இந்த முறையும் 11.10 பதிப்பினை வெளியிட்டுள்ளது. நான்கு ரிலீஸ் பதிப்பு வெளியானவுடன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஒபேராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப்யூட்டர்களில் பணியாற்ற, போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. கம்ப்யூட்டரில் பதிந்தவுடன், என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப்படுகிறது. ஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்குகிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.
பிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில், அவற்றை எளிதாக இதில் பதிக்கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப்படலாம். பிளாஷ் பிளேயர், கம்ப்யூட்டரில் இல்லை என்றால், அதனைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப்படுகிறது.
ஒபேராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப்பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தரவிறக்கம் செய்வது தொடர்ந்தும் வேகமாகவும் நடைபெறுகிறது.
ஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/ browser/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
|