சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் டில்லி ஐ.ஐ.டி.யில் நடத்திய வளாகத் தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஒருவரைத் தேர்வு செய்துள்ளது.
இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளம் தரப்படும் என அந் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக் தங்களின் நிறுவனத்துக்கு திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை வளாகத் தேர்வு மூலம் இந் நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.
இந் நிலையில் இந்த ஆண்டும் டில்லி ஐ.ஐ.டி.,யில் பேஸ்புக் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் அன்கூர் தாகியா என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படும் என அந் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தாகியா, படிப்பு முடிந்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் புரோகிராமராக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
இது குறித்து அன்கூர் தாகியா கூறியதாவது…..
“பேஸ்புக் வலைதளத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறியுள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
|
No comments:
Post a Comment