Tuesday, April 26, 2011

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.


நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது
இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.

எனவே நாம் டிவிடிக்களை காப்பி செய்வதற்கு பதிலாக அதனை டிவிடி இமேஜ்(DVD IMAGE)ஆக உருவாக்கி கொள்ளலாம். இமேஜ் என்பது சிடி/டிவிடி களின் நகல் ஆகும். இவை பொதுவாக iso, nrg போன்ற பார்மட்களில் இருக்கும். படங்களை மட்டும் இன்றி game ,data, os போன்ற டிவிடிக்களை காப்பி செய்யாமல்
இமேஜ் ஆக காப்பி செய்வதே சிறந்தது. ஓ.எஸ். போன்றவை பூட்டபுள் சிடி/டிவிடியாக இருக்கும். அதனை சாதரணமாக காப்பி செய்து மற்றொரு சிடி/டிவிடியில் எரித்தால்(burn) அவை பூட்டாகாது. எனவே நீங்கள் எந்த ஒரு சிடி/டிவிடியை காப்பி செய்வதாக இருந்தால் அதனை இமேஜ் ஆக காபி செய்யுங்கள். அதனை நாம் சிடி/டிவிடியில் எரிக்கவேண்டும் என்றால் ஒரே கிளிக்கிள் எந்த ஒரு தகவல் இழப்பும் இல்லாமல் எரிக்கமுடியும். இது போன்ற தகவல்களை சிடி/டிவிடி இமேஜ்களாக தயாரிக்க பல மென்பொருட்கள் உள்ளன. நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் nero போன்ற மென்பொருட்களை கொண்டு நாம் சிடி/டிவிடிகளிலிருந்து இமேஜ்களை உருவாக்கலாம். ஆனால் நாம் பார்க்கப்போவது ஒரு இலவசமான, எளிய மென்பொருள். இதனை கொண்டு சிடி/டிவிடி இமேஜ்களை உருவாக்கிக்கொள்ளலாம். அதனை பிறகு சிடி/டிவிடிகளில் எரித்துக்
கொள்ளலாம். மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் பெயர் image burn ஆகும்.


தரவிறக்க சுட்டி   : click
இணையமுகவரி: http://www.imgburn.com
ஒரே கிளிக்கிள்:  உடனே தரவிறக்க
இதனை  நீங்களே தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். உங்கள் டிவிடியை டிரைவில் போட்டுவிட்டு Create image file from disc என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு எங்கு சேமிக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். அவ்வளவுதான் விரைவாக உங்கள் டிவிடியின் நகல் உருவாகிவிடும்.
உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
தயாரித்த இமேஜ்’களை எப்படி ஒரு உண்மையான சிடி/டிவிடியில் எரிக்காமல் அதனை அசலான சிடி/டிவிடி போன்று நம் கணினியில் திறப்பது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
உங்கள் பொன்னான வாக்குகளையும். உங்கள் கருத்துகளையும் கூறுங்களேன்.

DVD, VCD படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

டிவிடி அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின் இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில் டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை மாற்றுவது என்று பார்ப்போம்.


ஒரு தரமான டிவிடி படம்:

நம்மிடம் இருக்கும் டிவிடி படமானது முதலில் நல்ல ப்ரிண்ட் ஆக இருக்க வேண்டும். ஒரிஜினலாக இருந்தால் இன்னும் நல்லது. டிவிடியில் பெரும்பாலும் ஒரு படம் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று படங்கள் என்றால் கண்டிப்பாக அவை அளவில் குறைந்து, தரத்திலும் குறைவாகவே இருக்கும். மேலும் 5.1 ஆடியோ வேண்டும் என்றால் பெரும்பாலும் ஒருபடம் உள்ள டிவிடிகளில் தான் இருக்கும். எவ்வளவு தரமானதாக நம்மிடம் இருக்கிறதோ அந்த அளவு நன்றாக வெளியீடு கிடைக்கும்.

Auto Gordian Knot

இது ஒரு இலவசமான மென்பொருள். இதனை பயன்படுத்திதான் நாம் நம்முடைய வீடியோக்களை தரமாக மாற்றுவதை செய்யபோகிறோம்.
இதனை இங்கிருந்து தரவிறக்கிகொள்ளவும். click here
இதன் முழு packageஐயும் தரவிறக்கி கொள்ளவும். அவை encodingகிற்கு தேவையான codecகளையும் கொண்டிருப்பதால் நாம் தனியாக அவற்றை நிறுவ தேவையில்லை. இது டிவிக்ஸ்(divx), மற்றும் எக்ஸ்விட்(xvid) encodingமுறையை மட்டுமே தற்போது ஆதரிக்கிறது. டிவிடி பிளேயர்கள் mkv, போன்றவற்றை ஆதரிக்காது. எனவே தற்போது இதனை கொண்டு avi உருமாட்டிற்குதான் சேமிக்க முடியும். இருந்தாலும் இதன் என்கோடிங் முறை நமக்கு தரமாக படங்களை மாற்றிதருவதடன் தற்போது இருக்கும் அணைத்து டிவிடி பிளேயர்களிலும் மாற்றிய படங்களை பார்க்கமுடியும்.

உங்கள் படத்தை டிரைவில் போட்டு, autoGKவை திறந்துக்கொள்ளுங்கள். உங்கள் டிவிடியில் VIDEO_TS என்ற போல்டருக்கு சென்றால் அங்கு பல
.IFO, .BUP, .VOB FILEகள் இருப்பதை காணலாம். .IFO என்பது information என்பதன் சுருக்கம். இதில் தான் படத்தை பற்றிய விவரங்கள் இருக்கும். இதனை கொண்டுதான் டிவிடி பிளேயர்கள் வரிசையாக மெனு, அடுத்து படம் என்று நமக்கு படித்து காட்டுகிறது. .BUP என்பது .IFOன் backup file மற்றும் .VOB வீடியோfile ஆகும்.



STEP 1:

autoGKவை திறந்து அதில் உங்கள் டிவிடியில் VIDEO_TS FOLDERக்குள் இருக்கும் .IFO fileஐ தேர்வு செய்யவும்.(டிவிடியில் ஒரே படம் என்றால்) இல்லை என்றால் தேவையான படத்தின் .VOB ஐ தேர்வுசெய்யுங்கள். output fileல் என்னபெயரில் சேமிக்க வேண்டுமோ அதனை தரவும். 

STEP 2:

அடுத்து உங்கள் படத்தின் ஆடியோ, மற்றும் சப்டைட்டில். உங்கள் டிவிடி 5.1 channel audioகொண்டிருந்தால் audio track(s) இல் காட்டும். உங்களுக்கு
தேவை என்றால் அதனை தேர்வு செய்யுங்கள். படத்தினை 700 mbக்குள் அடக்க வேண்டும் என்றால் 5.1 வேண்டாம். 2.1 ஐ தேர்வு செய்யவும். மேலும் பல மொழி டிராக்குகள் காட்டினால் உங்களுக்கு தேவையானதை மட்டும் தெர்வு செய்யவும். அடுத்து உள்ள subtitleல் உங்களுக்கு தேவையான subtitle இருந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். 

STEP 3:

இது தான் முக்கியமான் பகுதி. இங்கு மூன்று தேர்வுகள் உள்ளன. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும். உங்கள் படத்தை 700mbயில் மாற்றவேண்டும் என்றால் இரண்டாவதாக உள்ள custom sizeல் 700 என்று கொடுக்கவும்.

STEP 4:

இது optional தான் இருந்தாலும் நம்முடைய படத்தின் தரத்தை இதன் மூலம் சற்று மாற்றலாம். advanced settings ல் உள்ள output resolution settingல் உங்களுக்கு தேவையான அகல அளவை தேர்வு செய்யுங்கள். உங்களின் டிவி widscreen என்றால் அதற்கேற்றமாதிரி படத்தின் அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். இதனை பற்றி தெரியவில்லை என்றால் autowidth ஐ தேர்வு செய்யவும்.
அடுத்து output audio typeல் 700MBபடமாக மாற்றவேண்டும் என்றால் VBR MP3 Kbps ஐ தேர்வு செய்யவும். இது தரமான ஒலியும் குறைந்த அளவையும் எடுத்துக்கொள்வதால் வீடியோவின் தரம் சற்று அதிகமாகும். இல்லை உங்களுக்கு 5.1 அல்லது டிவிடியில் இருக்கும் audioவே வேண்டும் என்றால் originalஐ தேர்வு செய்யவும். இதனை பற்றியும் தெரியவில்லை என்றால் autoஐ தேர்வு செய்யவும். அடுத்து உங்களுக்கு விருப்பமான் codecஐ தேர்வு செய்யவும். output formatஇல் aviயே இருக்கட்டும். பிறகு ok கொடுக்கவும்.

நாம் மாற்றியமைத்த தேர்வுகளின் படி நம் படத்தின் வெளியீடு எப்படி இருக்கும் என்பதை Previewவை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
அது உங்களுக்கு திருப்தியாக இருப்பின் Addjobஐ செர்த்து start செய்ய வேண்டியதுதான். வேலை முடிந்தபிறகு என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்யலாம். defaultஆக do nothing இல் இருக்கும். நீங்கள் shutdown தேர்ந்தெடுத்தால் உங்கள் கணினி வேலை முடிந்தவுடன் தானாக shutdown ஆகிவிடும். அவ்வளவுதான் 700mb வீடியோ கிடைத்துவிட்டது. கிடைத்த வீடியோக்களை உங்கள் விருப்பம் போல உங்கள் கணினியிலோ அல்லது டிவிடிக்களில் எரித்து டிவிடி பிளேயர்களில் போட்டு பாருங்கள்.

இதில் அதிகமாக வசதி இல்லை என்று நினைக்காதிர்கள். autoGKவை திறந்து ctrl+F9கீகளை அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மெனுவை காணுங்கள்.

இந்த மென்பொருளின் இணையதளம்: click here to visit

செல்போனில் ஈசிஜி எடுத்து டாக்டருக்கு அனுப்பலாம்!


மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்போனாக மட்டுமல்லாமல், ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.


இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம். பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும். 

அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும், மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.

இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.

விமானம் பறப்பது எப்படி?



இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.



சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.  

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) 

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே. 

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !


உலகின் மொத்த நீர் வளத்தையும் மனித குலம் நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அதுவும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத அவல‌நிலை இருக்கின்ற வேளையில், இலவசமாக அரிசி வாங்கிச் சாப்பிட்டாலும், குடிப்பதற்கு நீர் விலைக்கு வாங்க நேரிட்ட வேளையில் இன்பத் தேன் வந்து பாய்வதை நம் காது கேட்காமல் போய்விட்டது.

உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.

SODIS (SOlar water DISinfection) என்ற இந்த முறையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சரி இந்த சூரியக் கிருமிநாசினி முறையைப் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.

மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.

இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?


மேலே குறிப்பிட்டவாறு,

1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள். 

2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும். 

3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.

4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.

5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.

இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.

மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.

இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...


மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.

உங்கள் கருத்துக்களை தவறாமல் இட்டுச் செல்லுங்கள்.

மலையாளியொருவர் அலுவலகத்தில் Bittorrent டை பயன்படுத்தியமையினால் தனது பணியை இழந்தார்


டோகா கத்தாரில் உள்ள கம்பனியொன்றில் பணிபுரிந்த மலையாளியொருவர் தனது அலுவலக கணனியில் Bittorrent மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கம் மேற்கொண்ட போது சுமார் 46 கணனிகளுக்கு வைரசைப் பரப்பியதன் விளைவாக அந் நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியது. 

மேலும் எனது நண்பரைத் தொடர்புகொண்டு விளக்கத்தை கேட்டறிந்தபோது அவ்வியாபார நிறுவனத்தின் கணனிகளின் நாளாந்த செயற்பாடுகள் பகிரும் கோப்புகளால் ஆனது அதாவது சேரிங் பயிலிங் சிஸ்ரம் (Data Bank Master Files Sharing System ) மூலமாக ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு கணனிகள் செயற்பட்டதாகவும் அவ்வேளையில் இவர் அட்மினிஸ்ரேசன் பாஸ்வேர்ட்டை ரகசியமாக பெற்றுக்கொண்டு Bittorrent  டை தன் கணனியில் நிறுவி தனது வழமையான தரவிறக்கத்தை மேற்கொண்டபோது வைரஸ் இவரது கணனியிலிருந்து பிற கணனிகளுக்கும் இலகுவாகப் பரவியிருக்கிறது. 

சாதரணமாக மின்னஞ்சல் USB மற்றும் CD க்கள் மூலமாக பரவும் வைரஸ்களை பாதுகாப்பதற்கு நாம் எவ்வளவு அவதானமாக இருக்கவேண்டியிருக்கின்றது ஆனால் இங்கே நெட்வொர்க் கோப்புகள் என்றால் கேட்க்கவா வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்நிறுவனம் சாதாரண கணனியிலிருந்து சர்வர் கணனி வரைக்கும் “Symentec Antivirus” பாதுகாப்பானை நிறுவி அப்டேட்டுடன் கண்காணிக்க்பட்டு வந்திருக்கின்றது. அதையும் மீறி 46 கணனிகளை செயற்பாட்டில் இருந்து முடக்கியிருக்கின்றது .

உன்மையில் நாமும் அலுவலகத்தில் பணிபுரியும் போது அதற்குரிய வரையறைகளை மீறிச்செல்லக் கூடாது இன்றைய கணனி வளர்ச்சியின் வேகத்தில் தினமும் புதுப் புது மென்பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன இவற்றையெல்லாம் எங்களது சொந்தக் கணனியில் பயன்படுத்தலாம் இதனால் எங்கள் கணனிக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதை திருத்துவதற்கு ஒருதொகைப்பணம் மட்டுமே செலவாகும் மாறாக அலுவலகக் கணனியில் நாம் ஏற்படுத்தும் தவறுகளால் எங்களது நன்மதிப்பு மட்டுமல்ல வேலையையும் இழக்கவேண்டிவரும் வேலையை இழந்தால் பாதிக்கப்படுவது நாங்கள் மட்டுமல்ல எங்களை நம்பியிருப்போரும்தான்.

எங்கள் நாட்டில் படித்தபடிப்புக்கு வேலைகிடைப்பது அரிது அப்படித்தான் வேலை கிடைத்தாலும் அதற்குரிய சரியான சம்பளமும்  கிடைப்பதில்லை அதனால்த்தான் வெளிநாடுகளில் வேலை தேடி வருகின்றோம் இங்குதான் நாம் அவதானமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எமக்கென்று உறவுகள் இங்கு யாரும் இல்லை நண்பர்களைக் கூட நாங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திடிரென நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலையை இழக்க நேரிட்டால் மீண்டும் மற்றுமொரு நிறுவனத்தில் வேலை தேடிப்போகும் போது அங்கே பார்க்கப்படுவது எங்களது திறமை மட்டுமல்ல எங்களது நன்நடத்தை எவ்வாறு இருந்தது கடந்த நிறுவனத்தில் வேலை செய்யும்போது என்பதாகும்.

இச்சம்பவம் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒரு வழிகாட்டி உதாரணமாக அமையும் என நம்புகின்றேன்.

விமானத்தின் கறுப்புப்பெட்டி ஓர் ஆச்சரியம்


What is this Black Box? விமானத்தின் கறுப்புப்பெட்டி என்றால் என்ன ? என்ற கேள்வி இந்தியாவில் மங்களூரில் நடந்த விமான விபத்துக்குப் பிறகு பலருக்கிடையே பரபரப்பாக பேசப்பட்டது . ஏனென்றால் 158 பேரின் உயிரைக் காவுகொண்ட அந்த சோகமான விபத்திற்க்கான சரியான காரணத்தை விமானத்தின் கறுப்புப்பெட்டி கிடைக்கப்பெற்றால் மாத்திரமே கூறமுடியும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் ஊடகங்களுக்கு அறிவித்திருந்ததை நாம் யாவரும் அறிந்ததே.

உயரமாக பறக்கும் விமானங்கள் விபத்துக்குள்ளாகும் போது . இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கறுப்புப்பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். 

கறுப்புப்பெட்டியின் தன்மைகள்:- 

கறுப்புப்பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் உண்மையில் கறுப்பு கிடையாது. செம்மஞ்சள் (orange) வண்ணம் கொண்டது.சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்

* தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.

* உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது

* கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.

* ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது

* வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாத பெட்டியும், தகவல் சேமிப்பு நாடாவும் உள்ளன.

பெரிய விமானங்கள் என்றால் இரண்டு கறுப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் விமான விபத்துக்கான காரணத்தை கறுப்புப்பெட்டியின் மூலம் அறிய முடிகிறது

 விபத்திற்க்குள்ளான விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட போது . 


 திறந்தால் இப்படி இருக்கும்


இப்படித்தான்  கறுப்புப்பெட்டி தொழிற்படும் முறை
மேலும் தகவலை ஆங்கிலத்தில் இங்கே சென்று அறியலாம்.

உங்கள் தலைமுடியின் உன்மையான நிறம் !


நமது தலைமுடியின் உன்மையான நிறம் வெள்ளைதான்அதில் மெலனின் என்ற நிறம் கலக்கும்பேது தலைமுடி பல நிறங்களை அடைகிறது. தலை முடியானது சருமத்தின் ரோமக்குழியிலிருந்து தோன்றும் இடத்திலேயே மெலனினும் சேர்ந்துவிடுவதால் முடி கறுப்பாக முளைக்கிறது வயது முதிரும்போது அல்லது  வயதாகி தளரும்போது ரோமக்குழு மெலனின் உற்பத்தியை நிறுத்தி முடியை இயல்பான வெண்மை நிறத்துக்கு விட்டுவிடுகிறது. சிலருக்கு மெலனின் உற்பத்தி சீக்கிரமே சில ரோமக்குழிகளில் குறைந்துவிடுவதால் இளநரை ஏற்படுகிறது. மெலனின் அளவுஅதன் வேதியல் பண்பு ஆகியவற்றுக்கேற்ப ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி நிறம் ஏற்படுகிறது

சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது ?


உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். 


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.



சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

விமானியின் அறையை பார்க்கலாம் வாங்க !


நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது.

எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல் மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை இது.

இருந்தாலும் விமானியின் அறையை பலதிரைப்படங்களில் பார்த்திருப்போம் ரசித்திருப்போம், ஆனால் இப்படி தெளிவாக பார்த்திருக்கமாட்டோம் இதுவரைக்கும் விமானத்தில் பயணிக்காதவருக்கும் மற்றும் பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைகிறது இந்த வினோதமான இணைத்தளம் .
இங்கே சொடுக்கி சுற்றி சுற்றி பெரிதாக்கி ஓட விட்டு பார்த்து மகிழவும்.

சிறுவனை விழுங்கிய முதலை: கொடூரக் காட்சிகள்

இளகிய உள்ளம் கொண்டவர்கள் யாரும்  இதைப் பார்க்கவேண்டாம் !
===========================================

துரதிஷ்டவசமாக  இப்பதிவை எடுத்திருந்தேன் மீண்டும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கினங்க பதிவிட்டுள்ளேன் .


இது ஒரு விழிப்புணர்வு பதிவு 



 24 மணிநேரமும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

உலகத்திலேயே மிகப் பெரிய புகைப்படம்

நாம் புகைப்படக் கருவி கொண்டு ஒரு படம் எடுப்பதிலேயே பல குறைபாடுகளைக் காண்கின்றோம் . இங்கு ஒருவர் உலகத்திலேயே மிகப் பெரிய புகைப்படம் ஒன்றைத் தயாரித்திருக்கின்றார். 

அதன் அளவு 800 மில்லியன் பிக்செல் ஆகும் (762 MP). புகைப்படம் எடுக்க வேண்டிய இடத்தை 300 பகுதிகளாகப் பிரித்து மொத்தம் 1200 புகைப்படங்களைக் கோர்த்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றார் இவர். அனைத்துப் படங்களும் Nikon D3 புகைப்படக் கருவி, 50 mm ஆடி f5.6 எண் வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும்.

ஒவ்வொரு படத்தின் exposureம் அதாவது படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து படம் எடுத்து முடிக்கும் வரை கண்சிமிட்டாமல் ஆடி திறந்திருக்கும் நேரம் 6 நிமிடங்கள் ஆகும்!

இவரால் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நமது கண்ணுக்குத் தெரியும் மொத்த வானம்! வானத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துப் படம் எடுத்துப் பின் கோர்ப்பது என்பது ஒரு மிகப் பெரிய பணி.

2008 முதல் 2009 வரை என கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் இப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

ஆறு நிமிடத் திறப்பு என்றால் புவியின் சுழற்சி காரணமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களும் நகர்வதால் ஒரு பெரிய கோடு தான் காணக் கிடைக்கும். ஆனால் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்காகவே, புவி சுழலும் வேகத்துக்குத் தகுந்தவாறு தனது புகைப்படக் கருவியும் சுழல்வதற்குகென்று ஒரு கருவியை (small equatorial mount) புவியின் சுழல்திசைக்கு எதிர்திசையில் சுழலுமாறு நிறுவி எப்போதும் ஒரே இடத்தையே 6 நிமிடமும் கண் சிமிட்டாமல் பார்த்துப் படம் பிடிக்குமாறு உருவாக்கியிருக்கின்றார். 



இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடங்கள் மூன்று.
ஏனெனில் இங்கே தான் வருடத்தின் 11 மாதங்களுக்கு ஒளி மாசுபாடு (light pollution) இல்லாத இருண்ட வானம் காணக் கிடைக்கின்றது. இங்கே தான் European Southern Observatory நிறுவியுள்ள மிகப் பெரிய தொலைநோக்கிகளும் இருக்கின்றன. Atacama பாலையிலுள்ள Chile, La Silla மற்றும் Cerro Paranal ஆகிய மூன்று இடங்களிலிருந்து இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சூரியன் மற்றும் சந்திரன் இல்லாத போது தான் மிக இருண்ட வானம் கண்ணுக்குக் கிடைக்கும். எனவே அப்படியான நாட்களை/நேரங்களைத் தேர்ந்தெடுத்துத் தான் படம் எடுக்க வேண்டும். மேக மூட்டமும் இருக்கக் கூடாது. வானில் தெரியும் நட்சத்திரங்களிடையே இருக்கும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு முந்தைய நாள் எடுத்த இடத்தையும் நினைவு கொண்டு அடுத்த படம் எடுத்திருக்கின்றார் என்பது ஆச்சரியப்படத் தக்க விஷயமாகும்.

முதன் முதலில் எடுத்த படம் Canopus என்னும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு பாகத்தையும் 4 படங்கள் எடுத்து அதில் சிறந்ததைக் கொண்டு தொகுத்திருக்கின்றார். 

மொத்தம் 120 மணி நேரங்கள் தான் புகைப்படக் கருவியின் அருகே இருந்து விழித்திருக்கின்றார் என்றாலும், அதற்கான ஆயத்தங்கள் தான் எத்தனை? முழுக்க முழுக்க இரவிலேயே இந்தப் பணி நிகழ்ந்திருக்கின்றது.

இது இரவில் என்றால் பகலில் இத்தனை படங்களையும் தொகுக்கும் பணியில் இவரது நண்பர் ஈடுபட்டிருந்திருக்கின்றார். மொத்தம் 15000 மில்லியன் பிக்செல் கொண்ட படங்களில் இருந்து இந்த ஒரே ஒரு 800 மில்லியன் பிக்செல் படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 40000 x 20000 பிக்செல் அளவு கொண்ட இப்படத்தின் அளவு 4.42 GB ஆகும்! 

இது வரை அகண்ட வானை புவியிலிருக்கும் தொலைநோக்கி கொண்டு இத்தனை துல்லியமாக, இத்தனை பெரியதாக யாரும் படம் எடுத்ததில்லை என்பதோடு இன்றைய தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்தி நேர்த்தியாக உருவாக்கியிருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை.

முதல் படம் பால்வெளி வீதியை மையமாகக் கொண்டு மொத்த வானையும் எடுக்கப்பட்ட 360 டிகிரி நீள்படம் ஆகும். இந்தப் படத்தின் மூலம் நமது உடுமண்டலம் சுருள் உடுமண்டலம் என்பதும், மையத்தில் உப்பி இருப்பதும் எளிதாக உணர முடிகின்றது. நமது பால்வெளி வீதியில் 150000 மில்லியன் நட்சத்திரங்கள் (!) இருந்தாலும் நாம் இருக்கும் பகுதியிலிருந்து இந்தப் படம் மூலம் நமக்குத் தெரிவது என்னவோ 0.0001% மட்டுமே! 

இந்தப் படம் எடுத்தவரின் கண்ணோட்டத்தில், அவர் வியப்பது இந்தப் படத்தில் தெரியும் புள்ளிகளாகக் காணப்படும் நட்சத்திரங்கள் அல்லவாம்! கண்ணுக்குத் தெரியாமல் இந்நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் எத்தனை இருக்கும்?! என்று தான் வியக்கின்றார் இவர். குத்துமதிப்பாகக் கணக்குப் பார்த்தாலும் நமது பால்வெளி வீதியிலேயே 1000 பில்லியன் உலகங்கள் இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் படத்தின் தீம் எனப்படும் தலைப்பு. அதாவது "One thousand billions worlds"

இதோ இவர்தான்  புகைப்படம் எடுத்த Serge Brunier என்பவர்  (படத்தின் மீது அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கவும்)

இவர் புகைப்படங்களைத் தொகுக்க உதவியவர் Frédéric Tapissier


புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. 


காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் 
  
மேலும் இந்த புகைப்படங்களையும் video வையும்    இங்கு சென்று பொறுமையோடு பாருங்கள் படத்தின் ஒவ்வொரு அசைவும் மிக தெளிவாகத் தெரியும் .