உங்கள் பாதங்களில் வெடிப்புகள் இருக்கின்றதா எனப்பாருங்கள். உங்கள் உள்ளங்காலினை ஒரு கண்ணாடியைப் பாவித்து வழமைக்கு மாறாக ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது வீக்கங்கள் தென்படுகிறாதா என்று கவனியுங்கள். கிருமிகள் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் கால் நகங்களை பாதுகாப்பான சுத்தமான மற்றும் கூர்மையான நகம் வெட்டியைக் கொண்டு வெட்டுங்கள்.
பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அன்றாடப் பாதப் பராமரிப்பு பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உங்கள் பாதங்களுக்கு பெடிகியூர் மற்றும் சரியான காலணி போன்றவை தேவைப்படுகிறது.
இதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சுளுக்குகள், பங்கல் இன்பெக்ஷன், கீழ்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக நீங்கள் கீழ்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் அடிக்கடி காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பழைய செல்களை அகற்றி புது வளர்ச்சியை ஊக்குவிக்க ஸ்க்ரப் கொண்டு பாதங்களை மெருகூட்டுங்கள். புதுத் தோல் ஆரோக்கியமானது மட்டுமல்ல கையாள்வதற்கும் எளிதானது. உள்ளங்காலின் கடினத் தோல் பகுதியை ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் வரையில் நீரில் வைத்திருந்து மிருதுவாக தேய்த்து இறந்த தோலை அகற்றுங்கள்.
குளித்த பின்னர் பாதங்களுக்கு லோஷன் தடவுங்கள். அது உங்கள் பாதத்தின் ஈரலிப்புத் தன்மையைப் பாதுகாக்கும். ளுPகு 30 கலந்த மொய்சரைசரினை கோடைகாலங்களில் பாவியுங்கள். இது அதிக வெப்பத்தினால் தோல் எரிவு ஏற்படுவதைத் தடுக்க உதவும். அமரும்போது பாதங்களை மேல்நோக்கி வைத்திருப்பதால் இரத்த சுழற்சி சீராகும். நடக்கும் போது ஷூக்களைப் பாவியுங்கள். இதன் மூலம் உங்கள் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
|