மொபைல் போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் நோக்கியா நிறுவனம் இதனை வன்மையாக மறுத்தது. தற்போது நோக்கியாவும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பதில் முனைப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் போன் 7 சிஸ்டம் வந்த பின்னர், நோக்கியா தன் மந்த நிலையைப் போக்கப் பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என மொபைல் போன் உலகக் கணிப்புகளை வெளியிடும் வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனென்றால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் வரவு, நோக்கியா நிறுவனத்திற்கு விட்ட சவால்களாகவே அமைந்து வருகின்றன. இதிலிருந்து நோக்கியா நிச்சயம் மீண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்க முயற்சிப்பதாகவும், வதந்திகள் உலா வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதற்கெனத் தரப்படும் தொகை 2,000 கோடி டாலராக இருக்கலாம். முன்பு மைக்ரோசாப்ட் ஏறத்தாழ 1,900 கோடி டாலர் தர இருப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், நோக்கியா இவை அனைத்திலிருந்து மீண்டு வரும் எனவே பலரும் கருதுகின்றனர்.
|
No comments:
Post a Comment