பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.
|