Sunday, April 17, 2011

ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்


கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார்.
ரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.
கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் உருவாகி வருகின்றன. நாம் உருவாக்கும் பைல்களின் (முப்பரி மாண காட்சிகள், ஆன்லை னில் விளையாட்டுக்கள், அதிவேக நிதி பரிமாற்றங்கள் என) அளவும் அதிகமாகி வருகிறது.
இதனால் பைல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் மக்கள் வேகத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த வளர்ச்சி ஏற்படுகையில், இன்டர்நெட் வேகமாகச் செயல்பட வில்லை என்றால், பல இடங்களில் இது முடங்கி நிற்கும் நிலை ஏற்படும். எனவே இதற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வு ஆப்டிகல் பைபர்களில் தான் அடங்கியுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

இப்போதும் இன்டர்நெட் போக்குவரத்தில் ஆப்டிகல் பைபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அதிக தொலைவு உள்ள தூரங்களில், கண்டம் விட்டு கண்டம் செல்லும் இடங்களில் கூட, பயன்படுத்தப் படுகின்றன. இவை எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் தகவல்களைக் கையாளும் விதத்தைக் காட்டிலும், அதிகத் திறனுடன் கையாள்கின்றன.
ஆனால் ஆப்டிகல் சிக்னல்களைக் கையாள்வது சற்று சிக்கலான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ரௌட்டர் தனக்கு வெவ்வேறு திசைகளிலிருந்து ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்றுக் கையாள்கையில், சிக்கல்களைப் பெறுகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இன்டர்நெட்டில் உள்ள ரௌட்டர்கள், ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்று, அவற்றை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன.
இதன் மூலம் அவற்றைக் கையாளும் நேரம் வரும்வரை, அந்த சிக்னல்கள் மெமரியில் பத்திரமாக வைக்கப் படுகின்றன. பின்னர் அனுப்பபடும் நிலை வருகையில், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் மீண்டும் ஆப்டிகல் சிக்னல்களாக மாற்றி அனுப்பப்படுகின்றன.
இந்த செயல்பாட்டில் நேரமும் திறனும் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வின்சென்ட் சான் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சியாளர் குழு இந்த மாறுதலுக்கான தேவையை நீக்கும் தீர்வைக் கண்டறிந்துள்ளது.
இந்த விஞ்ஞானிகள் குழு “flow switching” என்ற வழிமுறையை இதற்கென உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் நெட்வொர்க்குகளுக்கிடையே அதிக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகையில், எடுத்துக்காட்டாக மதுரையில் உள்ள ஒரு சர்வர் அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வருக்குப் பெரிய அளவில் டேட்டாவினை அனுப்புகையில், இதற்கு மட்டும் எனச் சில வழி செயல்முறைகளை அமைத்துக் கொள்கிறது.
இந்த வழிமுறைகளில் செயல்படுகையில், ஒரு வழியில் கிடைக்கும் சிக்னல்களை மட்டுமே ரௌட்டர்கள் பெற்று, இன்னொரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அனுப்புகிறது. பல்வேறு திசை களிலிருந்து ஆப்டிகல் சிக்னல்கள் வரும் வாய்ப்பு இல்லை என்பதால், இவற்றை எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றி மெமரியில் வைத்திடும் கட்டாயத் தேவை இங்கு ஏற்படாது.
இதனால் இன்டர்நெட் போக்குவரத்து வேகம் 100 மடங்கு பெருகும். அந்நிலை ஏற்படுகையில் இன்டர் நெட் பயன்பாடு பல திசைகளில் வெகு வேகமாக விரிவடையும். இது மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு முன் இந்த ஆராய்ச்சியில் பல நிலைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது.

முதல் நாளிலேயே அது வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.



முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.


குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.

அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.

செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.

அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.

அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்
சரிதான்

செல்போன் வைப்ரேஷனால் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்


செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.

உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.

அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது. 

செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.

தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

நமக்கு கால் செய்கிறவர் எந்த ஊரிலுள்ளார் என்று கண்டுபிடிக்கும் மொபைல் மென்பொருள்



புதிதாக ஒரு மொபைல் மென்பொருள் வந்துள்ளது. அதாவது நம்மைத் தொடர்பு கொள்ளும் நபருடைய மொபைல் நம்பரின் முதல் நான்கு இலக்கங்களை டைப் செய்தால் அந்த எண் எங்கிருந்து அழைக்கப்பட்டது என்று ஒரு நொடியில் கண்டுபிடிக்கலாம்.

இதற்கு நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. கீழே இருக்கும் மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதும், 

தரவிறக்க சுட்டி 

உங்கள் மொபைலில் இலவசமாக NEWS PAPER படிக்கலாம்



தினமலர், தினமணி, ஒன் இந்தியா போன்ற தமிழ் பத்திரிகைகளை நம் மொபைலில் இருந்து பார்க்கலாம். அதுவும் இலவசமாக. 

NEWS HUNT என்னும் மொபைல் மென்பொருள் மூலமாக நாம் தினமும் வாசிக்கும் அன்றாட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற அணைத்து பத்திரிகைகளையும் இந்த மென்பொருளால் இனம் காண முடியும்
.

உங்களுக்கும் வேண்டுமா CLICK 

லேப்டாப் போல மொபைலிலும் பாட்டரி மீட்டர் (BATTERY METER) வேண்டுமா?


     உங்கள் மொபைல் பேட்டரி பற்றிய தகவல்கள் அறிய ஒரு மென்பொருள் உள்ளது. 

    இதன் மூலம் லாப்டோப்பின் கீழே காணப்படுவது போல மொபைல் மேட்டரி எத்தனை நாள் தாங்கும், இனி எப்போது ரீசார்ஜ் செய்யவேண்டும் போன்ற அனைத்து தகவல்களும் அதில் காணப்படும்.

  இந்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இதை முயற்சித்து பார்க்கலாம்.

  தரவிறக்க சுட்டி 

குழந்தைகள் அழுதால் அறிவிக்கும் புதிய மொபைல் மென்பொருள்


  
     குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன அழும்போது.... குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால் வந்து விடும். 

   இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD . முதலில் இதை நம்முடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து விட்டு பின்னர் நம்முடைய இன்னொரு போனுடைய நம்பரையும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.

    இதில் ஏதாவது சந்தேகம் இருந்தான் என்னிடம் கேளுங்கள். விளக்குகிறேன். 

    இனி என்ன? மென்பொருள் தானே? இதோ...

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?


மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.

இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



                                                         Download


226 பெண்களின் கர்ப்பப் பையை அகற்றி அறுவை சிகிச்சை




சாதாரண வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த 226 பெண்களின் கர்ப்பப் பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்த 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது.


ராஜஸ்தான் மாநிலம் டவுசா பகுதியில் உள்ள சில மருத்துவமனைகள் மீது புகார் வந்தது. அங்குள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும் பெண்களுக்கு தேவையே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப் பையை அகற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.


அந்த புகாரில் பண்டிகுய் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த அவலம் நடைபெறுவதாக கூறப்பட்டது.


கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் சிகிச்சைக்கு சென்ற 385 பெண்களில் 226 பெண்களுக்கு கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருக்கிறது. 




இந்த தகவல்களை அரசின் கவனத்துக்கு தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் துர்கா பிரசாத் கொண்டு சென்றார்.



எனவே, ராஜஸ்தான் மாநில அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. புகாருக்கு உள்ளான 5 மருத்துவமனைகளில் சோதனை நடத்தி நோயாளிகள் பற்றிய ஆவணங்களை கைப்பற்றியது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் 3 மருத்துவமனைகளின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.


மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக டவுசா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ஓ.பி.மீனா தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அரசு நியமித்துள்ளது. ஆவணங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படுகின்றன.


பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "எனக்கு பல நாளாக வயிற்று வலி இருந்தது. சிகிச்சைக்கு சென்றபோது, கர்ப்பப் பையை அகற்றினார்கள். ஆனாலும், வலி தொடர்ந்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர் சென்று சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது தான், வயிற்று வலிக்கு வேறு காரணம் என்றும் தவறுதலாக கர்ப்பப் பை அகற்றப்பட்டதையும் அறிந்தேன்'' என்றார்.


இதற்கிடையே, குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்துள்ளன. தேவையில்லாமல் கர்ப்பப் பையை அகற்றுவதில்லை என டாக்டர்களும் நிர்வாகங்களும் தெரிவித்தன.


புகாருக்கு ஆளான தனியார் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தாகத் கூறுகையில், "சிகிச்சைக்கு வரும் பெண்களில் 90 முதல் 95 சதவீதம் பேருக்கு கர்ப்பப் பையை அகற்றியதாக எங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், 20 முதல் 25 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப் பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது