Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

Sunday, July 10, 2011

கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்!

‘இந்த சாவியை எங்க வெச்சித் தொலைச்சேன்னே தெரியல…’ சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர். வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.

 
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் செல்போன். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் செல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் செல்போனையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி… கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும். ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஆபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும். சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள்தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள், வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இன்டர்நெட் மற்றும் கன்வர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும். ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள், ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் செல்போன் நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறதிப் பேர்வழிகள், சாவியைபோல, செல்போனையும் தொலைத்துவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

Saturday, July 9, 2011

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
* www.zedge.com


வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.net என்று டைப் செய்து இணையலாம்.* www.gallery.mobile9.com

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள், தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.


மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com

முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.


பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

* http://www.apniapps.com

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

* http://www.ipmart-forum.com/

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

* http://www.youpark.com

ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கைப்பேசி வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

........................................................................................................................................................ Download

Thursday, July 7, 2011

ஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி?

கூகுள் நிறுவனமே ஒரு லட்சத்துக்கும் மேல அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யிறதுக்காக மொபைல்ல தனியா மார்க்கெட்(android market) வச்சிருந்தாலும் நாம கணினி மூலமா சில மூன்றாம் தர (third party) வர்க்கத்தோட அப்ளிகேஷன்களை பயன்படுத்த விரும்புவோம்.


அதுமட்டுமில்லாம மொபைல்ல தரவிறக்கம் செய்யிறதை விட கணிணியில தரவிறக்கம் செஞ்சி பயன்படுத்துறது நேரம் மிச்சமாகும்.

இப்போ கணினி மூலமா ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செஞ்ச பின்னாடி அதை எப்படி ஆன்ட்ராய்டு போன்ல பதியிறதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரொம்ப எளிமை தான். நோக்கியா போன்களில் அது தரும் கணினி சூட் (NOKIA PC SUITE) மூலமா அப்ளிகேஷன்களை நேரடியா மொபைல்ல பதிவு செய்ய முடியும். ஆனால் ஆன்ட்ராய்டு போன்களில் அப்படி பண்ண முடியாது.

அதுக்குப்பதிலா இன்னொரு வழிமுறை இருக்கு.

நாம கணினி மூலமா தரவிறக்கம் செய்யிற பெரும்பாலான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் ஜிப்(ZIP) ஃபைலாகத்தான் வரும். அதனால தரவிறக்கம் செய்த அப்ளிகேஷனை (extract here) பிரித்தெடுத்து கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

உதாரணமா நீங்க தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் barcode scanner என்ற அப்ளிகேஷனாக இருந்தால் பிரித்தெடுத்த பின்பு barcode scanner.3.2.apk என்று இருக்கும். இதில் 3.2 என்பது அந்த அப்ளிகேஷனின் (version) வெர்ஷனை குறிக்கும். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் apk என்று தான் முடியும்.

இப்போது நீங்கள் போனில் உள்ள மெமரி கார்டை தனியா கழற்றி உங்க கணினியில் இணைத்து அந்த மெமரி கார்டில் நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாவற்றையும் சேமித்துக்கொள்ளவும்.

பிறகு மெமரிகார்டை கணிணியில இருந்து வெளியில எடுத்து அதை உங்க போனில் செருகி போனை ஆன் செய்து உங்கள் போனில் மெமரி கார்டில் உள்ளவற்றை காட்டும் அப்ளிகேஷனை (சாம்சங் போனில் my files என்றிருக்கும்.) திறந்து பார்த்தால் அங்கே நீங்கள் கணினியிலிருந்து மெமரி கார்டுக்கு மாற்றிய அப்ளிகேஷன்கள் எல்லாமும் இருக்கும்.அதை ஒவ்வொன்றாக அழுத்தி உங்கள் போனில் பதியுங்கள்.

அப்படி எல்லாவற்றையும் பதிந்த பிறகு இப்போது உங்கள் போனில் உள்ள மெனுவைப் பாருங்கள் நீங்கள் பதிந்த அப்ளிகேஷன்கள் எல்லாமும் காட்சியளிக்கும்.இப்போது அவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த விளக்கம் உங்களுக்கு புரியாத பட்சத்தில் எனக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன்.

வருங்கால மொபைல் தொழில்நுட்பங்கள்

ஜூன் மாதத்தில் 40 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள், மொத்த இணைப்பு  20 கோடியை தாண்டிவிட்டது".


"உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ளது". என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவையை வழங்கி வருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இன்னும் கூட இந்தியாவில் முழுமையாக செயல்படுத்தவில்லை.ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE,CAALERTUNES, RINGTONES, WALLPAPERS, GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆப்ரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும்.* VISUAL RADIO - (விசுவல் ரேடியோ)இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும், பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும்போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே போனின் திரையில் நம்மால் பார்க்க முடியும்.

ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன?, பாடலை பாடியது யார்? உட்பட பல விபரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் உட்பட எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரலையாக காண முடியும்.மேலும் அந்தப் பாடலுக்கு நாம் மதிப்பு கொடுப்பது அந்தப் பாடலை தரவிறக்கம் செய்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது, அது வெற்றி பெறவே உலகத்திலுள்ளபல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

இந்த நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,இந்த வகை போன்கள்
5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.குறிப்பாக நோக்கியாவின் N-SERIES போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

* PUSH TO TALK - (புஷ் டூ டாக்) இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது.இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,அதாவது பொதுவாக CONFERENCE கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.


இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆப்ரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறும்?

பின்குறிப்பு : இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மொபைல்களை  நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இங்குள்ள மொபைல் ஆப்ரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை. அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பதிந்து வெளியிடுவதை குறைத்துக் கொண்டுள்ளது.

வந்துவிட்டது Apple இன் 3D ஐபோன்கள்

கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம். தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

 
 தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த முயற்சிவெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

Wednesday, July 6, 2011

நோக்கியா மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்?

Nokia அலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும். நோக்கியா அலைபேசி பற்றி சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.


 
 
ஏனென்றால் நம்முடைய அலைபேசியை வாங்கும்போதோ, விற்கும்போதோ குறிப்பாக Secondhand அலைபேசி வாங்கும்போது இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.
*#06# – IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEA எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்Link : IMEI


XXXXXX XX XXXXXX X

TAC FAC SNR SP

TAC = Type approval code of your nokia Mobile

FAC = Final assembly code of your cellphone

SNR = Serial number of your nokia Phone

SP = Spare

*#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*#7780# - Factory settings Restore செய்ய.

*#92702689# or [*#war0anty#] - Serial Number,Month and Year of Manufacture,Phone purchase date,Last repair date,Life timer தெரிந்துகொள்ளலாம்.

Tuesday, July 5, 2011

வந்து விட்டது நீங்கள் தேடும் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது. 
அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் கவனத்தைக் கவர்கிறது இந்த மொபைல்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய முயற்சியில் உருவான ezmail என்னும் புஷ்மெயில் வசதியை இதில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இன்னொரு அம்சம், இதில் தரப்பட்டுள்ள யமஹா ஆம்பிளிபயர் ஆகும். இதன் 1200 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.2.4 அங்குல வண்ணத்திரை, 3ஜி வசதி, வை-பி இணைப்பு, புளுடூத், 3 எம்பி திறன் கொண்ட, ஸ்மைல் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுக்கும் கேமரா, இரண்டாவதாக 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வீடியோ அழைப்புகளுக்கான கேமரா, எப்.எம். ரேடியோ, 8 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தக் கூடிய வசதி என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இது உள்ளது.

இதன் ஆடியோ MIDI, MP3 பார்மட்டு களையும், வீடியோ 3GP, MP4 பார்மட்டு களையும் சப்போர்ட் செய்கின்றன. குவெர்ட்டி கீ போர்டுடன், நேவிகேஷனுக்கு ஆப்டிகல் ட்ரேக் பேட் தரப் பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களில் Opera Mini, Snaptu, Newshunt, Facebook, Nimbuzz ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேற்படி வசதிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த போன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.

Saturday, July 2, 2011

உயிரைப் பறித்த சீன மொபைல்

குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை. சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.

நோக்கியா இ6 - முன்பதிவு தொடக்கம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,999. இதனை மூன்று தவணைகளிலும் செலுத்தலாம். 

2.4 அங்குல, 640 x 480 பிக்ஸெல் ரெசல்யூசன் திறன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த முடியாத கார்னிங் கொரில்லா கிளாஸ், 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளன. இ5 ஸ்மார்ட் போனைப் போல இதிலும் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, 2டி மற்றும் 3டிக்கான கிராபிக்ஸ் ஆக்ஸிலரேட்டர், கூடுதல் கிராபிகல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. 
ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாத காலம் தாக்குப் பிடிக்கக் கூடிய 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 7.30 மணி நேரம் பேசக் கூடிய வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை---பி மற்றும் புளுடூத் தொழில் நுட்பம், A2DP கொண்ட புளுடூத் ஹெட் போன், ஆகியவை இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் பரிமாணங்கள் 115.5 x 59 x 10.5 மிமீ; எடை 133 கிராம். 
இந்த போனில் தரப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இரண்டு எல்.இ.டி. பிளாஷ், 2 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், நொடிக்கு 24 பிரேம் வீடியோ பதிவு ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 

நோக்கியா இந்தியா இணைய தளத்தில் இதனை வாங்குவதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். என்று இந்த போன் வழங்கப்படும் என இந்த செய்தியினை எழுதும் வரை நோக்கியா அறிவிக்கவில்லை.

Saturday, June 25, 2011

மொபைல் உலக கிசுகிசு

மொபைல் போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் நோக்கியா நிறுவனம் இதனை வன்மையாக மறுத்தது. தற்போது நோக்கியாவும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பதில் முனைப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

விண்டோஸ் போன் 7 சிஸ்டம் வந்த பின்னர், நோக்கியா தன் மந்த நிலையைப் போக்கப் பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என மொபைல் போன் உலகக் கணிப்புகளை வெளியிடும் வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனென்றால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் வரவு, நோக்கியா நிறுவனத்திற்கு விட்ட சவால்களாகவே அமைந்து வருகின்றன. இதிலிருந்து நோக்கியா நிச்சயம் மீண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்க முயற்சிப்பதாகவும், வதந்திகள் உலா வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதற்கெனத் தரப்படும் தொகை 2,000 கோடி டாலராக இருக்கலாம். முன்பு மைக்ரோசாப்ட் ஏறத்தாழ 1,900 கோடி டாலர் தர இருப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், நோக்கியா இவை அனைத்திலிருந்து மீண்டு வரும் எனவே பலரும் கருதுகின்றனர்.

Thursday, June 9, 2011

நோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள்


நீங்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்துபவரா ? தொடர்ந்து படியுங்கள் , இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

நோக்கியா செல்போன் பற்றி சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் நம்முடைய அலைபேசியை வாங்கும்போதோ, விற்கும்போதோ இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.



உங்கள் செல்போனில் இருந்து *#06# – டயல் செய்தால் உங்கள் செல்போன் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEI எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பின்பு இந்த தளம் சென்று உங்கள் செல்போன் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.



1). Information you get from the IMEI-

XXXXXX XX XXXXXX X

TAC FAC SNR SP

TAC = Type approval code

FAC = Final assembly code

SNR = Serial number

SP = Spare

மேலும் உங்கள் செல்போனில் இருந்து,

2.) *#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1ST Line = Software revision

2ND Line = The date of the software release

3RD Line = Phone type

3.) *#7780# - Factory settings Restore செய்ய.

4.) *#92702689# or [*#war0anty#] -டயல் செய்து கீழே உள்ளவற்றைதெரிந்துகொள்ளலாம்.

Serial number (IMEI)

Production date (MM/YY)

Purchase date (MM/YY) You can only enter the date once.

Date of last repair (0000=No repair)

Transfer user data to another Nokia phone via Infra-Red

5.) Default security code is 12345

6.) *#2820# Bluetooth device address.

Wednesday, June 8, 2011

உங்கள் செல்போனில் ஈசியாக இன்டர்நெட் எடுக்க


இந்தியாவில் மொபைல் போன் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இந்த துறையில் ஏற்படும் மாற்றங்களும் , புதிய கண்டு பிடிப்புகளும் நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் இப்போது மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. எனவே தான் மொபைல் கம்பனிகளும் மொபைல் இன்டர்நெட் வசதிக்கு பற்பல விதமான ப்ளான்களை வைத்துள்ளனர். 

என்னதான் நல்ல பிளான்கள் இருந்தாலும் நம்முடைய மொபைல் போன் அதற்க்கு சப்போர்ட் செய்யவேண்ண்டும். நாம் வைத்திருக்கும் மாடல் க்கு ஏற்ற GPRS செட்டிங் செய்தால் தான் நம்முடைய போனில் இன்டர்நெட் Connect ஆகும். சில சமயங்களில் நாம் வைத்திருக்கும் மாடல் க்கு GPRS செட்டிங் இல்லை என்று Coustomer Care -ல் சொல்லுவார்கள்.

அந்த சமயங்களில் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும், இன்னும் சொல்லப்போனால் இப்போது வரும் பல கம்பனிகளின் டபுள் சிம் செல்போன் களுக்கு GPRS செட்டிங் கிடைக்காது. எனவே அந்த போன்களிலும் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும்.
எனவே நான் இந்த பதிவில் அணைத்து கம்பனிகளின் GPRS Manual செட்டிங்க்ஸ் தொகுத்து கொடுத்துள்ளேன்.

தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

Manual Settings for Vodafone GPRS


Account Name – Vodafone_GPRS

User Name – Blank

Password – Blank

Proxy – Enabled/yes

Access Point Name – portalnmms

Full Internet Access Point Name – www

Proxy and Server address – 10.10.1.100

Proxy and Server Port – 8080

Homepage – www.google.com

Authentication Type – Normal


Manual Settings for Airtel GPRS


Homepage – any page you want to set.

User Name – Blank

Password – Blank

Proxy – Enabled/yes.

Proxy and Server Adress – 202.56.231.117

Proxy and Server Port – 8080

Data bearer – GPRS or Packet Data.

Access Point Name – airtelgprs.com

Authentication Type – Normal

Use preferred access point – No




Manual Settings for Airtel Live




Account Name – Airtel_live 

Homepage – http://live.airtelworld.com

Username – Blank

Password – Blank

Proxy – Enabled/yes

Proxy and Server Adress – 100.1.200.99

Accespoint Name – airtelfun.com

Proxy and Server Port – 8080

Data bearer – GPRS/ Packet Data

Authentication Type – Normal




Manual Settings for Idea GPRS

Account Name – idea_GPRS

Username – Blank

Password – Blank

Homepage – http://wap.ideafresh.com

Proxy and Server Port – 8080

Proxy and Server adress – 10.4.42.45

Databearer – GPRS / Packetdata

Acces Point Name – imis

Proxy – Enabled/yes

Authentication Type – Normal




Manual Settings for Bsnl GPRS




Account Name – BPL WAP

Username – <Blank>

Password – <Blank>

Proxy – Enabled/yes

Homepage – http://wap.mizone.bplmobile.com

Proxy and Server address – 10.0.0.10

Proxy and Server Port – 8080

Acces Point Name – mizone

Data bearer – GPRS/ Packetdata

Authentication Type – Normal




Manual Settings for Aircel GPRS




NAME : Aircel Online

Homepage :http://google.com

User Name :Blank

Password :Blank

Use preferred Access Point :aircelgprs or aircelwap

Open Access Point Setting

Proxy:Enabled

Proxy address :192.168.035.201 

port :8081

Data Bearer : Packet Data





Manual Settings for Reliance GPRS


apn: rcomwap


proxy: 10.239.221.5


port: 8080


Homepage: wap.rworld.co.in


Manual Settings for TATA DOCOMO GPRS


Account Name – DOCOMO_GPRS


User Name – Blank


Password – Blank


Proxy – Enabled/yes


Access Point Name –TATA.DOCOMO.DIVE.IN


Full Internet Access Point Name – www


Proxy and Server address – 10.124.94.7


Proxy and Server Port – 8080


Homepage – http://divein.tatadocomo.com


Authentication Type – Normal






Manual Settings for Videocon GPRS





Connection Name : Videocon Internet

Data Bearer : Packet Data

APN : vinternet.com

Username & Password: Blank

Homepage : www.google.com

Proxy server : Blank

Proxy port : Blank





Manual Settings for Videocon WAP






Connection Name : Videocon GPRS

Data Bearer : Packet Data

APN : vgprs.com

Username & Password: Blank

Homepage : http://wap.live.in

Proxy server : 10.202.5.145

Proxy port : 8799





Manual Settings for Videocon MMS






Connection Name : Videocon MMS

Data Bearer : Packet Data

APN : vgprs.com

Username & Password: Blank

Homepage : http://10.202.4.119:10021/mmsc/

Proxy server : 10.202.5.145

Proxy port : 8799 





Manual Settings for Uninor GPRS





Profile name: uninor

Homepage: www.google.com (you can use your own home page)

Enable Proxy

Ip address: 10.58.10.58

Port: 8080

Linger time: 90

Don’t enable DNS

Bearer: choose GPRS

Advanced settings:

APN: uninor

Login: Leave blank

Password: Leave blank





Manual Settings for Virgin GSM


VBYTES

APN: m.vbytes.in

Home Page: http://m.vbytes.in

1.Proxy Server: 10.124.94.8

port:8080




VINTERNET




Service Description: vinternet

APN: vinternet.in

no proxy and port








- நண்பர்களே, இதில் இப்போது வெளிவரும் " Smart phone வகைகளான Blackberry, Android, Iphone, HTC போன்ற மாடேல்களுக்கு " APN " மட்டும் சேர்த்தால் போதும்.





மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்,





என்னால் முடிந்தவரை தகவல்களை தருகிறேன்.

Tuesday, June 7, 2011

Mobile Projectors


உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு பிடிப்புகள்வந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும்மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய வசதிகள் பற்றி நாம்தெரிந்து கொள்ளவே இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பதிவு . 


இன்று நாம் இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

" Mobile Projectors "




நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள்மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

TeamViewer - Mobile


உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும்மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய வசதிகள் பற்றி நாம்தெரிந்து கொள்ளவே இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா உங்களுக்கு ..? " பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

" TeamViewer "




இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள்மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

Thursday, May 19, 2011

செல்போன் நிறுவனங்கள் கொள்ளையே அடிக்கின்றன

   அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும்,செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது. 




  "விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.

      


       
மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம். 

கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 

அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.

இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.






அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும்.

Saturday, May 14, 2011

GOOGLE இலவசமாக தருகிறது 100 டாலர். பலனடையுங்கள்

ஒவ்வொரு நாளும் தனக்கே உரிய பாணியில் புதிது புதிதாக களமிறங்குவதில் கூகுளுக்கு இணை கூகுளே. அந்த வரிசையில் 1௦௦ டாலர் பரிசாக தருகிறது. 
இணையதளத்துக்குள் செல்ல சுட்டி தரப்பட்டுள்ளது. 

அங்கே அதர் ப்ரொடக்ட் என்று இருக்கும். அதை கிளிக் பண்ணி உள்ளே செல்லவும். உள்ளே சென்று paart


Wednesday, May 11, 2011

வந்துவிட்டது WINDOWS 7 TRANSFORMATION PACK 1.1

     விண்டோஸ் 8 வரும்வரை பொறுமையில்லாமல் அது எப்படி இருக்கோமோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் யோசித்துகொண்டிருக்கும்  வேளையில், முடிந்த வரைக்கும் இந்த விண்டோசினுடைய தீம்சையாவது மாற்றிபார்க்கலாமே என்ற எண்ணம் பலருக்கும் எழுவதுண்டு. 

        அதற்கெனவே வந்தது போல இருக்கிறது WINDOWS 7 TRANSFORMATION PACK . இதை எப்படி நம்முடைய கணினியில் நிறுவுவது என்று பாப்போம். 

        முதலில் http://www.4shared.com/file/atmhBqp-/8_skin_pack_1_0_for_7_by_hamed.html இந்த தளத்தில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டும் போதும். அவ்வளவு தான்.

        இந்த தீம்சிலும் திருப்தி அடையாதவர்களுக்காகவே இந்த மென்பொருளின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. இது நிறுவுவதற்கு கொஞ்சம் கடினம் போல தோன்றும். ஆனால் மிக மிக எளிது. 

       இது கிட்டத்தட்ட 81 தீம்களை உள்ளடக்கிய ஒரு பேக் . இதை எங்கிருந்து எப்படி எப்போது கணினியில் இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 
  
        முதலில் http://mytopfiles.com/archives/file/8_skin_pack_1_1_for_7_by_hameddanger-d3fm39y/448416.htm இந்த தளத்தில் சென்று பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். செய்யும்போதே இன்னொரு பைலையும் தா என்று கேட்கும். அப்போது http://www.4shared.com/get/kk9HD0B_/CustoPacks-10040.html இந்த தளத்தில் சென்று இந்த பைலையும் டவுன்லோட் செய்து நிறுவிய பின்னர் உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்கள். உங்களுக்கே புரியும் இதன் அருமை. 

பின்குறிப்பு: மேலும் எழுதத் தூண்டுவதற்கு உங்கள் ஓட்டு முக்கியம். 

Sunday, May 8, 2011

இனி மொபைல்லே பேசும்போ பாத்து பேசுங்கப்பா

      நோக்கியா சிம்பியன் மொபைல்களுக்கான புதிய கால் ரிக்கார்டர் மென்பொருள் வந்துள்ளது. இதில் கால் ரிக்கார்டர் செய்வதோடு மட்டு மல்லாமல் AMR WAV போன்ற ஆடியோ அமைப்புகளில் கால் ரிக்கார்டிங் செய்யலாம். மேலும் SINGLE CLICK செய்வதன் மூலம் நம்முடைய சாதாரண பேச்சுக்களையும் பதிவு செய்யலாம்.
           இதில் BEEP SUPPRESSION TECHNOLOGY பயன்படுத்த படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு PHONE CALL RECORD செய்த உடன் தானாகவே நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் EMAIL லுக்கு சென்று விடும். 

  தரவிறக்கம் செய்ய CLICK 

Wednesday, May 4, 2011

கேமராவில் எடுத்த படங்களுக்கு ஒட்டுமொத்தமாக பெயர் மாற்ற

    கேமராவின் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள ஒளிப்படங்களை கணினியின் ஹார்டிஸ்கில் பதிவு செய்த பிறகு, நாமே அந்த கோப்புகளின் பெயரை மாற்றுவோம். இவ்வாறு மாற்றாவிடில் தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட படத்தை தேடிக்கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். 
       ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பெயர் மாற்றுவதும் கடினமே. ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது இடத்தில அல்லது பகுதியில் எடுத்த அனைத்து ஒளிப்படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே பெயரை வைத்து விடுவது சிறந்தது. 
Read more »

Tuesday, May 3, 2011

Solar Powered Cellular Phone...


Solar Powered Cellular Phone...

Samsung - Solar Powered Cell Phone


Latest Solar Powered Cell Phone by Samsung