Saturday, July 9, 2011

AEA வயது வந்தவர்க்கு மட்டும்....

இது கொஞ்சம் ஆபாசமான திரி. எனவே இத்திரியிலிருந்து வயது வராதவர்களும் புனிதப் பசுக்களும் விலகிவிடுவது மிகவும் நல்லது. இதற்கு மேலும் பிடிவாதமாக இருந்து இதை வாசித்து விட்டு என்ன லீனா அய்யரே இப்படி ஆபாசமாக பேசுறேள் என்றால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது.


சரி அப்புறம் நான் ஏன் இப்படி ஒரு ஆபாசமான பதிவை பதிகிறேன் என நீங்கள் நினைக்கலாம். இந்தக் களத்தில் அறிவுசார் பதிவுகள் குறைந்து கொண்டே போகிறது. பல்திசை அறிவார்ந்த விசயங்களை விட்டு நாங்கள் விலகிக் கொண்டே போகிறோம். இதை இனி மாற்ற வேண்டும். அதற்காக ஒரு கிளுகிளுப்புடன் கூடிய தெரிந்து வேண்டிய பதிவு இது.

சரி பேச்சு எதற்கு விசயத்து வந்திருவோம்......மனித மனம் என்பது மிக விசித்திரமானது. நாம் நினைக்க முடியாத பல செயல்களை எம்மைச் செய்யச் சொல்லி வற்புறுத்தும். அதன் மூலம் எமக்கு ஒரு திருப்தியையும் அது ஏற்படுத்தும். உதாரணமாக மிகவும் பணக்காரர்களுக்கு, அவர்களுக்கு தேவையேயில்லாத வகையில் சிறு சிறு பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும். இதை கிளப்டமேனியா என்பார்கள். இதனால் அவர்கள் அடைவது பொருளை கிடைப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியல்ல. அந்தப் பொருளைத் திருடும் போது கிடைக்கும் ஒருவித கிக் தான் அவர்களை இதைச் செய்யத் தூண்டுகிறது. பிடிபட்டால் எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படும் என்பதைத் தொடர்ந்து அந்த பாரிய இழப்பை ரிஸ்க்காக வைத்து கிடைக்கும் கிக்.

இப்போ நான் சொல்லப்பஓவதும் அது போல மனநிலை சம்மந்தப்பட்ட ஒன்றுதான். ஆனால் செக்ஸ் சம்மந்தப்பட்டது. ஆங்கிலத்தில் AEA என்று சுருக்கமாக சொல்லப்படும் Auto Erotic Asphyxia பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா....?

தனது மூச்சை பலவிதங்களில் தாங்களே நிறுத்தித் தடைசெய்யும் போது செக்ஸின் உச்சத்தை அடைவது. அதாவது ஆண்களில் சிலருக்கு, தங்கள் முகத்தை பாலித்தீன் பைகளால் மூடியோ அல்லது கயிற்றினால் இறுக்கியோ மூச்சை அடைக்கப் பண்ணி மயக்கம் வரும் நிலைக்கு முன்னர் அவர்களுக்கு பாலியல் திருப்தி கிடைக்கும். மூளைக்குச் செல்லும் ஆக்சிசன் தடைப்படுவதால் ஏற்படும் ஒருவித செயல்பாட்டால் இது நடைபெறுகிறது.

இந்தப் பழக்கம் அதிகமாக மேலை நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் உண்டு. இதில் ஆச்சரியமான புள்ளிவிபரம் என்னவென்றால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நினைத்த பல ஆண்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு உச்சபச்சமாக பரிதாபமாக உயிர்விட்டார்கள் என்பதுதான்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி இப்படியான AEA க்கள் அதிகரித்து வருகிறது என்பதுதான்.

No comments:

Post a Comment