Saturday, July 2, 2011

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் வேட்டையில் இறங்கின.
இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.

அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளரக்ள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவதின் முதல்கட்டமாக கேபிள் டிவி நிறுவனத்தை தன் கட்டுப்பாடில் இயங்கும் உள்துறைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அரசு கேபிள் டிவி பக்காவாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார். 

கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.
எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார். 

கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர். 

கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார். 

இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும், அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

கமலுக்கு விஸ்வரூபம். ரஜினிக்கு??

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி சோனாக்‌‌சி சின்கா இல்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சோனாக்‌‌சியிடம் வாங்கிய கால்ஷீட்டை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அடுத்தப் படத்துக்குப் போய்விட்டார். அப்படியானால் விஸ்வரூபத்தில் யார் கமலுக்கு ஜோடி?

சோனாக்‌சி சின்கா மாதி‌ரி இந்திய அளவில் குறைந்தபட்சம் இந்தி அளவில் பிரபலமான ஒருவரையே கமல் தேடி வருகிறார். தீபிகா படுகோனும் அவரது லிஸ்டில் இருப்பதாக கூறுகிறார்கள். ஸ்ரேயா நடிப்பார் என்ற செய்தியை ஸ்ரேயாவே மறுத்திருப்பதையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்வது நலம்.

இன்னும் ஓ‌ரிரு நாளில் ஹ‌ீரோயின் யார் என்பது தெ‌ரிந்துவிடம் என நம்பிக்கை தருகிறது கமலின் ஆழவார்பேட்டை அலுவலகம்.

சூர்யாவின் மாற்றான் படத்தில் பாலிவுட் நடிகை சோனா‌க்‌சி சின்காவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. மாற்றான் டீமை முந்திக் கொண்டு அவரை கமலுக்கு ஜோடியாக்கியிருக்கிறார் செல்வராகவன்.
கமல் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. அனேகமாக ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயா‌ரிக்கலாம்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் கமல் ஜோடியாக சோனா‌க்‌சி நடிக்கிறார். செல்வராகவன் அவ‌ரிடம் கதை சொல்லி கால்ஷீட்டை உறுதி செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

கமல் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாயின. அதேநேரம் இந்தி நடிகர் சத்ருகன் சின்காவின் மகள் சோனா‌க்‌சி சின்காவை சந்தித்து செல்வராகவன் படத்தின் கதையை கூறினார். ஆனால் படத்தில் நடிக்க உடனே சோனா‌க்‌சி ஒத்துக் கொள்ளவில்லை.

இந்தியில் பிஸியாக இருக்கும் போது தமிழில் நடிக்க வேண்டுமா என்பதே அவரது தயக்கம். கமல் ஹீரோ என்ற விஷயம் அவரது தயக்கத்தை விரட்டியிருக்கிறது. கமல் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சோனாக்‌சி சின்கா.

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படம் மூன்று மொழிகளில் தயாராகிறது. ஹீரோயின் சத்ருகன் சின்காவின் மகள் சோனா‌க்‌சி சின்கா.

ரொம்ப கறார் பேர்வழி என்று பாலிவுட்டில் பெயர் எடுத்த இவர் கமலுடன் ஜோடியாக நடிக்க இரண்டு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். கமலும், செல்வராகவனும் சேர்ந்து செலக்ட் செய்த கதாநாயகி அல்லவா... தர சம்மதித்திருக்கிறார் தயா‌ரிப்பாளர். 

நாயகி சம்பளத்தை வைத்து படத்தின் பட்ஜெட்டை கணக்குப் போட்டாலே... கண்ணை கட்டுதே சாமி.

கமல் செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

மன்மதன் அம்பு என்ற மிகச் சுமாரான படத்துக்குப் பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் கமல் நடிக்கிறார். சோனா‌க்‌சி சின்கா நாயகி. பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கும் என தெ‌ரிகிறது.

இந்தப் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது. ப‌ரிசீலனைதான், இன்னும் பெயர் இறுதிச் செய்யப்படவில்லை.

கமல், செல்வராகவன் இணையும் படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் இருந்தது.

இந்த பிரமாண்டப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. சோனா‌க்‌சி சின்கா ஹீரோயின். தமிழில் அறிமுகமான நடிகைகளில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவராகத்தான் இருப்பார். இவருக்கு சம்பளம் இரண்டு கோடிகள்.

விஸ்வரூபம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இந்தப் பெயரே நன்றாக இருக்கிறது, இதுவே இருக்கட்டும் என கமல் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.

அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க வேலைகள் நடந்து வருகின்றன.

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்?

தழைய தழைய தாவணி அணிந்த கல்லூரி சிட்டுகள், இன்று வசதியாய் ஜீன்ஸ், பனியனுக்கு மாறி விட்டனர். தலைவாழை உணவு சுருங்கி, கிண்ணத்தில் "ஸ்பூன்' ஆக மாறி விட்டது. "கால் காசு என்றாலும் அரசு வேலை' என்ற மனப்பான்மை மாறி, கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோம். நமக்கே நமக்கு என்று சொல்லக்கூடிய அன்பு, பாசம், அரவணைப்பு, உற்றம், சுற்றம்... என்ற சிந்தனைகள் கூட மாறி "தன் குடும்பம்' மட்டுமே என வாழ பழகி விட்டோம். ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம்... கண்ணீர் விடும் நிலைக்கு மாறி வருகிறது. எங்கே இருக்கிறது கோளாறு? ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தான் இருக்கிறது என, "நெற்றி பொட்டில்' அறைந்தது போல் புரிய வைத்தனர், அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. கல்லூரி மாணவியர்.
எஸ்.சுபாஷினி: இன்றைய இளைஞர்கள், அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்கின்றனர். அந்த அறிவை தாய்நாட்டிற்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டு மோகத்தால் அங்கு சென்று நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

எம்.செய்யது அலி பாத்திமா: அன்னிய நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அந்த வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. அனைத்து தொழில் நுட்பங்களும், அன்னிய நாட்டிலிருந்து தான் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் இந்திய பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
எஸ்.தேவி: வெளிநாட்டு மோகத்தால், இந்தியர்கள் தங்களது சுய சிந்தனைகளை இழந்து வருகின்றனர். அங்குள்ள உடைகளை, இங்குள்ள குழந்தைகளுக்கு அணிய செய்து கலாசாரத்தை சீரழிக்கின்றனர். நம் பண்பாடு, கலாசாரம் வெளிநாட்டின் மோகத்தினால் சீரழிந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்கள் வருகையால், உள்நாட்டில் குடிசைத் தொழில்கள் அழிந்துள்ளன.

கே.மஞ்சு: சுதேசி பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. கதராடை உடுத்தி சென்றால் ஏளனமாக பார்க்கின்றனர். ஒருவன் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை வைத்தே, அவனை மதிக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, வெளிநாடுகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.

எம்.சவுந்தர்யா: வியாபாரத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை மறந்து விட்டனர். வெளிநாட்டு உணவு, ஆடை, தொழில்நுட்பம் அனைத்தும் மனிதனுக்கு அழிவை தான் தருகின்றன. சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை நம் நாட்டின் பொக்கிஷமாக உள்ளது. இதை வெளிநாடுகள் பின்பற்ற முன் வந்துள்ளது.

ஜி.ஹேமலதா: அவசர உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. இது வெளிநாடுகளில் தான் உள்ளது. உறுப்புக்கள் மாற்றும் சிகிச்சை உட்பட நவீன மருத்துவ சிகிச்சையால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய நோய்க்கு பாட்டி மருத்துவம் சரிப்படாது. வெளிநாட்டு தொழில் நுட்பம் தான் மனித வாழ்க்கையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எம்.கோகிலவாணி: நம் நாட்டில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயற்கை உற்பத்திக்கு திரும்பி வருகின்றனர். மனித உழைப்பு பிரதானமாக மாறும் நிலை மீண்டும் ஏற்படும். வெளிநாட்டு பொருட்களால் மனிதனுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்த முடியும்.

எஸ்.சுகன்யா: வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக, தரமாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. பொருட்கள் வாங்கும் போது, எந்த நாட்டு உற்பத்தி என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவிற்கு வரி வருவாயும், அந்த நாடுகளுடன் நட்புறவும் ஏற்படுகிறது.

உயிரைப் பறித்த சீன மொபைல்

குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை. சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.

நோக்கியா இ6 - முன்பதிவு தொடக்கம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,999. இதனை மூன்று தவணைகளிலும் செலுத்தலாம். 

2.4 அங்குல, 640 x 480 பிக்ஸெல் ரெசல்யூசன் திறன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த முடியாத கார்னிங் கொரில்லா கிளாஸ், 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளன. இ5 ஸ்மார்ட் போனைப் போல இதிலும் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, 2டி மற்றும் 3டிக்கான கிராபிக்ஸ் ஆக்ஸிலரேட்டர், கூடுதல் கிராபிகல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. 
ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாத காலம் தாக்குப் பிடிக்கக் கூடிய 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 7.30 மணி நேரம் பேசக் கூடிய வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை---பி மற்றும் புளுடூத் தொழில் நுட்பம், A2DP கொண்ட புளுடூத் ஹெட் போன், ஆகியவை இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் பரிமாணங்கள் 115.5 x 59 x 10.5 மிமீ; எடை 133 கிராம். 
இந்த போனில் தரப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இரண்டு எல்.இ.டி. பிளாஷ், 2 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், நொடிக்கு 24 பிரேம் வீடியோ பதிவு ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 

நோக்கியா இந்தியா இணைய தளத்தில் இதனை வாங்குவதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். என்று இந்த போன் வழங்கப்படும் என இந்த செய்தியினை எழுதும் வரை நோக்கியா அறிவிக்கவில்லை.

எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET DOWNLOAD MANAGER!


நாம் தமிழ் திரைப்பட பாடல்களை ஆன்லைன் மூலமாகவும் கேட்கிறோம், அல்லது தரவிறக்கம் செய்தும் கேட்கிறோம். ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்றால் நான் ஒவ்வொரு பாடலாக தான் தரவிறக்கம் செய்கிறோம். அந்த ஐந்து பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய FLASHGET DOWNLOAD MANAGER என்ற மென்பொருள் உதவுகிறது. நிறைய நண்பர்கள் இந்த தரவிறக்க மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே கிளிக்கில் ஒரு பாடல்கள் தொகுப்பை எவ்வாறு தரவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.



FLASHGET DOWNLOAD MANAGER மூலம் தரவிறக்கம் செய்ய FIREFOX BROWSER யூஸ் செய்ய வேண்டும். ஏனெனில் FIREFOX ஆனது, FLASHGET ஐ ஒரு ADD-ON ஆக இணைத்துக்கொள்கிறது. எனவே FIREFOX BROWSER மூலம் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்தும் FLASHGET மூலமாகவே தரவிறக்கம் செய்யப்படுகிறது.

TAMILWIRE என்ற இணைய தளம் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய நன்கு ஒத்துழைக்குது. TAMILWIRE இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்பட பாடல்கள் கொட்டிக் கிடக்கிறது. புதிய படங்கள் முதல் பழைய படங்கள் வரை பாடல்கள் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நிறைய பாடல்கள் தொகுப்பும் உள்ளது. 

சரி, விஷயத்துக்கு வருவோம். TAMILWIRE இணைய தளத்தில் ஒரு பாடல் தொகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 

நான் POOVAI UNNAI NESITHEN (15 TAMIL SONGS) என்ற தொகுப்பை எடுத்துக் கொண்டேன். 

அந்த URL ஐ ஓபன் செய்தால் கீழ்க்கண்டவாறு பாடல்கள் பக்கம் ஓபன் ஆகும்.


இதில் முதலில் உள்ள பாடல் மேல் ரைட் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் பக்கத்தில் சீன எழுத்தில் மூன்று OPTION கள் இருக்கும். அதில் முதலாவது இருக்கும் OPTION ஐ கிளிக் செய்தால் அந்த ஒரு பாடல் மட்டுமே தரவிறக்கம் ஆகும். இந்த முறையில் தரவிறக்கம் செய்தால் ஒவ்வொரு பாடலுக்கும் நாம் மீண்டும் மீண்டும் கிளிக் செய்து தரவிறக்க வேண்டும். இம்முறையில் நாம் ஒவ்வொரு பாடலும் தரவிறக்கம் ஆகும் வரை அடுத்த பாடலை தேர்ந்தெடுக்க காத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு தீர்வு தான் இரண்டாவது OPTION இல் உள்ளது. 




அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்


அதில் மேலே CHOOSE FILE TYPE இல் காட்டப்பட்டுள்ள வகைகளில் MP3 ஐ மட்டும் வைத்து விட்டு மற்ற டிக் மார்க்குகளை எடுத்து விட வேண்டும். கீழே படத்தில் காண்க.


பின்னர் கீழே DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.


பின்னர் மீண்டும் DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.


இப்பொழுது எல்லா பாடல்களும் ஒவ்வொன்றாக தரவிறங்க ஆரம்பிக்கும். தரவிறக்கத்தை PAUSE செய்யும் வசதி உள்ளது. இணைய இணைப்பு வேகமாக இருக்கும் நேரத்தில் PLAY செய்து மீண்டும் தரவிறகத்தை தொடரலாம். தரவிறக்கம் முடிந்ததும் கணினி தானாக SHUTDOWN ஆகுமாறு செய்ய வேண்டுமானால் மேலே TOOLS என்பதை கிளிக் செய்து SHUTDOWN PC WHEN DONE என்ற OPTION ஐ டிக் செய்தால் போதும். 

TAMILBEAT இல் எப்படி?


மேலே படத்தில் கடைசி கட்டத்தை ரைட் கிளிக் செய்து இரண்டாவது OPTION ஐ SELECT (கீழே படம் பார்க்க) செய்து மேற்கண்ட முறை மூலம் தரவிறக்கம் செய்யலாம்.


FLASHGET மூலம் TORRENTகளையும் தரவிறக்கம் செய்யலாம். தனியாக TORRENT DOWNLOAD MANAGER INSTALL செய்ய அவசியம் இல்லை. இதற்கும் PAUSE/PLAY ஒத்து வரும். தேவைப்படும் பொழுது தரவிறக்கம் செய்யலாம்.

TAMILWIRE இல் தரவிறக்கம் செய்யாமலே அனைத்து பாடல்களையும் வரிசையாக கேட்க ஒரு எளிய வசதி உள்ளது. கீழே படத்தில் இடது பக்கமாக ஒரு பட்டன் இருக்கிறதே, அந்த பட்டனை கிளிக் செய்தால் அடுத்த படத்தில் இருப்பது போல ஓபன் ஆகும். அங்கே PLAY பட்டனை அழுத்தி பாடல்களை கேட்கலாம்.






நண்பர்களே, ஒரு இணைய பக்கத்தில் உள்ள பாடல்களை ஒரே கிளிக் மூலம் தரவிறக்கம் செய்யும் முறையை சொல்லியுள்ளேன். தெரிந்தவர்கள் விட்டு விடலாம். தெரியாதவர்கள் குறித்து கொள்ளுங்கள்.

இம்முறை TAMILWIRE , TAMILBEAT தளங்களில் சோதனை செய்து பார்த்தேன். மற்ற தரவிறக்க தளங்களில் சோதனை செய்யவில்லை.



என்ன நண்பர்களே! பயனுள்ளவையாக இருக்கிறதா?