உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மைகள், வீரம் இப்படியான விஷயங்கள்படி பார்த்தா நாம எத்தனையோ உயிர்கள்கிட்டே தோற்றுவிடுவோம் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!
நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறாவது அறிவுக்கு காரணம், பிற விலங்குகளைவிட பன்மடங்கு (பரிணாம) வளர்ச்சியடைந்த, மேம்பட்ட நம்ம மூளை! ஆனா, அந்த மூளையைப் பயன்படுத்தி இந்த உலகத்தைப்பத்தி நாம தெளிவா தெரிஞ்சிக்கிட்ட/புரிஞ்சிக்கிட்ட விஷயங்களைவிட, இன்னும் தெரியாத/புரியாத விஷயங்கள் எண்ணிலடங்காதவை அப்படீன்னு சொன்னா, நீங்களும் ஒத்துவீங்கன்னு நெனக்கிறேன்?!
உதாரணத்துக்கு, பிறப்பு/இறப்பு, மனசாட்சி, தூக்கம் இப்படி எத்தனையோ விஷயங்களைப் பட்டியலிடலாம். இப்படிப்பட்ட, மூளைக்கு புலப்படாத ஆனால் மூளையுடன் தொடர்புடைய 10 மர்மங்களைப் பத்திதான் நாம இந்தப் பதிவுல இனிமே பார்க்கப்போறோம்.
அண்டா கா கசம்…..அபு கா ஹுகும்…..திறந்திடு சீசே…..இல்ல இல்ல….. திறந்திடு மூளையே……
1. இனிய கனவுகள் (Sweet Dreams)
இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி, நாம எல்லாருமே இனிய கனவுகள்னு சொல்றோம். ஆனா, அப்படிச் சொல்ற ஒரு 10 பேரு கிட்ட கனவுன்னா என்னன்னு கேட்டோம்னு வைங்க, பத்து வித்தியாசமான விளக்கம் கிடைக்கும்ங்கிறது உறுதி. ஏன்னா, கனவு பத்தி ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானிகளுக்கே இன்னும் சரியான விளக்கம் தெரியல! அதுக்காக, தெரியலைன்னு விட்டுட முடியுமா?!
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா, “கனவு என்பது, நரம்புகளுக்கிடையிலான தொடர்புகளை தூண்டுவது அல்லது ஒரு நாளில் செய்ய முடியாதவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவதால் நியாபகங்கள், எண்ணங்கள் பலப்படுவது” அப்படீன்னு சொல்றாங்க! ஆனா, கனவுகள் “வேகமான விழி அசைவு உறக்கம் (Rapid Eye Movement, REM)” அப்படீங்கிற ஒரு வகை உறக்கநிலையின்போதுதான் தோன்றுகின்றன என்பது மட்டும் உறுதின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
2. உறக்கம்
நாம எல்லாருமே தூங்குறோம். ஆனா, அந்த தூக்கத்தை பத்தின (அறிவியல்பூர்வமான) முழுவிவரம் இன்னும் யாருக்குமே தெரியாது இந்த நவீன விஞ்ஞான உலகத்துல! இதுவரைக்குமான உறக்கம் பத்தின ஆய்வுகள்ல தெரியவந்திருக்கிறது, மனித வாழ்க்கைக்கு உறக்கமானது இன்றியமையாதது அப்படீங்கிறதுதான்! தொடர்ந்த தூக்கமின்மையினால, மூளைக்கோளாறுகள்/பிறழ்வு நிலை, இறப்பு கூட வரலாமாம்!
வேகமான விழி அசைவு உறக்க நிலை (REM) மற்றும் வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலை (NREM) அப்படீன்னு ரெண்டு வகை உறக்க நிலைகள் உண்டு. இதுல, வேகமான விழி அசைவு உறக்க நிலையின்போது, நியாபகங்கள் செப்பனிடப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அதற்க்கான தகுந்த ஆதராங்கள் எதுவுல் இல்லை! வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலையின்போது உடல் ஓய்வெடுத்துக்கொள்வது, சக்தியை சேமிப்பது என இருவினைகள் நடக்கிறது.
3. அமானுஷ்ய உணர்வுகள் (Phantom Feelings)
விபத்து/நோய்களால் கை/காலிழந்த சுமார் 80% விழுக்காட்டு மக்கள், தங்களின் இழந்த உடல் பாகங்களிலிருந்து, தொடு உணர்வு/ஸ்பரிசங்களை (அரிப்பு, கதகதப்பு, வலி, அழுத்தம் ஆகிய உணர்வுகளை) உணர்கிறார்களாம்! இது என்ன விந்தைடா சாமீ?! இம்மாதிரியான உணர்ச்சிகளை உணர்வதை “பேய் கை” அல்லது “phantom limb” அப்படீங்கிறாங்க ஆங்கிலத்தில்!
இதுக்கான அறிவியல்பூர்வமான விளக்கம் என்னன்னு கேட்டா, உடலின் எல்லா பகுதிகளும் முழுமையாகவே இருப்பதாக (ஒருவகை அச்சு மூளையில் பதிந்துவிட்டதால்) அவ்வாறே எண்ணிக்கொண்டு மூளை இயங்குவதாகவும், இழந்த பாகங்களிலுள்ள நரம்புகள், முதுகுத்தண்டுடன் புது தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செய்திகளை அனுப்புவதாகவும் இரு வேறு கருத்துகள் இருக்கிறது நரம்பியல் விஞ்ஞானிகள் மத்தியில்! சாமீ….எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ!!
4. 24 மணி நேரக் கட்டுப்பாடு (Mission Control)
நம்ம மூளையில உள்ள ஹைப்போ தலாமஸ் (hypothalamus) அப்படீங்கிற ஒரு பகுதிதான் நம்ம உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” (biological clock) என்னும் 24 மணி நேர விழிப்பு-உறக்க நிகழ்வுகள் கடிகாரத்தையும் கண்கானிக்கிறது. ஆனா, இதே உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.
சமீபத்திய ஒரு ஆய்வுப்படி, சூரிய ஒளிக் கதிர்களானது மெலடோனின் (melatonin) அப்படீங்கிற ஒரு ஹார்மோன் மூலமாக உயிரியல் கடிகாரத்தை முன்னும் பின்னுமாக திருத்தவல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு போகும்போது, இரு நாடுகளுக்குமுள்ள நேர வித்தியாசத்தால் வரும் ஒருவித அயற்ச்சியை ஆங்கிலத்தில் ஜெட் லாக் ( jet lag ) என்கிறார்கள். மெலடோனின் ஹார்மோன் மாத்திரகளை உண்டால் இந்த அயற்ச்சியை தவிர்க்க முடியுமா முடியாதா என்பதுதான் இப்போதைய நரம்பியல் பட்டிமன்றம்!
5. நியாபக ஏணி (Memory Lane)
“நியாபகம் வருதே…..நியாபகம் வருதே….பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே” அப்படீன்னு நீங்க உங்க நியாபகங்கள் வந்து பாடினாலும் சரி, சும்மா அப்படியே குத்து மதிப்பா பாடினாலும் சரி, நம்ம எல்லாருக்குமே மறக்க முடியாதவை அப்படீன்னு ஒரு நினைவுப்பட்டியலே இருக்கும் வாழ்க்கையில! உதாரணத்துக்கு நமக்கு கிடைச்ச முதல் முத்தம். என்ன உடனே ஃப்ளாஷ் பேக்கா? (அதாங்க, இந்த தலையிலேர்ந்து முட்டை முட்டையா மேலெ போற மாதிரி சினிமாவுலெ எல்லாம் காட்டுவாங்களெ!) சரி சரி, நடக்கட்டும் நடக்கட்டும்…..
ஆமா அதெல்லாம் சரிதான், ஒரு மனுசன் எப்படி இந்த நியாபகங்களையெல்லாம் தொகுத்து வச்சிக்கிறான்? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இல்லைன்னா விடுங்க, ஏன்னா விஞ்ஞானிகள் யோசிச்சிட்டாங்க! மூளையை படமெடுக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், மனித மூளை எப்படி நியாபகங்களை உருவாக்கி, சேமிக்கிறது என்பதற்க்குக் காரணமான அடிப்படை நிகழ்வுகள் கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.
ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும், மனித மூளையின் ஒரு பகுதிதான் நம்மோட நியாபகப் பெட்டியாம்! ஆனா, இதுல வேடிக்கை என்னன்னா, இந்த நியாபகச் சேமிப்புல உண்மையான நியாபகம், பொய்யான நியாபகம் அப்படீங்கிற பாகுபாடெல்லாம் இல்லியாம்! உண்மையான நியாபகம் என்பது நடந்த நிகழ்வுகள், பொய்யான நியாபகங்கள் நடக்காத கற்பனைகள். ஆக நம்ம ஹிப்போகேம்பஸ், குத்துமதிப்பா எல்லா நியாபகத்தையும் சேர்த்து வைக்கிற ஒரு நியாபகக் குப்பைத்தொட்டு மாதிரி போலிருக்கு?!
“எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டிலே பிழையிருக்காதென்று அர்த்தமா” அப்படீன்னு நம்ம நக்கீரர் கேட்ட மாதிரி, மனுசனுக்கு, “6 அறிவு இருந்துட்டா, அந்த அறிவு இருக்குற இடமான மூளையைப் பத்தி எல்லா உண்மைகளும் தெரிஞ்சிடனும்/புரிஞ்சிடனும்னு கட்டாயமா என்ன?” அப்படீன்னு கேக்குறீங்களா…..
மனித மூளை பத்தின மர்மங்கள் இன்னும் பாக்கியிருக்குங்க! மீதமுள்ள அந்த மர்மங்களின் பட்டியல்/விளக்கத்தோட மீண்டும்
|
No comments:
Post a Comment