Thursday, June 9, 2011

மனைவியை காதலியுங்கள்

Couple
பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சாமர்த்தியசாலியா நீங்கள்

அதிகம் சம்பாதிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாமர்தியசாலியாய் நடந்து கொள்பவர்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்ணின் உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் ஆண்களைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


பெருந்தன்மை தேவை:

ஆண்களைப் போல பெண்களுக்கும் உடலாலும், மனதாலும் சமபலம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களையே பெண்கள் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு நடத்த வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு.

கை நீட்டும் ஆண்கள்:

கணவராக வருபவர் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என பல பெண்கள் விரும்புகின்றனர். பெண் மீது நம்பகத்தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, உடல் ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு வற்புறுத்தி அழைக்கக்கூடாது.

தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தினரை பெண்கள் அறவே வெறுக்கிறார்கள். அத்துடன் தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

மனதை ஆளும் ராஜா:

குடும்ப வாழ்க்கையைப் பற்றி தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலி ஆண்களை பெண்கள் மனதில் வைத்து கொண்டாடுவார்கள். அவர்கள் மீது அளவில்லா நேசம் காட்டுவார்கள்.

காதலிக்கும் போது கலகலப்பாக இருக்கும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த உடன் சிரிப்பை மறந்து விடுகின்றனர். இதில்தான் பெண்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எந்த குணத்தை விரும்பி காதலித்து திருமணம் செய்தார்களோ, அது மறைந்து போன உடன் வாழ்க்கையில் பிடிமானம் விட்டுப்போகிறது. எனவே சிடு சிடு என்று இல்லாமல் கலகலப்பாக இருங்கள்.அத்தகையவர்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களைத்யும் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மனைவியை எப்போதும் காதலியாகவே நினைக்கும் ஆண்களே அதிகம் விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ அதே போன்று திருமணத்திற்குப் பின்னரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள் ஒரு காதலனாய் மாறி அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள். ஆகவே உங்கள் மனைவியை மதித்து காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

கருணாநிதியை விமர்சித்ததை தவிர்த்திருக்கலாமே ஜெயலலிதா

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்ததை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்;தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.பொது எதிரியான போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.

மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்கவில்லை என்ற ஆராய்ச்சியிலா இறங்குவது?மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறு மொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே!மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகிவிடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சியினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதலமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை. இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் உதவும்; மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு செய்யுமா மத்திய அரசு? என்று கேட்டுள்ளார் வீரமணி.'முன்னேற்றம் ஏற்படாது'இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும்.இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார் அவர்.

விமான விபத்தை தடுக்க சாப்ட்வேர், இந்திய விமான படை கண்டுபிடிப்பு




விமான விபத்துக்கள் ஏற்படும் காரணிகளை முன்கூட்டியே அறிந்து அதன்மூலம் விமானங்களை ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்கானபுதிய சாப்ட் வேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படை பிரிவைச் சேர்ந்த குழுவினர் இதற்கான சாப்ட்வேரை தயாரித்துள்ளனர். ஏர்மார்ஷல் ஏ.எஸ்.கார்னிக் ( ஆய்வு மற்றும் பாதுகாப்பு ) தலைமையிலான குழுவினர் இத்தகைய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். 
கடந்த 30 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு கணித்தின் மூலம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாப்ட் வேரை வெளியிட்டு பேசிய இந்திய விமானப்படையினர் இதன்மூலம் விமான விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 தமிழில்


மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில், மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க,http://windows.microsoft.com/enUS/internetexplorer/downloads/ie9/worldwidelanguages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

கூகுள் மொபைல் மணிபர்ஸ்




சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது. 
முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும். 

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம். 

கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம். 
பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும். 

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.

நோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள்


நீங்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்துபவரா ? தொடர்ந்து படியுங்கள் , இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

நோக்கியா செல்போன் பற்றி சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் நம்முடைய அலைபேசியை வாங்கும்போதோ, விற்கும்போதோ இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.



உங்கள் செல்போனில் இருந்து *#06# – டயல் செய்தால் உங்கள் செல்போன் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEI எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பின்பு இந்த தளம் சென்று உங்கள் செல்போன் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.



1). Information you get from the IMEI-

XXXXXX XX XXXXXX X

TAC FAC SNR SP

TAC = Type approval code

FAC = Final assembly code

SNR = Serial number

SP = Spare

மேலும் உங்கள் செல்போனில் இருந்து,

2.) *#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1ST Line = Software revision

2ND Line = The date of the software release

3RD Line = Phone type

3.) *#7780# - Factory settings Restore செய்ய.

4.) *#92702689# or [*#war0anty#] -டயல் செய்து கீழே உள்ளவற்றைதெரிந்துகொள்ளலாம்.

Serial number (IMEI)

Production date (MM/YY)

Purchase date (MM/YY) You can only enter the date once.

Date of last repair (0000=No repair)

Transfer user data to another Nokia phone via Infra-Red

5.) Default security code is 12345

6.) *#2820# Bluetooth device address.