Saturday, July 9, 2011

கோயிலுக்குள் விபச்சாரம்: 2 பெண்களும் பூசாரியும் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அ.அம்மாபட்டி காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது.

 

இங்கு கள்ளப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர் பூசாரியாக உள்ளார். கோயிலில் பவுர்ணமி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தண்டபாணி கோயில் அறையை விபசாரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார். கோயிலில் மாலை நேரங்களில் சந்தேகத்துக்கிடமாக பெண்கள், ஆண்கள் வந்து செல்வது பற்றி குடிமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது.

எஸ்ஐ செல்வம் தலைமையில், போலீசார் நேற்று மாலை கோயில் பகுதியில் மறைவாக இருந்து கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அங்கு வந்தனர். தண்டபாணியிடம் சென்று பேசினர். பின்னர் அவர் கோயில் அருகே உள்ள அறையின் கதவை திறந்து விட்டார். அதற்குள் நால்வரும் சென்றனர். உடனடியாக போலீசார் அறையை நோக்கி சென்றனர். இதை பார்த்த பூசாரி தண்டபாணி, அறையில் இருந்தவர்களை உஷார்படுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அறைக்குள் இருந்து வெளியேறிய 4 பேரும் தப்பி ஓடினர்.

போலீசார் விரட்டி சென்றதில், பூசாரி தண்டபாணியும், 2 அழகிகளும் சிக்கினர்.
பெண்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் உடுமலை கொல்லம்பட்டறையை சேர்ந்த சரஸ்வதி (36), மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களையும், தண்டபாணியையும் போலீசார் கைது செய்தனர்

No comments:

Post a Comment