Thursday, November 17, 2011

திருடிய நகைகளை பாவாடைக்குள் ஒளித்து வைத்த கில்லாடிப் பெண்!


கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார். 

திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.




குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே….

தூக்கில் போட்டால் தற்கொலை செய்வேன் - பெண்ணின் தீரச்செயல்

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27) என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.

மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு


குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார். ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: 


பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.மது குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.

கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும்.

கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்
.

FACEBOOK ACCOUNT ஐ HACK செய்து உள்ளே நுழைந்து - அடுத்த வைரசா?


FACEBOOK இல் யாரோ ஒருவர் என்னுடைய போட்டோக்களை வைத்து அசிங்கம் அசிங்கமாக EDIT செய்து அதை மற்ற நண்பர்கள் பார்க்கும் படி செய்கிறார். இதனால் எனக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது ஆகவே அந்த நபரின் FACE BOOK Account ஐ HACK பண்ணும் வழிமுறைகளை தயவு செய்து எனக்கு கூறவும் .

எனக்கு Facebook account ஐ HACK செய்வது பற்றி எதுவும் தெரியாது என்பதை முதலில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன் நண்பரே!

உங்களுக்காக Google இல் தேடி பார்த்தேன் ஒரு தளம் கிடைத்தது, அவர்கள் எப்படி Facebook account ஐ Hack செய்வது என்று சொல்லி இருந்தார்கள் வீடியோ மூலம்...அப்படியே அதிர்ச்சி அடைந்து விட்டேன்....நம்மலும் மற்றவர் FB கணக்கை திருடுவோம் என்று . ஆவலுடன் அவசர அவசரமாக அந்த தளத்தில் ஒரு கணக்கு திறந்து நண்பர்களுடைய Facebook ID ஐ கொடுத்து தேடினேன் எல்லா வேலைகளும் முடிந்தது. Password உம் கிடைத்தது encrypt செய்த நிலையில் அதை decrypted செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று சொன்னார்கள்...போங்கடா நீங்களும் உங்கட சேவை என்றும் உதாசீனம் செய்து விட்டு வந்தேன். காரணம் இது உண்மையா? பொய்யா? இவர்கள் பணத்துக்காக பந்தா காட்டுகிறார்களா? என்று தெரியவில்லை தள முகவரி இதோ...http://learntohackv3.com

பேஸ்புக்கில் உங்கள் போட்டோ ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வந்தால் என்ன செய்வது?

யார் அதனை செய்தார்களோ அவர்களுக்கு ஒரு எச்சரிச்கை செய்து, அந்த போட்டவை அழித்துவிடச் சொல்லுங்கள்.அந்த நபர் உங்களுக்கு தெரியாவிட்டடால் அல்லது எச்சரிக்கை செய்தும் அந்த நபர் போட்டோவை நீக்கா விட்டால் உடனே அதனை பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள்.எப்படி செய்வது என்று பார்ப்போம்.குறித்த போட்டோவை திறந்து கொண்டு "Report this photo"




அல்லது போட்டோவிற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக் செய்து

அந்த போட்டோ எந்த மாதிரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.






எனக்கு இந்த முறை மட்டும்தான் தெரியும்....உங்களுக்கு வேறு ஏதேனும் முறை தெரியுமா?

தன்னினச் சேர்க்கையாளருக்கு சித்திரவதை – மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி வீடியோ!


தன்னினச் சேர்க்கையாளர் என்கிற காரணத்தால் ஐவரி கோஸ் நாட்டில் பொதுமக்களால் ஆண் ஒருவர் அண்மைய மாதங்களில் சித்திரவதை செய்யப்பட்டு உள்ளார். இக்காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 ஐவரி கோஸில் தன்னினச் சேர்க்கையாளர்களால் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு இவ்வீடியோ தக்க சான்று என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் சீறுகின்றன.

14 வயது சிறுவனுடன் தகாத உறவுகொண்ட பெண்ணுக்கு கொடுத்த தண்டனை!


பதினாலு வயது சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவருக்கு 7 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீ ஜென்கின்ஸ் என்ற பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் விளையாடப்படும் ‘வேர்ல்ட் ஒவ் வோர்கிராப்ட்’ எனும் விளையாட்டின் ஊடாக குறித்த சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்திய மேற்படி பெண், படிப்படியாக அவனுடனான உறவை வளர்த்துக்கொண்டு சென்றுள்ளார்.


அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, காரொன்றினுள் வைத்து குறித்த சிறுவனுடன் பாலியல் உறவுக்கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜென்கின்ஸ் சிறுவர் பாலியல் படங்களை பெற்றுக்கொண்ட குற்றசாட்டையும் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றில் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அவருக்கு 87 மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க்கை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 4,480 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசிக்கு வெளிமாநில தொலைபேசி இலக்கத்திலிருந்து ஏராளமான அழைப்புகள் வந்தபோது சிறுவனின் பெற்றோர் அவதானிக்க தொடங்கினர். விசாரணையின்போது ஜென்கின்ஸின் தொலைபேசி இலக்கத்திற்கு அவரின் கோரிக்கையின் பேரில் அச்சிறுவன் அனுப்பிய பாலியல் படங்களையும் புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

சிறுவனின் தொலைபேசியை அவனின் பெற்றோர் துண்டித்தனர். ஆனாலும் ஜென்கின்ஸ் வேறு வழிகளில் தொடர்புகொண்டதுடன் அவனுக்காக புதிய தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்திருந்தார். ஜென்கின்ஸை உளவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் ஆடைகளை அவிழ்க்கும் யுவதிகள்!! (படங்கள் இணைப்பு)


சீன நாட்டு இளம் யுவதிகள் மத்தியில் மிக வித்தியாசமான பேஷன் ஒன்று அதிவேகமாக பரவி வருகின்றது. பொதுப் பயணங்களின்போது பகிரங்கமாக ஆடைகளை களைந்து மாற்று ஆடைகளை உடுக்கின்றமையே இவர்களின் புதிய பேஷன். இணையங்களின் செல்வாக்கே இதற்கு காரணம் ஆகும். இணையங்கள் மூலம் குறுகிய நாட்களில் அதிக பிரசித்தியைப் பெறுகின்றமைக்காகவே இவ்விதம் நடக்கின்றனர்.




"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்


“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.


ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, “குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’ என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,


கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல பேர் முன்னிலையில் செக்ஸ் – விசித்திரமான நகரம் (வீடியோ இணைப்பு


தாம்பத்தியம் என்பது புனிதமான ஒன்று. கணவன் – மனைவியரின் அந்தரகமான விடயமாக இதனை பார்க்க படுகின்றது. ஆனால் மாறி வரும் இன்றைய கலாச்சார மாற்றத்தினால் பாலியல் உறவுமுறைகள் பல கோணங்களை எட்டிச் செல்கின்றது. அந்தவகையில் அவுஸ்திரேலியாவில் பல தம்பதியினர் பட்டப் பகலில் தொடர் மாடிகளின் balcony களில் தமது செக்ஸ் நடவடிக்கைகளை வைத்துள்ளனர்.



இதனை பல பேர் வேடிக்கையும் பார்க்க முடிகின்றது. கடந்த ஆண்டு 10000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் போது வெளிச்சமான இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ள தாம் விரும்புவதாக தெரிவித்தனர். கடற்கரை, அலுவலகம் மற்றும் குளியலறைகளில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபவது பிரியம் என தெரிவித்துள்ளனர்.


பேஸ்புக்கில் வைரஸ் - எச்சரிக்கை


சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது. பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம், தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.
பெங்களூரில், 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து, எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு (Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.

இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.

இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.

இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகெங்கிலும் இருந்து, சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள்.

எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்

ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ, அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம், பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்.இவ்வாறு பேஸ்புக் அறிவுறுத்தியுள்ளது.

‘குளிப்பது’ எப்படி?-’டெமோ’ காட்டும் நடிகை (வீடியோ இணைப்பு)


சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.


இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.
ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.

செக்ஸ் வைத்துக் கொள்ளும் பேய்கள்! (வீடியோ இணைப்பு)


இந்த வியக்க வைக்கும் படம் உண்மையாகவே பேயாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. குறித்த படம் Dianne Carlisle’s என்பவரின் பேத்தியினால் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒகியோவைச் சேர்ந்த பேத்தி கருத்து தெரிவிக்கையில், எங்களது வரவேற்பறையில் பேய்கள் உடலுறவு கொள்வதை நான் நேரில் பார்த்தேன். நீங்களும் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். அப்போது பெண்கள் அணியும் குதி உயர்ந்த உயர் காலணியையும் பார்க்க முடிந்தது.


நான் இப்படி ஒரு காட்சியை இதற்கு முன்னர் பார்த்து இருக்கவில்லை. உடலுறவு கொள்ளும் அளவுக்கு பேய்கள் உணர்வுகளைக் கொண்டு உள்ளமை தான் ஆச்சரியமாக உள்ளது.

16 வயது மகளை பெல்டால் அடித்த நீதிபதி! (வீடியோ இணைப்பு)


தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக்கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை.


தன்னை மதிக்காமல் கொம்பியூட்டரில் உட்கார்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியுள்ளார்.

அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதியான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம்ஸிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

ஊருக்கே தீர்ப்புச் சொல்லும் ஒருவர் தனது சொந்த மக்கள் மீது இவ்வாறு மிருகத் தனமாக நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மகள் குறித்த வீடியோவை Youtube இல் பதிவேற்றம் செய்த பின்னர் ஏராளமானோர் குறித்த வீடியோவைப் பார்த்துள்ளார்கள். வீடியோவை வெளியிட்டமைக்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் சொல்லும் காரணங்களும் பதிவாகியுள்ளது. இண்டர்நெட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அப்பாவுக்கு தெரிய வேண்டும் என்கிறார் இவர்.

நான் அவளை ஒழுக்கமான பிள்ளையாக வளர்க்கவே விரும்பினேன் என்கிறார் அப்பா. இச் செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அப்பாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அப்பா நடந்து கொண்ட விதம் சரியானது என்று 75 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


அங்கு கேட்கப்பட்ட கேள்வி இது தான். நீதிபதியான அப்பா மகள் மேல் இப்படியாக தாக்குதல் நடாத்தியது சரியா?

பேஸ்புக் பயன்படுத்தும் ஆண்களே உஷார் -கவனிக்க


பேஸ் புக் இணையதளம் மூலம், "ஜொள்ளு' பார்ட்டிகளை நூதனமாக ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, விநாயகம் என்பவரின் மகள் பிரியதர்ஷினி,25.பட்டதாரி பெண்.இவர், பேஸ்புக் இணையதளத்தின் மூலம், ஆண்களை மயக்கி, தன் வலையில் விழ வைப்பதில் கைதேர்ந்தவர். ஆடம்பரமாக வாழ நினைத்த பிரியதர்ஷினி, ஆண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

கே.கே. நகர்,பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகேஷ், சாய்ராம், யாசர்அராபத், விஜய், சுபேந்தர் ஆகியோரிடம் பழகிய பிரியதர்ஷினி,வெவ்வேறு பெண்களின் போட்டோக்களைக் காட்டி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் பரிசுப் பொருட்களாக, 40 லட்ச ரூபாய் கறந்துவிட்டார். அதில் உஷாரான, கே.கே. நகரைச் சேர்ந்த மகேஷ், பிரியதர்ஷினியை நேரில் பார்க்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரின் பேச்சு நடவடிக்கை சந்தேகம் அளிக்கவே, ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், போலீசில் புகார் செய்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின்படி, பெரவள்ளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டு, பிரியதர்ஷினியை கைது செய்தனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, சுமாரான தோற்றம் உடையவர்; மற்ற பெண்கள் போல் ஆண் நண்பர்கள் கிடைக்கவில்லை, உல்லாசமாக வெளியிடங்களுக்குச் செல்லமுடியவில்லை என்ற ஆதங்கம், இருந்து வந்துள்ளது. இதனால், அவர் பேஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்தி, ஆண்களை ஏமாற்றத் திட்டமிட்டார்.அவர் விரித்த வலையில் சிக்கியவர்களிடம், பணம் மற்றும் பரிசுப் பொருட்களாக, பல லட்சம் மோசடி செய்துள்ளார்.இது தொடர்பாக, ஓட்டேரி போலீசார் பிரியதர்ஷினியை கைது செய்து, அவர் மீது ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்த குற்றப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.