Saturday, July 9, 2011

தலைவா.. சீக்கிரம் குணமடைந்து வா...ஒரு ரசிகனின் வேண்டுகோள்

இது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.
 
. 

          தலைவா ..
  1. 'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது
  2. மருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது .
  3. உங்களது மனைவி "எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது. 
  4. நீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.
  5. நீங்கள் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே!
  6. உங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.
  7. உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!
          நீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...

பாம்பின் கால் பாம்பறியும்

95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது. முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது. இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.

இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன. ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன. இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.

அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.

இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார். Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம். அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

பிடிஎப் கோப்புகளை சேர்க்க, பிரிக்க புதிய மென்பொருள்

பிடிஎப் கோப்புகளை மாற்றம் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை மாற்றம் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன.


ஆனால் பிடிஎப் கோப்புக்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் கோப்புக்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் கோப்புக்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் கோப்பை தேர்வு செய்யது இணைத்துக் கொள்ளவும்.பிடிஎப் கோப்பை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் கோப்புக்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ள முடியும். வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தனித்தனியாகவும் பிரித்துக் கொள்ள முடியும்.ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் கோப்பை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.

கூகுள் பிளஸ், Vs பேஸ்புக் கிரெடிட்: தொடரும் போட்டி!

சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக ‘பேஸ்புக் கிரெடிட்ஸ்’ என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, அமலுக்கு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் தொடர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
 
இந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’ என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது ‘கூகுள் பிளஸ்’ என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் ‘தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)’ சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்


நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும். அத்ற்க்கு தேவையான


மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும். அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி வாங்கியும்

இருக்கின்றோம். அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக. இந்த மென்பொருளின் பெயர் Free Studio. இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன‌.



தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள்.  அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய இங்கு செல்லுங்கள்.

கோயிலுக்குள் விபச்சாரம்: 2 பெண்களும் பூசாரியும் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அ.அம்மாபட்டி காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது.

 

இங்கு கள்ளப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர் பூசாரியாக உள்ளார். கோயிலில் பவுர்ணமி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தண்டபாணி கோயில் அறையை விபசாரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார். கோயிலில் மாலை நேரங்களில் சந்தேகத்துக்கிடமாக பெண்கள், ஆண்கள் வந்து செல்வது பற்றி குடிமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது.

எஸ்ஐ செல்வம் தலைமையில், போலீசார் நேற்று மாலை கோயில் பகுதியில் மறைவாக இருந்து கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அங்கு வந்தனர். தண்டபாணியிடம் சென்று பேசினர். பின்னர் அவர் கோயில் அருகே உள்ள அறையின் கதவை திறந்து விட்டார். அதற்குள் நால்வரும் சென்றனர். உடனடியாக போலீசார் அறையை நோக்கி சென்றனர். இதை பார்த்த பூசாரி தண்டபாணி, அறையில் இருந்தவர்களை உஷார்படுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அறைக்குள் இருந்து வெளியேறிய 4 பேரும் தப்பி ஓடினர்.

போலீசார் விரட்டி சென்றதில், பூசாரி தண்டபாணியும், 2 அழகிகளும் சிக்கினர்.
பெண்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் உடுமலை கொல்லம்பட்டறையை சேர்ந்த சரஸ்வதி (36), மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களையும், தண்டபாணியையும் போலீசார் கைது செய்தனர்

ஆப்பிள் நிறுவனத்தையும் குறி வைத்து விட்டார்கள் இணைய திருடர்கள்

அநாமதேய இணையத் திருடர் குழு ஒன்று அப்பிளின் நிறுவனத்தின் ஒரு சேவரைத் திருடி அதனை நிரூபிக்க பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை டுவீட்டரில் பதியவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய திருடர்களின் இலக்குகளில் அப்பிள் நிறுவனமும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதியுயர் ப்ரொபைல்களின் பொது ஸ்தாபனமான அப்பிளிற்கு இது பாரிய சேதங்களை ஏற்படுத்தும் என்ற விதத்தில் அதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

 
 
இதேவேளை லெபனானைச் சேர்ந்த இணையத் திருடரான இடாக் அப்பிள் சேவரில் SQL ஏதுநிலை இருப்பதைக் கண்டறிந்ததாக டுவீட்டர் மூலம் தெரியப்படுத்தினார். இந்நிலையில் Apple Consultants Network server இனை வெற்றிகரமாகத் தான் தாக்கியிருப்பதாக அந்த அநாமதேய இணையத் திருடர் தெரிவித்துள்ளார். இது பற்றி அப்பிளின் பேச்சாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொண்டபோது அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.




விண்டோஸை லினக்ஸ் பின்னுக்கு தள்ளிவிட்டது.

லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 
வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.

லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது. லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை. புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை. லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவமுடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது. லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.

லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

லினக்ஸினுடைய Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும். லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. விண்டோசில் இருந்து லினக்ஸ்க்கு மாறுவதற்கு முக்கியத் தடையாக இருந்து வந்த பிரச்சனை தீர்க்கபட்டு வருகிறது. அதன் முதல் படியாக விண்டோசில் உபயோகப் படுத்தப்படும் சில சாப்ட்வேர்களை இப்போது லினக்ஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும். அதற்காக ஒரு சாப்ட்வேர் உள்ளது அதன் பெயர் WINHQ இதற்க்கான லிங்க் இதோ.

பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு அதற்க்கான லிங்க் இதோ.

ஆழமான உடலுறவு விதியை வெல்லும்

செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையின் பாதையை /விதியை உடைத்து திருப்பலாம் , லோகாயதமாக மட்டுமல்லாது ஆத்யாத்மிகமாகவும் வாழ்வாங்கு வாழலாம் என்பதை இந்த பதிவில் விவரிக்க உள்ளேன். பொறுமையாக படித்தால் இன்றோடு உங்களை பிடித்த பீழை ஏழையாயிரும். உங்கள் தலையெழுத்தே மாறிப்போயிரும்.

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.

கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம். நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

நாம் இதுவரை இந்த பிறவியிலான நம் வாழ்க்கையை நமது முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அவர்தம் ஆவிகள் பாதிக்கின்றன என்பதை பார்த்தோம்.

உங்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் உங்கள் பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி பல விஷயங்கள் பாதிக்கின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான அம்சத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. அதுதான் உங்கள் செக்ஸ் லைஃப். செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் ஆண்டின் பத்து மாதங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கிறார். மேலும் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது

அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். 
 
அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

இவருக்கு இரும்பாணியே உணவு, நாணயமே தண்ணீர்.

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது.

 
 
இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

சீடி மற்றும் டிவீடிக்களை ஐஎஸ்ஒ போர்மட் கோப்பாக மாற்றம் செய்யும் மென்பொருள்

விண்டோஸ் இயங்குதளத்தின் புகழ்பெற்ற இமேஜ் போர்மட் ஐஎஸ்ஒ போர்மட் ஆகும். இந்த போர்மட்டை உருவாக்க இணையத்தில் இலவச மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கின்றன.


ஆனால் இவையாவும் கணணியுடைய வன்தட்டில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் கோப்புகள் இருந்தால் மட்டுமே ஐஎஸ்ஒ கோப்பாக மாற்றியமைக்க முடியும்.

ஆனால் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டிவீடியில் இருந்தே ஐஎஸ்ஒ கோப்பாக மாற்றியமைக்க முடியும். இந்த மென்பொருள் டிவீடி, வீடியோ மற்றும் ஓடியோக்களை பிரித்தெடுக்கவும், கொப்பி செய்யவும் மற்றும் ஐஎஸ்ஒ கோப்பாக மாற்றம் செய்யவும் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவவும். இறுதியாக BU-UPTTUXZZ-IXFXRX என்னும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும். ஜீன் 30 வரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக பெற முடியும்.
பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும். டிவீடி ட்ரேயில் ஓடியோ அல்லது வீடியோ டிவீடியை உள்ளிடவும். பின் BDlot DVD Clone மென்பொருளை பயன்படுத்தி மேலே கூறிய அனைத்து செயல்களையும் செய்ய முடியும்.

கூடுதலான செய்தி என்னவெனில் நேரிடையாக வன்தட்டிலேயும் மாற்றம் செய்து கோப்புகளை சேமிக்க முடியும். இந்த மென்பொருளுடைய சிறப்பம்சமே ஐஎஸ்ஒ போர்மட்டாக கோப்புகளை மாற்றம் செய்வது ஆகும்.




ஆவிகள் இருப்பது உண்மையா? ,

இந்த பதிவில் ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற விஷயம் பற்றியும், செக்ஸ் லைஃப் மட்டும் சரியாக திட்டமிடப்படுமானால் தலையெழுத்துக்கே டேக்கா கொடுக்கலாம் என்பது பற்றியும் விவரித்துள்ளேன். ஆவிகள் உங்கள் லட்சியப்போராத்தில் துணை நிற்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ! உங்கள் லட்சியத்தில் உறுதியாக நிற்பது
இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

ராத்திரிகள் வந்து விட்டால் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போதுஅங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர் காதலினால் கலவி உண்டாம் கவலைகள் போம்

பாண்டவர் குழியா? நிலநடுக்க குழியா? பரபரப்பு

மூன்று தினம் முன்பு அதிகாலை ஐந்து மணிக்கும், பின்னர் காலை எட்டு மணிக்கும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கத்தால், மாவட்டத்தின் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தாது, வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தது தவிர வீறு எந்த சேதமும் ஏற்படவில்லை.

 

இந்நிலையில், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டிக்கு அடுத்து உள்ள குள்ளப்பநாயக்கனூர், பெரியூர் கல்மேடு என்ற இடத்தில் உள்ள மாது என்பவரது தோட்டத்தில் நிலத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதம் முன்பு உழவு ஓட்டிப்போட்டிருந்த நிலத்தில், கடந்த வாரம் மஞ்சள் கிழங்கு நடவு செய்துள்ளார் மாது. மஞ்சள் காட்டுக்கு நேற்று காலையில் தண்ணீர் பாய்க்கும் போது, வயலுக்கு போன தண்ணீர் ஒரே இடத்தில் நிலத்திற்குள் முழுவதும் போய்க்கொண்டிருந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, இரண்டடி அகலமும், இரண்டு அடி நீளமும் கொண்ட அந்த விரிசலால் ஏற்பட்டிருந்தது.

இந்த விரிசலால், சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரிசல், மேலே பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், உள்ளே பாக்கும் போது பத்து அடி ஆழத்துக்கும் அதிகம் இருக்கும் போல தெரிகிறது.இது, நிலநடுக்கத்தால் ஏற்பட்டதல்ல… முந்தைய காலங்களில் நிலத்தில் விளையும் தானியங்களை வீட்டுக்கு கொண்டு சேர்க்க வசதியில்லாதவர்கள், தங்கள் தோட்டத்தின் மேடான பகுதியில் நிலத்தில் பாதுகாப்பான குழி வெட்டி நான்கு பக்க சுவர்களையும் சிறு சிறு கற்களை கொண்டு வீடு கட்டுவது போலோவே அழகாக கட்டியிருப்பார்கள்.

உள்ளே இருக்கும் தானியங்களை போய் எடுப்பதற்கு ஒரு வழி மட்டும் வைத்திருப்பார்கள், இதற்கு தவசு என்று பெயர், சாதாரணமாக இப்போது ஏற்பட்ட நிலா நடுக்கத்தில் தவசு குழியை மூடியிருந்த கல் உடைந்துவிட்டது என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.

இல்லை…. இது நிலநடுக்கத்தால் ஏற்ப்பட்டதுதான், கடந்த ஆண்டு நெல் நடவு செய்ய, வயல் ஓட்டுவதற்கு டிரேக்டர் மூலம் சேற்று உழவு ஒட்டியிருக்கிறார் மாது, பல நாட்கள் நிலத்தில் தண்ணீர் நின்றுள்ளது. அப்போது ஏற்படாத விரிசல் இப்போது எப்படி ஏற்பட்டுள்ளது…? இது நிலா அதிர்வால் ஏற்ப்பட்டதுதான் என்கிறார்கள் ஒருதரப்பினர்.

சங்க காலங்களில், இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாண்டவர் குழி என்று சொல்லப்படும் மாண்டவர் குழிகள் கூட இப்படிப்பட்ட தோற்றத்தில் தான் இருக்கும்.

மாண்டவர் குழியா, நிலநடுக்க குழியா என்று தெரிய வில்லை, அது இப்போது பரபரபரப்பு குழியாக உள்ளது.

ப்ளாகர் என்னும் பெயரை கூகிள் மாற்றப்போகிறது

கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


வலைப்பதிவர்களுக்கான புளகர் (Blogger) சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான பிகாஸா (Picasa) மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. புளகர் நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். பிகாஸா என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும்.

இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

இந்நிலையில் கூகுள் தனது இரண்டு பிரதான சேவைகளின் பெயர்களை மாற்றும் செய்தியானது அது தனது சமூகவலையமைப்பான ‘கூகுள் +’ இன் அறிவிப்புக்குப் பின்னரே வெளியாகியுள்ளது. அதன்படி புளகர் சேவையானது கூகுள் புளக்ஸ் எனவும் பிக்காஸா சேவையானது கூகுள் போட்டோஸ் எனவும் அழைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

கூகுள் இதற்கு முன்னரும் தனது சேவைகளின் பெயரை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பலான ஜோக் + மனோதத்துவம்

பலான ஜோக்குகள் என்பவை எங்கே தோன்றின. எப்படி பரவின? இதை சொல்பவர்களின் சைக்காலஜி என்ன ? கேட்பவனின் சைக்காலஜி என்ன? கேட்டு சிரிப்பவனின் சைக்காலஜி என்ன? அருவறுப்படைபவனின் சைக்காலஜி என்ன? பெண்கள் இது போன்று பலான ஜோக்குகள் சொல்லிக்கொள்வதுண்டா? அவர்கள் சொல்லி மகிழும் ஜோக்குகள் எப்படிப்பட்டவை ? இதற்கெல்லாம் விடை காண ரொம்பவே மெனக்கெட வேண்டும் .

செக்ஸ் கிடைக்காதவன் "சீ சீ இந்த பழம் புளிக்கும் " என்ற ரீதியில் செய்த நக்கல்களா ? (அ ) காமக்கடலில் முத்துக்குளித்தவன் எறிந்த ( முத்துக்களோடு கிடைத்த) சிப்பிகளா ? உடலுறவுக்கு முன்பாக இணையை சூடேற்ற மேற்கொண்ட முயற்சிகளா? ஆணும்,பெண்ணும் உடலுறவுக்கு வாய்ப்பில்லாத போது மேற்கொண்ட ஓரல் (வாயளவுனு அர்த்தப்படுத்திக்கங்கனா) செக்ஸ் முயற்சிகளா? புரியவில்லை.

ஆனால் அதிக பட்சம் ஆணாதிக்கக உணர்வுகள் நிறைந்தவையாகவும், பெண்ணை சிறுமைப்படுத்துவனவாகவுமே உள்ளன.

சரி உங்கள் பொறுமையை சோதிப்பானேன். முதலில் ஒரு ஜோக்கை பார்ப்போம். உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்? வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்

தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்

முதலில் செக்ஸ்+மனோதத்துவம்:

மனிதனின் இதர செயல்பாடுகளை போலவே செக்ஸ் மீதும் மனோதத்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதர செயல்பாடுகளேனும் பகிரங்க பிரதேசங்களில் நடைபெறுவதால் கு.ப.முகமூடி அணிந்து இரட்டை வேடமெனும் போடுகிறான். ஆனால் செக்ஸில் ?

மனிதன் மிருகம். அவன் (அந்த மிருகத்தை ) தன்னை ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளான். அது வெளிப்படுவது ஒரு சில சந்தர்பங்களில் மட்டுமே. உ.ம்.தனிமையில்/கழிவறை/குளியலறை மனைவி வாய் செத்தவளாய் இருந்தால் பெட் ரூமில்/பசியில்/உயிர்பயத்தின் போது

மனிதன் மிருகமாகவே வாழ்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவன் மனிதனாக வேடமிட துவங்கிய பிறகுதான் மனோதத்துவ பிரச்சினைகள் & மனோதத்துவ சாஸ்திரம் தோன்றியது. சிக்மன் ஃப்ராய்டு சொன்ன தியரியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கு கூறுகிறேன். மனிதனின் கேரக்டர் 3 கேரக்டர்களின் கூட்டு கலவையாக உள்ளது. 1.மிருகம் 2. ஆதர்ஸமனிதன் 3. மிருக+ ஆதர்ஸ மனிதனின் குணக்கலவை

சமுதாயத்தில் நடமாடுவது 3 ஆவது கேரக்டர்தான். பூகம்பம் வெள்ளம் இத்யாதி உத்பாதங்களின் போது மனித மனதிலான ஆதர்ஸ மனிதன் வெளிப்படுகிறான். குழந்தை தொழிலாளி, வாய் செத்த மனைவி விஷயங்களில் மட்டும் மிருகம் வெளிப்படுகிறது. பகவத்கீதை தமோ ,ரஜோ,சத்வ குணங்களை குறிப்பிட்டாலும் ,ஃப்ராய்டு 3 வித குணாம்சங்களை விவரித்தாலும் இவை யாவும் குழந்தைக்கு ஜீன்களின் வழி கிடைக்கின்றன இவற்றை ரஸ்னா பவுடர் என்று சொன்னால் சுற்றுப்புறச்சூழலை தண்ணீர் மற்றும் சர்க்கரை எனலாம். இதில் கிரகபாதிப்பின் பங்கு என்ன ? என்ற கேள்வி எழுகிறதல்லவா ? ஜோதிடம் என்பது ஆன்மீக பயணத்தின் முதல் படி.. ஆன்மீகம் என்பது ஜோதிடப்பயணத்தின் இறுதி இலக்கு.

உங்களில் பலபேர் புலம்புவதுண்டு " ஏன் தான் கடவுள் என் தலைல இப்படி எழுதிட்டானோ"

இது தவறு. ஆம் ஒவ்வொரு ஆன்மாவும் உடலை பிரிந்த நிலையில் சுதந்திரமாக இயங்குகிறது. அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்றபடியே சுலோகங்கள் கூறினாலும் ஆன்மா தன் கடந்த பிறவிகளின் கருமங்களை தொலைக்க/கருமம் கூடாதிருக்க/புண்ணியபலனை சேர்க்க/இறைவழி நாட ஏதுவான பிறப்பை தானே நிர்ணயிக்கிறது. அதனால் தான் கடந்த பிறவிகளில் நம் முக்திக்கு தடையாக இருந்த அம்சங்களையெல்லாம் லிஸ்ட் அவுட் செய்து அவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையிலான பிறப்பை, குடும்ப சுற்று சூழலை தரும் கிரக நிலையை ஜாதகத்தை தேர்ந்தெடுக்கிறோம். ஏனெனில் ஆன்ம வடிவில் இருக்கும்போது நம் நோக்கம் முக்தி. உடலுடன் பிணைக்கப்பட்டுவிட்டபோது ? புக்தி. அதாவது இகலோக வாழ்விலான வெற்றி. அதனால் தான் இந்த புலம்பல்.

வம்ச விருட்சம்:

சில குடும்பங்களில் பார்க்கும்போது எல்லா ஆண் பெண்களும் நல்ல ஆரோக்கியம், தக்க வயதில் திருமணம், நல்ல ஆண்மை, சந்தானம்பெற்று வாழ்வதை காணலாம். ஆனால் வேறு சிலகுடும்பங்களில் நிலைமை வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? புண்ணிய பலன்களை அனுபவிக்க பிறவியெடுத்த ஆன்மாக்கள் முதல் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. கருமங்களை தொலைக்க எண்ணும் ஆத்மாக்கள் இரண்டாம் வகை குடும்பங்களை தேர்வு செய்கின்றன. எப்படி ஒரு மரத்தின் கிளைகளில் ஒரேவிதமான மலர்கள் பூத்து ,ஒரேவிதமான காய்கள் காய்க்கின்றனவோ அதே போல் தான் இதுவும் நிகழ்கிறது. அதனால்தான் வம்சாவழியை வம்ச விருட்சம் என்று குறிப்பிடுகிறார்களோ என்னவோ?

செக்ஸ் லைஃப்:

செக்ஸ் லைஃபையும் இதே போலத்தான் ஆன்மாக்கள் தேர்வு செய்கின்றன. ஆனால் இந்த பிறவியில் இது தம் செலக்ஷன் தான் என்பதை மறந்து தவிக்கின்றன. செக்ஸ் என்பது மனித உடலில் இருக்கும் ஒரே பவரான மிஸ்டிக் பவரை உணர வைக்கும் ஒரு தூண்டுதல் மட்டுமே. அதை விடுத்து அதிலேயே மூழ்கிவிட்டால் ஷெட் தான்.

செக்ஸில் கச்சா முச்சானு இறங்கிவிட்டால் அதையும் மறந்து விடவேண்டியதுதான். செக்ஸை ஒரு தூண்டுதலாக கொண்டு அளவோடு, ஆழமாக அனுபவித்தால் டூ இன் ஒன் என்பது போல் ஒரே சக்தி செக்ஸ் பவராகவும், யோகிக் பவராகவும் வேலை செய்யும்.

முதலில் இந்த பலான ஜோக்குகளை பதிவிடும் முயற்சியை ஆரம்ப நாட்களிலேயே செய்து பார்த்துவிட்டேன். ஞானி ஆனந்த விகடனில் பாலியல் கல்வி தொடர் ஒன்றை எழுதி வந்த சமயம் கல்கியில் கண்டனம் (தலையங்கத்தில்) வெளிவந்தது. அதை நக்கலடித்து பல் ஜோக்கை வெளியிட்டேன். ஆனால் அந்த காலத்தில் திரட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அது நிறைய பேரை சென்றடையவில்லை. இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டதது ( நேற்று மட்டும் 600 பேர் என் பதிவுக்கு வருகை தந்தனர்)

எனக்கு வெற்றி மட்டும் முக்கியமில்லை. வெற்றிக்கான காரணமும் தேவை. 13 நாட்கள் செக்ச் ஜோக் + சைக்காலஜி என்று தொடர்பதிவுகள் போட்டபடி இதில் நிறையவே ஆராய்ச்சி செய்தேன். ஒரு பதிவில் ஜோக்கை மட்டும் போட்டு விளக்கம் அடுத்த பதிவில் என்றேன் ஹிட்ஸ் வெகுவாக குறைந்தது. பின்பு விளக்கத்தை மட்டும் போட்டேன் ஹிட்ஸ் குறைவுதான். என்னங்கடா இது என்று 3 ஜோக்குகளை ஒரே சமயத்தில் வெளியிட்டேன். அடிச்சு தூக்கிருச்சு.

வருகைகள் ஏறவும்,இறங்கவும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மேலும் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். மறுமொழிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்.

இதை நான் சரியாகவே புரிந்து கொண்டேன். அதாவது இந்த பதிவுகளை தொடர்ந்து படித்தவர்களில் அதிக சதவீதம் புதிய பார்ட்டிகளே.

இதுவும் ஒருவகையில் நல்லதே. காமக்கதைகள் , ஜன்யபாகங்கள் என்று தேடி நீலப்படத்தனமான பதிவுகளை வாசித்து வீட்டுக்கு போனதும் இரண்டாவதா என்ன செய்யலாம் என்று யோசிப்பதைவிட கவிதை07 ல் ஒரு ஜோக்கை படித்தாற்போலவும் இருக்கும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொண்டாற்போலவுமிருக்கும் .மை டியர் யங்க் ஃப்ரெண்ட்ஸ் ! உங்களுக்காகவும் நான் எழுதுகிறேன். டோண்ட் ஒர்ரி !

உடலுறவு என்பது என்ன ? ஜஸ்ட் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு டெஸ்ட் ட்யூபாகவும், குடுவையாகவும் மாறுகிறார்கள் அவ்வளவே. இந்த செயலின் நோக்கம் இனப்பெருக்கம். தட்ஸ் ஆல்.

இதற்காகத்தான் உயிர்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த உயிர் கூன்,குருடு, ஊமை,செவிடு,பேடாக இருந்தாலும் சரி. காம உணர்வு கட்டாயம் இருக்கிறது. முதுமையின் உச்சத்தில் கட்ட கடைசியாக மறையும் உணர்வும் இதுவே. கருப்பையிலான சிசுவுக்கும் (ஆண்) குறி விரைக்கிறது . சிலருக்கு மரணத்தின் போதும் வீரியம் ஸ்கலிதமாகிறதாம்.

பறவை கூடு கட்டினாலும் சரி, நண்டு வளை தோண்டினாலும் சரி, மரம் ஒன்று பூத்தாலும் சரி, நீ டை கட்டினாலும் சரி அதற்கு பின்னுள்ள ஒரே நோக்கம் இனபபெருக்கம் தான் . அது இயற்கை அன்னையின் ஆணை. அதை எந்த கொம்பனாலும் மீற முடியாது. அணை நிரம்பிவிட்டால் தண்ணீரை திறந்து விட வேண்டியதுதான். சேர்த்து வைக்கப்பார்த்தால் ஒரேயடியாய் திறந்து விட வேண்டிவரும். அதுவாய் உடைந்தால் ஊரை அழிக்கும்.

உங்களில் (அதாவது பலான ஜோக்குகளை படிப்பவர்களில் )அதிக சதவீதம் திருமணமாகாதவர்களாகத்தான் இருப்பீர்கள். இதில் அதிக சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவராக இருப்பீர்கள். சுய இன்பத்துக்கு மட்டுமே அல்ல உடலுறவுக்கும் ஒரு விதி இருக்கிறது.

1.எவ்வித குற்ற உணர்வோ , பதட்டமோ , அச்சமோ இன்றி ஆற அமர , நிதானமாய் ஆழமாய் அனுபவித்தால் எண்ணிக்கை குறையும். அவ்வாறன்றி அவசர அடி அடித்தால் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு குறி ஃப்ளவர் ப்ராக்கெட் மாதிரி ஆகிவிடும். குறி கையளவு ஆகி, கை குறியளவு ஆகிவிடுமாம் எச்சரிக்கை !

2.இன்றைய காலகட்டத்தில் உடலுறவுக்கோ, சுய இன்பத்துக்கோ கிடைக்கும் உந்துதல் 99 சதவீதம் செயற்கையானது. வெளியிலிருந்து வருவதாகும். இதற்கெல்லாம் ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பித்தால் நாஸ்தி தான். ஆனால் வெளிப்புறத்திலிருந்து அல்லாது உடலிலிருந்தே வரும் தூண்டுதல் ஆரோக்கியமானது. அதற்கு செவி சாய்க்கலாம். என்னைக்கேட்டால் சுய இன்பம் என்பதே தேவையற்றது. அணை நிரம்பிவிட்டால் அதிகப்படி தண்ணீர் தானே வழிவது போல் ஸ்வப்ன ஸ்கலிதமாகிவிடும்.

தமிழுக்கு தடையா?

1.தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)


பயன்:

தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் "வாலும் தமிளர்கள் " தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும்

சில எச்சரிக்கைகள்:

குழம்பி (காபியாம்) ,அடி ரொட்டி (பரோட்டா) போன்ற விஷ பரீட்சைகளை தடை செய்யவும்

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.

அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை

கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி "எழுச்சி" க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.
 
அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்திய மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் குறைவர்.

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு

மனிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா?

மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார். ஒன்று ஆண். மற்றது பெண்.

பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது.

இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள். இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ டியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது.

மனித முகம் உடைய பாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது. உதவி கிங்தமிழ் .

எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிறீர்களா?








பெற்றோர்களே சிந்திப்பீர்...!

சமச்சீர் கல்வி, நடைமுறைக்கு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் - ஏ.பி.எல்., என்ற அட்டை வழிக் கற்பித்தல் முறை, நடைமுறையில் உள்ளது.




இம்முறை தொடருமா, இல்லை நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களுடன், தரமான முறையில், அதிக பொருட்செலவில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட கற்றல் அட்டைகள், மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கின்றன.

ஆந்திராவில், மலைக் கிராம மக்களின் குழந்தைகளுக்காக, செயல்வழிக் கற்றலை, முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியது. இதை காப்பி அடித்துத் தான், கடந்த அரசு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக நடைமுறைப்படுத்தியது."அட்டை வழிக் கற்பித்தல் முறை, ஆசிரியர்களை சுறுசுறுப்பாக வேலை வாங்கும் திட்டம்' என, சிலர் குறிப்பிடுகின்றனர்.
"மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்' என்கிறது இன்னொரு தரப்பு. "பெற்றோர் மத்தியில் இந்த கூத்து எடுபடவில்லை' என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள், பாடத்திற்கு ஏணிப்படி அட்டவணைகள் கொடுத்த பின், இன்றைய நிலையில், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை, ஏ.பி.எல்., முறை வேண்டுமா, வேண்டாமா என, ஓர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், 95 சதவீதம் ஆசிரியர்கள், இம்முறை வேண்டாம் என்றே ஓட்டளிப்பர்.

மாதம்தோறும், தொடக்கப் பள்ளி மாணவனுக்கு, 100 ரூபாய் உதவித் தொகை, தரமான பாட நூல், தரமான பயிற்சி புத்தகம், தரமான சீருடைகள், மதிய உணவு, தேர்வு முறைகள், மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவன் முன்னேற்ற அறிக்கை, பெற்றோருக்கு வழங்குதல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பள்ளிப் பதிவேடுகள் வழங்க வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ரெக்கார்டு ஷீட், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் போலிகள் நுழையா வண்ணம் வழங்க, அரசு நடவடிக்கை, போதுமான கட்டமைப்பு வசதி, தர மேம்பாடு, உபகரணங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, இதை செய்யுமா?

சினிமாவால் சீரழிந்த இளம்பெண்ணின் கண்ணீர் கதை!

சினிமா ஆசையில் சென்னைக்கு வருவதும், சினிமா ஆசை காட்டி மோசடி செய்பவர்களிடம் ஏமாந்து கற்பை தொலைப்பதும் , பணத்தை இழப்பதும் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லோரும் போலீசுக்கு போவதில்லை.
 

ஒரு சிலர்தான் நீதி கேட்டு காவல்துறையை நாடுவது உண்டு .தன்னை ஏமாற்றியவனுக்கு தண்டனை வாங்கித்தர துடிப்பது என இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்க வைத்த சினிமா மோசடிக்காரர்களை கண்டித்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வந்தாலும் ஆசை யாரை விட்டது. இதோ இங்கே ஒரு பெண் சினிமாவால் என் வாழ்க்கையே சீரழிந்து விட்டது என்று காதலித்து, திருமண நாடகம் நடத்தி ஏமாற்றியவன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த பெண்ணின் பெயர் சத்யப்ரியா (20). கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர். பிளஸ்2 படித்து விட்டு அந்த பகுதியில, உள்ள ஒரு ஜீன்ஸ் பேண்ட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு போனில் பேசிய ஒருவர், சென்னையில் சூப்பர்வைசர் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அவரை நம்பி சென்னை சென்ற சத்ய ப்ரியா, அங்கு தன்னை சினிமா டைரக்டரின் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொண்ட கோவிந்தன் என்பவருடன் பழக ஆரம்பித்தார். நீ அழகா இருக்கிறாய்.... சினிமாவில் உன்னை சேர்ந்து விடுகிறேன், கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பிய சத்யப்ரியா, கோவிந்தன் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் கோவிந்தனையே திருமணமும் செய்து கொண்டார். திருமணமான ஒரே மாதத்தில், நேரம் சரியில்லை எனக்கூறி சத்ய ப்ரியாவை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த கோவிந்தன் இன்று வரை திரும்பியே வரவில்லை.

இதற்கிடையில் வேறு திருமணம் செய்ய கோவிந்தன் முயற்சிப்பது பற்றி கேள்விப்பட்ட சத்யப்ரியா, விழுப்புரத்தில் உள்ள கோவிந்தன் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி விட்டார். உண்ணாவிரதம் இருக்கும் சத்யப்ரியா அளித்துள்ள கண்ணீர் பேட்டியில், என்னுடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பில்தான் வாழ்ந்து வந்தேன். நான் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலையில் சேரத்தான் சென்னை வந்தேன். வந்த இடத்தில் எனக்கும் கோவிந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

என்னிடம் கோவிந்தன், தனது மைத்துனர் சினிமா டைரக்டர் என்றும் அவர் மூலம் உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன், கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய என்னை, கோவிந்தன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

பலருடன் அப்படி இப்படி இருக்கச் சொன்னார். அப்போதுதான் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் சிலவற்றை சகித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அப்படி இருக்க எனக்கு பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல நினைத்தேன். என்னை தடுத்த கோவிந்தன், திருமணம் செய்து கொள்வதாக கூறி தாலி கட்டி விட்டார்.

திருமணத்துக்கு பிறகு விழுப்புரம் வந்து விட்டோம். சில நாட்களில் என்னை அடித்து, உதைத்து 15 பவுன் நகையை வாங்கி விட்டார். அதன் பின்னர் விரட்டி விட்டு விட்டார். கோவிந்தனையும், சினிமாவையும் நம்பி இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன், என்று கூறினார்.

சினிமா ஆசையில் தினம் தினம் சென்னைக்கு படையெடுக்கும் இளம்பெண்களில் பலர், சத்யப்ரியா போன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சினிமா என்ற பணம் காய்க்கும் மரத்தை நம்பி, இலவு காத்த கிளியாக ஏமாறும் பெண்களை என்னவென்று சொல்வது? அதுபற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே ...!

வாகன ஓட்டிகளே உஷார் !!!

உலகிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.

அந்த அளவுக்கு சாலைகளில் விபத்துகள் ஏற்பட, பற்பல காரணங்கள் உள்ளன.நம் நாட்டில், நீண்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய ஒருவருக்கு, 20 வருட காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள், அவரது உடல்நிலை மற்றும் கண் பார்வை நல்ல நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது.அடுத்தபடியாக, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளில், வலப்புறம் வந்து இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள குறுக்குச் சாலைகள் மிக ஆபத்தானவை.

அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதற்கடுத்து, நெடுஞ்சாலைகளில் விதி மீறல் செய்வோரைத் துரத்திப் பிடிக்க, ரோந்து ஹெலிகாப்டர்கள் தேவை.

ரோந்து வாகனங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. சமீபத்தில், அமைச்சர் ஒருவர் உயிரிழக்க காரணமான லாரியை பிடிக்க முடியாமல், பல நாட்கள் ஆனது. லாரியையே பிடிக்க முடியவில்லையெனில், காரை எப்படி துரத்திப்பிடிக்க இயலும்?

அதற்கடுத்து, வாகன நடமாட்ட தேவைக்கேற்ப, சாலைகளை அகலமாக விரிவுபடுத்தல் அவசியம். வளைவுகளை நேர் செய்வதோடு, நல்ல தரமான, மேடு, பள்ளமில்லாத சாலைகளாக, அனைத்து சாலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் விரைந்து செய்ய முடியுமானால், சாலை விபத்தற்ற மாநிலமாக தமிழகத்தை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.


எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!

பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.

அவை என்னென்ன என்று பார்க்கலாம்..
 
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.

கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.

இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படுகிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.

வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.

இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.

அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் நட்பாகி பணத்தை திருடியவருக்கு ஐந்தாண்டு சிறை

பேஸ்புக் வழியாக நட்பாகி 63 வயது பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி பத்துப் பவுண் பணத்தையும்,கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்ற 18 வயது யுவதிக்கு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

 

ருக்ஷானா சலீம் என்ற யுவதிக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடமே இந்த யுவதி தனது கை வரிசையைக் காட்டியுள்ளார், கத்தியை முகத்துக்கு நேரே நீட்டி ஒரு பவுண் பணம் தருமாறுதான் முதலில் கேட்டுள்ளார்.

இல்லையேல் அந்த வீட்டைக் கொழுத்தப் போவதாக அச்சுறுத்தியவர் பின்னர் பத்து பவுண் பணத்தையும் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.

இந்த யுவதி கிறேடர் மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர்.இந்தப் பெண் நிறைய குற்றங்களைப் புரிந்துள்ள ஒருவர். இதுபோன்ற இன்னும் சில வழக்குகளும் இவருக்கு எதிராக உள்ளன.இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்

கணவரை சூட்கேசில் வைத்து சிறையில் இருந்து கடத்திச் சென்ற பெண்

மெக்சிகோவில் உள்ள செதுமாய் சிறையில் ரமிரெஸ் ஜெரினா இருந்தார். சட்டவிரோத பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்ததாக அவர் 2007ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. தனது வாழ்க்கைத் துணைவரை சிறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என 19 வயது பெண் மரியா முயன்றார்.

அவர் பெரிய கறுப்பு நிற சூட்கேசை மெக்சிகோ சிறைக்குள் கொண்டு சென்றார். பின்னர் அவர் வரும் போது ஒரு விதமான பதட்ட நிலையுடன் காணப்பட்டார்.

அவர் தடுமாற்றத்துடன் இருப்பதை பார்த்த சிறை பாதுகாப்பு நிர்வாகத்தினர் உஷார் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதை திறந்த போது சிறைக்கைதி ரமிரெஸ் இருப்பது தெரியவந்தது.
சிறைக்காவலர்கள் அதிர்ச்சி அடைந்து கைதியை கடத்த முயன்ற பெண் மரியாவை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சூட்கேசில் கைதி தப்ப முயன்றதை தொடர்ந்து மெக்சிகோ சிறைகளில் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது.


Share

இனி டாட் காம் தேவையிலை. டாட் உங்கள் பெயர்

காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.


சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன.

இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம்.

இதற்கான செலவும் அதிகமாகும். அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

மனைவியால் செருப்படி வாங்கியவன்

வட இந்தியாவைச் சேர்ந்தவர் விஷால் சர்மா. இவருக்கு சகபாடிப் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு. கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் உறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.


சுமார் இரு வாரங்களுக்கு முன்னரும் உறவில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் விஷாலின் மனைவி கையும் மெய்யுமாக இருவரையும் பிடித்து விட்டார்.

விஷாலின் மனைவி கோபத்தின் உச்சத்தில் நின்றார். சோரம் போன கணவனை நன்றாக நையப் புடைத்தார்.

செருப்பால் அடித்தார். கணவனின் கள்ளக் காதலிக்கும் நல்ல அடிகள் கொடுத்தார்.

விஷாலின் மனைவி வீட்டாரும் சம்பவ இடத்தில் நின்றார்கள்.இவர்கள் மாப்பிள்ளையை நன்றாக வாட்டி எடுத்தனர்.பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றபோதும் முடியவில்லை. இத்தனைக்கும் விஷாலின் மனைவிக்கு வெறும் 15 வயதுதான்

19 வருடங்களாக தலை ஒட்டி வாழும் இணை பிரியா சகோதரர்கள்

ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்.


தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றி பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாகும்.

இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள். முதல் தடவையாக இவர்கள் ஊடகங்களுக்கு முன்னாள் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களுள் ஒருவர் எதிர்ப்பால் உணர்வுடையவர்.மற்றவர் ஓரினச் சேர்க்கை ஆர்வமுள்ளவர். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது.

இருவரும் நன்றாக வயலின் வாசிக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமன்றி நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். இருவருமே இறைவன் தங்களுக்களித்த கொடை என்று அவர்கள் நம்புகின்றனர்.

விஷேட தேவைகள் உடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில்தான் இருவரும் படித்து வருகின்றனர்.அதற்கு மேலதிகமாக பிரதான பாடசாலைக்கும் செல்லுகின்றனர்.

படிப்பில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களின் அசிரியர்கள் கூறுகின்றனர். ஒருவர் திரைப்படத் துறையிலும் மற்றவர் இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக இவர்களின் அசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகிள் நிறுவனம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் சாதனை! (பட இணைப்பு)

உலகில் 63 மொழியில் உள்ள ஆக்கங்களை தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை 63 மொழிகளிலும் மொழிபெயர்பு செய்யும் வசதி உருவாகி உள்ளது.

கூகிள் நிறுவனத்தின் மொழி மாற்றம் செய்யும் பகுதியில் இதனை கூகிள் நிறுவனம் இணைத்துள்ளது.

இதன்மூலம் உலகில் தமிழ்மொழி கணினி உலகத்தில் புதிய வளர்ச்சி படி நிலையை அடைந்துள்ளது.

விசேடமாக கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வலயமைப்பு இலங்கை தமிழருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் மொழி மாற்றப்பக்கத்திற்குச் செல்லமுடியும்.http://translate.google.com/?sl=en#en|ta|


இறந்ததாக கருதிய பெண் திடீரென எழுந்ததால் பரபரப்பு

இறந்ததாக கருதி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும் போது பெண் திடீரென எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பூசாரிப்படி பகுதியை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி மணி (68). இவர்களுக்கு அனீஷ்குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். கணவன் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணி அதே பகுதியில் தனியாக வசிக்கிறார்.

கடந்த 2 தினங்களாக மணியின் வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், பரவூர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமாரன் தலைமையில் பொலிசார் விரைந்து வந்தனர். வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்ததால் மாடியிலுள்ள கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, படுக்கை அறையை ஒட்டியுள்ள கழிப்பறையில் அமர்ந்தபடியே மணி சரிந்து கிடந்தார். அறை முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும், மணியின் மூக்கிலும் காயம் இருந்தது. இதையடுத்து, மணி இறந்து விட்டதாக பொலிசார் கருதினர்.அவர் இறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறினர். உடலில் காயம் இருந்ததால் பொலிசார் மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்தனர். இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் பிரேத பரிசோதனை நடத்த பொலிசார் தீர்மானித்தனர். மணியின் உடலுக்கு ஒரு பொலிஸ்காரர் காவலுக்கு நிறுத்தப்பட்டார். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக பொலிசார் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தனர்.

பொலிசாரும், உறவினர்களும் மணியின் சடலத்தை தூக்கிய போது திடீரென அவர் ”அய்யோ” என அலறினார். இதைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மணியை பரவூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

மயக்கமடைந்து கிடந்த பெண்ணை சரியாக பரிசோதிக்காமல் இறந்து விட்டதாக கூறி வழக்கும் பதிவு செய்த பொலிசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பரவூர் பகுதி மகளிர் அமைப்பினர் பரவூர் பொலிஸ் நிலையம் முன் போராட்டமும் நடத்தினர்.

அழிவிற்குட்படும் நாடுகள்

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.


சீனா, இந்தோனேசியா, இந்தியா ,ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன், இத்தாலி ,பிரேசில், நையிரியா. பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள்

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் பாதாள அறையில் நேற்று 8-வது நாளாக தோண்ட தோண்ட தங்க நகைக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


பழமையான கோவில்

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பழமையான அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது.

இந்த கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

6 பாதாள அறைகள்

பிரசித்திபெற்ற இந்த கோவிலின் கருவறைக்கு அருகில் 6 ரகசிய பாதாள அறைகள் உள்ளன. அவை நீண்டகாலமாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கோவிலின் நகை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலின் பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து பட்டியலிட்டு அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இதற்காக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழுவினர் கடந்த திங்கட்கிழமை முதல் பாதாள அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகை குவியல்கள்

முதலில் திறக்கப்பட்ட 2 அறைகளில் தங்க குடங்கள், பொற்காசுகள் போன்றவை இருந்ததை கண்டு குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடூரிய நகைகள் மதிப்பீட்டு குழுவினரை வியப்பில் திக்குமுக் காட வைத்து விட்டது. கலைநயம் மிகுந்த பல பொருட்கள் விலை மதிப்பிட முடியாத அளவுக்கு இருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் திறக்கப்பட்ட முதல் இரண்டு அறைகளில் கண்ணை பறிக்கும் நகைகள் மூட்டை, மூட்டையாக கட்டி வைத்து இருந்தன. முதல் அறையில் 18 அடி நீளம் உள்ள தங்க மாலைகள் உள்பட ஏராளமான நவரத்தின நகைகள் குவியல் குவியலாக இருந்தன. இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

1000 கிலோ தங்க நாணயங்கள்

இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்கு முற்பட்ட 17 கிலோ தங்க நாணயங்கள், நெப்போலின் மன்னர் கால 18 நாணயங்கள், பட்டுத்துணியால் போர்த்தப்பட்ட அபூர்வ வைரக்கற்கள், அத்துடன் 1000 கிலோ தங்க நாணயங்கள், தங்கத்தினால் ஆன சிறிய அணிகலன்கள், சிறிய தங்க யானை சிலைகளும் இருந்தன.

1772-ம் ஆண்டு முத்திரையுடன் கூடிய பொற்காசுகள், மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மாவின் ஆட்சிக்காலத்தை குறிப்பிடுவதாக அமைந் துள்ளது. பெல்ஜியம் ரத்தின கற்கள், 2 ஆயிரம் மாணிக்க கற்கள், ராணிகள் அணியும் தங்க ஒட்டியாணங்கள், மன்னரின் கிரீடங்கள், தங்க வாள்கள் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க சால்வைகள், தங்கத்தால் பொதியப்பட்ட உத்திராட்ச மாலைகளும் கிடைத்துள்ளன.

ரூ.1 லட்சம் கோடி

நேற்று 6-வது நாளாக கணக்கெடுப்பு பணி நீடித்தது. நேற்றும் தோண்ட தோண்ட தங்கம், வைரம், வைடூரியம் என நவரத்தினங்கள் அடங்கிய நகைகள் ஏராளமாக கிடைத்தன. மேலும் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க வைர கிரீடங்கள் உள்பட பல வகையான நகைகளும் குவியல் குவியலாக உள்ளன.

இந்த நகைகளை வெளியே எடுத்து வந்து கணக்கிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விலைமதிக்க முடியாத, கலைநயம் மிக்க அரிய நகைகளாக அவை உள்ளன. இதனால் மொத்த நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியில் இருந்து 1 லட்சம் கோடியை தாண்டும் என்று கருதப்படுகிறது.

திருப்பதியை மிஞ்சுகிறது

உலகத்திலேயே பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் இதுவரை இருந்து வருகிறது. தற்போது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள நகைகள் திருப்பதி கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் ஆட்சி காலத்தில், அரண்மனைகளை விட கோவில் ரகசிய அறைகளில் நகைகள் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என கருதி இதுபோல் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இவற்றில் சிலவற்றை சாமிக்கு சார்த்தவும், வீதியுலாவின்போது அணிவிக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.

பக்தர்கள் அதிகரிப்பு

திருவனந்தபுரம் கோவில் நகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாவதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த கோவிலின் மீது பார்வை விழுந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மெட்டர் டிடெக்டர், கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.

3 அடுக்கு பாதுகாப்பு

இதற்கிடையே கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று கூட்டினார். உடனடியாக 2 பிரிவு விசேஷ அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபிரகாம் அறிவித்தார். கொள்ளை முயற்சியை தடுப்பதற்காக கோவிலுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இரவு பகலாக 24 மணி நேர தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நகைகள் கணக்கெடுக்க எதிர்ப்பு

நகைகள் கணக்கெடுப்பு தொடர்ந்த நிலையில், “கோவிலில் சோதனை நடத்தக்கூடாது. அதனால் வெளியாகும் தகவலால் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளைபோக வாய்ப்பு உள்ளது” என்று கூறி ஒரு குழுவினர் கோவிலின் மேற்கு நடை முன் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள், ஆய்வுக்குழுவினர் கோவிலுக்கு வெளியே வந்தபோது தடுத்து நிறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. நிதிக்குவியல் பற்றி விரிவான செய்திகள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட படங்களை வெளியிடுவது கோவில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறினர்.

கோஷம்

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி அவருக்கும் எதிராக கோஷம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.எஸ்.ராஜன், எம்.என்.கிருஷ்ணன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள டி.பி.சுந்தரராஜன் ஆகியோர் கோவில் நிர்வாக அதிகாரியின் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஏராளமாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் பி.பி. ஜோஸ் தலைமையில் போலீசார் அவர்கள் 3 பேரையும் தக்க பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த நிதிக்குவியல் பற்றிய அறிக்கை அடுத்த மாதத்துக்கு (ஆகஸ்டு) முன்பு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். நூற்றாண்டுகளாக, விலை உயர்ந்த பொருட்களை பாதுகாத்து வந்ததால் பொதுமக்கள் மத்தியில் மன்னர் குடும்பத்தினரின் மதிப்பு அதிகரித்துள்ளது.

ரகசிய அறை கதவில் பாம்பு படம் இருந்ததால் அதிர்ச்சி

பத்மநாபசாமி கோவில் ரகசிய பாதாள அறைகளில் உள்ள நகைகள் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது மதிப்பீட்டு குழுவினர் ஒரு அறையை திறக்க முயன்றபோது அதன் கதவில் பாம்பு படம் வரையப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அந்த அறையில் ஆபத்து எதுவும் இருக்கலாம் என்று கருதி, அதை திறக்காமல் விட்டு விட்டனர். பின்னர் உரிய பாதுகாப்புடன் அந்த அறையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

All in One..Free!!!!!! அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம்.

 
 
ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.