கட்சி 2ம் கட்ட போராட்டத்தில் குதிக்கும். இந்த போராட்டம் முதல் கட்டத்தை விட தீவிரமாக இருக்கும்.
இரண்டு நிலைப்பாடு

இந்த பிரச்சனையில் பிரதமரும், தேசிய கட்சியும் உடனடியாக தலையிட வேண்டும். தேசிய கட்சிகள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் ஒரு நிலைப்பாட்டையும், தமிழ்நாட்டில் ஒரு நிலை பாட்டையும் எடுக்க கூடாது. இதை மனிதாபிமான விஷயமாக கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ஒரு சிலரை அனுசரித்து நடக்கவேண்டுமாம் - ஓவியா


சினிமா உலகில் நிலைத்து நிற்க நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. கேமராவுக்கு பின்னால் பல விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் என்று நடிகை ஓவியா கூறினார். களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா.

சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது களவாணி படத்துக்கு பிறகு எப்படிப்பட்ட வேடம் தேர்வு செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஃபீல்டுக்கு புதியவள் என்பதால், சிறிய வேடங்களையும் ஏற்றேன். இது தவறு என்று தெரிந்த பிறகு தமிழ் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு கன்னடத்தில் உருவான களவாணியின் ரீமேக்கில் நடிக்க சென்றேன்.

நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் மெரீனா கதையை பாண்டி ராஜ் சொன்னார். ஒப்புக்கொண்டேன். அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் மசாலா கேப் படத்தில் நடிக்கிறேன். இப்படங்கள் வந்தால் எனது திறமை மேலும் வெளிப்படும். சினிமாவில் நிலைத்து நிற்க நடிப்பு மட்டும் போதாது.
புத்திசாலித்தனம் வேண்டும். அதைவிட மற்றவர்கள் செய்யும் தந்திரங்கள், பாலிடிக்ஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சமாளிக்கும் திறமை, தைரியம் இருக்க வேண்டும். சினிமா உலகில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதால் கேமராவுக்கு பின்னால் நிறைய விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டி உள்ளது.

நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள பழகிவிட்டேன். நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். வேற்று மொழி வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். 10 ஆண்டாவது நடிக்க வேண்டும் என்ற ஐடியா எதுவும் எனக்கு இல்லை. வாய்ப்புகள் வரும் வரை நடிப்பேன்

ராணுவ ரகசியத்தை போட்டுக் கொடுத்த Google Map போட்டோ!!

ஏவியேஷன் விவகாரங்களை வெளியிடும் பிளைட் குளோபல் ஊடகம், “கூகுள் தொழில்நுட்பத்தில் யாரும் அமெரிக்காவில் உள்ள விமானத் தளம் ஒன்றை சேர்ச் பண்ண முடியும். அந்த விமானத் தளத்தின் ரன்வேயை zoom பண்ணி மிக நெருக்கமாக கண்காணிக்கவும் முடியும். அமெரிக்காவின் அதி ரகசிய உளவு விமானம் என்று பெருமையடிக்கப்படும் RQ-170, ரகசியமாக நிறுத்தி வைக்கப்படும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியும்” என்று அறிவித்துள்ளது.


இந்த RQ-170 மாடல் உளவு விமானம்தான், கடந்த வாரம் ஈரானால் கைப்பற்றப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம், கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு உலை வைக்கிறது என்ற சர்ச்சையை எழுப்பி விட்டிருக்கின்றது. கூகுள் நிறுவனம் டெவலப் செய்து வைத்துள்ள அருமையான மேப்பிங் டெக்னாலஜி, அமெரிக்க உளவு விமானங்களின் ரகசியங்களை பகிரங்கப் படுத்துகின்றது என்பதே குற்றச்சாட்டு.
கூகுள் மீதான இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்குமுன், பிளைட் குளோபல் ஊடகம், சிறியதாக ஒரு

யுக்கா-லேக் விமானத்தள ரன்வேயில் Predator அல்லது Reaper drone உளவு விமானம்

ஆராய்ச்சியையும் செய்தது. அமெரிக்காவின் சிறிதும் பெரிதுமான விமானத் தளங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை கூகுள் மேப் வெப்சைட் மூலம் தேடி, ஒரு பட்டியலைத் தயாரித்தது. அந்தப் பட்டியலை, அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள விமானத் தளங்களின் விபரங்களுடன் ஒப்பிட்டும் பார்த்தது.

அப்போது, அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்திராத ரகசிய விமானத் தளம் ஒன்றை, கூகுள் மேப் வெப்சைட் மூலம் கண்டுபிடித்தது பிளைட் குளோபல் ஊடகம்.

இந்த ரகசிய விமானத்தளம், அமெரிக்காவின் நெவாடா (western, mountain west, and south-western regions) மாநிலத்தில் யுக்கா-லேக் என்ற அதிகம் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் உள்ளது. இந்த விமானத் தளத்தில், அமெரிக்கா தற்போது ஈரானிடம் பறிகொடுத்துள்ள RQ-170 உளவு விமானத்துக்கு, இந்த ரகசிய விமானத் தளத்தில் வைத்துத்தான் ஆரம்ப டெஸ்டிங்குகள் செய்யப்பட்டன என்கிறது பிளைட் குளோபல்.

இந்த விமானத் தளத்தை கூகுள் மேப் வெப்சைட் மூலம் கண்காணித்த பிளைட் குளோபல், குறிப்பிட்ட தினம் ஒன்றில் விமானத் தளத்தின் ரன்வேயில் சிறிய விமானம் ஒன்று புறப்படத் தயாராக நின்றிருப்பதை பதிவு செய்திருக்கின்றது. கூகுள் மேப் போட்டோவில் இருந்து, யுக்கா-லேக் விமானத்தள ரன்வேயில் நின்றிருந்த விமானம், Predator அல்லது Reaper drone உளவு விமானம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது.

“சர்வ சாதாரணமாக இந்த ரகசியத்தை கூகுளின் உதவியுடன் யாராலும் அறிந்துகொள்ள முடிகின்றது என்றால், ஈரானிய உளவுத்துறை எவ்வளவு ரகசியங்களை அறிந்திருக்கும்? அமெரிக்க உளவு விமானத்தை அவர்கள் கைப்பற்றியதில் ஆச்சரியம் ஏதுமில்லை” என்றும் கூறுகின்றது பிளைட் குளோபல்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்காவின் மீடியா ஜயன்ட் Fox New, கூகுளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, கூகுள் பதிலளிக்க மறுத்துவிட்டது.

நீங்கள் ரகசியமாக அனுப்பிய ஆட்களின் பெயர்கள்!

“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த சூடே இன்னமும் ஆறவில்லை. அதற்கு அடுத்த இடியை இறக்கி சி.ஐ.ஏ.-யை பதற வைத்திருக்கிறது ஹிஸ்பொல்லா!

தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!

“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.
அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள்  இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.

அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.

இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.

“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.

உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.

அல்-மனார் ஒளிபரப்பில் வெளியிடப்பட்ட பெயர்கள், சட்ட நடைமுறைகளுக்கு அமைய விறுவிறுப்பு.காமில் வெளியிடப்படவில்லை.

கேரள எல்லையை நோக்கி தமிழர்கள் படைஎடுப்பு


இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பேரணியல்ல, தனிப்பட்ட அரசியல்வாதியின் அறைகூவலில் திரண்ட கூட்டமும் அல்ல. மக்கள் தன்னிச்சையாகவே வந்து குவிந்த காட்சி! குமுளியில் உள்ள கேரள எல்லையை நோக்கி 2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திரண்ட மக்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவில் இருந்தது. முக்கால் லட்சத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை நேற்று கேரள எல்லையில் திரண்டனர் என்று கணிக்கலாம்!

நேற்று காலையில் இருந்தே கேரள எல்லையை நோக்கி மக்கள் உத்தமபாளையம், கூடலூர்,

ஞாயிற்றுக்கிழமை, கேரள எல்லையை நோக்கி.. வீதி தெரியாத அளவில் மக்கள் அலை!

சின்னமனூர், கம்பம், ஆகிய பகுதிகளில் இருந்துசாரை சாரையாக வந்து சேரத் தொடங்கினர். இந்த எல்லைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகவே பதட்டம் நிலவி வருகின்றது. பதட்டம் அதிகமானதில், குமுளி, கம்பம்-மெட்டு, போடி-மெட்டு ஆகிய சாலைகள் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சகல போக்குவரத்தும் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தேனியில் இருந்து இந்தப் மூன்று பாதைகள் வழியாகத்தான் கேரளா செல்லும் போக்குவரத்துகள் நடைபெற்று வந்தன.

அதன் பின்னரும் பதட்டம் குறையாமல் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றதில், பதட்டம் அதிகமுள்ள பகுதியாகக் கருதப்பட்டு உத்தமபாளையம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் இப்பகுதியில் 144 அமலில் உள்ளது. அப்படியிருந்தும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடாத்துவதை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியாத அளவில், மொத்த ஜனத்தொகையுமே கிளர்ச்சிகளில் குதித்துள்ளனர்.

நேற்று பெருமளவில் மக்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நேற்று முன்தினமும் (சனிக்கிழமை) கிட்டத்தட்ட இதுபோன்ற பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது. ஆனால், அதில் சுமார் 10,000 மக்களே கலந்து கொண்டிருந்தனர். கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்களே அவர்கள். அவர்கள் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தினர். குமுளி அருகே தமிழக எல்லையில் நின்று, கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை கூட்டம் குறைவாக இருந்ததை அவதானித்த மக்கள், நேற்று ஞாயிற்றுக் கிழமை தன்னிச்சையாகவே பெருமளவில் வந்து குவியத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர், கிராம மக்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களை நோக்கி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். நேரம் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. காலை 10.30-க்கு கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் திரண்டுவிட்டது.

அதையடுத்து இந்த இடங்களில் இருந்து லோயர்-கேம்பை அடுத்துள்ள கேரள எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் செல்லத் தொடங்கினர். 10.30-ல் இருந்து 11 மணிவரை பாதைகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக அசைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

கூடலூருக்கும், லோயர்-கேம்ப்புக்கும் இடையே ஆற்றுப் பாலம் ஒன்று உள்ளது. குருவனூர் பாலம் என்று இதை அழைப்பார்கள். இந்த இடத்தில் பொதுமக்களுக்காக காத்திருந்தனர் காவல்துறையினர். பாலத்தைக் கடந்து செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர்.

இந்த ஒரு பாதையைத் தடுத்தால், அப்பகுதியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் அப்பகுதி மக்களுக்கு வேறு பாதை தெரியாதா? காவல்துறை குருவனூர் பாலத்தை மறித்தபடி நின்றிருக்க, மக்கள் திசைமாறி, அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்த பழைய பாலம் ஒன்றின் வழியாக லோயர்-கேம்ப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

லோயர்-கேம்ப் பகுதியை அடைந்தபோது, மக்களின் ஒரு பகுதியினரிடம் வன்முறை லேசாக தலைகாட்டத் தொடங்கியது.

இப்பகுதியில் கேரளா அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் ஒன்று உள்ளது. உல்லாசப் பயணிகள் வந்தால், அவர்களை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல கேரள அரசு இந்த அலுவலகத்தை நடாத்துகின்றது. கூட்டம் அதிகளவில் திரண்டு வருவதைக் கண்டவுடன், அலுவலகத்தில் பணிபுரிந்த ஓரிருவரும் அஙகிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த அலுவலகத்துக்கு சொந்தமான இரு மாட்டுவண்டிகளை மக்கள் அடித்து நொருக்கினர். உல்லாசப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல உபயோகிக்கப்படும் மாட்டு வண்டிகள் அவை.

லோயர்-கேம்ப்பில் மீண்டும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தடையை ஏற்படுத்தினர். மேலே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் ஆயிரக் கணக்கில் நகர்ந்து வந்துகொண்டிருந்த மக்களை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்கள் வெள்ளம் காவல்துறையின் தடையை மீறி குமுழி சாலையில் நகரத் தொடங்கியது. சாலையில் நெரிசல் அதிகமாக இருக்கவே, பலர் காட்டுப் பகுதி ஊடாகவும் கேரள எல்லையை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

பிற்பகல் 1 மணியளவில் கேரள எல்லையில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவு வரை மக்கள் சென்று விட்டனர்.

இந்த இடத்தில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று உள்ளது. அதற்கருகே வைத்து பொதுமக்களை சந்தித்தனர், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாசும், இதற்குமேல் 100 மீட்டர் சென்றாலே தமிழக எல்லையை கடந்து விடுவீர்கள் என்று மக்களை எச்சரித்தனர். எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்ட அவர்கள், அந்த இடத்தில் நின்றே கோஷம் போட விரும்பினால் போடுங்கள் என்றனர்.

பிற்பகல் 4.30-க்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இப்பகுதிக்கு காரில் வந்து இறங்கினார். அதுவரை எந்த அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ இல்லாமல் எல்லாமே மக்கள் எழுச்சி என்ற வகையில் நடந்திருந்தது.

அமைச்சர் காரில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதுமே ஓரிரு கற்கள் வந்து விழத் தொடங்கின. உடனே உஷாரான போலீஸ் அந்த இடத்தில் தடியடி நடாத்த தொடங்கினர். சும்மா நின்றிருந்தவர்களுக்கும் அடி விழுந்தது. அமைச்சரைக் சூழ்ந்து கொண்ட போலீஸார், அவரை கார் வரை எஸ்கோர்ட் பண்ணி அழைத்துச் சென்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தேவையற்ற இந்தத் தடியடிப் பிரயோகம், அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினரை எதிர்த்து மக்கள் கோஷம் எழுப்பப் தொடங்கினர். காவல்துறை மீதான மக்களின் கோபம் வெளிப்படத் தொடங்கியது. ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் நின்றிருந்த இடத்துக்கு அருகே காவல்துறைக்கு சொந்தமான பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் அவற்றைத் தாக்கத் தொடங்கினர். சுமார் 15 காவல்துறை வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

மாலை 5 மணிவரை அங்கேயே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் கலைந்து சென்றனர். அப்போதும், கேரளாவுக்குச் செல்லும் வீதியில் மரக் கிளைகளையும் கற்களையும் போட்டு, அந்தப் பாதை வழியாக யாரும் கேரளா செல்ல முடியாதவாறு செய்துவிட்டே அங்கிருந்து அகன்றனர்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்தவொரு கட்சியாலும் தூண்டப்படாத மக்கள் எழுச்சி இது. நிலைமையை இப்படியே நீடிக்க விடுவது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.

ஒரு குடும்ப அட்டை சொல்லும் கதை!

விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டு மாதங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என முந்தைய திமுக அரசு அறிவித்திருந்தது. செல்லும் இடங்களிலெல்லாம் இதை அத் துறையின் அப்போதைய அமைச்சரும், அதிகாரிகளும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்போல சொல்லிச் சென்றனர். ஆனால், நடைமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. 

விண்ணப்பித்தால் குறைந்தது ஐந்தாறு மாதங்களாவது கழித்துத்தான் (பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக) குடும்ப அட்டைகள் கிடைத்துவந்தன. 

ஆட்சி மாறிவிட்டது. எதிர்பார்க்காதவகையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவ்வகையில், இப்போதாவது விண்ணப்பித்த இரண்டு மாதங்களில் குடும்ப அட்டைகள் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருந்தோருக்கு ஏமாற்றமே பதிலாய் அமைகிறது. 

எந்தக் கட்சியின் ஆட்சி என்றாலும் மதுவைப்போல மாறாத ஒருசில விஷயங்களில் குடும்ப அட்டைப் பிரச்னையும் ஒன்றாகவே தொடர்கிறது. 

மனைவியைப் பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, சுகப் பிரசவம் என்ற சொற்கள் காதில் விழ வேண்டுமே என்ற பதைபதைப்புடன் காத்திருக்கும் கணவனின் நிலைதான், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போரில் பெரும்பாலானோரின் நிலை. 

சில வட்ட வழங்கல் அலுவலகங்களில் வாரத்தில் இரண்டு நாள்களில் மட்டுமே புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. இதனால் குடும்ப அட்டை கோரும் கூலித் தொழிலாளிகளுக்கு சில நாள்கள் வேலை பாதிக்கப்படுகிறது. 

குடும்ப அட்டை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கும் ஊழியர் புதிய குடும்ப அட்டைக்கான ஆவணங்கள் முழுமையாக இருக்கின்றனவா என்பதை அப்போதே தெரிவித்துவிட்டால் விண்ணப்பிப்பவர்களுக்கு பெரும் சுமை குறையும். ஆனால், அப்படிச் செய்வதில்லை. 

விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் நேரில் வந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அதுவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. 

விசாரிக்க அதிகாரி வரவில்லையே எனக் காத்திருந்து அறுபது நாள்கள் கழித்து ஆவலோடு அலுவலகம் சென்று விசாரித்தால் விண்ணப்பம் சில நேரங்களில் நிராகரிக்கப்பட்டதாகவும் பதில் கிடைக்கலாம். அவ்வாறு இருந்தால் விண்ணப்பதாரருக்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிர்பந்தம். நிராகரிப்புக்குக் காரணம் கேட்டால் மழுப்பலான பதில்களே கிடைப்பதும் வாடிக்கை. 

எல்லாம் இருந்தாலும் ஏதேனும் ஓர் ஆவணம் இல்லை என பொதுமக்களை அலையவிட்டு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சாதாரணமாக ஆறேழு மாதங்களாகி விடுகின்றன. சிலர் ஓராண்டாகியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனப் புலம்பித் தவிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்றால் கேட்கலாம்! 

விண்ணப்பங்கள் காணாமல்போயின என்பதில் தொடங்கி அதிகாரிகளின் பல்வேறு பதில்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போர் தள்ளப்படுகின்றனர். 

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், எந்த நாளில் புதிய அட்டை வழங்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள பலமுறை அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். 

சில இடங்களில் அதிகாரிகள் காலையில் வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் புதிய குடும்ப அட்டைகள் பெற மாலையில் வரச் சொல்வர். இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். 

அதற்காகவும் சில நாள்கள் நடந்து குடும்ப அட்டையைக் கையில் வாங்கும்போது மீண்டும் பதைபதைப்பு தொற்றிக் கொள்ளும். சுகப்பிரசவம் ஆனாலும் குழந்தை உடல் குறைபாடுகள் இல்லாமல் பிறந்திருக்க வேண்டுமே எனக் கவலைப்படும் தகப்பனைப்போலத்தான் நிலை. 

குடும்ப அட்டையில் புகைப்படம் மாறாமல், பெயர்கள், முகவரி பிழைகளின்றி இருந்தால், வணங்கிய கடவுள் கைவிடவில்லை எனப் பொருள். மாறாக ஏதேனும் பிழைகள் இருந்தால்.... திருத்தத்துக்காக மீண்டும் நடைப்பயணம் தொடர வேண்டியதுதான். 

ஒருவழியாக பிழையில்லா குடும்ப அட்டை கைகளில் வந்ததும் ரேஷன் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் சென்றால் அனைத்துப் பொருள்களும் அனைத்து மாதங்களும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

ஆக, போராட்டங்கள் அங்கும் தொடரவே செய்கின்றன.

டில்லியில் அகப்பட்ட பாகிஸ்தான் பெண் உளவாளி! சரி.. நிஜ கதை என்ன?

Delhi Police today (Monday) claimed to have foiled an ISI plan to ensure smooth operations by a woman spy in the country. Imran and Soofia Kanwal, were apprehended from New Delhi Railway Station on a tip off, according to Delhi Police.


The passports of Imran and Kanwal issued by Pakistan but having no Indian VISA and neither stamp of entry into India, National Identity Card of Imran, Citizenship card of Kanwal, a driving license of Gujarat in the name of Imran, an Election Identity card issued in the name Imran and other documents were recovered.

இந்தியாவுக்குள் பாகிஸ்தானிய பெண் உளவாளி ஒருவரை வைத்து இயக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையின் திட்டத்தை முறியடித்திருப்பதாக அறிவித்துள்ளது டில்லி போலீஸ். இந்தத் திட்டத்துடன் தொடர்பாக ஒரு பெண், மற்றும் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்த ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

40 வயதான இம்ரான், மற்றும் 38 வயதான சூஃபியா கான்வால் ஆகிய இருவர் பற்றிக் கிடைத்த தகவலை அடுத்து, இருவரையும் டில்லி ரெயில்வே ஸ்டேஷனில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குள் இமிகிரேஷன் கன்ட்ரேல் நடைமுறைகள் ஏதுமின்றி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறையான இந்திய விசாவுடன் நாட்டுக்குள் வரவில்லை.

இரு பாகிஸ்தான் பிரஜைகளை இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் அனுப்புவதற்கு பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ.ஐ. திட்டமிட்டுள்ள விபரம் முதலில் இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது. அதையடுத்து இந்திய-நேபாள எல்லைப் பகுதி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த இருவரும் கோரக்பூரிலுள்ள சனோலி எல்லை வழியாக உள்ளே புகுந்தபோது, இருவரையும் உடனே கைது செய்யாமல், நாட்டுக்குள் வருவதை கண்டுகொள்ளாமல் விட்டது இந்திய உளவுத்துறை. இந்தியாவுக்குள் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்படிச் செய்திருக்கலாம்.

இந்தியாவுக்குள் வந்துவிட்ட இருவரும், டில்லி செல்வதற்காக கொரக்தாம் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறியபின், அவர்களை டில்லி ரெயில்வே ஸ்டேஷனில் கைது செய்யுமாறு, டில்லி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்படித்தான் இந்த இருவரையும் டில்லி போலீஸ் கைது செய்தது.

இவர்களை விசாரித்தபோது, இம்ரான் அகமதாபாத்தில் முன்பு வசித்ததாகவும், அங்கிருந்து 1988-ல் பாகிஸ்தானுக்கு குடியேறியதாகவும் கூறியிருக்கிறார். பாகிஸ்தானில் சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது அவரைத் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் உளவுத்துறை, தமக்காக சில காரியங்களை செய்து கொடுத்தால், வியாபாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பணம் கொடுப்பதாக கூறியிருக்கின்றது.

இவரும் சம்மதிக்கவே, அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட், அவர்கள் அனுப்பி வைக்கும் பெண் உளவாளி ஒருவரை பத்திரமாக அழைத்துச் சென்று இந்தியாவில் செட்டில் பண்ணி விடுவதுதான். இந்த பெண், இந்தியாவில் இருந்து இயங்கும் பாகிஸ்தானிய உளவாளியாக செயற்படுவதுதான் திட்டம்.

அப்படி அனுப்பப்பட்ட பெண்தான் இம்ரானுடன் பயணம் செய்து அகப்பட்டுக்கொண்ட சூஃபியா கான்வால்.

இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் உளவுத்துறையே வழங்கியுள்ளது. ஆனால், அந்த பாஸ்போர்ட்டுகளில் இந்திய விசா கிடையாது. அத்துடன், இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் என்று காட்டுவதற்காக, ஐ.எஸ்.ஐ. சில இந்திய ஐ.டி.-களையும் கொடுத்திருந்தது. இம்ரான் பெயரில் இந்திய நேஷனல் ஐடென்டிட்டி கார்டு, குஜராத் டிரைவிங் லைசென்ஸ், எலக்ஷன் கார்டு, சூஃபியா கான்வால் பெயரில் இந்திய பிரஜாவுரிமை கார்டு ஆகியவை வழங்கப்பட்டே இவர்கள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் சரி. டில்லி போலீஸ் கில்லாடிகள்தான். ஆனாலும், நமக்குத்தான் சந்தேக புத்தி!

உளவுத்துறை வட்டாரங்களில் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், ட்ரிக் ஒன்று செய்வதில் பிரபலமானவர்கள். அவர்கள் செய்யும் ட்ரிக் என்ன தெரியுமா? கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே சிலரை அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பப்படும் ஆளுக்கு தன்னை பலியாடாக அனுப்புகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கும். அந்த நபருக்கு தவறான தகவல்களை நிஜம்போல சொல்லியிருப்பார்கள். குறிப்பிட்ட நபர் சிக்கிக் கொள்ளும்போது, தனக்கு தெரிந்த ‘உண்மைகளை’ கூறி விடுவார்.

அதே ஸ்டைலில் ஐ.எஸ்.ஐ,-யும் ஏதாவது செய்ய முயல்கிறதா?

இதை ஏன் சொல்கிறோம் என்றால், இந்திய இமிகிரேஷன் கன்ட்ரோலை கடக்காமல் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட இவர்களுக்கு, எதற்காக பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பியது ஐ.எஸ்.ஐ.?

சரி, அதை விடுங்கள். இந்தியப் பிரஜையாக காண்பிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்த பின்னரும், எதற்காக பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் (அதுவும் இந்திய விசா, இந்திய என்ட்ரி ஸ்டாம்ப் ஏதும் இல்லாமல்) தம்முடன் வைத்திருந்தார்கள்?

முஹ்யித்தீன் மாலை! எழுதியவனுக்கு அணியவேண்டும் காலணிமாலை!!

அருளும் அன்பும் நிறைந்தோனாம் ஆதி பெரியோன் அல்லாஹ்வின்
பெருகும் ஞானச் சுடரொளியின் பெயரே குத்பு முஹ்யித்தீனே

ஈரான் நாட்டு தபரீஸின் இலங்கும் ஜீலான் நகரத்தின்
பேராம் நீபுச் சிற்றூரில் பிறந்தார் ஷெய்கு முஹ்யித்தீனே


எழிலார் ஹிஜ்ரி நானூறும் எழுபதும் சென்று ரமழானின்
வழியாய் வந்த முதற் பிறையில் வடிவாய் வந்தார் முஹ்யித்தீனே


பெரியார் செய்யிது அபூசாலிஹ் பெண்கள் திலகம் பாத்திமா
அரியார் பெற்றோர் இருவர்க்கும் அணியாய் வந்தார் முஹ்யித்தீனே


பெருமான் நபிகள் சந்ததியில் பெரியார் ஹஸன் ஹுஸைன் மரபில்
பெருகும் தலைமுறை ஈரேழின் பேறே கௌது முஹ்யித்தீனே


அறியாக் குழவிப் பருவத்தே அருமை ரமழான் மாதத்தே
நெறியாய்ப் பகல்பால் அருந்தாமல் நேர்மை காத்தார் முஹ்யித்தீனே


சின்னஞ்சிறிய பிராயத்தில் சீரார் தந்தை மறைந்தேக
அன்னையர் அன்பு பார்வையிலே அறிவை வளர்த்தார் முஹ்யித்தீனே


இறையின் னுரையாம் திருமறையை இன்பே மொழியும் ஏழாண்டில் 
நிறைவாயுள்ள ஏடேத்தும் நீர்மை ஹாபிஸ் முஹ்யித்தீனே


மறையை ஓதும் பள்ளியிலே மாணவர் நோக்கி வானவர்கள்
இறையின் நேயர்க்கிடமளிக்க இயம்பக் கண்டார் முஹ்யித்தீனே


அலையார் பதினென் ஆண்டகையை அறிவுத் தாகம் மேலிட்டு
கலையார் பக்தாத் சுனையாடும் கருத்தைக் கொண்டார் முஹ்யித்தீனே


ஊறும் அன்பை உள்வைத்தே உண்மை உயர்வை முன்வைத்த
பேறாம் அன்னை ஆசியுடன் பேரு ரேகும் முஹ்யித்தீனே


வழியிற் கொள்ளை செய்வோரை வாய்மை நெறியிற் செலுத்துந்தீன்
வழியிற் போக்கி அன்னையுரை வன்மை காட்டும் முஹ்யித்தீனே


அரிய அரபும் இலக்கியமும் அண்ணல் நபியின் மணிமொழியும்
பெரியோன் மறையின் விரிவுரையும் பிக்ஹூம் பயின்றார் முஹ்யித்தீனே


கைப் பொருளதனைப் பிறர்க்குதவி கடும்பசி வறுமைக் குள்ளாகி
மெய்ப்பொருள் தேடி ஏழாண்டில் மேதையானார் முஹ்யித்தீனே


ஹம்மாத் ஷெய்கின் போதனையால் ஆத்ம ஞானப் பயிற்சியினை
செம்மையாக மூன்றாண்டில் செய்து முடித்தார் முஹ்யித்தீனே


இறையின் வீடாம் கஃபாவை இதயங் குளிரச் சுற்றுகையில்
நிறையும் ஞான உணர்வுற்று நெஞ்சம் மலர்ந்தார் முஹ்யித்தீனே


கதிரோன் எரிக்கும் கற்காட்டில் கருணை நாயகன் அருள் வேண்டி
அதிரா முறையில் ஐம்புலனும் அடக்கியாண்டார் முஹ்யித்தீனே


தனித்தும் விழித்தும் புசியாமல் தண்ணீர் கூட அருந்தாமல்
அனைத்தும் துறந்தே மூன்றாண்டின் அருந்தவ மாற்றும் முஹ்யித்தீனே


மாதவஞ் செய்ய கண்டோர்கள் மாய்ந்தாரெனவே எடுத்தேகி
ஓதும் இறுதிச் சடங்காற்ற உணர்வு பெற்றார் முஹ்யித்தீனே


நபிமார் ஒலிமார் ஞானியரை நாடும் முறையில் சோதிக்கும் 
நபியார் ஹிழ்ரின் போதனையால் நலமே பெற்றார் முஹ்யித்தீனே


வாழும் நகரை விட்டேகி வறண்ட பதினோராண்டுகளும்
பாழும் அஜமிக் கோட்டைக்குள் பாங்காய் உயர்ந்தார் முஹ்யித்தீனே


பற்றையற்றோன் பற்றுறவே பான்மறை முழுதும் இரவோதி
ஒற்றைக் காலில் நோற்றிறையின் ஒளியைக் கண்டார் முஹ்யித்தீனே


இரவுத் தொழுகை வுளுவுடனே இனிய பஜ்ரின் வணக்கத்தை
மரபு படியே பல்லாண்டு மகிழ்வாய் முடித்தார் முஹ்யித்தீனே


என்றும் நின்று குன்றாமல் ஏற்றுச் செய்த உயர்வினைகள்
இன்றும் அன்றும் பார்காணா இணையில் தவமே முஹ்யித்தீனே


அஞ்சக் கொஞ்சும் ஷைத்தானின் அன்புக் கெஞ்சி துஞ்சாமல்
நெஞ்சம் மிஞ்சும் வாஞ்சை மிக நஞ்சம் கொன்றார் முஹ்யித்தீனே


இதயப் பூங்கா மக்காவில் இரண்டாம் ஹஜ்ஜை நிறைவேற்றி
உதயச் சுடராம் பெருமான்பால் உவந்தே சென்றார் முஹ்யித்தீனே


அருமைப் பாட்டார் அருகுற்றார் அன்பை பொழிந்து நெகிழ்வுற்றார்
ஒருமை காண நாற்பது நாள் ஒன்றித் தோய்ந்தார் முஹ்யித்தீனே


மருளிற் சிக்கும் இனத்தோரை மதியால் தெருட்ட வழிகாட்டும்
கருணை பொழிலாம் நாயகரைக் கனவிற் கண்டார் முஹ்யித்தீனே


எல்லாம் வல்லோன் இன்னருளால் ஏந்தல் நபிகள் பொன்னுரையால் 
நல்லார் அலியின் ஆசியினால் நாநல முற்றார் முஹ்யித்தீனே


பக்திச் சுடராம் நல்லுரையை பாபுல் அஜ்ஸாம் பள்ளியிலே
நித்தம் பருகி இன்பமுற நிறைத்தோர் கண்டார் மு ஹ்யித்தீன்


பழுமரம் நாடும் பறவைகள் போல் பயனுரை கேட்க பாரெல்லாம் 
குழுமுதல் கண்டு பெருவெளியைக் குறித்தார் குத்பு முஹ்யித்தீனே


அரசியல் ஆள்வோர் கலீஃபாக்கள் ஆலிம் ஷெய்கு அதிபதிகள்
பரமன் படைப்பின் பல்லோர்க்கும் பண்புரை வழங்கும் முஹ்யித்தீனே


பொருளியல் அரசியல் சமுதாயம் போற்றும் ஞானம் அறிவியல்கள்
திருமறை நபிமொழி விளக்கமுடன் தீந்தீன் முழக்கும் முஹ்யித்தீனே


புத்துயிர் பெற்றார் கிறிஸ்தவர்கள் புதுநெறி கண்டார் யூதர்கள்
சித்தம் தெளிந்தார் தீயோர்கள் சிந்தைக் குளிர்ந்தார் முஹ்யித்தீனே


உள்ளக் கிண்ணம் நிறைவடைய உண்மை ஞானம் தேடிவரும்
கள்ளம் கொல்லும் சீடர்க்கு கௌதுல் அஃழம் முஹ்யித்தீனே


ஞாலம் போற்றும் அறிவு பெற நாடி வந்த மாணவர்க்குக்
கால வானில் தாரகையாம் கல்வி புகட்டும் முஹ்யித்தீனே


கானில் கூடிய தவமாற்றி கருத்தைத் துலக்கும் வழிகாட்டி
நானிலம் போற்றும் மெய்ஞ்ஞான நெறியைப் புகன்றார் முஹ்யித்தீனே


ஞானக் கடலில் வழிமாறி நடுங்கும் கலமாம் ஞானியர்க்குத் 
தானங்காட்டும் ஜுதி மலை தலைமை தாங்கும் முஹ்யித்தீனே


எண்மாண்புடைய பாடல்கள் ஏற்றும் நல்கும் குத்பாக்கள்
நுண்மாண்புடைய கஸீதாக்கள் நுவன்றார் ஷெய்கு முஹ்யித்தீனே


ஆகம் நிறையும் கருத்தெல்லாம் அடக்கிக் கூறி நல்லறிவுத்
தாகம் தீர்க்கும் குன்யத்து தாலிபீன் தரு முஹ்யித்தீனே


அழியா தொளிரும் செல்வத்தை அளிக்கும் பத்ஹுர் ரப்பானி
வழியாய் அரிதாம் பேருரைகள் வழங்கும் வள்ளல் முஹ்யித்தீனே


மறைவாம் ஞானச் சுவைமல்கும் மாண்பார் புதுஹுல் கைபதனை
நிறைவாய்க்காட்டி நெஞ்சிருனை நீக்கும் காஜா முஹ்யித்தீனே


செயலில் நலிந்து மெலிவுற்ற செம்மை இஸ்லாம் நெறியோங்க
உயர்வாம் மருந்தால் உயிரூட்டும் உரிய மருத்துவர் முஹ்யித்தீனே


அருமை மனைவியர் நால்வருடன் ஆண்மக விருபத் தெழுவருடன் 
இருபத் திருவர் பெண்மகவாய் இல்லில் இலங்கும் முஹ்யித்தீனே


மனைவியர் நலனைப் பேணிடுதல் மழலைக் குழவியை பேணிடுதல்
மனைவியின் வினைகள் ஆற்றிடுதல் மகிழ்ந்தே செய்தார் முஹ்யித்தீனே


காலியொருவரை நியமித்த கலீஃபா செயலைக் கண்டித்து
வேலை நீக்கி வேறொருவர் விரைவில் கண்டார் முஹ்யித்தீனே


கலீஃபா அளித்த பணப்பையைக் கரத்தில் எடுத்து பிழிந்தவுடன்
வலியாற் கொண்ட இரத்தமெல்லாம் வடியக் கண்டார் முஹ்யித்தீனே


மாதுளை வேண்டிச் சோதித்த மாசார் கலீஃபா கைதொட்ட
மாதுளையிற் புழு நெளிந்திடவும் மனத்தையளந்தார் முஹ்யித்தீனே


அழுக்காறுந்த அவை சேர்ந்த அறிஞர் மனத்துக் கோளறிந்தே
ஒழுக்கம் காட்டும் உரையீந்த ஒல்காப் புகழின் முஹ்யித்தீனே


வணிகர் பஜ்லுல்லா மகனார் வாடக் கண்ட பெருநோயைத் 
தணியச் செய்தார் இறையருளால் தலைவர் தர்வேஷ் முஹ்யித்தீனே


உள்ளில் உள்ளும் பொருளெல்லாம் உரையால் ஊட்ட அபுல் ஹஸனார்
விள்ளற் கரிய நிலையுற்று வியந்து போற்றும் முஹ்யித்தீனே


மறையின் அறிவால் செருக்குற்ற மதியா இப்னு ஜௌஸீயை 
மறையின் அரிய விளக்கத்தால் மதிப்பை யுணர்த்தும் முஹ்யித்தீனே


இன்னா நூலை மாய்த்ததனை இனிய நூலாய் மாற்றிய பின்
மன்சூர் மகனார் மனநோயை மாயச் செய்தார் முஹ்யித்தீனே


ஊழின் வலியைப் பேசுகையில் உடலைச் சுற்றிப் பாம்பு விழ
தாழா நின்று தானவனின் தன்மை பகர்ந்தார் முஹ்யித்தீனே


கல்லுங் கசியக் கனிந்துரைந்து கருத்துக்கரிய விருந்தூட்டும்
சொல்லும் செயலும் மாறாத சோபை இலங்கும் முஹ்யித்தீனே


தக்வா என்னும் வாள்கொண்டு தௌஹீதென்னும் படை கொண்டு
சிக்கச் செய்யும் ஷைத்தானை சிதைக்கச் சொன்னார் முஹ்யித்தீனே


அல்லாஹ் அவனை அஞ்சிடுக அவன் பால் தேவையை முறையிடுக
எல்லாமவனே எனமகற்கே இறுதி யுரைத்தார் முஹ்யித்தீனே


அல்லின் தொழுகை முடித்தார்கள் அழகாய் கலிமா நவின்றார்கள்
அல்லாஹ்வென்றார் மும்முரைகள் ஆவி துறந்தார் முஹ்யித்தீனே


ஆண்டுகள் தொண்ணூற் றொன்டு வரை அரிய வாழ்வாற் புகழுற்று
மாண்பாரிறையின் பணியேற்று மறைந்தார் நாதர் முஹ்யித்தீனே


திகழும் ரபீவுல் ஆகிர் பிறை திங்கள் வளரும் பதினொன்றில்
மகிழ்வாய் நினைவு உலகெங்கும் மங்காதொளிரும் முஹ்யித்தீனே


எங்கள் கௌது ஸமதானி ஏகன் கிந்தீல் நூரானி
எங்கள் குதுபு ரப்பானி ஏந்தல் சுல்தான் முஹ்யித்தீனே


அப்தால் மஹபூப் ஸுப்ஹானி அன்பார் மஃஷுக் ரஹ்மானி
அப்துல் காதிர் ஜீலானி ஆரிஃப் நாதர் முஹ்யித்தீனே


நல்லோர் பெரியோர்க் கின்னுயிரே நலமார் நெஞ்சில் மன்னுயிரே
பொல்லார்க்கிடியே றானவரே பொன்றாச் செல்வர் முஹ்யித்தீனே


மாசில் மணியே கண்மணியே மறையா நெறியின் மாமணியே
வீசும் பத்திச் சுடர் மணியே விளங்கும் ஜமால் முஹ்யித்தீனே


அகிலம் ஓங்க வருமுகிலே அமிழ்த ஞானப் பெருமுகிலே
மகிழும் தன்மை தருமுகிலே மறைமா முகிலே முஹ்யித்தீனே


அன்புக் கடலே அருட்கடலே அனைத்தும் கொண்ட பெருங்கடலே
இன்பக் கடலே ஆழ்கடலே இதயக் கடலே முஹ்யித்தீனே


செல்வப் பேறே நற்பேறே செஞ்சொல் ஊறும் பொற்பேறே
கல்விப் பேறே பக்தாதின் காவற் பேறே முஹ்யித்தீனே


மாதவர்க்கரசே முஹ்யித்தீனே மாண்பே றரசே முஹ்யித்தீனே
பூதலத் தரசர் மகிழ்ந்தேத்தும் புகழின் அரசே முஹ்யித்தீனே


காரண வாழ்வே முஹ்யித்தீனே கண்ணிய வாழ்வே முஹ்யித்தீனே
பூரண வாழ்வே முஹ்யித்தீனே புண்ணிய வாழ்வே முஹ்யித்தீனே


ஓலிகட்கொலியே முஹ்யித்தீனே ஒளிகட்கொளியே முஹ்யித்தீனே
கலிகள் தீர்க்கும் முஹ்யித்தீனே கரையில் ஆழி முஹ்யித்தீனே


நான் தான் தேய்ந்தீர் முஹ்யித்தீனே நோன்பான் வாழ்ந்தீர் முஹ்யித்தீனே
தீன்தேன் தோய்ந்தீர் முஹ்யித்தீனே தீன்தீன் தீந்தீன் முஹ்யித்தீனே


பூமான் கோமான் முஹ்யித்தீனே பொலிவார் சீமான் முஹ்யித்தீனே
ஈமான் ஓங்கும் முஹ்யித்தீனே இன்பே பொங்கும் முஹ்யித்தீனே


காவே கோவே முஹ்யித்தீனே கவியே கமழும் முஹ்யித்தீனே
பூவே நாவே முஹ்யித்தீனே புவியே புகழும் முஹ்யித்தீனே


நாதா நீதா முஹ்யித்தீனே ஞான மேதா முஹ்யித்தீனே
மாதா பாதா முஹ்யித்தீனே புவியே புகழும் முஹ்யித்தீனே


உள்ளம் பொங்கும் ஊக்கமுடன் உயர்வா யாயிரம் முறை நாமம் 
விள்ளும் அன்பர் துயர் போக்க விளங்கித் தோன்றும் முஹ்யித்தீனே

ரஜினி வீடு முற்றுகை இடப்படும் கோச்சடையான் படத்தில் அசின் நடித்தால்–IMKஅறிவிப்பு

கோச்சடையான் படத்தில் அசின் நடித்தால் ரஜினி வீடு முற்றுகை – இந்து மக்கள் கட்சி

அசின் ரஜினி கோச்சடையான் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் நடிக்க அசின் ஆர்வமாக உள்ளார். ஆனால் அசினை தேர்வு செய்ய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே திரையுலகினர் தடையை மீறி இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதை பலரும் கண்டித்தனர். அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. நடிகர் சங்க நிர்வாகிகளும் அசினை கடுமையாக விமர்சித்தனர்.

பிறகு அப்பிரச்சினை நடிகர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது முல்லை பெரியாறு பிரச்சினை தலை தூக்கியுள்ளதால் மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கண்ணன், கூறும்போது அசின் இலங்கை சென்ற போதே அவர் தமிழர்களுக்கு எதிர்ப்பான நிலை எடுத்ததை அறிய முடிந்தது.

முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்

இவரை தெரிகிறதா?


இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவங்கி வைத்து பேசியதாவது: அறிவியல் என்பது நெடுங்கால ஆராய்ச்சிக்கு உட்பட்டது. இந்தியாவில் மட்டும்தான், அதிகமான சம்பிரதாயங்கள் இருப்பதை காண முடிகிறது. இங்கு ஆராய்ச்சியாளர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒன்றாக பார்க்கும் கலாசாரம் உள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதை செய்யாவிட்டால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று கருதுகின்றனர். உங்களுடைய மாலை, மரியாதைகள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆராய்ச்சிதான் முக்கியம்.டார்வின், நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை படித்ததன் மூலம் அவர்கள் என்னை கவர்ந்தனர். அதற்காக நான் என்றும் அவர்களை என் முன்மாதிரியாக நினைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் புத்தகங்களை படித்ததால், அவர்கள் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, நான் அதை திருத்திக் கொண்டேன். 

மாணவர்கள், உங்களுடைய ஆசிரியர்களை மதியுங்கள். ஏனென்றால், ஆசிரியர்கள் தான் உங்கள் வழிக்கட்டிகள். அவர்களால்தான் உங்களுக்கு சரியான வழி காட்ட முடியும். அறிவியல் என்பது முற்போக்கு சிந்தனை உடையது. அறிவியல் அறிஞராகிய நான் ஒன்றும் கிரிக்கெட் நட்சத்திரமோ அல்லது சினிமா நட்சத்திரமோ இல்லை. என்னிடம் ஆட்டோகிராப் வாங்கி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்டர்நெட் என்பது இந்தியாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. இது, இந்திய அறிவியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டர்நெட் மேற்கத்திய நாடுகளில் உருவாகி, இந்தியாவில் அதிகமாக பயன்பட்டு வருகிறது. அறிவியல் எந்த நாட்டிலும் உருவாகலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, காலரா நோயை வங்கதேசத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். ஆனால், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அறிவியலும், ஆராய்ச்சியும் நாடுகளை கடந்து செல்லக்கூடியவை. ஆராய்ச்சி என்பது நாட்டிற்காக செய்யப்படுவது கிடையாது. நான் செய்த ஆராய்ச்சி இந்தியாவிற்காக இல்லை. உலகத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் செய்தேன். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணை வேந்தர் சத்தியநாராயணன், இந்திய அறிவியல் கழக தலைவர் பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்ட இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

தெரியாத நம்பரிலிருந்து மிஸ்டு கால் வருகிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும்  ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. 

மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை. 

இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்றார்.

பைபிளை மனிதன்தான் எழுதினான்


பைபிளை மனிதன்தான் எழுதினான்




பைபிளில் நகைச்சுவைகள்




பைபிளில் வர்ணாசிரமம்



பைபிளின் முரண்பாடுகளில் சில









ராஜபாட்டை - விகரமுக்கு இது அடுத்த அந்நியனா? கந்தசாமியா?

விக்ரம், தீக்ஷா சேத், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் இயக்க, யுவன் இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று ( டிசம்பர் 09 ) நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில தகவல் துளிகள்:

* அம்மு, பாலாஜி தொகுத்து வழங்க, சற்று லேட்டாகவே துவங்கியது இசை வெளியீட்டு விழா.




* ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே விக்ரம் அரங்கினுள் வந்தார்.

* ‘ராஜபாட்டை’ படக்குழுவினர் அனைவரையும் மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார்கள். அவற்றை தொடர்ந்து விக்ரம் – சுசீந்திரன் இருவரைப் பற்றியும் வீடியோ பதிவு திரையிடப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது பாதியில் நிறுத்தப்பட்டது.

* விக்ரம் : ” சுசீந்திரன் இயக்கிய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘நான் மகான் அல்ல’ எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் பிறகு வந்த ‘அழகர்சாமியின் குதிரை’ படமும் எனக்கு பிடித்தது தான். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது ‘ராஜபாட்டை’ படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ படங்களின் வரிசையில் எனது ரசிகர்களுக்காக நடித்த படம் தான் ‘ராஜபாட்டை’ “.

* சுசீந்திரன் : ” விக்ரம் சாரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். ‘ராஜபாட்டை’ படம் ஜாலியான படம். ஆனால் இதிலும் விக்ரம் சாரின் பெரும் உழைப்பு அடங்கி இருக்கிறது. 17 கெட்டப்களில் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

* தீக்ஷா சேத் : ” நான் விக்ரமின் தீவிர ரசிகை. எனது முதல் தமிழ்ப்படமே விக்ரம் சாருடன் நடிக்க, வெளிவருவதில் மகிழ்ச்சி. ஒருவேளை நான் இப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், விக்ரம் ரசிகையாக இவ்விழாவில் பங்கேற்று இருப்பேன்.”

* ரீமா சென் : ” நான் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து ‘தூள்’ படத்தில் நடித்து இருக்கிறேன். ‘தூள்’ படத்தை விட ராஜபாட்டை படத்தில் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் ”

* இயக்குனர் விஜய் : ” நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகன். ‘தெய்வத்திருமகள்’ படத்தினை தொடர்ந்து, எனது அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விக்ரம் ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கையில் விக்ரமை FOLLOW பண்ண விரும்புகிறேன் ” என்றார்.

* யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை மேடைக்கு அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு பாடலை வெளியிட்டனர்.

* தீக்ஷா சேத், ரீமா சென் இணைந்து ஒரு பாடலையும், சுசித்ரா, மாலதி இணைந்து ஒரு பாடலையும் வெளியிட்டார்கள். அப்பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.

* ‘பொடி பையன் போலவே’, ‘வில்லாதி வில்லன்’ ஆகிய பாடல்கள் திரையிடப்பட்டது.’ ‘வில்லாதி வில்லன்’ பாடலில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் சலோனியுடன் இணைந்து ஆடி இருந்தார்.

*ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் விக்ரம். அப்போது எப்போது இயக்குனர் ஆவிர்கள் என்ற கேள்விக்கு விக்ரம் ” தமிழ் திரையுலகில் மணிரத்னம், பாலா, சுசீந்திரன், ஹரி, விஜய் என பல நல்ல இயக்குனர்கள் எனக்கு வாய்த்திவிக்ரம், தீக்ஷா சேத், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் இயக்க, யுவன் இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று ( டிசம்பர் 09 ) நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில தகவல் துளிகள்:

* அம்மு, பாலாஜி தொகுத்து வழங்க, சற்று லேட்டாகவே துவங்கியது இசை வெளியீட்டு விழா.

* ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே விக்ரம் அரங்கினுள் வந்தார்.

* ‘ராஜபாட்டை’ படக்குழுவினர் அனைவரையும் மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார்கள். அவற்றை தொடர்ந்து விக்ரம் – சுசீந்திரன் இருவரைப் பற்றியும் வீடியோ பதிவு திரையிடப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது பாதியில் நிறுத்தப்பட்டது.

* விக்ரம் : ” சுசீந்திரன் இயக்கிய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘நான் மகான் அல்ல’ எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் பிறகு வந்த ‘அழகர்சாமியின் குதிரை’ படமும் எனக்கு பிடித்தது தான். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது ‘ராஜபாட்டை’ படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ படங்களின் வரிசையில் எனது ரசிகர்களுக்காக நடித்த படம் தான் ‘ராஜபாட்டை’ “.

* சுசீந்திரன் : ” விக்ரம் சாரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். ‘ராஜபாட்டை’ படம் ஜாலியான படம். ஆனால் இதிலும் விக்ரம் சாரின் பெரும் உழைப்பு அடங்கி இருக்கிறது. 17 கெட்டப்களில் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

* தீக்ஷா சேத் : ” நான் விக்ரமின் தீவிர ரசிகை. எனது முதல் தமிழ்ப்படமே விக்ரம் சாருடன் நடிக்க, வெளிவருவதில் மகிழ்ச்சி. ஒருவேளை நான் இப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், விக்ரம் ரசிகையாக இவ்விழாவில் பங்கேற்று இருப்பேன்.”

* ரீமா சென் : ” நான் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து ‘தூள்’ படத்தில் நடித்து இருக்கிறேன். ‘தூள்’ படத்தை விட ராஜபாட்டை படத்தில் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் ”

* இயக்குனர் விஜய் : ” நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகன். ‘தெய்வத்திருமகள்’ படத்தினை தொடர்ந்து, எனது அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விக்ரம் ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கையில் விக்ரமை FOLLOW பண்ண விரும்புகிறேன் ” என்றார்.

* யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை மேடைக்கு அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு பாடலை வெளியிட்டனர்.

* தீக்ஷா சேத், ரீமா சென் இணைந்து ஒரு பாடலையும், சுசித்ரா, மாலதி இணைந்து ஒரு பாடலையும் வெளியிட்டார்கள். அப்பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.

* ‘பொடி பையன் போலவே’, ‘வில்லாதி வில்லன்’ ஆகிய பாடல்கள் திரையிடப்பட்டது.’ ‘வில்லாதி வில்லன்’ பாடலில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் சலோனியுடன் இணைந்து ஆடி இருந்தார்.

*ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் விக்ரம். அப்போது எப்போது இயக்குனர் ஆவிர்கள் என்ற கேள்விக்கு விக்ரம் ” தமிழ் திரையுலகில் மணிரத்னம், பாலா, சுசீந்திரன், ஹரி, விஜய் என பல நல்ல இயக்குனர்கள் எனக்கு வாய்த்திவிக்ரம், தீக்ஷா சேத், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் இயக்க, யுவன் இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று ( டிசம்பர் 09 ) நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில தகவல் துளிகள்:

* அம்மு, பாலாஜி தொகுத்து வழங்க, சற்று லேட்டாகவே துவங்கியது இசை வெளியீட்டு விழா.

* ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே விக்ரம் அரங்கினுள் வந்தார்.

* ‘ராஜபாட்டை’ படக்குழுவினர் அனைவரையும் மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார்கள். அவற்றை தொடர்ந்து விக்ரம் – சுசீந்திரன் இருவரைப் பற்றியும் வீடியோ பதிவு திரையிடப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது பாதியில் நிறுத்தப்பட்டது.

* விக்ரம் : ” சுசீந்திரன் இயக்கிய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘நான் மகான் அல்ல’ எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் பிறகு வந்த ‘அழகர்சாமியின் குதிரை’ படமும் எனக்கு பிடித்தது தான். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது ‘ராஜபாட்டை’ படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ படங்களின் வரிசையில் எனது ரசிகர்களுக்காக நடித்த படம் தான் ‘ராஜபாட்டை’ “.

* சுசீந்திரன் : ” விக்ரம் சாரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். ‘ராஜபாட்டை’ படம் ஜாலியான படம். ஆனால் இதிலும் விக்ரம் சாரின் பெரும் உழைப்பு அடங்கி இருக்கிறது. 17 கெட்டப்களில் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

* தீக்ஷா சேத் : ” நான் விக்ரமின் தீவிர ரசிகை. எனது முதல் தமிழ்ப்படமே விக்ரம் சாருடன் நடிக்க, வெளிவருவதில் மகிழ்ச்சி. ஒருவேளை நான் இப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், விக்ரம் ரசிகையாக இவ்விழாவில் பங்கேற்று இருப்பேன்.”

* ரீமா சென் : ” நான் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து ‘தூள்’ படத்தில் நடித்து இருக்கிறேன். ‘தூள்’ படத்தை விட ராஜபாட்டை படத்தில் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் ”

* இயக்குனர் விஜய் : ” நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகன். ‘தெய்வத்திருமகள்’ படத்தினை தொடர்ந்து, எனது அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விக்ரம் ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கையில் விக்ரமை FOLLOW பண்ண விரும்புகிறேன் ” என்றார்.

* யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை மேடைக்கு அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு பாடலை வெளியிட்டனர்.

* தீக்ஷா சேத், ரீமா சென் இணைந்து ஒரு பாடலையும், சுசித்ரா, மாலதி இணைந்து ஒரு பாடலையும் வெளியிட்டார்கள். அப்பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.

* ‘பொடி பையன் போலவே’, ‘வில்லாதி வில்லன்’ ஆகிய பாடல்கள் திரையிடப்பட்டது.’ ‘வில்லாதி வில்லன்’ பாடலில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் சலோனியுடன் இணைந்து ஆடி இருந்தார்.

*ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் விக்ரம். அப்போது எப்போது இயக்குனர் ஆவிர்கள் என்ற கேள்விக்கு விக்ரம் ” தமிழ் திரையுலகில் மணிரத்னம், பாலா, சுசீந்திரன், ஹரி, விஜய் என பல நல்ல இயக்குனர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். கண்டிப்பாக வரும் காலத்தில் இயக்குனர் ஆவேன் ” என்றார்.

* இறுதியாக படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை டிரெய்லரை திரையிட்டார்கள். அதற்குப் பிறகும் ரசிகர்கள் ONCE MORE கேட்டார்கள்.

* இயக்குனர் சுசீந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.ருக்கிறார்கள். கண்டிப்பாக வரும் காலத்தில் இயக்குனர் ஆவேன் ” என்றார்.

* இறுதியாக படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை டிரெய்லரை திரையிட்டார்கள். அதற்குப் பிறகும் ரசிகர்கள் ONCE MORE கேட்டார்கள்.

* இயக்குனர் சுசீந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.ருக்கிறார்கள். கண்டிப்பாக வரும் காலத்தில் இயக்குனர் ஆவேன் ” என்றார்.

* இறுதியாக படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை டிரெய்லரை திரையிட்டார்கள். அதற்குப் பிறகும் ரசிகர்கள் ONCE MORE கேட்டார்கள்.

* இயக்குனர் சுசீந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.