ராஜ(ஆ) தந்திரம் !
இது வரை -
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்
கலைஞர் கடந்த 20 நாட்களில்
அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை -
1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே இல்லை.
எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு !”
2) “ஆ,ராசாவிற்கும், இந்த முறைகேட்டிற்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை –
முன்னால் இருந்தவர்கள் செய்ததைத்தான்
அவரும் செய்தார் -
அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கேஇடமில்லை !
ராஜா ஒரு தலித் என்பதால் பார்ப்பன ஊடகங்களும்,
பத்திரிக்கைகளும் அவர் மீது பொய்ப் பிரச்சாரம்
செய்கின்றன !”
3) அகில இந்திய அளவில் ஏற்பட்ட அழுத்தம்
காரணமாகவும், காங்கிரஸ் கட்சியின் வற்புறுத்தல்
காரணமாகவும் ராஜா ராஜினாமா செய்த பிறகு -
“ராஜா ஒரு தக தகத்த கதிரவனாக
தலித் இனத் தலைவனாக வருவார்”.
4) தொடர்ந்து, வேலூரில் நடைபெற்ற
திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் போது,
“ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா
செய்த பிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி தொடர்ந்து
பேசிகொண்டே இருக்கிறார்கள்.
ஏன் – ராசா ஒரு தலித் -தாழ்த்தப்பட்ட இனத்தைச்
சேர்ந்தவர் என்பதால் தானே ?
முந்த்ரா ஊழலில் டிடிகே ராஜினாமா செய்த பிறகு
அதை அத்தோடு விட்டு விடவில்லையா ?
ராஜா விஷயத்தில் மட்டும் ராஜினாமாவிற்குப் பிறகும்
தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ?
ஆச்சாரியார்களுக்கு ஒரு நியாயம் -
தலித்துகளுக்கு ஒரு நியாயமா?
இது தான் சமதர்மமா?”
5) “இது நம்புகிற விஷயமா ?
இத்தனை லட்சம் கோடி
ஊழல் என்பதை நிரூபிக்கமுடியுமா?”
6) சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில்
பேசும்போது -”மவுனப்படங்கள் வந்த காலத்தில்,
கதை சொல்லிகள்,
பகாசுரனுக்கு பல்லுக்குப் பல் இரு காதம்,
பல்லிடுக்கு முக்காதம் என்பார்கள் -
நான் கூட இதை நம்பி கேட்டுக்கொண்டிருந்தேன்.
இப்போது யாராவது நம்புவார்களா ?”
7) “1,76,352 கோடி ரூபாய் என்று
சொல்லும்போது – அதுஎவ்வளவு பெரிய தொகை!
அந்தத் தொகையை ஒருவர் தனியாக
ஊழல் செய்திருக்க முடியுமா?
எந்திரனில் ரஜினி செய்வது போல் – விஞ்ஞான
பூர்வமாக யாராவது செய்தால் தான் உண்டு !”
8)அதன் பிறகு முரசொலி இதழில்
கலைஞர் கேள்வி-பதில் பகுதியில் -
“ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னாலே
அது உண்மையாகிவிடும் என்பதைப்போல
பழி சுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி
ஆகிவிட முடியாது”
“கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்” என்பதற்கேற்ப
தீர விசாரித்தால் தான் உண்மை தெரியும்.
9) எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை
வந்த பிறகு – “மத்திய அரசில் தொழில் நுணுக்கம்
நன்கறிந்த உயரதிகாரிகளின் பற்றாக்குறையால்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள
இழப்பிற்கு அமைச்சரை குறை
கூறுவதில் அர்த்தமில்லை என்று கூட ஏடுகள்
எழுதியிருக்கின்றன !
தீர விசாரிக்க வேண்டும் !”
9) ராஜா தொடர்புடைய இடங்களில் எல்லாம்
சிபிஐ ரெய்டு நடப்பதாக இன்று தகவல் வந்த பிறகு -
“ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும்
இதுவரை நிருபிக்கப்படவில்லை. ராசாவை தி.மு.க.,வில்
இருந்து நீக்க காங்கிரஸ் நெருக்கடி கொடுக்கவில்லை.”
சிறிது நேரம் கழித்து –
“ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்
அவரை கட்சியில் இருந்து தூக்கி எறிய
தயங்க மாட்டோம் “
கடைசியாக -
“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில்
இருப்பதால் அது குறித்து நான்
கருத்து எதுவும் கூற விரும்பவில்லை !”
———————————————————————————————
இனி –
நாளையோ அதற்கு மறுநாளோ
கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது -
“எத்தகைய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை
என்றாலும், கழகத்துக்கும், மத்தியில் ஆளும்
கூட்டணி அரசுக்கும் சங்கடம் கொடுக்கக் கூடாது
என்கிற நல்லெண்ணத்தாலும்,
பாராளுமன்ற ஜனநாயக நடவடிக்கைகள்
சுமுகமாகத் தொடர வேண்டும் என்பதாலும்,
தம்பி ராஜா திமுக வில் அனைத்துப்
பொறுப்புக்களிலிருந்தும்
தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
வழக்குகளை உரிய முறையில் சந்தித்து,
தான் நிரபராதி என்பதை ஊருக்கு உரக்கத்
தெரிவித்த பிறகு மீண்டும் இணைகிறேன்
என்றும் தெரிவித்திருக்கிறார்.
கட்சி அவரது வேண்டுகோளை உரிய விதத்தில்
பரிசீலித்து முடிவெடுக்கும் “
|
No comments:
Post a Comment