Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Tuesday, July 12, 2011

அதிர்ச்சி .மனித குலத்தின் மூளை வளர்ச்சித் திறன் குறைந்து கொண்டு வருகிறது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது உணவுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதைத் தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளன

Saturday, July 9, 2011

அழிவிற்குட்படும் நாடுகள்

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.


சீனா, இந்தோனேசியா, இந்தியா ,ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன், இத்தாலி ,பிரேசில், நையிரியா. பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, April 24, 2011

விஞ்ஞான கண்டுபிடிப்புகள்

(1) மின் குமிழைக் கண்டு பிடித்தவர்.

*தோமஸ் அல்வா எடிசன்

(2) கணணியைக் கண்டு பிடித்தவர்

*சாள்ஸ் பபேஜ்

(3) விமானத்தைக் கண்டு பிடித்தவர்

*ரைட் சகோதரர்கள்

(4) கொதி நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜேம்ஸ் வார்ட்

(5) உட்தகன எஞ்சினைக் கண்டு பிடித்தவர்

*நிக்கலஸ் ஏ. ஓட்டோ

(6) வானொலியைக் கண்டுபிடித்தவர்

*மார்க் கோணி

(7) தொ¨லைக்காட்சிப் பெட்டியை கண்டுபிடித்தவர்

*ஜோன் லொகி பெயார்.

(8) தொலைக்காட்டியை கண்டுபிடித்தவர்

*கலிலியோ கலிலி

(9) அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜோனல் டுடன் பார்க்

(10) ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்

*சேர் ஐசன் நியுற்றன்

(11) முதல் முதல் உலகப் படத்தை வரைந்தவர்

*தொலமி

(12) முதல் முதலில் வின்வெளிக்கு சென்ற பெண்மணி

*கல்பனா செளலா

(13) முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்தவர்

*நீல் ஆம் ஸ்ரோங்

(14) தந்தி முறையைக் கண்டுபிடித்தவர்

*சாமு வேல் போர்ஸ்

(15) தொலை பேசியைக் கண்டுபிடித்தவர்

*கிரகாம் பெல்

(16) இனையத்தைக் கண்டு பிடித்தவர்

* டிம் பெர்னஸ் லீ

(17) தொலை நகலைக் கண்டுபிடித்தவர்

* ஆர்த்தர் கோர்ண்

(18) உயிரங்கிகளின் தோற்றப்பாட்டை கண்டுபிடித்தவர்

*சாள்ஸ் டார்வின்

(19) அணுக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்

*ஜோன் தாற்றன்



(20) முதன் முதலில் கற் பாதைகளை அறிமுகப் படுத்தியவர்

*ஜோன் மெகடம்

“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்


பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார்.
“கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

Sunday, April 10, 2011

வெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்


மிக அழகாகப் பறந்தாலும், வெளவால் பறவை இனம் கிடையாது. இதற்கு இருப்பது இறக்கைகள் அல்ல, அதன் விரல்களின் நுனியிலிருந்து உடலோடு சேர்ந்து விரிந்திருக்கும் மெல்லிய தோலின் பகுதிதான். இதை மெம்ப்ரேன் என்பார்கள். இதில் பறவைகளுக்கு இருப்பது போல் ஓர் இறகுகூடக் கிடையாது என்பது இன்னொரு வித்தியாசம்.
வெளவால்களுக்குப் பறவைகளைப் போன்ற அலகுகள் கிடையாது. எலிக்கு இருப்பது போன்ற வாயும் பற்களும்தான். கிட்டத்தட்ட ‘பறக்கும் எலி’ என்றுகூட வெளவால்களைச் சொல்லலாம்.
உலகின் குளிர்ப் பகுதிகளிலும் சில தனிமையான தீவுகளையும் தவிர, எல்லா இடங்களிலும் வெளவால்கள் உண்டு. வெளவால்களில் மொத்தம் 951 வகை உண்டு. இவை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
வெளவால் இனங்களில் மிகப் பெரியது ‘பறக்கும் நரி’ (Flying Fox Bat) என்று அழைக்கப்படும் வெளவால் இனம். தலையிலிருந்து கால்வரை இதன் நீளம் நாற்பது செ.மீ. இறக்கைகளின் நீளம் இரண்டு மீட்டர். இதன் எடை ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகம்!

மிகச் சிறிய வெளவால் இனத்தின் பெயர் ‘கிட்டிஸ் ஹாக்|நோஸ்டு பேட்’ (Kitti’s Hog-nosed Bat). தலையும் உடலும் சேர்ந்து, இதன் உயரம் வெறும் 3 சென்டிமீட்டர். இறக்கைகளின் நீளம் 15 சென்டிமீட்டர். எடை 2 கிராம்தான்!
சூரிய ஒளியில் அவற்றால் சரியாகப் பார்க்கமுடியாது. வெளவால்கள் ‘இரவுப் பிராணிகள்’! பகல்நேரத்தில் இருளடைந்த பிரதேசங்களான குகைகள், மரப்பொந்துகள் போன்றவற்றில் பதுங்கித் தலைகீழாகத் தொங்கித் தூங்கும். இரவுநேரத்தில்தான் இரையைத் தேடி வெளியே வரும்.
துளிகூட ஒளியே இல்லாத இருளிலும் எதன்மீதும் மோதாமல் பறக்க இவற்றால் முடியும். காரணம் | பறக்கும்போது இவை சில ஒலிகளை வெளிப்படுத்துகின்றன (இவற்றை மனிதர்களால் கேட்க முடியாது). வழியில் ஏதேனும் பொருள் இருந்தால், வெளவால்கள் வெளிப்படுத்திய ஒலி அவற்றில் பட்டு வெளவால்களிடமே திரும்ப வரும்! இதன்மூலம் பொருள் இருப்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்துப் பறந்துவிடும். இதை ‘எக்கோ லொக்கேஷன்’ என்பார்கள்.
நொடிக்கு நாலு ஒலிகளை ஏற்படுத்தியபடியே பறக்கும் வெளவால்கள், வழியில் ஏதேனும் பூச்சியின்மேல் ஒலி பட்டுத் திரும்ப வந்தால், நொடிக்குச் சுமார் 200 ஒலிகளை எழுப்பி, அந்தப் பூச்சி எவ்வளவு தொலைவில் உள்ளது, என்ன சைஸ் என்றெல்லாம்கூடக் கண்டுபிடிக்கும்!
கொசுக்கள், வண்டுகள் போன்ற இரவுப்பூச்சிகளை வெளவால்கள் தின்னும். வெப்ப நாடுகளிலுள்ள வெளவால்கள், பூக்களிலுள்ள தேனை உண்ணும். சிலது, பழங்களைத் தின்னும்! மேலும் சில பெரிய வெளவால்கள் சின்ன வெளவால்களையும் எலி, தவளை, மீன் போன்றவற்றையும் உண்ணும்.

உணவு கிடைக்காத காலத்துக்காக தேவையான உணவைச் சேமிக்கும். உணவு கிடைக்காத காலங்களில் நெடும் தூக்கம் போடவோ அல்லது அதிகம் உணவு கிடைக்கும் இடங்களுக்கு மாறவோ செய்யும்!

தென் அமெரிக்க வெளவால் களில் சிலவற்றை ‘Vampire Bats’ என்பர். ஏனெனில், இவற்றின் உணவுரத்தம்தான் (மனித ரத்தம் உட்பட!). தங்களது கூரான இரண்டு முன்பற்களை வைத்து, ஆழமான வெட்டுகளை உருவாக்கி, அதன்மூலம் வெளிவரும் ரத்தத்தைக் குடிக்கும் இவை! ரத்த இழப்பு தவிர, இவற்றின் மூலம் ‘ரேபீஸ்’ போன்ற கொடிய நோய்களும் உருவாகும்.
பாம்பு, பெரிய பறவைகள் போன்றவற்றால் வெளவால்கள் கொல்லப்பட்டாலும், அவற்றின் பெரிய எதிரி மனிதர்கள்தான்! பெரும்பாலான வகை வெளவால்கள் அழியும் நிலையில் உள்ளன.

Saturday, April 9, 2011

சிலந்தி – விஞ்ஞான உண்மைகள்


சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங்கள் வீடுகளை நூலாம் படைகளின் கூடாரமாக்கும் சிலந்திகளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்திகளும் உண்டு. சிலந்திகளிலும் ஆயிரம் வகை!
வீட்டுச் சிலந்தி
வீட்டுச் சிலந்திகள் இருள் அடைந்த இடங்களை அதிகம் விரும்பும். வீட்டுக் கூரையிலோ, ஜன்னல் பக்கமோ வலை கட்டும். நிறைய பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறது.
வலையைக் கட்டி முடித்ததும் ஓர் ஓரமாக அமர்ந்து பூச்சிகள் வருவதற்காகக் காத்திருக்கும்.
பெரிய பூச்சிகள் மாட்டினால் அவற்றின் மேல் அதிக அளவு நூலைப்போட்டு பிடித்துக்கொள்ளும்.

பிளாக் விடோ
கறுப்புக் கண்ணாடி போல் உடலுள்ள சிலந்தி இது. ஆண் சிலந்திக்கும் பெண் சிலந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை விடச் சற்றுப் பெரியவை.
பெண் சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஒரு சிவப்பு வட்டம் இருக்கும். ஆண் சிலந்திகளுக்கு இருபுறமும் சிவப்பு மற்றும் வெள்ளையில் கோடுகள் காணப்படும்.
பொதுவாக இவை தனிமை விரும்பிகள். வலையில் சின்ன அதிர்வு ஏற்பட்டாலும் ஓரமாக பதுங்கிக்கொள்ளும். இந்த வகை சிலந்திகளின் கடி விஷமுள்ளது. ஆனால், ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது. பெண் சிலந்திதான் கடிக்கும். ஆண் கடிக்காது.
தோட்டச் சிலந்தி
தோட்டங்களிலும் புல்வெளிகளிலும் வாழும். கறுப்பு மற்றும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.
நடுப்பகுதியில் சற்று அதிக வலிமையாக இருக்கும்படி வலை கட்டும். அந்த இடத்தில் பெண் சிலந்தி அமர்ந்து கொள்ளும். ஆண் சிலந்தி பெண் சிலந்தியைச் சுற்றி வலையை மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகும்.

தங்கக்கம்பி சிலந்தி
இதைப் ‘பூச்சிலந்தி’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் உடலில் சிவப்பு தீற்றல்கள் இருக்கும். கண்களுக்கு இடையேயும் சிவப்பு வண்ணம் காணப்படும். இவை புல்வெளி, வயல், தோட்டங்களில் வெள்ளை, மஞ்சள் மலர்களின் மேல் மலர்ந்திருக்கும்.
இவை பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவிலுள்ள தேனைக் குடிக்க பூச்சிகள் வந்ததும் பிடித்து அவற்றின் உடலுக்குள் விஷத்தை ஏற்றும். இந்த விஷம் பூச்சியின் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும் உருக்கி திரவமாக மாற்றும். அதன் பிறகு அந்த திரவத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும்.
பச்சைச் சிலந்தி
இவை வயல்களிலும் காடுகளிலும் காணப்படும். புதர்களிலும் சின்னச் செடிகளிலும் கூட இருக்கும்.
வேகமாக ஓடக்கூடிய இச்சிலந்திகள் பூச்சிகளை பூனை போல் பதுங்கிச்சென்று பிடித்து உண்ணும்.
கரோலினா உல்ஃப் சிலந்தி
இவை வயல்களில் காணப்படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.
பாலைவனச் சிலந்தி
சிலந்திகளுள் மிகப்பெரியவை இவை. மணலுக்கடியில் புதைகுழிகள் கட்டி வாழும்.
இரவில் குழியின் வாசலருகே குட்டிப்பூச்சிகளுக்காக காத்திருந்து பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது.
ஆண் சிலந்திகள் 10-11 ஆண்டுகள் வாழும். பெண் சிலந்திகள் 25 ஆண்டுகள் வரை வாழும்.

ஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்


ஆந்தைகளில் மிகவும் அதிகமாக காணப்படும் வகை பார்ன் ஆந்தைகள். (Barn Owls) இவை அனைத்துக் கண்டங்களிலும் (அண்டார்டிக்காவைத் தவிர) பரவலாகக் காணப்படுகின்றன. இதைத் தவிர உலகின் ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்துக்குரிய ஆந்தைகள் காணப்படும்.
ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உண்டு. இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை Barn Owl, Burrowing Owl, Eagle Owl, Elf Owl, Little Owl மற்றும்Pygmies Owl.
ஆந்தையின் கண்கள் மற்ற பறவை களைப்போல் பக்கவாட்டில் அமைந் திருக்காது. மனிதர்களுக்கு இருப்பது போல் நேர் திசையைப் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
இவற்றின் உடலைச் சுற்றியிருக்கும் இறக்கைகள் மென்மையானவை. அதனால்தான் இவை பறக்கும்போது சத்தம் வருவதில்லை.
ஆந்தைகளில் இருக்கும் வெவ்வேறு இனங்கள் 6 இன்ச்சிலிருந்து 28 இன்ச் வரை இருக்கும்.
ஆந்தைகளின் ஃபேவரிட் உணவு \ எலி போன்ற சிறிய விலங்குகள், சிறிய பறவைகள், பல்லிகள், பூச்சிகள், மீன்கள் மற்றும் தவளைகள்.
இவற்றின் எடை 3 பவுண்டு முதல் 9 பவுண்டு வரை இருக்கும். பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளைவிடப் பெரியதாக இருக்கும்.
இவை வாழும் இடங்கள்: காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்கள்.
ஆந்தைக் குஞ்சுகள் 15-லிருந்து 35 நாட்களுக்குள் முட்டைகளிலிருந்து வெளியே வரும்.
முதலில் பிறக்கும் குஞ்சுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய நன்மை இவற்றுக்கு உணவில் அதிகப்பங்கு கிடைக்கும் என்பதுதான். அதனால் உணவு குறைவாக இருந்தால் முதலில் பிறந்த குஞ்சுகள் மட்டுமே உயிர் வாழும். உணவு அதிகம் இருந்தால் அனைத்துக் குஞ்சுகளும் உயிர் வாழும்.

குஞ்சு பொரிக்கத் தயாராகும் ஆந்தைகள் ஒழுங்கான முறையில் கூடுகள் கட்டாது. பாறைகளின் விளிம்பிலோ, மரங்களில் வெறும் உதிர்ந்த இலைகள், இறக்கைகளின் மேலேயே முட்டையிடும்.
ஆந்தைகள் இரவில் மட்டுமே வேட்டைக்கு செல்லும். அதனால் இவற்றுக்கு காதுகள்தான் முதல் கண்கள்.
இரவானதும் ஆந்தைகள் தாழ்வாகப் பறந்து செல்லும். அப்போது எலி போன்ற சின்ன சின்ன மிருகங்கள் எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அந்த திசையில் பறந்து சென்று அவற்றை இரையாக்கிக்கொள்ளும்.
ஒரு சிறிய சத்தம் கேட்டதும் ஆந்தை தன் தலையை இரு புறங்களிலும் மாற்றி மாற்றித் திருப்பி சத்தம் வரும் திசையைக் கண்டறிய ஆரம்பிக்கும்.
இரண்டு காதுகளிலும் ஒரே அளவு சத்தம் கேட்டால் ஆந்தை இரைக்கு சரியாக நேர்கோட்டில் இருக்கிறதென்று அர்த்தம். உடனே பறந்து சென்று இரையைத் துல்லியமாக பிடித்துவிடும்.
மற்ற பறவைகளைப்போல் கால்களில் பிடிக்காமல் ஆந்தை தன் அலகில்தான் இரையை கொண்டுசெல்லும்.
பெரிய இரைகளைக் கிழித்து சிறிது சிறிதாக்கி உண்ணும் வழக்கம் உள்ளவை ஆந்தைகள். அதுவே சிறிய இரையாக இருந்தால் அப்படியே முழுசாக விழுங்கிவிடும்.

Friday, April 8, 2011

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.



அப்போஃபிஸ்’ என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.
இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.
எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மன அழுத்தம் நீடித்தால் பணியைத் தொடர முடியாது: விஞ்ஞானிகள் தகவல்



சிறிய அளவு மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சிறிய மன அழுத்தத்தால் 70 சதவீதம் பேர் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாகக் கூடிய நிலை உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வினை ஸ்வீடனை சேர்ந்த பிரிஸ்டல் மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட் பல்கலைகழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வு அறிக்கை நோய் தடுப்பு மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவு மன அழுத்தம், உளவியல் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் 5 ஆண்டுகளில் செயல்பட முடியாத தன்மையையும் ஏற்படுத்துகிறது என அவர்களது ஆய்வு குறிப்பிடுகிறது.
ஸ்வீடன் ஆய்வில் மன நெருக்கடிக்கு உடல் ரீதியாக பிரச்சனைகளும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவினர் 18 வயது முதல் 64 வயது வரை 17 ஆயிரம் பேரை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரியவந்தது.
இதில் 203 பேர் மன நலம் சார்ந்த பிரச்சனைக்களுக்கும், இதர நபர்கள் உடல் ரீதியான சுகவீனத்திற்கும் பலன்களை பெற்றனர். பலன் பெறுவோரில் நான்கில் ஒரு பங்கினர் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற உடல் ரீதியான குறைபாடுகளை கொண்டிருந்தனர்.

Sunday, March 27, 2011

ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் என்பது விஞ்ஞானப்பூர்வமாக மட்டுமே சாத்தியம்-கருணாநிதி


சென்னை: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை. அதை ஒரே நபர் ஊழல் செய்தார் என்பது நம்பக் கூடியதா... விஞ்ஞானப்பூர்வமாக மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயம் இது, என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம், இளைஞன். இது, அவர் கதை-வசனம் எழுதியுள்ள 75-வது படம். இந்த படத்தில், கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணா
இயக்கியுள்ளார். மார்ட்டின் தயாரித்துள்ளார்.

பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியது:

தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு தியேட்டருக்குப் பெயரே கூட 'கருணாநிதி' தியேட்டர்தான். என் பெயரை வைக்கவில்லை-கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியாரின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட்டு வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல-தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!

உடனே யாராவது, 'சினிமாவுக்கு டிக்கெட் வாங்கக்கூட வசதியில்லாத கருணாநிதி' என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.

செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத் தாம்பாளத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு-தங்கக் கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமையெல்லாம்.

நான் ஏழையாக பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச் சீமான் வீட்டுப்பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப் பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்கு போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாக கிடக்கும். நாம் தப்பித் தவறி கையை வைத்து தடவிப் பார்த்தால், யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் ஜாக்கிரதையாக போக வேண்டும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.

பகாசூரன் கதையும் 1.76 ஆயிரம் கோடி ஊழலும்...

பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

'அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்' என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.

'பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்' -என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் 'பல்லுக்குப் பல் இருகாதம்' என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு மட்டும் கேட்கிறார்களா என்ன?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு "பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்'' என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.

படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.

எப்படி "எந்திரன்'' படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக -ரோபோவாக வந்து இந்த காரியங்களை செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம், அதை காட்டுகிறோம்.

இந்த படத்தில் குஷ்பு நடிக்க முன்வந்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் படத்திலே மணியம்மையார் வேடத்திலே பார்த்து, இந்த படத்துக்கு தகுந்தவர் குஷ்புதான் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு, இந்தப்படத்திலே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப்போல, ரஷ்ய நாட்டின் நாவலை முழுமையாகத் தழுவி அல்ல-பின்பற்றி அல்ல-அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தக் கதையில் வருகின்ற முக்கியமான கட்டங்களையெல்லாம் கொஞ்சமும் விடாமல் இந்தப் படத்திலே இணைத்து வசனம் எழுதியிருக்கின்றேன்.

சொல்லி தொலைக்க வேண்டியுள்ளது!

நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெரியாரை, அண்ணாவை, என்னுடைய இளமைக் காலத்திலே சந்திக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன் என்று சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஏற்ப, இந்தப் படத்தில் நான் என்ன கருதுகின்றேனோ, அவைகளெல்லாம் உரையாடல்களாக வந்திருக்கின்றது. ஆனால், அரசியல் வாடை வீசக்கூடிய உரையாடல்களாக அல்ல -தொழிலாளர்களுடைய உணர்வுகளை - பாட்டாளி மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற -அவர்களுடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகின்ற, உணர்த்துகின்ற கட்டங்களாக இந்தப் படத்திலே அவைகளையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட படத்தை இங்கே உங்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக நான் வழங்குகிற நேரத்தில், இதை வசூலுக்காக-பணம் சம்பாதிப்பதற்காக ஒருவேளை மார்ட்டினும் பெஞ்சமினும் அப்படிக் கருதியிருந்தாலும்கூட-என்னைப் பொறுத்தவரையில், சம்பாதிப்பதற்காக அல்ல. ஏனென்றால், அவர்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டிவிட்டு, மீதியை முழுவதும் நான் நன்கொடையாகவே தந்துவிட்டேன் என்பதையும் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள்.

அதை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இதையெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சொல்லியிருக்கிறேன்.

ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல் தரும் ரஜினி!

ரஜினிகாந்த் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், யாரும் அவரை, அவருக்கு கொடுத்த பணத்தை யாருக்குக் கொடுத்தார் என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர் கொடுப்பார். இரண்டு கைகளுக்கும் இடையே, ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கை அறியாமல் அவர் கொடுப்பது எனக்குத் தெரியும்.

என்னை பொறுத்த வரையில், ஒரு அரசியல் வாதியாக, ஒரு கட்சித் தலைவனாக இருக்கின்ற காரணத்தால், எனக்கு வருகிற பணம், படத்திலே வருகின்ற பணம் இவைகளெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு நேரடியாக தரப்படுகிறது என்ற பொருள் அல்ல.

என்னுடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு இன்று நேற்றல்ல, நான் சேலம் மாடர்ன் தியேட்டரில் நம்முடைய வாலி சொன்னதைப்போல, படத்துக்குக் கதை எழுதினேனே, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் 75 படங்கள் எழுதி, ஒவ்வொரு படத்திற்கும் குறைந்த பட்சம் அந்தக் காலத்திலேயே - பராசக்தி வந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் எனக்கு ஊதியம் கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு எனக்கும் சிவாஜிக்கும் சேர்ந்தாற்போல திரும்பிப்பார் படத்திற்காக அவருக்கு இருபதாயிரம் ரூபாய், எனக்கு இருபதாயிரம் ரூபாய் - என்ன வேடிக்கை பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு இருபதாயிரம் ரூபாய் - எனக்கு இருபதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே கொடுத்தார்கள். அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் சூரக்கோட்டையிலே அவர் நிலம் வாங்கினார் - நான் காட்டூரிலே நிலம் வாங்கினேன். அந்த நிலங்கள் அப்படியே இருக்கின்றன. அதைப் பார்க்கின்ற பொழுது இப்போதும் எனக்கு சிவாஜியின் ஞாபகம் வரும்.

எப்படி என்னுடைய பராசக்தி படத்தில் -சிவாஜிக்கு அது முதல் படமாக இருந்து, அவர் பெயரும் புகழும் பெற்றாரோ-எப்படி எம்.ஜி.ஆர். என்னுடைய ராஜகுமாரி படத்திலே நடித்துப் பெயரும் புகழும் பெற்றாரோ-அதைப்போல, தம்பி விஜய்யைப் பொருத்த வரையில் இது அவருக்குப் பெயரும் புகழும், நடிகர் திலகம் சிவாஜியைப்போல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் போல பெயரும் புகழும் அவருக்குத் தரும்..." என்றார் கருணாநிதி