Showing posts with label மனிதவளம். Show all posts
Showing posts with label மனிதவளம். Show all posts

Saturday, November 12, 2011

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!


வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும்கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.வெளுத்ததெல்லாம் பால்  மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்துவாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்க1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களதுபேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதிமற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் "காதல்" பட காட்சிதான். அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் 
அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்துவளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.

14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது.
போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க னுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம்

நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வேலையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலையில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தை களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னுடைய, 25ம் வயதில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மணந்து கொண்டேன். 

அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேருந்து விபத்தில், என் மனைவியையும், குழந்தையும் எடுத்துக் கொண்டான். தற்போது, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோரும், உறவினர்களும் கட்டாயப்படுத்துகின்றனர்; எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. வம்ச விருத்திக்காகவாவது நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். எனக்கு இன்னும் வயதும், இளமையும் உள்ளதாக கூறுகின்றனர். அதற்காகவே திருமணம் செய்து கொண்டாலும், என்னால் உண்மையான கணவனாக இருக்க முடியாது என்று கருதுகிறேன். நான் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன். தங்களது மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு வாழ்வு சிக்கிரம் முடிய வேண்டும் என, எண்ணுகிறேனே ஒழிய, தானாக போக்கிக் கொள்ளும் எண்ணம் அறவே இல்லை. 

— இப்படிக்கு,

அன்புள்ள மகனுக்கு —
காதல் மனைவியையும், அருமை மகனையும் இழந்த உன்னை, இரண்டாம் திருமணம் செய்ய துரத்துகின்றனர் இல்லையா?

ஆலோசனை கூறுவதற்கு முன், உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்தேன். மனைவி, மகனை இழந்த துக்கம் முகத்தில் பேய் தனமாக அறைகிறது. வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது. வெட்டுண்ட பல்லி வால் போல் துள்ளத் துடிக்கிறேன். ஜல்லி சிமென்ட் சுழற்றும் இயந்திரத்திற்குள் என் இதயம்.

ஒரே ஒரு நொடி உன்னிடத்தில் என்னை பொருத்தி பார்த்ததற்கு இத்தனை தாக்கம் என்றால், ஆயுளுக்கும் அதே சோகத்தில் நீடித்து நிற்கப் போகும் உனக்கு எத்தனை தாக்கம் இருக்கும்?

எல்லாரும் போடும் கணக்குகளுக்கு தனித்தனி விடை அறிவிக்கும் கணித மாமேதை கடவுள். மனிதராய் பிறக்கும் எல்லாருக்கும் யவ்வனமான, ஆரோக்கியமான, பொருளாதார ஏற்ற தாழ்வற்ற நூறாண்டு ஆயுள் வழங்க வேண்டியதுதானே கடவுள்? அப்படிபட்ட உலகை படைக்க கடவுளுக்கு சக்தி இல்லையா? முந்தைய பிறவியின் பாவ புண்ணியத்தை நேர் செய்ய வந்து போனாளோ உன் மனைவி? இனி, உன் மகனாய் பிறந்த ஒரு வயது குழந்தைக்கு பிறவிகள் இல்லாமல் இறைவனோடு இணைந்து போனானோ? மரணத்திற்கு நாம் சொல்லும் பொருள் கடவுளின் அகராதியில் இல்லையோ? தான் நேசிப்பவர்களை கொடுக்காமல், ஆசிர்வதிக்கிறான் இறைவன்; தான் வெறுப்பவர்களை கொடுத்து தண்டிக்கிறான். அப்படித்தானோ உன் கதை? வெட்டுக் குத்தில்லாமல் நிறைவேறிய காதல் திருமணம், அரை நூற்றாண்டு தொடர்வது ஆண்டவன் பார்முலாவிற்கு எதிரானதோ?

அழகான மனைவி இருக்க, வெளியில், நான்கு பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்கிறான் கணவன். கள்ளக் காதலியை மகிழ்விக்க, மனைவியை கொல்ல வாடகைக் கொலையாளி அமர்த்துகின்றான் கணவன். கள்ளக் காதலுக்கு தொல்லையாக இருக்கும் குழந்தையை, விஷம் வைத்துக் கொல்கிறான்(ள்) கணவன் - மனைவி. இப்படி, ஆயிரம் துரோக முடிச்சுகள் ஆண் - பெண் உறவுகளில் காணப்படுகின்றன. நீ இந்த முடிச்சுகளுக்கு விதிவிலக்கான ஆண்.

உன் திருமண வாழ்க்கை, இரண்டே ஆண்டுகள் நீடித்திருக்கிறது. மனைவி - மகன் மரணத்திற்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியனாய் உழன்று வருகிறாய். உனக்கு தற்கொலை எண்ணம் அறவே இல்லை என்பது பெரும் ஆறுதல். இன்னும், 41 - 45 ஆண்டுகள் நீ உயிர் வாழப் போவதாய் வைத்துக் கொள். மறுமணம் இல்லாது எப்படி காலத்தை ஓட்டுவாய்? பத்து வருடங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்துவிட்டு, 40 வயதுக்கு மேல் திருமண ஆசை வந்தால் என்ன செய்வாய்? உன் மறுமணம், உன் காதல் மனைவிக்கு நீ செய்யும் துரோகமல்ல. மாற்றாக, உன் திருமணத்தில் அவளது ஆத்மா நிம்மதி பெருமூச்சு விடும்.

தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம். அதை, நீ செயற்கையாக கட்டுப்படுத்த ஒரு கட்டத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். விளைவுகள் உன்னையும், உன் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும்.

பிரவீணா மரணத்திற்கு பின், பூர்ணிமா ஜெயராமை மணந்து, வாழ்க்கையை பாக்யராஜ் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லையா? சரண்யா, சாந்தனு என்று, இரு மணி, மணியான குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லையா?

ஈ.வெ.ரா., தள்ளாத வயதில், மணி அம்மையாரை மணந்து கொள்ளவில்லையா? நபிகள் நாயகம், கதீஜா அம்மையார் மரணத்திற்கு பிறகு, மறுமணம் செய்து கொள்ளவில்லையா?

மறுமண தேவை ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது, தகுதிக்கு தகுதி, மதத்திற்கு மதம் மாறுபடும். உன்னைப் பொறுத்தவரைக்கும், உனக்கு மறுமணம், நூறு சதவீதம் தேவை.

குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என நீ நினைப்பது, "பெனடிக்'கான விஷயம். நீயும் சிரமப்பட்டு, தத்து குழந்தையையும் சிரமப்படுத்துவாய். உன்னையையே கவனிக்க ஆளில்லாத போது, உன் தத்துக் குழந்தையை யார் கவனிப்பது? கல்யாணமாகி, 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, செயற்கை கருத்தரிப்பும் சாத்தியம் இல்லை, ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என ஒரு தம்பதி சொல்வது வேறு; நீ சொல்வது வேறு.

மறுமணம் செய்து கொண்டால், வரும் மனைவிக்கு உண்மையான கணவனாக இருக்க முடியாது என கருதுகிறாய்; இது, உண்மை அல்ல. புது மனமும், மனமும் இணைந்து விட்டால், புது உடலும், உடலும் இணைந்து விட்டால், கணவன் மனைவிக்குள் உண்மை பூத்துக் குலுங்கும்.

மனித எண்ணங்கள் நிலையானவை அல்ல. மனித மனம் சீதோஷ்ண நிலை போன்று நிமிடத்திற்கு, நிமிடம் மாறக் கூடியது. இன்று, உனக்கு வறண்ட வானிலை; நாளை, ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்யும்.

காமத்தை அடக்கினால், அது உன் கேரியரை பாதிக்கும்; நாளடையில் காம விகாரங்கள் பெருகும்.

விழித்துக் கொள்.

படித்த, பணிக்கு செல்லும் விதவனை புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெற்ற, 25 வயது பெண்ணை, ஆற அமர தீர விசாரித்து, திருமணம் செய்து கொள் மகனே.

அடுத்தடுத்து உனக்கு, இரு குழந்தைகள் பிறக்கும். அவைகள், உன் இறந்து போன மனைவி, மகனாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்!

Friday, November 4, 2011

200 வயது வரை வாழ ஒரே மாத்திரையால் முடியும்


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 200 ஆண்டுகளைத் தாண்டி வாழமுடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.


மருத்துவத்துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல்நலத்துடன் 200 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறதுÕÕ என்றார்.

Wednesday, October 26, 2011

காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

10 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் மூளையில் முதல் நியூரோகெமிக்கல் மனித இரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டுச்சிரிப்பும், வியர்வையும் ஏற்பட்டது.


காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞானக் கருவிகளால் அளக்கமுடியும். ஆனால் காதல்... அதன் அடையாளங்கள் குழப்பமானவை.  அஜீரணரமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது. காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போதும் மூளையிலிருந்து Amphitamines,Dopamine, Nor Epi Nephrine,   குறிப்பாக Phenile Ethyl amine போன்ற இரசாயனப் பொருட்கள் இரத்தத்தில் பாய்கின்றன. காதலும். பதற்றமும் ஒன்று  போல் அறிந்தனர்.  காரணம் இரண்டு உணரச்சிகளின்  போதும். இதே கெமிக்கல் தான் இரத்தத்தில் கலக்கின்றன. காதல் என்பது இயற்கை தரும்  போதை.  போகப் போக இந்த Ethyl amine பழகிப்போய், ஒருவாரத்திற்க்குப்பின் காதலியைத் தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது.இவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால், வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல் மீண்டும் சுரக்கிறது. இருந்தும் பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்கள்.மூளையில் Entorphin என்கிற மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்ழக்க வைக்கிறது.Oxytocin என்னும் பொருள் காதலுக்குக் காரணம். நரம்பை நிரடி,  தசைகளைச் சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் Uterus சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது. ஆண், பெண் சேர்கையின்போது இருவர் உடலிலும் Oxytocin அளவு 3to 5# வரை அதிகரிக்கிறது. கடைசிகட்ட வாணவேடிக்கைகெல்லாம் காரணம், இதே கெமிக்கல் தான்.மேற்கத்திய நாகரீத்தில் 4 வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில்  முதல்அலுப்பு தோன்றுகிறது.  திருமணமாகி 4 வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இன்னும் 4 ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5#  ஜீவராசிக்குத்தான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி. சிலவேளை மற்றொருத்தி என்கிற கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த சிலவேளை மற்றொருத்திக்குக் காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்று பார்த்து, அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவை என்கிறார்கள். Homosex  க்கு ஆதார காரணம் காதல்தான் என்றாலும் பிறப்பின்போது ஏற்பட்ட சில Bio Chemical Trouble தான் காரணம். இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக  நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். இந்த உருவம் நம் ஆரம்ப காலத்தில் அழமனதில் உருவாகிறது.

Friday, October 21, 2011

பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்..

சொந்தங்களை விடவும் காதலை விடவும் நட்புதான் சிறந்தது என்பது உண்மையாக இருந்தால்...........
சொந்தத்தை நட்பாக்கி காதலித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா........

உங்களுக்கு சொந்தமான உங்கள் உங்கள் வாழ்க்கை துணையை நல்ல நன்பனாக (அல்லது) நன்பியாக நினைத்து......
உங்களின் அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டு
அது போல் நல்ல காதலன் (அல்லது)காதலியாக நினைத்து அன்புசெலுத்தி வாழ்ந்து பாருங்கள்.....
நிச்சயம் இதை விடவும் பெரிதாக ஒரு மனிதன் இந்த உலகில் பெறும் மகிழ்ச்சி இருக்கவே முடியாது.............
அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி வாழ்க்கை துணைவியுடன் பகிர்ந்து கொண்டால், அடுத்த விநாடியிலிருந்து பெரும் எதிரியாக மாறிவிடுவார்கள்

பகிர்ந்து கொள்ளும் அளவிர்க்கு நாம் வாழ்ந்தால்!!!!!! ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது.........
அப்படி முடியாவிட்டால் அதர்க்கு பெயர் காதலோ...... பாசமோ.....நட்போ கிடையாது நிச்சயம் நடிப்புதான்.......
95% நபர்களும் இந்த முகமூடி வாழ்க்கையைதான் விட்டுக்கொடுத்தல் என்ற பெயரில் வாழ்கிறாற்கள்..

நாம் ஒரு வரைமுறையை அமைத்து கொண்டு பிள்ளைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றால் அவற்களின் வெறுப்பையும் கோபத்தையும்தான் சம்பாதிக்க முடியும்
மாறாக அவர்களின் இடத்திற்க்கு இறங்கி சென்று அவர்களுடன் நன்பர்கள் போல் பழகி பாருங்கள் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்பாற்கள் நமது கட்டுப்பாட்டிற்க்குள் இருப்பாற்கள் முயன்றுதான் பாருங்களேன்.

பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு நாட்டை பற்றி, அரசியலை பற்றி,உலகை பற்றி, எதுவும் தெரியாததற்க்கு ஆசிர்யர்களை மட்டும் குறை கூறத் தேவை இல்லை.......
மாறவேன்டியது நமது கல்வி திட்டமும் பெற்றோற்களின் மனோ இச்சைகளும்தான் தன் பிள்ளை எல்லாவற்றிலும் முதலாவதாக வர வேண்டும் என்று 3வது வயது முதலே இவர்கள் செய்யும் கெடுபிடியும் புத்தக பூச்சிகளாகவெ குளந்தைகளை மாற்றி விடுவதும்தான் இதற்க்கு முக்கிய மிக முக்கிய காரணம் என்பதுதான் உண்மை



Saturday, July 9, 2011

பெற்றோர்களே சிந்திப்பீர்...!

சமச்சீர் கல்வி, நடைமுறைக்கு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் - ஏ.பி.எல்., என்ற அட்டை வழிக் கற்பித்தல் முறை, நடைமுறையில் உள்ளது.




இம்முறை தொடருமா, இல்லை நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களுடன், தரமான முறையில், அதிக பொருட்செலவில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட கற்றல் அட்டைகள், மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கின்றன.

ஆந்திராவில், மலைக் கிராம மக்களின் குழந்தைகளுக்காக, செயல்வழிக் கற்றலை, முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியது. இதை காப்பி அடித்துத் தான், கடந்த அரசு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக நடைமுறைப்படுத்தியது."அட்டை வழிக் கற்பித்தல் முறை, ஆசிரியர்களை சுறுசுறுப்பாக வேலை வாங்கும் திட்டம்' என, சிலர் குறிப்பிடுகின்றனர்.
"மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்' என்கிறது இன்னொரு தரப்பு. "பெற்றோர் மத்தியில் இந்த கூத்து எடுபடவில்லை' என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள், பாடத்திற்கு ஏணிப்படி அட்டவணைகள் கொடுத்த பின், இன்றைய நிலையில், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை, ஏ.பி.எல்., முறை வேண்டுமா, வேண்டாமா என, ஓர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், 95 சதவீதம் ஆசிரியர்கள், இம்முறை வேண்டாம் என்றே ஓட்டளிப்பர்.

மாதம்தோறும், தொடக்கப் பள்ளி மாணவனுக்கு, 100 ரூபாய் உதவித் தொகை, தரமான பாட நூல், தரமான பயிற்சி புத்தகம், தரமான சீருடைகள், மதிய உணவு, தேர்வு முறைகள், மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவன் முன்னேற்ற அறிக்கை, பெற்றோருக்கு வழங்குதல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பள்ளிப் பதிவேடுகள் வழங்க வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ரெக்கார்டு ஷீட், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் போலிகள் நுழையா வண்ணம் வழங்க, அரசு நடவடிக்கை, போதுமான கட்டமைப்பு வசதி, தர மேம்பாடு, உபகரணங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, இதை செய்யுமா?

AEA வயது வந்தவர்க்கு மட்டும்....

இது கொஞ்சம் ஆபாசமான திரி. எனவே இத்திரியிலிருந்து வயது வராதவர்களும் புனிதப் பசுக்களும் விலகிவிடுவது மிகவும் நல்லது. இதற்கு மேலும் பிடிவாதமாக இருந்து இதை வாசித்து விட்டு என்ன லீனா அய்யரே இப்படி ஆபாசமாக பேசுறேள் என்றால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது.


சரி அப்புறம் நான் ஏன் இப்படி ஒரு ஆபாசமான பதிவை பதிகிறேன் என நீங்கள் நினைக்கலாம். இந்தக் களத்தில் அறிவுசார் பதிவுகள் குறைந்து கொண்டே போகிறது. பல்திசை அறிவார்ந்த விசயங்களை விட்டு நாங்கள் விலகிக் கொண்டே போகிறோம். இதை இனி மாற்ற வேண்டும். அதற்காக ஒரு கிளுகிளுப்புடன் கூடிய தெரிந்து வேண்டிய பதிவு இது.

சரி பேச்சு எதற்கு விசயத்து வந்திருவோம்......மனித மனம் என்பது மிக விசித்திரமானது. நாம் நினைக்க முடியாத பல செயல்களை எம்மைச் செய்யச் சொல்லி வற்புறுத்தும். அதன் மூலம் எமக்கு ஒரு திருப்தியையும் அது ஏற்படுத்தும். உதாரணமாக மிகவும் பணக்காரர்களுக்கு, அவர்களுக்கு தேவையேயில்லாத வகையில் சிறு சிறு பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும். இதை கிளப்டமேனியா என்பார்கள். இதனால் அவர்கள் அடைவது பொருளை கிடைப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியல்ல. அந்தப் பொருளைத் திருடும் போது கிடைக்கும் ஒருவித கிக் தான் அவர்களை இதைச் செய்யத் தூண்டுகிறது. பிடிபட்டால் எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படும் என்பதைத் தொடர்ந்து அந்த பாரிய இழப்பை ரிஸ்க்காக வைத்து கிடைக்கும் கிக்.

இப்போ நான் சொல்லப்பஓவதும் அது போல மனநிலை சம்மந்தப்பட்ட ஒன்றுதான். ஆனால் செக்ஸ் சம்மந்தப்பட்டது. ஆங்கிலத்தில் AEA என்று சுருக்கமாக சொல்லப்படும் Auto Erotic Asphyxia பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா....?

தனது மூச்சை பலவிதங்களில் தாங்களே நிறுத்தித் தடைசெய்யும் போது செக்ஸின் உச்சத்தை அடைவது. அதாவது ஆண்களில் சிலருக்கு, தங்கள் முகத்தை பாலித்தீன் பைகளால் மூடியோ அல்லது கயிற்றினால் இறுக்கியோ மூச்சை அடைக்கப் பண்ணி மயக்கம் வரும் நிலைக்கு முன்னர் அவர்களுக்கு பாலியல் திருப்தி கிடைக்கும். மூளைக்குச் செல்லும் ஆக்சிசன் தடைப்படுவதால் ஏற்படும் ஒருவித செயல்பாட்டால் இது நடைபெறுகிறது.

இந்தப் பழக்கம் அதிகமாக மேலை நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் உண்டு. இதில் ஆச்சரியமான புள்ளிவிபரம் என்னவென்றால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நினைத்த பல ஆண்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு உச்சபச்சமாக பரிதாபமாக உயிர்விட்டார்கள் என்பதுதான்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி இப்படியான AEA க்கள் அதிகரித்து வருகிறது என்பதுதான்.

Saturday, July 2, 2011

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்?

தழைய தழைய தாவணி அணிந்த கல்லூரி சிட்டுகள், இன்று வசதியாய் ஜீன்ஸ், பனியனுக்கு மாறி விட்டனர். தலைவாழை உணவு சுருங்கி, கிண்ணத்தில் "ஸ்பூன்' ஆக மாறி விட்டது. "கால் காசு என்றாலும் அரசு வேலை' என்ற மனப்பான்மை மாறி, கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோம். நமக்கே நமக்கு என்று சொல்லக்கூடிய அன்பு, பாசம், அரவணைப்பு, உற்றம், சுற்றம்... என்ற சிந்தனைகள் கூட மாறி "தன் குடும்பம்' மட்டுமே என வாழ பழகி விட்டோம். ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம்... கண்ணீர் விடும் நிலைக்கு மாறி வருகிறது. எங்கே இருக்கிறது கோளாறு? ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தான் இருக்கிறது என, "நெற்றி பொட்டில்' அறைந்தது போல் புரிய வைத்தனர், அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. கல்லூரி மாணவியர்.
எஸ்.சுபாஷினி: இன்றைய இளைஞர்கள், அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்கின்றனர். அந்த அறிவை தாய்நாட்டிற்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டு மோகத்தால் அங்கு சென்று நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

எம்.செய்யது அலி பாத்திமா: அன்னிய நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அந்த வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. அனைத்து தொழில் நுட்பங்களும், அன்னிய நாட்டிலிருந்து தான் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் இந்திய பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
எஸ்.தேவி: வெளிநாட்டு மோகத்தால், இந்தியர்கள் தங்களது சுய சிந்தனைகளை இழந்து வருகின்றனர். அங்குள்ள உடைகளை, இங்குள்ள குழந்தைகளுக்கு அணிய செய்து கலாசாரத்தை சீரழிக்கின்றனர். நம் பண்பாடு, கலாசாரம் வெளிநாட்டின் மோகத்தினால் சீரழிந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்கள் வருகையால், உள்நாட்டில் குடிசைத் தொழில்கள் அழிந்துள்ளன.

கே.மஞ்சு: சுதேசி பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. கதராடை உடுத்தி சென்றால் ஏளனமாக பார்க்கின்றனர். ஒருவன் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை வைத்தே, அவனை மதிக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, வெளிநாடுகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.

எம்.சவுந்தர்யா: வியாபாரத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை மறந்து விட்டனர். வெளிநாட்டு உணவு, ஆடை, தொழில்நுட்பம் அனைத்தும் மனிதனுக்கு அழிவை தான் தருகின்றன. சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை நம் நாட்டின் பொக்கிஷமாக உள்ளது. இதை வெளிநாடுகள் பின்பற்ற முன் வந்துள்ளது.

ஜி.ஹேமலதா: அவசர உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. இது வெளிநாடுகளில் தான் உள்ளது. உறுப்புக்கள் மாற்றும் சிகிச்சை உட்பட நவீன மருத்துவ சிகிச்சையால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய நோய்க்கு பாட்டி மருத்துவம் சரிப்படாது. வெளிநாட்டு தொழில் நுட்பம் தான் மனித வாழ்க்கையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எம்.கோகிலவாணி: நம் நாட்டில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயற்கை உற்பத்திக்கு திரும்பி வருகின்றனர். மனித உழைப்பு பிரதானமாக மாறும் நிலை மீண்டும் ஏற்படும். வெளிநாட்டு பொருட்களால் மனிதனுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்த முடியும்.

எஸ்.சுகன்யா: வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக, தரமாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. பொருட்கள் வாங்கும் போது, எந்த நாட்டு உற்பத்தி என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவிற்கு வரி வருவாயும், அந்த நாடுகளுடன் நட்புறவும் ஏற்படுகிறது.

Tuesday, June 21, 2011

இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்

ஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது! 

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார். 

1. திருமண முறிவுகள் அதிகமானது 

2. அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது 

3. இன்ப வெறி - அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. 

4. மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது. 

5. சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் போனது. 

இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். 

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. 

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது. 

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது. 

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி - தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது. 

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது. 

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள். 

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை. 

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள். 

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது? 

.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம். 

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம். 

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம். 

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம். 

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம். 

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு. 

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா? 

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான். 

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது. 

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன் -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம். 

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்? 

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள். 

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா? 

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை. 

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம். 

அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம். 

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை. 

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம். 

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி? 

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். 

’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!’ 

உங்கள் கண்களை, உங்கள் காதுகளை, உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...! 

‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டியல் போட்டார்கள். 

இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்: 

''உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்''

Saturday, June 11, 2011

இந்தியாவிலே முதன்முதல் பிளாஸ்டிக்கை தடை செய்த மாவட்டம் கன்னியாகுமரி

இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .
 
 பொருள் வாங்க பை எடுத்து செல்லவில்லை என்றால் பை எடுத்து வர சொல்லி கடைகாரர் திருப்பி அனுப்பிவிடுவார் .சாதாரண பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்று பொருள் வாங்கினாலும் இதே நிலைதான் .உண்மையிலேயே இது ஒரு பெரிய விஷயம்தான் .
பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .
எனினும் பேருந்துகளில் பயணிக்கும்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் தென்படுகின்றன .இது குறித்து அங்குள்ளவர்களிடம் வினவியபோது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் அருகிலுள்ள நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதால் அங்கிருந்து வருபவர்கள் மூலமாக இங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிடுகின்றன என்று கூறினார்கள் .
எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .

பலே கன்னியாகுமரி மாவட்டம்!

கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கப் போறீங்களா? கீழே உள்ள எண்களை கவனித்தீர்களா?

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .


குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்

Friday, April 29, 2011

செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்!



+2 படித்து முடித்த மாணவர்கள் இராணுவத்தில் MBBS, BE/B.Tech (டாக்டர், எஞ்சினியர் ) இலவசமாக படிக்கலாம். நுழைவு தேர்வில் தேர்சி பெற்றால் போதும், நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் மருத்துவம் பொறியியல் படிக்கலாம். அரசே முழு செலவையும் ஏற்க்கும், ஆனால் இராணுவத்தில் மட்டுமே வேலை பார்க்க முடியும்.

இராணுவத்தில் மருத்துவர்களுக்கு (டாக்டர்) , பொறியாளருக்கு , இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வேலைகளுக்கு இந்திய அரசு இலவசமாக படிக்க வைத்து வேலையும் கொடுக்கின்றது. நல்ல சம்பளமும் கிடைக்கின்றது. அதற்க்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 மட்டுமே. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 19/04/10 ஆகும்.

தகுதி : 12-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 1992-க்கு பிறகு பிறந்திருக்க *-வேண்டும்.

+/தேர்வை பற்றிய முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விளக்கதிற்க்கு இந்த http://www.upsc. gov.in/ இணைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

Friday, April 8, 2011

மருத்துவமனையில் மரத்துப் போனதா மனிதாபிமானம்?

மனிதாபிமானம்' மரத்துப் போனதால், சுட்டெரிக்கும் வெயிலில், ரத்தக் காயத்துடன் நான்கு மணி நேரம் கிடந்தார்,

மருத்துவமனை ஊழியர் ஒருவர். கோவை அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மிக அருகில் வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர் அறை, புறக்காவல் நிலையம் உள்ளன. காயத்துடன் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

வெயிலில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கிடந்தவரை கண்டு கொண்டவர் எவரும் இல்லை; போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, "இவர் மார்ச்சுவரியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்.இரவு நேரத்தில் போதையில் வரும் இவர், இங்கு பணியில் இருப்பவர்களுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது கூட போதையில் தான் கிடக்கிறார்' என்றார்.


மாலை 6 மணிக்கு போதை தெளிந்து எழுந்த அந்த ஊழியர், தன்னை சக ஊழியர் ஒருவர் அடித்து காயப்படுத்தி விட்டார் என அப்பாவியாக கூறினார்.புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீஸ்காரர், சிகிச்சைக்காக போதை ஊழியரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.