Friday, December 17, 2010

செக்சோம்னியா, ஒரு வினோதமான நோய்?!

இன்றைய உடல்நலக் குறிப்பு:
நீங்கள் மிகவும் சோர்வாக உணரும்போது, காஃபி அல்லது தேனீர் குடிப்பத்தற்கு பதிலாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது!
மனுசனுக்கு வர்ற உறக்கம் சார்ந்த கோளாறுகள்/குறைபாடுகள்ல நம்ம எல்லாருக்குமே பரிச்சயமானது, தூக்கத்தில் நடக்கும் ஒரு குறைபாடு. உறக்கம் சார்ந்த ஆனா நமக்குத் தெரியாத/பரிச்சயமில்லாத கோளாறுகள்னு ஒரு பெரிய பட்டியலே இருக்குதாம். அதுல நம்மில் சில/பலருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒன்னு இன்சோம்னியா. அதாவது, தூக்கமின்மை/உறக்கத்தை தொடர முடியாமை என்னும் ஒரு குறைபாடு!
இது தவிர, நமக்குத் தெரியாத உறக்கக் குறைபாடுகள்னு பார்த்தா…..
  1. ப்ரக்சிசம் (Bruxism): உறங்கும்போது, நம்மை அறியாமல்/தன்னிச்சையாக பற்களை நர நரவென்று கடித்து/தேய்த்துக்கொள்ளுதல்!
  2. ஹிப்னோயா சிண்ட்ரோம் (Hypopnea syndrome): உறங்கும்போது குறைவான சுவாசம்/இயல்பிலிருந்து மிகவும் அளவு குறைந்த சுவாசம் (ஆங்கிலத்தில் Hypopnea syndrome)
  3. நார்கோலெப்சி (Narcolepsy) : விருப்பமேயில்லாமல், நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உறங்குதல். முக்கியமாக உறங்கக்கூடாத நேரங்களில்
  4. இரவு வன்முறை (Night terror): இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று விழித்து வன்முறையான செயல்களில் ஈடுபடுவது! ஐய்யய்யோ….?!
  5. பாராசோம்னியா (Parasomnias): உறக்கத்தை கெடுக்கும் பலவிதமான செயல்களில் ஈடுபடும் ஒரு கோளாறு. உதாரணத்துக்கு தூக்கத்தில் நடப்பது, இரவு வன்முறை போன்றவற்றைச் சொல்லலாம்!
இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்
தூக்கக் கோளாறுகளைப் படிக்கப்போய் அப்படியே கெளம்பிடாதீங்க, ஏன்னா நான் சொல்ல வந்த மேட்டரே வேற! நீங்க படிச்ச/படிக்கப்போற அந்த விக்கிப்பீடியா பட்டியல்ல இல்லாத ஒரு வினோதமான ஆனா கொஞ்சம் சுவாரசியமான (?) ஒரு உறக்கம் சார்ந்த குறைபாடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப் பத்தின ஒரு சிறு அறிமுகத்தைத்தான் இனிமே நாம பார்க்கப்போறோம்…..
செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!
flickr.com/photos/corinnabee/3013095303
உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்படும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதாவது, உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு. இத்தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய இந்த ஆய்வு!

இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என்றும், இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது! உறக்கக் குறைபாடுள்ள சுமார் 832 பேர் கலந்துகொண்ட ஆய்வு சொல்லும் முடிவு பொதுமக்களுக்கு (ஆரோக்கியமானவர்கள்) இல்லை என்பதை நினைவில் கொள்க என்கிறார்  டொரோன்டோவின் சுகாதாரப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏ சங்! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)
இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிகபட்ச (8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்! இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்தரவுகளிலிருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை சொல்லலாம்!
செக்சோம்னியா பற்றிய ஒரு அறிவியல் விளக்கக் காணொளி உங்களுக்காக…..
செக்சோம்னியாவின் பின்னனி?!
இவ்வினோதமான குறைபாட்டுக்குக்கான அறிவியல்பூர்வமான காரணம் என்னவாக இருக்கும் என்று சோதித்ததில், 15.9 % செக்சோம்னியா நோயாளிகள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது!
பொதுவாக குழப்பமான நிலையிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும்போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்! பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!

மனித ஹார்மோன் சுரந்து “பெண்ணாக மாறிய” மரம்?!

வணக்கம். இன்றைய முக்கிய அறிவியல் தலைப்புச்செய்திகள். வாசிக்கப்போவது…..அட வேற யாருமில்ல, நீங்கதாங்க! 60 நொடி அறிவியலுக்கு நிறைய ஓட்டுகள் போட்டு என்னோட புதிய முயற்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள்.
(இதுல எதாவது மாற்றம் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்த்தீங்கன்னா, அதைப்பற்றிய சிறு விளக்கத்துடன் கூடிய ஒரு மறுமொழி அல்லது மின்னஞ்சலை padmaharij@gmail.com முகவரிக்கு கொஞ்சம் தட்டிவிட்டீங்கன்னா, மாற்ற முயற்ச்சி செய்யறேன். நன்றி!)
இனி நாம, இன்றைய 60 நொடி அறிவியலுக்குப் போவோம்…..
அறிவியல்: உணவுக்குழாய், மார்பகப் புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ‘பெர்ரி’ பழங்கள்!
wikipedia: Chrishibbard7
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பலவகையான மூலிகைத் தாவரங்கள், காய்கள், பழங்கள் பற்றி இதுவரைக்கும் நாம நெறைய படிச்சி, கேள்விப்பட்டு இருப்போம். அந்த வரிசையில, நமக்குக் கொஞ்சம் பரிச்சயமில்லாத பழங்களான 7 வகையான பெர்ரி பழங்கள் உணவுக்குழாய் (Oesophageal cancer) மற்றும் மார்பகப் புற்றுநோயைக் (Breast cancer)  கட்டுபடுத்துவதாக,  சமீபத்தில் அமெரிக்காவின் ஓஹையோ மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பழங்களின் பெயர்கள் பின்வருமாறு: கருப்பு, சிவப்பு மற்றும் நீல பெர்ரி (black raspberries, red raspberries, blueberries) ஸ்ட்ராபெர்ரி (strawberries) நோனி பெர்ரி (noni berries) அகாய் பெர்ரி மற்றும் நரி பெர்ரி [açai berries and wolfberries (also called goji berries)]. இந்த முடிவு எலிகளில் செய்யப்பட்ட சோதனையிலிருந்துதான். மனிதர்களில் அல்ல என்பதை நினைவில் கொள்க. ஆனால், பழங்கள் அதிகமான உணவுப்பழக்கத்தால் புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவ உண்மை!  மேலதிக தகவல்கள் இங்கே
மருத்துவம்: உடலின் குறைகளைக் காட்டும் ‘எச்சில் சோதனை’
http://online.wsj.com/ (Tim Foley)
உடம்புல பிரச்சினை எதனால வருது, எப்படி வருதுன்னு கண்டுபிடிக்க இந்த 21-ஆம் நூற்றாண்டுல ஆயிரக்கணக்கான வழிகள் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, யாருக்கும் தெரியாதது என்னன்னா, அந்த வழிகள்ல எது சிறந்தது/ நம்பிக்கையானது அப்படீன்னுதான்! இப்படித்தான், எச்சில் மூலம்  உடலின் எந்தெந்த ஹார்மோன்கள் சரியான அளவில் இல்லை என்பதை கண்டறிந்து, அதற்கேற்றார்போல் மருத்துவச் சிகிச்சைகளை சுலபமாக செய்துகொள்ள எச்சில் சோதனைன்னு ஒன்னு இருக்குதாம். அச்சோதனையின் முடிவுகளான Salivary hormone profiles என்னும் விவரத்தை நம் மருத்துவரிடம் கொடுத்தால், குறைபாடுகளுக்கேற்றவாறு அவர் மருந்து/சிகிச்சை மேற்கொள்ள முடியுமாம். இது பரவாயில்லன்னாலும்,  இதன் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக போதிய ஆய்வுகள் இல்லாமையால், மருத்துவர்கள் கொஞ்சம் குழப்பத்துடனே இதை அணுகுகிறார்களாம். ஆமா, இந்த மாதிரி எச்சில் சோதனையெல்லாம் நம்ம ஊருல இருக்குதுங்களா? மேலதிக தகவல்கள் இங்கே
தொழில்நுட்பம்: எண்ணைக் கசிவுகளை கண்டுபிடிக்க உதவும் அதிநவீன “க்ளைடர் ரோபாட்கள்”!
technewsdaily.com
அமெரிக்க கடல்களில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு ராட்சத எண்ணைக் கசிவு உலகை கொஞ்சம் உலுக்கித்தான் விட்டது. அந்த எண்ணைக்கசிவுகளால் மனிதர்களுக்கு எத்துனை பிரச்சினைகள் ஏற்படுமென்று தற்போது சொல்ல முடியாது என்றாலும், நிச்சயம் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை! இதுல என்ன பிரச்சினை அப்படீன்னா, ராட்சத குழாய்களிலிருந்து கசிந்த எண்ணை கடலின் எந்தப் பகுதிக்கு, எவ்வளவு தூரம்வரை சென்றுள்ளது, இனி எந்தத் திசையில் செல்லும், இதனால் தண்ணீரின் தன்மை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கனும்னா, அதற்க்காக ஆகக்கூடிய பொருட்செலவு, மனிதசக்தி எவ்வளவுன்னு உங்களால யூகிக்க முடியும். ஆனா, இந்த எல்லாக் கேள்விகளுக்கும் உக்காந்த இடத்துல இருந்தே விடை கண்டுபிடிக்க (ஆதாங்க, இந்த நோகாம நோம்பு கும்பிடுறதுன்னு சொல்வாங்களே அப்படி!) ஒரு அட்டகாசமான ரோபாட்டை கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ( Rutgers University oceanographer Oscar Schofield). இந்த ரோபாட்டுக்கு ‘க்ளைடர் ரோபாட்’டுன்னு பேரு (Glider robots). தண்ணிக்குள்ள சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு மாதிரி வளைஞ்சி வளஞ்சுப் போயி, தண்ணீரோட வெப்பம், கலந்த எண்ணை அளவு இப்படி எத்தனையோ விஷயங்களை கண்டுபிடிச்சி, கணினிக்கு தானே அனுப்பியும் விடுமாம். நல்லாருக்குல்ல?! மேலதிக தகவல்கள் இங்கே
மர்மம்: மனித ஹார்மோன் சுரந்து  “பெண்ணாக மாறிய” மரம்!
விந்தை…..விந்தை…. விந்தை! என்ன அப்படிப் பார்க்குறீங்க. இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கிற மர்மங்களுக்கு,  ஒரு எல்லையே இல்லாமப் போச்சு இப்பெல்லாம். அட ஆமாங்க, இதுவரைக்கும் மனிதர்களில் (பெண்கள்) மட்டுமே சுரக்கும் என்று எண்ணப்பட்டு வந்த ‘ப்ரொஜஸ்டிரோன்’ (progesterone) அப்படீங்கிற பெண் செக்ஸ் ஹார்மோன், walnut tree அப்படீங்கிற ஒருவகையான மரத்துலயும் சுரக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுல என்ன பிரச்சினைன்னா, மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ள வித்தியாசமே இவ்வகையான ஹார்மோன் சுரக்கும் தன்மையிலும்தான் என்பதுதான்! ஆக, மனிதர்களில் மட்டுமே சுரப்பது என்று நினைக்கப்பட்ட இந்த ஹார்மோன் எப்படி தாவரங்களில் சுரந்தது என்று கேட்டால், தாவரங்கள் தோன்றுவதற்க்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே  இந்த ஹார்மோன் தோன்றியிருக்கக்கூடும் அப்படீன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! எல்லாம் மர்மமே…..நமக்குத் தெரியாதவரை! மேலதிக தகவல்கள் இங்கே

அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

நவீன கண்டுபிடிப்புகள் பத்தி ஒரு நல்ல பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சேன்னு நேனச்சிக்கிட்டு இருந்தேன். அந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செய்தி கெடைச்சது, அதான் எழுதிடுவோமேன்னு இந்தப்  பதிவை எழுதுறேன். நவீனம் அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் ஒன்னுதான்னாலும் அதன் வெளிப்பாடுகள் இருக்கே அடேங்கப்பா….!
நிகழ்கால வாழ்க்கை/வாழ்வியல் முறையை விஞ்ஞனத்தின்/அறிவியலின் துணையுடன் சுலபமாக, எளிமையாக, வேகமாக, புதுமையாக, ரசிக்கும்படியானதாக இப்படி ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ள பிறந்ததே நவீனம் அப்படீங்கிறது என்னோட பக்குவப்படாத புரிதல். அந்த வகையிலதான், நாம இன்னிக்கு பயன்படுத்துற  தொழில்நுட்பங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி, விளையாட்டு சாதனங்கள் இப்படி எல்லாமே அடங்கும்!
ஆனா இந்த வகை தொழில்நுட்பங்கள் எல்லாத்துக்குமே மின்சாரம் அப்படீங்கிற இரண்டாம் பொருள் தேவை கண்டிப்பாக அவசியம். ஏன்னா, இத்தொழில்நுட்பங்கள் எல்லாமே மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் செயலிகளைக் கொண்டது! ஆக, தொழில்நுட்பங்களின் உச்சகட்டமான மொபைல்/நடமாடும் மின்சாதனங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு அதே வகையான நடமாடும் மின்சாரத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.
இத்தேவையின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் பேட்டரி (இதுக்கு தமிழ்ல என்னங்க பேரு?). ஆரம்பத்துல ஒரு முறை பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட பேட்டரிக்கள்,  பணவிரயத்தை குறைக்க மறுசக்தியூட்டப்படும் தன்மையுள்ள பேட்டரிக்களாக (ரேச்சர்கீப்ளே பட்டேரீஸ்) இற்றைப்படுத்தப்பட்டன! அப்படியான ஒரு உச்சகட்ட இற்றைப்படுத்தலின் விளைவாக, அதிநவீன மின்சார நண்பனாக நம்முன்னே நிற்கும் ஒரு பேட்டரியைப் பற்றியதுதான் இன்றைய பதிவு! அது என்னன்னு பார்க்கலாம் வாங்க…..
அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!
www.gadgetreview.com
மறுசக்தியூட்டப்படும் பேட்டரிக்களின் வரிசையில புதுசா வந்திருக்கும் நவீன பேட்டரிக்கள்தான் ‘அசைத்தாலே மறுசக்தி பெற்றுவிடும் (shake to recharge) வகை பேட்டரிக்கள்! இந்த வகை பேட்டரிக்கள் அடிப்படையில் ஒரு ஜெனெரேட்டர்தான் என்றாலும் பேட்டரி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடங்கிவிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
பேட்டரி போன்ற பெட்டிக்குள் அடங்கும் இந்த புதிய வகை மின்சாதனம், 500 mF கெப்பசிட்டன்ஸ் (capacitance) சக்தியுள்ள ஒரு ஜெனெரேட்டரும், கெப்பாசிட்டரும் (generator as well as a ) சேர்ந்த ஒரு கலவை என்பது குறிப்பிடத்தக்கது!
மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தக் கலவை மின்சாதனத்தின் முன்மாதிரி/அடிப்படை மாதிரிகளை () உருவாக்கியுள்ள ப்ரதர் நிறுவனம் (Brother Industries), ஜெனெரேட்டர் மற்றும்  கெப்பாசிட்டர் ஆகிய இரு சாதனங்களும் பேட்டரி அளவுள்ள இரு பெட்டிகளில் அல்லது ஒரே பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கெப்பாசிட்டர் மட்டும் அதிகபட்ச வோல்டேஜுடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறது!
இந்த வகை பேட்டரிக்கள் AA மற்றும் AAA ஆகிய இருவகையான அளவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
இந்த புதுயுக பேட்டரிகளை மறுசக்தியூட்ட/ரீச்சார்ஜ் செய்ய, அவை பொருத்தப்பட்ட மின்சாதனத்தை அசைத்தாலே போதுமானது என்கிறது. உதாரணத்துக்கு, இப்பேட்டரிக்கள் பொருத்தப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் அல்லது டார்ச் லைட் போன்றவற்றை அசைத்தாலே போதும் உடனே அவை  மறுசக்திபெற்றுவிடும் என்கிறது ப்ரதர் நிறுவனம்! அது சரி, இதுதானா நவீனம்ங்கிறது?!
அதெல்லாம் சரி, இப்போ இருக்குற மறுசக்தியூட்டப்படக்கூடிய பேட்டரிக்களுக்கும், இந்த நவீன பேட்டரிக்களுக்கும் பலனளவுல என்ன பெரிய வித்தியாசம் அப்படீன்னு கேட்டீங்கன்னா, இப்புதிய வகை பேட்டரிக்கள்……
  1. சக்தியிழந்தபின் மாற்றும் அவசியத்தை/வேலையை கிட்டத்தட்ட நிரந்தரமாகவே (semipermanently) இல்லாமல் செய்துவிடுமாம்!
  2. ரிமோட் கன்ட்ரோல் மாதிரியான குறைந்த சக்தி மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும் என்கிறார்கள்!
  3. பேட்டரிக்களால் உண்டாகும் மின்சாதனக் கழிவுகளையும் குறைத்துவிடுமாம்!
என்ன, “அட…..இது நல்லாருக்கே” அப்படீன்றீங்களா? உண்மைதான், இந்த மாதிரியான நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படலைன்னா, உலக வெப்பமயமாதலின் பிடியில் சிக்குண்டு தவித்துக்கொண்டிருக்கும் இந்த உலகமும், உலக உயிர்களும் சில நூறு வருடங்களில் காணாமல் போய்விடக் கூடிய பேராபத்தை நாம எதிர்நொக்கியிருக்கிறோம் அப்படீங்கிறத யாரும் மறந்துடாதீங்க!
அதெல்லாஞ்சரி, இந்த புதுவகை பேட்டரி எப்போ சந்தைக்கு வரும்? கூடிய சீக்கிரமே! ஏன்னா, இவ்வாரக் கடைசியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் “Techno-Frontier 2010″ கண்காட்சியில், முதல் முறையாக பார்வைக்கும், மின்விளக்குகள் (LED flashlight) மற்றும் ரிமோட் கன்ட்ரோலில் பொருத்தப்பட்டு செயல்முறை விளக்கத்துடனும் அறிமுகமாக இருக்கிறது இந்த அசைத்தால் மறுசக்தியூட்டப்பட்டுவிடும் புத்துலக பேட்டரிக்கள்!

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” அட்டகாசமான புதுவரவு!!

 இன்னும் 100 வருஷத்துல உலகம் அழியப்போகுதுன்னு சின்னம்மை நோயை ஒழிச்சுக்கட்டின உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஃப்ராங்க் ஃபென்னர் சொல்றாரு! அவரு சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு உலக வெப்பமயமாதல் மற்றும் உலக தட்ப வெட்ப மாற்றங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாதிப்புக்கள் குறித்த அன்றாடச் செய்திகள்!
இப்படித்தான், 2000-மாவது வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த பீதியை/புரளியை உண்மைன்னு நம்பி, நடந்த காமடி கூத்துகள், சில வன்முறைகள் பத்தி நாம செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிச்சு/பார்த்து இருப்போம். அதேமாதிரி சமீபத்துல, 2012 ஆம் வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த செய்தி/புரளியைப் பார்த்துட்டு, முன்னாடி செஞ்ச மாதிரியே காமெடிக்கூத்துகளையும், வன்முறைகளையும் செஞ்சோமுன்னா, அதைவிட பைத்தியக்காரத்தனமான/முட்டாள்தனமான விஷயம் வேற எதுவும் இருக்க முடியாது!
“ஆமா, இதையெல்லாம் இப்போ எதுக்கு நம்மகிட்ட சொல்றான் இவன்” அப்படீன்னு மனசுக்குள்ள நீங்க முனுமுனுக்கிறது எனக்கு நல்லாவே கேக்குதுங்க. அதாவது, உலகம் அழிவதற்க்கான ஆபத்துகளும், பாதிப்புகளும் ஒருபக்கம் நடந்துகிட்டு இருக்க அதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது அப்படீன்னு மறுபக்கம் ஆய்வுகளும், சுற்றுச்சூழலை பாதிக்காத, இருக்கும் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி அதிக நன்மைகளை பெறும் புதிய கண்டுபிடிப்புகளும் நடந்துகிட்டு இருக்குங்கிறத அவ்வப்போது மேலிருப்பானில் நீங்க படிச்சிருப்பீங்க…..
அந்த வரிசையில உலகின் தேவைகளை, சுற்றுச்சூழலையும் பாதிக்காமல், ஆனால் குறைந்த செலவில் அதிக நன்மைகளை அள்ளிதரக்கூடிய வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளின் துணையுடன், சிறிய அளவுடைய ஆனால் அதேசமயம் அதிகமான சக்தியை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான மின்கலத்தை (battery) வெற்றிகரமாக கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின், வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானி ச்சூங் ஷிக் யூவும் அவரது  துணை விஞ்ஞானிகளும்/மாணவர்களும்!
அந்த மின்கலத்துக்கு சூப்பர் மின்கலம்னு (Super battery) பேரு வச்சிருக்காங்க. அதுக்கு ஏன் அப்படியொரு பேரு, அந்த மின்கலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, அதை எப்படி உருவாக்கினாங்க அப்படீன்னு பிரிச்சி மேயத்தான் இந்த பதிவு. வாங்க கெளம்புவோம்…..

சூப்பர் பேட்டரியும், சூப்பர் அதிக அழுத்தமும்!
முதல்ல இந்த புதிய மின்கலத்துக்கு ஏன் சூப்பர் பேட்டரி அப்படீன்னு ஒரு பேருன்னு கேட்டா, சூப்பர் அழுத்தம் (super-high pressures) கொடுத்து உருவாக்கப்பட்டதுனாலயும், அசாத்தியமான அளவு சக்தியை ஒரு சின்ன வடிவத்துக்குள்ள சேமித்து வைக்கக்கூடிய மின்கலம் இது என்பதாலேயும்தானாம்!
இந்த மின்கலத்தின் அடிப்படை என்னன்னா, இயந்திர சக்தியை () வேதியல் சக்தியாக () மாற்றி ஒரு பொருளினுள் சேமித்து வைக்க முடியும் என்பதுதான் என்கிறார் ச்சூங்! உதாரணத்துக்கு, அணு சக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். யுரேனியம் அல்லது ப்ளூடோனியம் அணுவுக்குள் ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய வேதியல் சக்தியை எப்படி சேமிக்க முடியுமோ அதேபோலத்தான் இந்த சூப்பர் மின்கலமும்!
ஐய்யய்யோ, அப்போ இந்த மின்கலமும் ஒரு அணுகுண்டு மாதிரியான்னு கேட்கக்கூடாது! ஏன்னா, இந்த மின்கலத்தின் தயாரிப்பு தத்துவம்தான் அணுகுண்டுக்கு சற்று ஒப்புமையுடையதே தவிர, சூப்பர் மின்கலத்துக்கும் அணுகுண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க! சக்தி அளவினடிப்படையில் இந்த சூப்பர் மின்கலம் அணுசக்திக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது என்கிறார் ச்சூங்!
சூப்பர் பேட்டரி உருவானது எப்படி?
வைரத்தாலான ஆன்வில் செல் என்னும் (diamond anvil cell) ஒரு கருவி ஒரு சின்ன பகுதிக்குள் அசாத்திய அளவிலான அழுத்தத்தை (more than million atmospheres) ஏற்படுத்த வல்லது. இந்த கருவியினுள் செனான் டைஃப்லூரைடு (xenon difluoride (XeF2)) என்னும் வெள்ளை கட்டிகள் வடிவிலான வேதியல் பொருளை செலுத்தி, அளவுக்கதிகமான அழுத்தத்திற்க்கு (more than a million atmospheres) அந்த வெள்ளைக் கட்டிகளை உட்படுத்துவதன்மூலம், அவற்றிர்குள்ளிருக்கும் வேதியல் இணைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து உறுதியான முப்பரிமான வடிவத்திற்க்கு மாறிவிடுகிறது (tightly bound three-dimensional metallic “network structures”)! இந்த அளவிலான அழுத்தம் பூமியின் ஆழமான பகுதிகளில் இருக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது!
அதெல்லாஞ்சரி, இதனால நமக்கு என்ன பயன்?
இந்த வகையான வேதியல் பொருள்கள் மூலமாக, புதிய எரிசக்திகள், சக்தி சேமிக்கும் கலங்கள் (), ஆபத்தான வேதியல் மற்றும் உயிரியல் பொருள்களை  அழிக்கவல்ல மருந்துகள் (super-oxidizing materials) மற்றும் அதிக வெப்ப சூப்பர் கடத்திகள் ( high-temperature superconductors) போன்ற பல்வேறு பொருள்களை உருவாக்கலாம் என்கிறார் விஞ்ஞானி ச்சூங்!
பரவாயில்லை, இந்த மாதிரியான புதிய பொருள்களின் வருகை இந்த உலகின் அத்தியாவசியத் தேவைகளான எரிசக்தி, மின்சாரம் போன்றவற்றை பூர்த்தி செய்ய, மனித வாழ்வை இன்னும் சுலபமாக்கினால் நல்லதுதானே?!

கண்ணடிக்கும் நரம்புகளும் கண்கூடாகும் உணர்வுகளும்?!

மின்னல் வந்தா நம்மால பார்க்க முடியுமா? மின்னல் அப்படீங்கிறது ஒரு வகையான மின்சாரம். அதாவது, இயற்கைச் சூழல்/சுற்றுச்சூழலில் உள்ள இரு வகையான கதிர்கள் (+ve மற்றும் -ve) ஒன்றோடொன்று உரசிக்கொள்வதால் உருவாவதுதான் மின்னல் எனும் ஒரு வகை மின்சாரம் அப்படீங்கிறது உங்க எல்லாருக்கும் தெரியும். அந்த மின்சார மின்னலை உங்கள்ல கிட்டத்தட்ட எல்லாருமே ஒரு முறையாவது பார்த்திருப்பீங்க!
ஆக, மின்னல் என்னும் மின்சாரத்தை நம் கண்களால காண முடியும், ஆனால் அது மிகவும் ஆபத்தானது! இல்லீங்களா?!
மின்னல், மின்சாரம், நரம்புகள்; ஒரு தொடர்பு!

wikimedia: by Axel Rouvin

மின்னல் எனும் இயற்கை மின்சாரத்தை பார்க்க முடியுமென்றால், மனிதனால் உருவாக்கப்பட்டு, நம் வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களில் ஒளி உண்டாக்கும் மின்சாரத்தை நம்மால பார்க்க முடியுமா? கண்டிப்பா முடியாது. ஏன்னா, கட்டிடங்களுக்குள் இருக்கும் மின்சாரம், நம் பாதுகாப்பிற்க்காக ‘வயர்’ என்னும் வேதியல் பொருளால் சுற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது!
நம் உடலுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான நரம்புகளுக்குள்ளும் ஒரு வகையான மின்சார சமிஞ்ஞைகள்/தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. நம் வீட்டினுள் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நம்மால் எப்படி பார்க்க முடிவதில்லையோ, அதே போலத்தான், நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் நரம்பு மின்சாரத்தையும் பார்க்க முடியவில்லை விஞ்ஞானிகளால்!
இதுவரைக்கும்தான் பார்க்க முடியல, ஆனா இனிமே பார்க்க முடியும் அப்படீங்கிறாங்க ஜெர்மனி  நாட்டின், ஹெய்டெல்பெர்க் நகரிலுள்ள, மேக்ஸ் ப்ளான்க் மருத்துவக் கல்வி நிறுவனத்தைச் (Max Planck Institute for Medical Research) சேர்ந்த விஞ்ஞானிகள்!  இந்த ஆய்வின்மூலம், நரம்புகளுக்குள்ளே நிகழும் பல்வேறு செயல்பாடுகளை இனி கண்கானிக்க முடியும் என்கிறார்கள்?! அடேங்கப்பா…..!
நரம்பியல் ஆய்வுத்துறையின் ஒரு மைல்கல்லாக கருதப்படும் இந்த ஆய்வை ஸ்விட்சர்லாந்து, மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து சாத்தியப்படுத்தியுள்ளனர் ஜெர்மனிய ஆய்வாளர்கள்!
இந்த ஆய்வினால, நமக்கு என்னப்பா நன்மைன்னுதானே கேக்க வர்றீங்க? அதப் பத்திதான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப் போறோம். என்ன, நம்ம நரம்புகளுக்குள்ளே ஒரு சுற்றுலா போய்ட்டு வருவோம் வர்றீங்களா…..
பச்சோந்தி புரதமும் கண்ணடிக்கும் நரம்புகளும்!

wikimedia: Fanny CASTETS
நரம்புகளுக்கு மத்தியில் ஏற்படும் சமிஞ்ஞைகள், தகவல் தொடர்புகளாலேயே நம் பல்வேறு உணர்வுகள், உணர்ச்சிகளாக உருவெடுக்கின்றன. இந்தத் தகவல் தொடர்பானது, action potentials என்னும், சில தாது உப்புகளின் ஒரு வகையான செயல்பாடுகளால்தான் சாத்தியப்படுகிறது.  இந்தச் செயல்பாட்டினில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தாது உப்பு நம் எலும்புகளில் உள்ள கால்சியம் (calcium). ஒரு நரம்புத் தொடர்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய, இதுவரை நரம்பு மண்டலத்துக்குள் அல்லது அனுவுக்குள், எலக்ரோட்ஸ் என்னும் ஒரு வகை மின்சார கம்பிகளை வைத்தே முயற்ச்சித்து வந்தனர் விஞ்ஞானிகள்.
இம்முறையினால், மின்சாரக்கம்பிகள் பொருத்தப்படும் தசைகளும், அனுக்களும் இறந்து விடுவதுண்டு. இதனால், மேற்கொண்ட முயற்ச்சியில் பலனடைவது மிகவும் கடினம். ஆனால், முதல் முறையாக, இந்த பிரச்சினைகள் ஏதுமின்றி தசைகளில், அனுக்களில் ஏற்படும் நரம்புத் தொடர்பினை காண, பச்சோந்தி புரதம் என்னும் ஒரு வகையான புரதத்தை கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனிய விஞ்ஞானிகள்!
அதாவது, action potentials என்னும் நரம்புத் தொடர்பின் ஆரம்பத்தை குறிக்கும் ஒரு செயல்பாட்டினை செய்வது கால்சியம் என்னும் தாது. இந்தத் தாதுப்புடன், பளபளக்கும் வண்ணத்தைக் கொண்ட fluorescent calcium indicator protein, என்னும், ஆய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வகை புரதங்களை இணைத்தால், நரம்புத் தொடர்பு ஏற்படும்போது நீள வண்ணத்திலிருந்து மஞ்சள் வண்ணத்துக்கு மாறும் தன்மை கொண்டவை இப்புரதங்கள். இத்தகு வண்ண மாற்றுத் தன்மை கொண்ட புரதங்கள் என்பதால் இவற்றை பச்சோந்தி புரதம் (cameleon protein YC3.60) என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
கண்ணடிக்கும் நரம்புகளால் கண்கூடாகும் நியாபகங்கள், உணர்வுகள்!
இவ்வகை பச்சோந்தி புரதங்களை எலியின் மூளைக்குள் செலுத்தி, அந்த சோதனை எலிகளுக்கு ஒரு வகையான வாசனையுடன் கூடிய காற்றை சவாசிக்கக் கொடுத்திருக்கிறார்கள். எலிகள் சுவாசிக்கத் தொடங்கியவுடன், சுவாசத்துக்கு காரணமான மூளைப்பகுதியின் நரம்புகள் பளபளக்கத் தொடங்கினவாம். ஆக, எலிகள் சுவாசிப்பதை திட்டவட்டமாக,  குறிப்பிட்ட மூளைப்பகுதியின் மூலம், இவ்வகை கண்ணடிக்கும் புரதங்களால் காண முடியும் என்பதை, உலகில்  முதல்முறையாக நிரூபித்துக் காட்டியுள்ளார் விஞ்ஞானி மசாஹிர் ஹாசன்!
இப்புதிய முறையின் துணையுடன், ஒரு மனிதனின் மூளைக்குள் உருவாகும் பல வகையான உணர்வுகளை சுலபமாக படிக்க, கண்கூடாக பார்க்கவும் முடியும் என்கிறார் ஹாசன். உதாரணமாக, மூளைக்குள் உருவாகும் நியாபகங்கள், சுவாசம், கோபம், சோகம் என பல்வேறு வகையான உணர்வுகளின் தன்மையை, சம்பந்தப்பட்ட மூளைப்பகுதியை இனி குறிப்பிட்டு  உற்று நோக்கி, ஆய்வு செய்ய முடியும் என்கிறார். அப்படிப்போடு!
நரம்பியல் துறையில் ஒரு புதிய புரட்ச்சியை ஏற்படுத்தியுள்ள இப்பச்சோந்தி புரதம், முன்பு ஆய்வு செய்ய முடியாத பல்வேறு மூளைச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இனி சுலபமாக ஆய்வு செய்து, பல முன்னேற்றங்களை காண முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
ஒளியின் துணைகொண்டு ஒரு குறிப்பிட்ட நரம்பியல் நிகழ்வை, மிகத்துள்ளியமாக ஆய்வு செய்ய உதவும் இப்புதிய முறையினால், ஒரு மனிதனின் மூளைக்குள் நியாபகங்கள் எப்படி உருவாகின்றன, அவை எப்படி அழிந்து போகின்றன என்பதை ஆய்வு செய்ய முடியும். உதாரணமாக, வயதாகும்போது ஏற்படும், அல்ஷெய்மர்ஸ் நோய் (Alzheimer’s disease), பார்க்கின்சன்ஸ் நோய் (Parkinson’s disease) மற்றும் ஷீஷோஃப்ரீனியா (schizophrenia) போன்ற நியாபகங்களை சிறுக சிறுக அழித்துவிடக்கூடிய தன்மை கொண்ட நோய்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்கிறார் ஹாசன்!
இதுக்குப் பேருதான் விஞ்ஞானம் போலிருக்கு! என்னென்ன அதிசயங்கள்லாம் நடக்குது பாருங்க ஆய்வுலகத்துல!!

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).
ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)
மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல  பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமா…..
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.
தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.
1. விழிப்பு நிலை (wakefulness)
2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}
3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!
தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?
தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை!  இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களே….இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னா…….

பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?!  ஆனா,  பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!
இது தவிர்த்த வேறு சில காரணங்களாக ஆய்வுகளில் சொல்லப்படுவது……
1. சரியான தூக்கமின்மை
2. ஜூரம்
3. மன உளைச்சல்
4. சில மருந்துகள் (ஊக்க மருந்துகள், sedatives, hypnotics, antipsychotics)
தூக்கத்தில் நடப்பதால் வரும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!
தூக்கத்தில நடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் காயங்கள் எற்படலாம். இது தவிர, விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பெரிய பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வேண்டும் என்கிறார் கபூர்!
தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற்க்கான சில சிகிச்சை முறைகள:
1. ஆரோக்கியமான தூங்கும் பழக்கம். அதாவது, சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது இப்படி பல
2. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை இழக்காமல் இருக்க)
3. இரவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள், அதை அறவே அருந்தாமல் இருப்பது அல்லது குறைத்துக்கொள்வது
4. இது தவிர்த்த, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது!
என்ன நண்பர்களே, ஏன் சிலர் தூக்கத்தில் நடக்கிறாங்கன்னு, இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?
சரி, இப்போ நான் பதிவு தொடக்கத்துல சொன்ன என்னோட சுவாரசியமான சேட்டைக்கு வருவோம்…..
சின்ன வயசுல, பொதுவா தூங்கும்போது (மத்த (சில?) எல்லார்மாதிரியும், எப்பவாவது) எதையாவது பினாத்துற பழக்கம் எனக்கு இருந்ததுன்னு அம்மா சொல்லுவாங்க. இப்படித்தான் ஒரு முறை பினாத்தும்போது திடீர்னு, ஒரு முழு திருக்குறளையும், அக்ஷ்ரப் பிழையில்லாம அப்படியே சொன்னேனாம்.  என்ன குறள்னு இப்போ சரியா நியாபகம் இல்ல எனக்கு! (எத்தன பேரு இத நம்புவீங்கன்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் சொன்னேன்னு எங்கம்மா சொன்னப்போ நானே நம்பலைங்கிறதுதான் உண்மை!)
தூக்கத்தில் நடப்பது பற்றிய மற்றுமோர் ஆய்வறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்

உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு மூலையில் “வாரணம் ஆயிரம்” சூரியா மாதிரி கட்டுமஸ்தான தேகமும், பொலிவும் கிடைக்காதா அப்படியென்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதற்கு சூரியா என்ன செய்தார்? வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை,தான் விரும்பி உண்ணும் கோழி இறைச்சி, மற்றும் அன்றாடம் நாம் உண்ணும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு வருடம் தவிர்த்தார்.முடியுமா நம்மால்? முடியும், ஆனால் மிக மிக கடினம்.அதைக்கூட விட்டுவிடுங்கள், நம்மில் பலருக்கு மிக மிக குறைந்த பட்ச ஆசையான “தொப்பை இன்றி ஒரு வாழ்க்கை” என்ற இலக்கை கூட சமீப காலங்களில் எட்ட முடியாமல் போவதை பார்க்க முடிகிறது.இதற்க்கு பல்வேறு காரணங்கள், வேலை நேரம், போதிய நேரமின்மை, உணவு விடுதிகளில் உணவு உண்பது, வேலை பளு,தவறான நேரங்களில் உணவு உண்பது, என இன்னும் பல!
இவற்றுள் பல காரணங்கள் நம்மால் தவிர்க்க முடியாமல் போனாலும் சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்கலாம்.மேற்கூறிய காரணங்களுள் எதை சரி செய்தால் உடல் பருமன், தொப்பை போன்ற அசவுகரியங்களை தவிர்க்கலாம்? தெரியுமா உங்களுக்கு? இதைத்தான் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. வாருங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம். அதாவது அமெரிக்காவில் இன்று கிட்டத்தட்ட 10 கோடி பேருக்குமேல் உடல் பருமன்  நோய்க்கு(obesity) உட்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் உலகில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் உடல் பருமனால் துன்பப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து அறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
ஆராய்ச்சியின் தொடக்கமாக எலிகளின் மேல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது தெளிவுபடுத்தும் ஒரு உண்மை என்னவென்றால், தவறான நேரங்களில் உணவு உண்ணும் பழக்கமே என்பதுதான்! அதாவது நம்ம ஊரில் குறிப்பிடுவது போல நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது.இதற்க்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நள்ளிரவு நேரத்தில், அதாவது உடல் உறக்கத்தை எதிர்ப்பார்க்கும்/விரும்பும் நேரத்தில் உணவு உண்பதே ஆகும்.ஏனென்றால், நம் உடல் செயல்பாடுகள் ஒரு உயிரியல் கடிகாரத்தைப்(circadian clock/rhythms) பொருத்தே அமைகிறது என்பதால்தான்.மேலும், உணவு உண்ணும் நேரத்தையும், உடல் எடையேற்றத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது!
இரவு நேர உணவும் உபாதையும்
நள்ளிரவு நேர உணவுப் பழக்கமும் உபாதைகளும்
ஒரு மனிதன் ஏன் அல்லது எப்படி தன் உடல் எடை ஏறக்காரணமாகிறான் என்பது சற்று சிக்கலான/புரியாத  ஒரு பிரச்சனைதான் என்றாலும்
அதற்க்கு கண்டிப்பாக அவன் உண்ணும் உணவு மட்டுமே காரணம்  என்பது அர்த்தமல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அதாவது நாம் உண்ணும் உணவைப் பொருத்து மட்டுமே அமைவதல்ல உடல் பருமன் நோய்.மாறாக, நாம் உண்ணும்  உணவின் அளவு ,நேரம், நமது மனநிலை என பல காரணங்கள் இருப்பினும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று இந்த உணவு உண்ணும் நேரம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
உயிரியல் கடிகாரமும்(circadian clock) உடல் செயல்பாடுகளும்
உயிரியல் கடிகாரம் என்பது இரவு/பகல் சுழற்ச்சியை ஏற்படுத்தும் சூரிய வெளிச்சத்தை மையமாக கொண்டு இயங்கும் ஒரு உடல் கடிகாரமாகும்.இந்த கடிகாரமானது நம் உடல் செயல்பாடுகளை சரி வர செய்ய சூரிய வெளிச்சத்தைப் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. உடல் செயல்பாடுகள் என குறிப்பிடுகையில் நாம் உணவு உட்கொள்ளுதல், உழைத்தல், பின் சக்தி குறைந்து களைப்பில் உறங்குதல் போன்றனவே!  மேற்கூறிய இவை அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளும், நல்ல வாழ்க்கையும் அமைகிறது.இதற்க்கு இன்றியமையாததாகிறது உயிரியல் கடிகாரத்தின் தடைபடாத இயக்கம்!
800px-Biological_clock_human-773742
உயிரியல் கடிகாரம்
எனவே இங்கு முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால் “நேரத்திட்டமிடுதல்” என்பதே ஆகும்.ஆதாவது, சாப்பிட வேண்டிய  நேரத்தில் சாப்பிடுதல், உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்தல் மற்றும் தூங்க வேண்டிய நேரத்தில் தவறாமல் தூங்குதல் எனலாம்! இவை அனைத்தையும் சரியான நேரத்தில் மேற்கொள்ளும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டோமானால் நமக்கு இந்த உடல் பருமன்/தொப்பை போன்ற அசவுகரியங்கள் ஏற்ப்படாது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
biological_clock 2
நேரத்திட்டமிடுதலும் அன்றாட செயல்களும்
எனவே சரியான நேரத்திட்டமிடுதலுடன்  நமது அன்றாட வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்வோம்.ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வை வாழ்வோம்!

விடைதெரியா கேள்விகள்….

உலகத்துல பதிலில்லாத கேள்விகள் எவ்வளவோ இருந்தாலும் அதுல முக்கியமான சில கேள்விகளுக்கான பதில் தெரிஞ்சா வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதா, சுவாரசியமா இருக்கும்! அதுல ஒன்னு என்னன்னா, மனிதனோட பரிணாமம் பற்றிய கேள்விகள்தான். அதாவது, உலகத்துல இப்போ இருக்கிற உயிர்கள்ல முதன்மையானது மனித இனம். அந்த மனித இனத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் ஆய்வுகள் அவ்வப்போது சில ஆச்சரியங்கள்/அதிசயங்கள நமக்கு செய்தியாக வெளியிடுவது நம்ம எல்லோருக்கும் தெரியும். அத்தகைய செய்திகள் நமக்குள் பல கேள்விகளை எழுப்பும் இல்லையா? அந்த கேள்விகளுள் சிலவற்றை பார்ப்போம்….
1.  புதுயுக மனிதர்களான “மாடர்ன் ஹியூமன்ஸ்” எங்கிருந்து வந்தார்கள்?
சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து தோன்றிய புதுயுக மனிதன் மெல்ல உலகின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக அறிவியல் வல்லுனர்கள் கூறினாலும் பல பரிணாம வல்லுனர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் கூற்றுப்படி, புதுயுக மனிதன் ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆதிமனிதன் (Archaic humans) வாழ்ந்த இன்ன பிற கண்டங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பரிணமித்து உலகின்  எல்லா இடங்களுக்கும் புலம் பெயர்ந்தான் என்பதே! இது இன்னும் ஒரு கார சாரமான விவாதமாதான் இருக்குதே தவிர ஒரு திட்டவட்டமான பதிலக் காணோம் விஞ்ஞானிகளிடமிருந்து!?
2. முதல் மனிதன் யார்? அவன் எப்படி இருந்தான்?
குறங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, அந்த மனிதன் எப்படி இருந்தான் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை! அதாவது முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids),  என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஹோமினிட் பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு முறை கிடைக்கும் ஆதாரங்கள் ஒவ்வொரு விதமாக இருப்ப்தால் ஆதிமனிதன் எப்படி இருந்தான் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை தெரியவில்லை!
3. இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?
அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா? அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா? அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல!

4. புதுயுக மனிதன் திடீரென்று 50,000 ஆண்டுகளுக்கு முன் ஏன் உலகின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தான்?
இதற்க்கு காரணமாக பல விஞ்ஞானிகள் கூறுவது மூளையில் ஏற்ப்பட்ட ஒரு மரபனு மாற்றம்தான். இன்னும் சிலர் கூறுவது ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை அளவுக்கு அதிகமாகும்வரை இருந்து பின்னர் புலம் பெயர்ந்தனர் என்று!
5. ஹாப்பிட் (Hobbit) என்றால் என்ன?
ஹாப்பிட் என்றால் மனிதனுக்கு சற்றே முன்னர் வாழ்ந்த மூதாதையர் என்பதே இதுவரையிலான கருத்து. ஆனால், தொடர்ந்து ஆய்வில் வெவ்வேறு வகையான ஹாப்பிட்டுகள் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டு கண்டறியப்படுவதால் இந்த வகை மனித இனம் ஒன்றுதானா இல்லை அவ்வாறு பல்வேறு வகை இருக்கிறதா என்று இன்னும் விளங்கவில்லை!
6. மனித பரிணாமம் இன்னும் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறதா?
நான் முன்பே பதிவிட்டிருந்தது போல மனித இனம் இன்னும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிற உயிர்கள் போல அல்ல, அவற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் என்பதுதான் ஆச்சரியம். இதற்கு காரணமாய் கூறுவது மரபனு மாற்றங்களை. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள்!
7. நம்  நெருங்கிய உறவினர்களான நியான்டர்தால் மனிதன் மட்டும் ஏன் அழிந்து போனான்?
நியான்டர்தால் மனிதன் சுமார் 24,000 வருடங்களுக்கு முன் நம்முடன் வாழ்ந்திருந்தாலும் பின்பு ஏனோ அழிந்து போனான். அதேபோல 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹாப்பிட் என்ற மனித இனமும் வாழ்ந்திருந்தது. ஆனால், இன்று நம்மிடையே அவர்கள் இல்லை. காரணம்? அவர்களால் நோய்களை எதிர்கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு இல்லாத திறன்கள் நமக்கு அதிகப்படியாக இருந்ததாகவும இருவேறு சொல்லப்பட்டாலும் உண்மை எதுவென்று இன்னும் தெரியவில்லை!
8. மனிதனுக்கு உடல் முழுவதும் இருந்த ரோமத்திற்கு (முடி?) என்ன ஆயிற்று?
மனிதர்களுக்கு ரோமம் இல்லாமல் போனதற்கு காரணமாய் கூறப்பட்ட கருத்துக்கள் பல உண்டு. உதாரணமாக,
1. மிகவும் சூடான ஆப்பிரிக்க காடுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும்
2. முடியினை இழப்பதனால் கொடிய உயிர்கொல்லி கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதால் எனவும் நம்பப்படுகிறது!
9. மனிதர்கள் ஏன் இரண்டு கால்களைக் கொண்டு நடக்கிறார்கள்?
மூளை வளர்ச்சி ஏற்பட்டு, கற்காலம் தொடங்குமுன்பே மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நம் மூதாதையரான குறங்கோ நான்கு கால்கள் கோண்டுதான் நடந்தன! இதற்கு காரணமாய் கருதப்படுவது சக்தி விரயமாவதை தடுக்க எனவும், அதிகப்படியான உடல் பாகம் சூரிய ஒளியில் படாமல் தடுத்து உடல் வெப்பத்தைக் குறைக்க எனவும் கருதப்பட்டாலும் உண்மை இன்னும் தெரியவில்லை!
10. மனிதனுக்கு மட்டும் ஏன் மூளை மிக பெரியதாக வளர்ந்தது/இருக்கிறது?
மூளை பெரிதானதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியாவிட்டாலும் சில யூகங்களின் படி பார்த்தால்,
1. ஆயுதங்கள் போன்றவற்றை வடிவமைக்கத் தொடங்கியதால் மூளை வளர்ச்சிக்கான அவசியம் இருந்தது
2. பிற மனிதர்களுடன் நன்கு பழக ஆரம்பித்ததால் மூளை வளர்ந்ததாகவும்
3. சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தால் மூளை வளர்ச்சி ஏற்பட்டது போன்ற கருத்துக்கள்  உள்ளன!

ஈமச்சடங்கு: இப்படியும் சில கடைசி நிமிடங்கள்!(18+)

மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி.  பிறப்புக்கும் இறப்புக்குமான சிறு இடைவெளியில் வேண்டுமானால் நம் வாழ்க்கையை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் நம் தொடக்கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப்பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என்பதை அவன் சுற்றமோ, நட்போதான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிடங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்!
எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் மற்றுமோர் வழக்கமும் உண்டு, அதுதான் ஒரு ப்ரேதத்தை அப்படியே (காகம்/கழுகு, இன்ன பிற விலங்குகளுக்கு இரையாகும்படி) விட்டுவிடுவது! சரி, இவை மூன்றும் நமக்கு தெரிந்தவதைதான். ஆனால் உலக வழக்கில் இவைதவிர்த்த இன்னும் பல வித்தியாசமான, சுவாரஸ்யம் கலந்த கடைசி நிமிடங்களும் உண்டு என்பதைத்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்! என்ன, சற்றே மர்மம் நிறைந்த இந்த பயணத்துக்கு நீங்கள் தயாரா?
வாசகர்கள் கவனத்துக்கு: நீங்கள் 18 வயதுக்குட்பட்டவர் என்றால் மேலே படிக்காமலிருப்பது நல்லது! நன்றி.

அமைதியின் சிகரங்கள்! (Towers of Silence)

47849372.Yaz_Web_016சோராஸ்ட்ரிய மக்களின் குல வழக்கப்படி, ஒரு பிணமானது தூய்மையற்றது என்பதால் அது சுற்றுச்சூழலை பாதிக்கும் வண்ணம் எறிப்பதும், புதைப்பதும் முற்றிலும் தவறு என்பது அவர்களின் நம்பிக்கை! அதனால், இறந்தவர்களின் உடல்களை “அமைதியின் சிகரங்கள்” என்று சொல்லக்கூடிய, உயர்ந்த மலைமுகடுகளில் அமைந்திருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, விலங்குகளும் பிற உயிரினங்களும் புசிக்கும் வண்ணம் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். பின்னர், சூரிய ஒளியில்  நன்கு உலர்ந்த, சுத்தமான எலும்புகளை சேகரித்து அதை எலுமிச்சை சாரில் கரைத்து வைத்துக்கொள்கிறார்கள்!

மர சவஅடக்கம்! (Tree Burials)

spaceballindian-tree-burialமரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா?  உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக்கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங்களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்! ஆஸ்திரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச்சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். அதாவது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத்தில் தொங்கவிட்டுவிடுகிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது?!

வைக்கிங் கப்பல் சவ அடக்கங்கள்! (Viking Ship Burials)

oseberg_longship_largeஎட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடலிலேயே இறந்துவிடுவது வழக்கமாம்.  அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்பலில் உணவு, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்! ஆஹா…..இது நல்லா இருக்கே! குடுத்துவச்சவங்கெ?!

திபெத்தின் வான் சவ அடக்கம்! (Tibetan Sky Burial)

Vultures_fighting_over_fleshஉங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும்போது அல்ல!?) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்! ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்தபின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று?!) அனுப்பி வைக்கிறார்கள்! அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல். அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம். ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள் , ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச்செல்ல வேண்டுமென்பதற்காக! இதுக்கெல்லாம் இவிங்க…..ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??!

சிக்கிய சடலங்கள்! (Bog Bodies)

grauballemanmm3வட ஐரோப்பாவில், சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளை கடக்கும் சுற்றுலாப் பயணிகள், சமயங்களில் அதில் சிக்கி இறந்துவிடுவதுண்டு. அப்படி இறப்பவர்களின் உடல்களையே (அவ்வப்போது வேண்டுமென்றே, சில வயதானவர்களின் பிணங்களை இது போன்ற சேற்றில் புதைத்தும் விடுவார்களாம்!) சிக்கிய உடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய உடல்களை ஆய்வுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்!

நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்! (Neanderthal Cave Burials)

shanidarசுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்! சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்!  நல்லாத்தான்யா கெளப்புறாங்க பீதிய?!

சவப்பதப்படுத்தல்! (Plastination)

man_with_skinஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹேகென்ஸின், பிணங்களின் பதப்படுத்தல் முறையில், பிணங்களை துண்டு துண்டாக வெட்டி பின் ஆய்வுகளுக்கு ஏற்றவாறு பல கோணங்களில் வைத்து, பல  வேதியல் திரவங்களைக் கொண்டு அவற்றை பதப்படுத்தி விடுவார்களாம்! அப்படிப் பதப்படுத்தப்பட்ட பிணங்களை உலகில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவார்களாம்! இங்க பாருய்யா!?

உறையவைத்து சவ அடக்கம்! (Cryonics) (18+)

Liftingஇப்பொழுதும் வழக்கில் இருக்கும் இந்த வகையான சவ அடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை உடனே திரவ நைட்ரஜன் என்னும் திரவத்தில் (-198 டிகிரி சென்டிக்ரேடு!) இறந்தவரின் உடல் மீண்டும் உயிர்ப்பெரும் நிலையைமுழுமையாக இழக்கும்வரை விட்டுவிடுவார்கள். இதுவே ஆங்கிலத்தில் க்ரையோனிக்ஸ் எனக் கூறப்படுகிறது!

மம்மி! (Mummification)

240px-Mummy_in_Vaticanஉலகத்தின் பிணங்களிலேயே மிகவும் பிரபலமானது எகிப்து நாட்டின் மம்மியாகத்தானிருக்கும்! மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே மேற்கொள்ளும் சவ அடக்க முறையான இந்த மம்மியை உருவாக்க,  இறந்தவர்களின் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் எடுத்து, (மூளையை மட்டும் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு இழுத்துவிடுவார்களாம்……யப்பா!?) பின்னர், வெற்றுடலை மரத்துகள்களைக் கொண்டு அடைத்து, இறுதியில் ஒரு வகையான நாற்றைக்கொண்டு உடல் முழுவதையும் இறுகச்சுற்றி விடுவார்களாம்! அப்படி  உருவாக்கப்படும் மம்மிகளுக்குள்ளே அந்த ஆத்மாவானது இறப்புக்குப் பின்னான வாழ்வுக்குள் பயணப்படுகிறது என்பதே எகிப்தியரின் நம்பிக்கையாம்!
என்னங்க, ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்குமே? எனக்கும்தாங்க!  நம்மைச் சுத்தி இருக்குற உலகத்துல நமக்குத் தெரியாத எத்தனை மர்மங்கள்/ஆச்சரியங்கள் இருக்குப் பாருங்க.

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel
படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuition நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்-2

மனித மூளையோட வினோதமான மர்மங்கள்னு கனுவுல ஆரம்பிச்சு நியாபக ஏணி வரைக்கும் பதிவோட முதல் பாகத்துல பார்த்தோம். அந்த வரிசையில, அடுத்தது சிரிப்பு! அதனாலதான், பதிவை சிரிப்போட ஆரம்பிச்சிருக்கோம். வாங்க சிரிச்சுக்கிட்டே மேல படிப்போம்…..
6. சிரிப்பு (Brain Teaser)
wikipedia: Lestat (Jan Mehlich)
இந்தச் சிரிப்பு இருக்குங்களே, மனுசனோட செய்கைகள்/உணர்ச்சிகள்லேயே ரொம்ப மர்மமான, மனித மூளையாள இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி அது?! அட ஆமாங்க, உதாரணத்துக்கு பதிவுத் தொடக்கத்துல நீங்க படிச்ச மூன்று வெவ்வேறு பாடல் வரிகளையே எடுத்துக்குங்களேன். முதல் (பாடல்) வரி என்ன சொல்லுதுன்னா, சிரிப்பிலே ஏற்படும் ஒலியில் ஒரு சங்கீதமே இருக்குது அப்படீன்னு சொல்லுது. சங்கீதம்னா ஒரு ஆறுதல்/சந்தோஷம்/சுகம் இப்படி பலவாறான அர்த்தங்கள் இருக்கு!
இரண்டாவது பாடல் வரியை எடுத்துக்கிட்டா, வாழ்க்கையை ஒருவர் எப்படி வாழ வேண்டும்/வாழக் கூடாது என்பதை சுட்டிக்காட்டும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைக்கூட சிரிப்பு மூலமாக சொல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது! மூன்றாவது பாடல் வரியை பார்த்தீங்கன்னா,  ஒருவரின் சோகத்தைக்கூட அவரின் சிரிப்பின் மூலம் அறிந்துகொள்ள/விளங்கிக்கொள்ள முடியும் என்பதற்க்கான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது! ஆக, சிரிப்பு எனும் ஒரு உணர்வு கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது!

சரி, இனி நாம சிரிப்பைப் பற்றிய அறிவியல்பூர்வ/விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களைப் பார்ப்போம். ஒருவரின் சந்தோஷமான சிரிப்பின்போது, மூளையின் மூன்று பாகங்கள் தூண்டப்படுகின்றனவாம்! அவை
  1. சிரிப்பிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மூளையின் சிந்திக்கும் பகுதி
  2. தசைகளை அசையச் சொல்லி உத்தரவிடும் உடல் அசைவினை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி
  3. சிரிப்பினால் உண்டாகும் ஒருவித சந்தோஷ/உளைச்சளற்ற உணர்வினை ஏற்படுத்தும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி
இது எல்லாம் தெரிஞ்சும்கூட, நம்ம வடிவேல் காமெடி ஒன்னை சினிமாவுல பார்க்கும்போதோ, நம்ம நண்பர் ஒருத்தர் ஜோக் அடிக்கும்போதோ, நாம ஏன் சிரிக்கிறோம்ங்கிறதுக்கான காரணம்/அறிவியல்பூர்வமான விளக்கம் இன்னும்  தெரியல சிரிப்பை ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளுக்கு!
ஆனா, அமெரிக்க ஆய்வாளர் ஜான் மோர்ரியல் (John Morreall, who is a pioneer of humor research at the College of William and Mary) அவர்களின் கூற்றுப்படி, “சிரிப்பு என்பது இயல்புநிலை எதிர்ப்பார்ப்புகள்/வரையரைகளை கட்டுடைத்து வரும் ஒரு உணர்ச்சியே! பிற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சிரிப்பு என்பது பிறருக்கு இது ஒரு விளையாட்டான விஷயம் என்பதை உணர்த்தப் பயன்படும் ஒரு உணர்வு!
ஆமா, இதைப் படிக்கிற உங்களோட கூற்று என்ன? எது எப்படியோங்க, சிரிச்சா நாமளும் நல்லாயிருப்போம். நம்மைச் சுத்தியிருக்குரவங்களும் நல்லா இருப்பாங்க. அது போதுமில்ல நமக்கு?!
7. மரபனுவும் இயற்கையும் (Nature vs. Nurture)
Courtesy: National Human Genome Research Institute
மனுசனோட உணர்வுகள்/எண்ணங்களையும், பண்புநலன்களையும் கட்டுப்படுத்துவது அவனுடைய மரபனுக்களா இல்லை சுற்றுச்சூழலா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, குடுமிப்பிடி சண்டை போடாத அளவுக்கு வெவ்வேறு கருத்துக்கள்/பதில்களோட விஞ்ஞானிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தாலும், அடிப்படையான காரணம்/பதில்  மரபனுவும் சுற்றுச்சூழலும் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றாகத்தானிருக்கும் என்கிறார்கள்!
ஒவ்வொரு மரபனுவையும் தனித்தனியாக ஆய்வு செய்யும்போது, ஒவ்வொரு பண்புநலனுக்கும் ஒவ்வொரு மரபனு காரணமாக இருக்கிறது என்று தெரியவந்தாலும், ஒருவரின் செயல்கள்/எண்ணங்கள் அனைத்துக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்கள்/சுற்றுச்சூழலும் பெருமளவில் பங்களிக்கிறது அல்லது பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள் விஞ்ஞானிகள்! எனக்குக் கூட அப்படித்தாங்க தோனுது!
8. மரண மர்மம் (Mortal Mystery)
ஒருவர் இறந்துபோவதற்க்கு, “அவர்களின் விதி முடிந்து எமதர்மன் பாசக்கயிற்றால் பிடித்துப்போய் சொர்க்க/நரகத்தில் சேர்த்துவிடுகிறான் என்பதில் தொடங்கி, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் (தெய்வம் கொல்வதாக), ஊழ்வினை பலன் இப்படி எத்தனையோ காரணங்களை நம் பெற்றோர்கள், புராணங்கள்/இதிகாசங்கள் மற்றும் நீதி நூல்கள் முன்வைத்தாலும், அறிவியலைப் படித்து சுவாசித்த மனது என்னவோ ஒத்துக்கொள்ள மறுக்கிறது என்பதே நிதர்சன/யதார்த்தமான உண்மை!
ஒருவர் ஏன் மூப்படைகிறார்னு ஆய்வாளர்கள்கிட்டே கேட்டா, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே நோய்களை எதிர்த்து போராடும் சக்தியையும், புண்களை ஆற்றிக்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கிறான் என்றபோதும், வயதாக வயதாக அவை எல்லாம் வலுவிழந்து போகின்றன என்பது இயற்க்கை! அதனை விளக்க விஞ்ஞானிகள் முன்வைக்கும் கோட்பாடுகள் இரண்டு, அவை
  1. மனிதனின் பிற குணங்களைப் போலவே மூப்படைதலும் மரபனுவியலின் ஒரு அங்கம். அது ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதும் கூட?!
  2. மூப்படைதல் என்பது குறிக்கோள் இல்லாத, உடல் அனுக்களை அழிக்கும்/சேதப்படுத்தும் ஒரு உடலியல் நிகழ்வு. ஆய்வாளர்களில் ஒரு சாரார், கூடிய விரைவில் மூப்படைதலை தாமதப்படுத்தும் அல்லது மனிதனின் (இப்போதைய) வாழ்நாளை இருமடங்காக உயர்த்தும் அதிசயத்தை விஞ்ஞானம் நிகழ்த்தியே தீரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்! அட….இது நல்லாருக்கே?!
9. ஆழ் உறையவைத்தல் (Deep Freeze)
Photo courtesy of Alcor Life Extension Foundation
சாகாவரம் பெறுவது என்பது என்னவோ சாத்தியமில்லைதான்! ஆனால், இரண்டு வாழ்க்கை பெறுவது சாத்தியம்?! என்ன பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு பார்க்குறீங்களா? அட உண்மைதாங்க! வாழ்நாட்களை நீட்டிக்கும் விஞ்ஞானத்துறை என்று நம்பப்படும் க்ரையோனிக்ஸ் (cryonics) துறை மூலம், தற்போதைக்கு மருந்து/சிகிச்சையில்லாத ஒரு கொடிய நோயின்மூலம் இறந்தவரின் உடலை, எலும்பு சில்லிடும் அசுர குளிரான மைனஸ் 320  டிகிரி ஃபாரென்ஹீட் (minus 320 degrees Fahrenheit/78 Kelvin), திரவ நைட்ரஜன் வாயுவில் உறைய வைத்து, குறிப்பிட்ட அந்த நோய்க்கான மருந்தோ/சிகிச்சையோ கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அதைக்கொண்டு மீண்டும் அந்த இறந்தவுடலை உயிர்பிக்க முடியும் என்று நம்பப்படுகிறது!
இப்படித்தான் அமெரிக்காவின் (மறைந்த) தலைசிறந்த பேஸ்பால் வீரரான டெட் வில்லியம்ஸின் (Ted Williams) உடலை, அல்கார்ஸ் (Alcor’s) என்னும் உடல் உறையவைக்கும் நிறுவனம் ஒன்று உறையவைத்து பாதுக்காத்து வருகிறதாம்! இறந்த உடலை தலைகீழாக வைத்துதான் உறைய வைப்பாங்களாம். தவறுதலாக டேங்க் உடைந்து, திரவ நைட்ரஜன் சிந்தினாலும் மூளைமட்டும் திரவத்திலேயே மூழ்கி பாதுகாப்பாக இருக்குமாம். அது சரி!
ஆனா, இப்படி பாதுகாத்துக்கிட்டிருக்குற எந்த உடலும் இதுவரை மீண்டும் உயிர்பிக்கப் படவில்லையாம்! ஏன்னு கேக்குறீங்களா? ஏன்னா, இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் அப்படியோரு தொழில்நுட்பம் சாத்தியமேயில்லைங்கிறதுனாலதான்! (குறைந்தபட்சம் ஒரு அறிவியல்) காரணம், இறந்த ஒரு உடலை சரியான வெப்பத்தில் உறைய வைக்கவில்லையென்றால், அவ்வுடலின் அனுக்களெல்லாம் பனிக்கட்டியாகி தூள் தூளாக வெடித்துச்சிதறிவிடும் என்பதுதான்!
10. சுய நினைவு (Consciousness)
wikipedia:Robert Fludd
இரவு உறக்கம் முடித்து, காலையில் கண் விழித்து எழும் உங்களுக்கு, புல்லின்மேல் பனித்துளி அதனைத் தொட்டு உறவாடி ஜொலிக்கும் சூரியக் கதிரொளி, முற்றத்திலிருக்கும் நெற்கதிர்களை கொரிக்கும் சிட்டுக் குருவிகளின் சத்தம் இப்படி காலையின் அடையாளங்களையெல்லாம் நம்மால பார்க்க/உணர முடியும் இல்லீங்களா? ஆமா, முடியும். அதுக்குக் காரணம் நம்ம சுயநினைவு!
அதெல்லாம் சரிதான், ஆமா சுயநினைவுன்னா என்ன? அதாவது, சுய நினைவுன்னா அறிவியல்பூர்வமான அர்த்தம்  என்ன? அதத்தான் பல நூற்றாண்டுகளாக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா, திட்டவட்டமான ஒரு பதில்தான் இன்னும் கெடைக்கலை! அதுக்காக விஞ்ஞானிகள் சும்மா ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நெனைக்காதீங்க. சமீப காலங்களாதான், சுயநினைவு பத்தின ஆய்வை மிகத்தீவிரமா நடத்த ஆரம்பிச்சிருக்காங்க!
அதன் பலனா, சுயநினைவு பத்தின சுவாரசியமான சில/பல கேள்விகள், ஆரம்பநிலை புரிதல்கள்/விளக்கங்கள்னு நிறைய விஷயங்கள கண்டுபிடிச்சி, இன்னும் முன்னேறிகிட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!

மர்மம்: மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மைகள், வீரம் இப்படியான விஷயங்கள்படி பார்த்தா நாம எத்தனையோ உயிர்கள்கிட்டே தோற்றுவிடுவோம் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!
நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறாவது அறிவுக்கு காரணம், பிற விலங்குகளைவிட பன்மடங்கு (பரிணாம) வளர்ச்சியடைந்த, மேம்பட்ட நம்ம மூளை! ஆனா, அந்த மூளையைப் பயன்படுத்தி இந்த உலகத்தைப்பத்தி நாம தெளிவா தெரிஞ்சிக்கிட்ட/புரிஞ்சிக்கிட்ட விஷயங்களைவிட, இன்னும் தெரியாத/புரியாத விஷயங்கள் எண்ணிலடங்காதவை அப்படீன்னு சொன்னா, நீங்களும் ஒத்துவீங்கன்னு நெனக்கிறேன்?!
உதாரணத்துக்கு, பிறப்பு/இறப்பு, மனசாட்சி, தூக்கம் இப்படி எத்தனையோ விஷயங்களைப் பட்டியலிடலாம். இப்படிப்பட்ட, மூளைக்கு புலப்படாத ஆனால் மூளையுடன் தொடர்புடைய 10 மர்மங்களைப் பத்திதான் நாம இந்தப் பதிவுல இனிமே பார்க்கப்போறோம்.
அண்டா கா கசம்…..அபு கா ஹுகும்…..திறந்திடு சீசே…..இல்ல இல்ல….. திறந்திடு மூளையே……
1. இனிய கனவுகள் (Sweet Dreams)
http://traningsvark.files.wordpress.com
இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி, நாம எல்லாருமே இனிய கனவுகள்னு சொல்றோம். ஆனா, அப்படிச் சொல்ற ஒரு 10 பேரு கிட்ட கனவுன்னா என்னன்னு கேட்டோம்னு வைங்க, பத்து வித்தியாசமான விளக்கம் கிடைக்கும்ங்கிறது உறுதி. ஏன்னா, கனவு பத்தி ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானிகளுக்கே இன்னும் சரியான விளக்கம் தெரியல! அதுக்காக, தெரியலைன்னு விட்டுட முடியுமா?!

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா, “கனவு என்பது, நரம்புகளுக்கிடையிலான தொடர்புகளை தூண்டுவது அல்லது ஒரு நாளில் செய்ய முடியாதவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவதால் நியாபகங்கள், எண்ணங்கள் பலப்படுவது” அப்படீன்னு சொல்றாங்க! ஆனா, கனவுகள் “வேகமான விழி அசைவு உறக்கம் (Rapid Eye Movement, REM)” அப்படீங்கிற ஒரு வகை உறக்கநிலையின்போதுதான் தோன்றுகின்றன என்பது மட்டும் உறுதின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
2. உறக்கம்
நாம எல்லாருமே தூங்குறோம். ஆனா, அந்த தூக்கத்தை பத்தின (அறிவியல்பூர்வமான) முழுவிவரம் இன்னும்  யாருக்குமே தெரியாது இந்த நவீன விஞ்ஞான உலகத்துல! இதுவரைக்குமான உறக்கம் பத்தின ஆய்வுகள்ல தெரியவந்திருக்கிறது, மனித வாழ்க்கைக்கு உறக்கமானது இன்றியமையாதது அப்படீங்கிறதுதான்! தொடர்ந்த தூக்கமின்மையினால, மூளைக்கோளாறுகள்/பிறழ்வு நிலை, இறப்பு கூட வரலாமாம்!
வேகமான விழி அசைவு உறக்க நிலை (REM) மற்றும் வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலை (NREM) அப்படீன்னு ரெண்டு வகை உறக்க நிலைகள் உண்டு. இதுல, வேகமான விழி அசைவு உறக்க நிலையின்போது, நியாபகங்கள் செப்பனிடப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அதற்க்கான தகுந்த ஆதராங்கள் எதுவுல் இல்லை! வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலையின்போது உடல் ஓய்வெடுத்துக்கொள்வது, சக்தியை சேமிப்பது என இருவினைகள் நடக்கிறது.
3. அமானுஷ்ய உணர்வுகள் (Phantom Feelings)
countrygirldiabetic.blogspot.com
விபத்து/நோய்களால் கை/காலிழந்த சுமார் 80% விழுக்காட்டு மக்கள், தங்களின் இழந்த உடல் பாகங்களிலிருந்து, தொடு உணர்வு/ஸ்பரிசங்களை (அரிப்பு, கதகதப்பு, வலி, அழுத்தம் ஆகிய உணர்வுகளை) உணர்கிறார்களாம்! இது என்ன  விந்தைடா சாமீ?! இம்மாதிரியான உணர்ச்சிகளை உணர்வதை  “பேய் கை” அல்லது “phantom limb” அப்படீங்கிறாங்க ஆங்கிலத்தில்!
இதுக்கான அறிவியல்பூர்வமான விளக்கம் என்னன்னு கேட்டா, உடலின் எல்லா பகுதிகளும் முழுமையாகவே இருப்பதாக (ஒருவகை அச்சு மூளையில் பதிந்துவிட்டதால்) அவ்வாறே எண்ணிக்கொண்டு மூளை இயங்குவதாகவும், இழந்த பாகங்களிலுள்ள நரம்புகள், முதுகுத்தண்டுடன் புது தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செய்திகளை அனுப்புவதாகவும் இரு வேறு கருத்துகள் இருக்கிறது நரம்பியல் விஞ்ஞானிகள் மத்தியில்! சாமீ….எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ!!
4. 24 மணி நேரக் கட்டுப்பாடு (Mission Control)
wikipedia: biological_clock_human
நம்ம மூளையில உள்ள ஹைப்போ தலாமஸ் (hypothalamus) அப்படீங்கிற ஒரு பகுதிதான் நம்ம உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” (biological clock) என்னும் 24 மணி நேர விழிப்பு-உறக்க  நிகழ்வுகள் கடிகாரத்தையும் கண்கானிக்கிறது. ஆனா, இதே உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.
சமீபத்திய ஒரு ஆய்வுப்படி, சூரிய ஒளிக் கதிர்களானது மெலடோனின் (melatonin) அப்படீங்கிற ஒரு ஹார்மோன்  மூலமாக உயிரியல் கடிகாரத்தை முன்னும் பின்னுமாக  திருத்தவல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு போகும்போது, இரு நாடுகளுக்குமுள்ள நேர வித்தியாசத்தால் வரும் ஒருவித அயற்ச்சியை ஆங்கிலத்தில் ஜெட் லாக் ( jet lag ) என்கிறார்கள். மெலடோனின் ஹார்மோன் மாத்திரகளை உண்டால் இந்த அயற்ச்சியை தவிர்க்க முடியுமா முடியாதா என்பதுதான் இப்போதைய நரம்பியல் பட்டிமன்றம்!
5. நியாபக ஏணி (Memory Lane)
http://elperro1970.files.wordpress.com/
“நியாபகம் வருதே…..நியாபகம் வருதே….பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே” அப்படீன்னு நீங்க உங்க நியாபகங்கள் வந்து பாடினாலும் சரி, சும்மா அப்படியே குத்து மதிப்பா பாடினாலும் சரி, நம்ம எல்லாருக்குமே மறக்க முடியாதவை அப்படீன்னு ஒரு நினைவுப்பட்டியலே இருக்கும் வாழ்க்கையில! உதாரணத்துக்கு நமக்கு கிடைச்ச முதல் முத்தம். என்ன உடனே ஃப்ளாஷ் பேக்கா? (அதாங்க, இந்த தலையிலேர்ந்து முட்டை முட்டையா மேலெ போற மாதிரி சினிமாவுலெ எல்லாம் காட்டுவாங்களெ!) சரி சரி, நடக்கட்டும் நடக்கட்டும்…..
ஆமா அதெல்லாம் சரிதான், ஒரு மனுசன் எப்படி இந்த நியாபகங்களையெல்லாம் தொகுத்து வச்சிக்கிறான்? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இல்லைன்னா விடுங்க, ஏன்னா விஞ்ஞானிகள் யோசிச்சிட்டாங்க! மூளையை படமெடுக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், மனித மூளை எப்படி நியாபகங்களை உருவாக்கி, சேமிக்கிறது என்பதற்க்குக் காரணமான அடிப்படை நிகழ்வுகள் கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.
ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும், மனித மூளையின் ஒரு பகுதிதான் நம்மோட நியாபகப் பெட்டியாம்! ஆனா, இதுல வேடிக்கை என்னன்னா, இந்த நியாபகச் சேமிப்புல உண்மையான நியாபகம், பொய்யான நியாபகம் அப்படீங்கிற பாகுபாடெல்லாம் இல்லியாம்!  உண்மையான நியாபகம் என்பது நடந்த நிகழ்வுகள், பொய்யான நியாபகங்கள் நடக்காத கற்பனைகள். ஆக நம்ம ஹிப்போகேம்பஸ், குத்துமதிப்பா எல்லா நியாபகத்தையும் சேர்த்து வைக்கிற ஒரு நியாபகக் குப்பைத்தொட்டு மாதிரி போலிருக்கு?!
“எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டிலே பிழையிருக்காதென்று அர்த்தமா” அப்படீன்னு நம்ம நக்கீரர் கேட்ட மாதிரி, மனுசனுக்கு, “6 அறிவு இருந்துட்டா, அந்த அறிவு இருக்குற இடமான மூளையைப் பத்தி எல்லா உண்மைகளும் தெரிஞ்சிடனும்/புரிஞ்சிடனும்னு கட்டாயமா என்ன?” அப்படீன்னு கேக்குறீங்களா…..
மனித மூளை பத்தின மர்மங்கள் இன்னும் பாக்கியிருக்குங்க! மீதமுள்ள அந்த மர்மங்களின் பட்டியல்/விளக்கத்தோட மீண்டும்

பயமும் மூளையும்; பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

பயப்படும்படியான, அடிவயிற்றைக் கலக்கும்படியான பயங்களை உருவாக்கும் சில நிகழ்வுகள் நிஜவாழ்க்கையில ஏற்படும்போது, அதை சந்திக்கும்போது பயப்படாம எப்படி இருக்க முடியும்? உதாரணமா, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச இந்த பேய், பிசாசு, முனி மாதிரியான விஷயங்களையே எடுத்துக்குங்களேன்.
பொதுவா பேய்-பிசாசு சம்பந்தப்பட்ட கதைகள நண்பர்கள், உறவினர்கள் இப்படி யாராவது சொல்லி கேட்கும்போது, “அட இதெல்லாம் சும்மா உடான்சுப்பா. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு இருக்கக்கூடாது, வாழ்க்கையில தைரியமா இருக்கனும்” அப்படீன்னு ரொம்ப தைரியமா (?), வீராப்பா பேசிட்டு, அர்த்த ராத்திரியில வயல்வெளிக்கோ, இல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையிலயோ நடந்துபோகும்போது, பக்கவாட்டுல இருக்குற சருகுக்குள்ள, அதுபாட்டுக்கு சிவனேன்னு போயிக்கிட்டு இருக்குற ஒரு பூச்சியோ, புழுவோ ஏற்படுத்துற சத்தத்துல சப்த நாடியும் ஒடுங்கி, உறைஞ்சுபோயி நிக்குற சுபாவமுள்ளவங்க நம்மைச்சுத்தி எத்தனையோ பேரு இருக்காங்கங்கிறதுதான் நிதர்சனம் இல்லீங்களா?
அமிக்டலேவும் (amygdalae) உறைய வைக்கும் அந்த சில நொடிகளும்!
படம்: brainconnection.com
இம்மாதிரியான, பயத்தை ஏற்படுத்தும் அல்லது உறைந்துபோகவைக்கும், சிலிர்ப்பூட்டும் தருணங்களின்போது மனிதனின் மூளைக்குள்ளே என்ன நடக்கிறது அல்லது பயங்களுக்கு எதிரான ஒருவரின் மூளையின் எதிர்வினையை அறிவியல்பூர்வமாக எப்படி விளக்குவது போன்ற கேள்விகள் நரம்பியல் துறை விஞ்ஞானிகள் மத்தியில்
ஏகப்பிரசித்தம்!  இந்த கேள்விக்கான விடையை நோக்கிய ஆய்வுப்பயணத்தில், மூளையின் ஆபத்துப் பகுதி என்ற ஒன்றை நிர்ணயித்தார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு ஆபத்து நேரும்போது, பய உணர்வு ஏற்பட்டு, அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவோ, உறைந்துபோய் நின்றுவிடவோ என இருவகையான செயல்களுக்கு அடிப்படையான மூளைப்பகுதியைத்தான், ஆங்கிலத்தில் அமிக்டலே (amygdalae) என்கிறார்கள். மூளையின் மத்தியப்பகுதியிலுள்ள இரட்டை பாகங்கள்தான் இந்த அமிக்டலே என்பது குறிப்பிடத்தக்கது!
பயம் குறித்த இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகளினடிப்படையில், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது, உயிர்களின் அதீத உணர்வுகளான, அளவுக்கதிகமான கோபம் (அதாங்க, நம்ம விஜயகாந்த் படத்துல எல்லாம், அவரோட கண்ணு ரெண்டையும் செவப்பாக்கி, அவரு கோவப்படுறதா காமிப்பாங்களே அதுமாதிரி!) மற்றும் உறைய வைக்கும் திகில் உணர்வு ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது! மேலும், இந்த பயஉணர்வுகளின் விளைவாக செய்யப்படும் செயல்களான, சுற்றும்முற்றும் ஓடுவது, மறைவான ஒரு இடத்தில் ஒளிந்துகொள்வது மற்றும் சத்தமாக அலறுவது ஆகிய செயல்களுக்கும் அமிக்டலேதான்  காரணமாக இருக்கிறது என்று ஒரு பொதுவான புரிதல் இருக்கிறது விஞ்ஞானிகள் மத்தியில்!
அமிக்டலே ஆய்வு குறித்த ஒரு காணொளி……..
ஆனால், அமிக்டலேவின் செயல்பாட்டினை, இப்படி பொத்தாம் பொதுவாக சொல்வது இனியும் சரியல்ல என்றும், பயம் குறித்தான் நம் அறிவியல்பூர்வமான புரிதலை மாற்றம்வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சொல்கிறது ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடமான EMBL மற்றும் க்ளாக்சோ ஸ்மித்க்ளைன் (GlaxoSmithkline) என்னும் பிரபல மருந்து நிறுவனம் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று! நியூரான் (Neuron) என்னும் மருத்துவ இதழில், சமீபத்தில் வெளியான இந்த ஆய்வின் முடிவுகள், பயத்துக்கும் மூளைக்குமான தொடர்பைப்பற்றியும், அமிக்டலேவைப்பற்றியும் என்ன சொல்கின்றன என்பதைத்தான் இனி இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். சரி சரி, ஒன்னும் பயப்படாம வாங்க, பயத்தைப் பத்தி தெளிவா பார்ப்போம்……
பயத்துக்கெதிரான மூளையின் எதிர்வினைகளும், அமிக்டலேவும்!
இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம், ஒருவர் திகிலடையும்/பயப்படும்படியான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது, அதிலிருந்து தப்பித்து ஓடுவதா இல்லை உறைந்துபோய்விடுவதா என எப்படி தீர்மானிக்கிறார் என்றும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் குறிப்பிட்ட மூளைப்பகுதி எது என்று கண்டறிவதுமே! இவ்விரு கேள்விகளுக்குமான விடை காண வேண்டுமானால், பயத்துடன் தொடர்புடைய அமிக்டலே பகுதியை கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.
அமிக்டலே பகுதியை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மரபனுமாற்றம் செய்யப்பட்ட ஒரு எலியை (genetically engineered mice) உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு மருந்தை எலியின் மூளைக்குள் செலுத்துவதன்மூலம், அமிக்டலே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அனுக்கள் மட்டும் செயலிழந்துபோகும்படியான ஒரு பிரத்தியேக மரபனுமாற்ற எலியை உருவாக்கினார்கள். ஆக, ஒரு மருந்தைச் செலுத்தினால் சோதனை எலியின், அமிக்டலேவின் குறிப்பிட்ட அனுக்கள் மட்டும் செயலிழந்து, பிற பகுதிகள் எப்போதும்போல் செயல்படும்படியான ஒரு நிலையை உருவாக்கினார்கள் ஆய்வாளர்கள்!
அமிக்டலே பகுதியில் மாற்றங்களுக்குட்பட்ட, இத்தகைய மரபனுமாற்ற எலிகள், குறிப்பிட்ட ஒரு சப்தம் கேட்டவுடன் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டன. இத்தகைய பயிற்ச்சிக்குப்பின், குறிப்பிட்ட அந்த சப்தம் கேட்டவுடன் நமக்கு மின்சார அதிர்ச்சி நிச்சயம் என்பதுபோன்ற ஒரு நிலையை உணர்ந்த மரபனுமாற்ற எலிகள், சாதாரண எலிகளைப்போல பயந்து நடுங்கவில்லை! மாறாக, அந்த சப்தம் கேட்டவுடன்,   பயந்து நடுங்காமல், சப்தம் வந்த திசையை நோக்கி முன்னேறிச்சென்று, சப்தத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டன என்பது கண்டறியப்பட்டது!
இதிலிருந்து தெரியவரும் ஒரு ஆச்சரியமான உண்மை என்னன்னா, இதுவரையிலான ஆய்வுகளினடிப்படையில், பயத்துடன் தொடர்புடைய சில செயல்பாடுகள் மொத்தத்திற்க்கும் அமிக்டலேதான் காரணம் என்ற ஒரு புரிதல் தவறானது என்பதும், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது பயத்துக்கும், பயத்தினால் உறைந்துபோகும் தன்மைக்கும் மட்டுமே அடிப்படை என்பதுமே! ஆக, திடீரென்று ஏற்படும் பய/திகில் உணர்வால் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி, உறைந்துபோவதற்க்கு மட்டும்தான் அமிக்டலேவானது அடிப்படைக்காரணம் என்று முதல்முறையாக தெளிவாக தெரியவருகிறது!
“சரிப்பா, அதனாலென்ன என்ன இப்போ” அப்படீன்னு உங்கள்ல சிலபேருக்கு கேட்கத்தோனலாம். நமக்கு இது வெறும்  ஆச்சரியமான அறிவியல் செய்திதான்னாலும், பயம் குறித்த ஆய்வுகளில் நீண்டகாலமாய் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஏன்னா, இந்த வகையான ஆய்வாளர்களின் அடிப்படை நோக்கம், உலகில் அவ்வப்போது நிகழும் அல்லது நிகழப்போகும் ஆபத்துகளுக்கு எதிராக சராசரி மக்களை தயார்படுத்தவேண்டும் என்பதே. அதற்க்கு, அவர்களின் பயத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
உதாரணமாக, சமீபத்துல வெளியாகி உலகையே அல்லோலக் கல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும், “டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!” என்பது மாதிரியான புரளிகள்/பயங்கள், சில/பல ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படும் வினோதமான விலங்குகள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவற்றால் பயந்து நடுங்கும் தன்மையுள்ள மக்களை அப்பயங்களுக்கு எதிராக செயல்பட தயார்படுத்த, அமிக்டலே தொடர்பான இந்தப் புதிய உண்மை பெரும் உதவியாக இருக்குமென்கிறார்கள் பயத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்னும் ரீதியிலான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சில நரம்பியல் விஞ்ஞானிகள்!
மேலே நான் சொன்னது நல்ல எண்ணங்களுள்ள விஞ்ஞானிகளின் முயற்ச்சிகளைப் பற்றியது. ஆனா, தீய எண்ணமுள்ள விஞ்ஞானிகளும் இருக்காங்க இல்லீங்களா இந்த உலகத்துல?! அவங்களுக்கும் இந்த ஆய்வு சொல்லும் உண்மை பயன்படும். ஆனா, நல்ல வழியில இல்ல தீய வழியில! சரி இந்த பகுதிய உங்க யூகத்துக்கு விட்டுடுறேன். அதாவது, இதே ஆய்வு முடிவை தீய விஞ்ஞானிகள் தங்கள் அழிவுப்பாதையிலான திட்டங்களுக்கு பயன்படுத்தினா, அமிக்டலே பகுதியை எப்படி மாத்துவாங்க? அதனால, பயம் தொடர்பான நம் மூளையின் செயல்பாடு எப்படி மாறக்கூடும்?!
உங்க யூகங்கள மறுமொழியில எழுதுங்க! எத்தனை வகையான யூகங்கள் வருது, அதில் எத்தனை யூகங்கள் சாத்தியமானவைன்னு அதுக்கப்புறமா நாம சேர்ந்து விவாதிப்போம்! நன்றி.