Tuesday, June 7, 2011

ஜிமெயிலின் இருப்பியல்பு எழுத்துருவை மாற்றம் செய்ய

ஈமெயில் சேவையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் கூகுள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தினுடைய இந்த நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவை வெகுவாக பயனாளர்களை கவர்ந்து வருகிறது. ஈமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு ஜிமெயில் நிறுவனம் முன்னேறி விட்டது இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் தனது ஈமெயில் சேவையில் புதிதுபுதியதாக சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான் இருப்பியல்பு எழுத்துருவினை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியாகும். இந்த வசதியின் மூலமாக நாம் கம்போஸ் மெயில் சென்று டைப் செய்யும் அனைத்தும் நாம் குறிப்பிடும் எழுத்துருவிலேயே ஏற்றப்படும். இந்த வசதியினை செயல்படுத்த.

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும், பின்Settings சுட்டியை அழுத்தி பின் Labs என்னும் பொத்தானை அழுத்தவும்.




பின் Default Text Styling லேபிளை எனேபிள் செய்யதுவிட்டு, Save Change

பொத்தானை அழுத்தவும்.


பின் Settings சுட்டியை அழுத்தி பின் General என்னும் பொத்தானை அழுத்தவும். அதில் Default text style என்னும் தேர்வில் எழுத்துருவினை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும். 







இதில் எழுத்தின் அளவுரு, நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 












இப்போது கம்போஸ் மெயிலை ஒப்பன் செய்து வழக்கம் போல தட்டச்சு செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்டது போல எழுத்துரு டைப் ஆக தொடங்கும். இந்த எழுத்துரு தேவையில்லையெனில் தட்டச்சு செய்த எழுத்துக்களை தேர்வு செய்து கொண்டு என்னும்பொத்தானை அழுத்தி வழக்கம் போலவே எழுத்துக்களை மாற்றிக்கொள்ள முடியும்.


ஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய


தற்போதைய நிலையில் ஈ-மெயில் சேவையினை பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறன. அவற்றில் ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில், போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். நாம் சாதரணமாக ஈ-மெயில் அனுப்பினாலும் கூடவே ஒரு அட்டாச்மெண்ட் பைலை சேர்த்தே அனுப்புவோம். அது நலம் விசாரிக்கும் ஈ-மெயிலாக இருந்தாலும் சரி, முக்கியமான அலுவல்களாக இருந்தாலும் சரி அட்டாச்மெண்ட் என்பது முன்பெல்லாம் முக்கியமான செயலுக்காக மட்டுமே அனுப்பபடும், ஆனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு ஈ-மெயிலாக இருப்பினும் கூடவே சேர்ந்து ஒரு அட்டாச்மெண்ட் பைல் அனுப்பபடுகிறது. ஈ-மெயில் அனுப்பும் போது அதனுடன் சேர்ந்து அட்டாச்மெண்ட் பைல்களாக போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், போன்ற பல பைல்களும் ஈ-மெயில் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு ஈ-மெயிலுடன் சேர்ந்துவரும் அட்டாச்மெண்ட் பைல்களை தனியே பதிவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதுதான் Mail Attachment Downloader.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.பின் Start > Programs > GearMage > Mail Attachment Downloader என்பதை தேர்வு செய்து Mail Attachment Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த இடத்தில் அட்டாமெண்ட்கள் பதிவாக வேண்டும் என்பதை குறிப்பிட்டுவிட்டு, Connect and Download என்ற பட்டனை அழுத்தி பதிவிறக்கி கொள்ள முடியும்.




இந்த மென்பொருளின் சிறப்பம்சமாக உங்களுக்கு வேண்டிய பைல்களை மட்டும் தனியே தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் உள்ள வேண்டிய அட்டாச்மெண்ட்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதுபோன்ற பல்வேறு விதமான சிறப்பம்சங்களை இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது. ஈ-மெயில் அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.

Mobile Projectors


உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு பிடிப்புகள்வந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும்மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய வசதிகள் பற்றி நாம்தெரிந்து கொள்ளவே இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பதிவு . 


இன்று நாம் இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

" Mobile Projectors "




நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள்மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

TeamViewer - Mobile


உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும்மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய வசதிகள் பற்றி நாம்தெரிந்து கொள்ளவே இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

" TeamViewer "




இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள்மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

டுவிட்டரை ஜிடால்க் மூலமாக அணுக


டுவிட்டர் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ள உதவும் தளம் ஆகும். சோஷியல் நெட்வோர்க் தளத்தில் அதிகமாக பயன்படுத்தபடும் தளத்தில் இந்த தளமும் ஒன்றாகும். சாதாரண மனிதனில் தொடங்கி மிகப்பெரிய நபர்கள் வரை டுவிட்டர் தளத்தில் கணக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயவிவரங்களையும், பிடித்த செயல்களையும் அவ்வபோது டுவிட்டர் தளத்தில் வெளியிடுவார்கள். செய்திதாள்களில் கூட வெளிவராத செய்திகள் இதுபோன்ற சோஷியல் தளங்களில் காண முடியும். இதுபோன்ற செய்திகளை நாம் டுவிட்டர் தளத்தில் நம்முடைய கணக்கில் நுழைந்த பின்புதான் காண முடியும். ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்றும் போது நாம் தனியாக இந்த தளத்திற்கு சென்று இதுபோன்ற செய்திகளை காண முடியாது. டுவிட்டரில் பதிவிடும் செய்திகளை ஜிடால்கில் இருந்தவாறே காண முடியும் இதற்கு ஒரு தளத்தில் ஜிமெயில் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை சமர்பிக்க வேண்டும்.

தளத்திற்கான சுட்டி

இந்த தளத்தின் நுழைந்து முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்து கூகுள் கணக்கின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.




அடுத்ததாக டுவிட்டர் கணக்கின் பயன்ர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.



அடுத்து ஜிடால்கினை ஒப்பன் செய்து அதில் புதியதாக வந்துள்ள நண்பர் அழைப்பினை ஒகே செய்யவும். 




அவ்வளவுதான் இனி டுவிட்டரில் பதியப்படும் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களால், ஜிடால்கில் இருந்தவாறே பெற முடியும்.


இந்த வசதியினை நீங்கள் ஜிமெயில் அரட்டையிலும், ஆர்குட் அரட்டையிலும் பெற முடியும். விரும்பினால் நிறுத்திக்கொள்ளவும் முடியும். இந்த வசதியின் மூலம் இனி தனியாக டுவிட்டர் கணக்கினை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனை சிறப்பாக பயன்படுத்த ஒரு சில கட்டளைகள் உள்ளன அவையாவன.

/h to show this help.


/on to receive timeline updates


/off to not receive timeline updates


/t to send tweets.


/q category to send quotes.


/rt user to retweet a user’s last message.


/d user to send direct message.


/f user to follow someone.


/u user to unfollow someone.


/i to show incoming friendships.

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite


பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி







சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும். 






அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும். 

கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents > authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools > Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்.