Sunday, November 27, 2011

இந்த சேட்டையெல்லாம் ஜெயலலிதா வைச்சிக்கக் கூடாது, இதுக்கு கருணாநிதி பரவாயில்லையே ?

மத்திய அரசு நிதி தரவில்லை என்ற காரணத்தைக் காட்டி மக்கள் தலையில் விலைவாசி உயர்வை திணித்திருக்கும் இந்த ஆட்சி நாசமாகப் போய்விடும் என கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் விழாவில் இயக்குநர் சீமான் பேசியது:ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. 
ஏனென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு?மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. 
அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை.சரி, அப்ப நீங்க (ஜெ அரசு) என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான்.... ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக் கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. 


தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.அப்படித்தான் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம் நடத்தினார். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.மத்திய அரசு, உங்களை அடித்தால், நீங்கள் திருப்பி அவர்களைத்தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.

இதோ... அடக்குமுறையை ஆரம்பித்துவிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசாக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை.ஏன்? பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறதாம். சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா?சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா... ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது!நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்னடா சம்பந்தம் இருக்கு? அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா?கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து, 'இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். 

சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு'. இதுக்கு அதுவே பரவாயில்லையே! இங்கே நீ என்னை பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கே நாங்க!நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட, இது சரியில்ல, இது ஆட்சியில்ல... நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நிச்சயம் நடக்கும்.இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். ஆளையே அடிச்சிக்கிட்டுப் போயிடும்.அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுகளே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாய்வோம் என்று நீங்க புரிஞ்சிக்க வேண்டிய காலம் வரும்!

நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவு

கல்யாணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அவரது மனசை கலைத்து மறுபடியும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது ஒரு டீம்.

இவர் லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார் அல்லவா? அவருக்கு ஜோடியாக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த படம் ஆந்திராவில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் இரண்டு விரல்களை வைத்துக் கொண்டு பெரிய பெரிய ரயில்களையே கவிழ்த்துவிடும் தெலுங்கு ஹீரோக்கள், சட்டென்று ரிவர்ஸ் அடித்து பக்தி படங்களிலும் நடிப்பார்கள்.

வேடிக்கை என்னவென்றால் இரண்டு படங்களையும் ஓட வைத்து மேற்படி நடிகர்களை சேதுவாக்கி ரசிப்பார்கள் ஆந்திரா ரசிகர்கள். அப்படிதான் நாகார்ஜுனா நடித்த பல சரித்திரப்படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருக்கிறது.

இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும் தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் துணைக்கு நயன்தாரா வேண்டும் என்று நினைக்கிறாராம்.

ராம்கோபால் வர்மா இயக்கவிருக்கும் இந்த படம் ராவணனின் வாழ்க்கையை மையமாக கொண்டது. இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நாகார்ஜுனா.

திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று நயன்தாராவிடம் கேட்ட நிருபர்களுக்கு அதுபற்றி இப்ப எந்த முடிவுக்கு வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் அவர். இது போதாதா? நாகார்ஜுனாவின் -து£ண்டில் வசமாக வீசப்பட்டிருக்கிறது. சீதை என்ன முடிவெடுக்கிறாரோ?

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

http://www.enayamthahir.com/
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 


இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம் 

எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்! 

விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது. 

இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம். 

அமெரிக்கா க்தை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்! 

இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க். 

அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் யார் வாழ்விலும் ஏற்பட சாத்தியமுள்ளது.

எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுதான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.

இந்தியர்களின் வித்தியாசமான அணுகுமுறைகள்

உலகத்திலேயே வித்தியாசமான செயல்களைச் செய்யும் இந்தியர்கள் (படங்கள் இணைப்பு)

உலகத்திலேயே இந்தியாவில் தான் இத்தகைய வித்தியாசமான செயல்களைச் செய்யும் மனிதர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இந்த படங்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்.










































அமலாபால் - அதர்வா - ஐ.டி கம்பெனி

அதர்வா, அமலாபால் நடித்து வரும் படம் முப்பொழுதும் உன் கற்பனையில். குமார் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். 


ஒரு முறை என்ற ஒரு பாடல் அடங்கிய சி.டியை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது. 

இப்படம் குறித்து அதர்வா கூறியிருப்பது: 
ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கதை தான் முப்பொழுதும் உன் கற்பனையில். ராம் என்கிற ஐ.டி கம்பெனியில் பணிபுரிபவராக நான் நடித்து இருக்கிறேன். 

ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஒருவருக்கு காதல் வந்தால் எப்படி மற்றொரு நபராக மாறுகிறார் என்பதை தான் கூறி இருக்கிறோம். அமலா பால் சாரு என்கிற பாத்திரத்தில் ஐ.டி.கம்பெனியில் பணிபுரிபவராக நடித்து இருக்கிறார். 

இருவருக்குள்ளும் காதல் எப்படி உருவானது என்பதை மிக அழகாக கூறி இருக்கிறார். படத்தில் எங்களுக்குள் முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

முகப்புத்தகத்தின் (FACEBOOK) மற்றொரு முகம்

Facebook பக்கமொன்றில் கடந்த வாரத்தின் மிக மோசமான நீலப்படக் காட்சிகளும் மிருகவதைக் காட்சிகளும் பயனாளர்களின் செய்தி ஊட்டப் பக்கங்களின் முன்பாகவும் மத்தியிலும் வெளியிடப்பட்டிருந்தன.

இதனால் இந்த சமூக வலையமைப்பினைவிட்டுப் பாரியளவில் வெளியேற்றம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பயனாளர்களின் blogகளெங்கும் இதுபற்றிய சீற்றமான கருத்துக்கள் உலாவின.

இந்த வெளியீடு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக உள்ளதாக சிறுவர் இணைய பாதுகாப்பு வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

இணைய உலாவிகளைப் பலவீனமாக்கும் ஒரு காரணியாக spam தாக்குதல் உள்ளது. இந்தத் தாக்குதல் நவம்பர் 14 இல் பெருமளவில் செய்தி ஊட்டங்களில் தாக்கமேற்படுத்தியது.
Facebook இதுபற்றி 48 மணித்தியாலங்கள் வரையும் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவேயில்லை.

இதனால் கோபமடைந்த பல Facebook பயனாளர்கள் ருவிட்டருக்குச் சென்று தமது கோபத்தை வெளிப்படுத்தினர். சிலர் தமது கணக்குகளை நிறுத்தப்போவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

இதனைச் செய்த நபரை இனங்காணமுடியாததால் அனோனிமஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்த அனோனிமஸ் எனப்படுபவர்கள் தான் பாரிய நிறுவனங்களின், வங்கிகளின் அரசாங்கங்களின் இணையத்தளங்களையும் முகவரியில்லாமல் தாக்குபவர்கள்.

இந்தக் குழுவின் தலைமைத்துவமற்ற நிலையினால் ஒருவர் செய்வது இன்னொருவருக்குத் தெரியாமல் போகின்றது.

Facebook இனை spam மற்றும் மோசமான விடயங்களிலிருந்து பாதுகாப்பதே தமது வேலை என்றும் இதனால்தான் கடந்த வாரம் இத்தாக்குதல் ஏற்பட்டபோது அது உடனடியாகவே தமது குழுவினால் விரைவாக அகற்றப்பட்டதாகவும் Facebook இன்பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Facebook இவ்வருடத்தில் மென்பொருட் பாதுகாப்பு மற்றும் சிறுவர் ஒன்லைன் பாதுகாப்பு போன்றவற்றை முன்னேற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியிருந்தது.

தேசிய மொன்பொருட் பாதுகாப்பு விழிப்பு மாதமாகக் கருதப்பட்ட ஒக்ரோபர் முழுவதும் Facebook இனால் இவ்வாறான தாக்குதல்கள்பற்றிய கருத்துக்களைப் பரிமாறவும் தமது நிறுவனத்தின் புதிய பாதுகாப்புக் கருவிகள்பற்றிப் பயனாளர்களுக்கு விளக்கிக்கூறவுமெனத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தவும் செய்தது.

தாம் இவ்வாறான தாக்குதல்களால் பாதிப்படையாத கருவிகளை உருவாக்குவதாகவும் இனிவருங்காலங்களில் இவற்றைத் தடுப்பதற்கான வழிகளைச் செய்வதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் கருத்துத் தெரிவித்தார்.

சமூக வலையமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்புக் கல்வியைக் குடும்பங்களுக்கு விளக்கிவரும் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் Facebook போன்ற சமூக வலையமைப்புக்களைப் பாதுகாப்பதென்பது சாதாரண கணினிப் பாதுகாப்பென்பதைவிடவும் வித்தியாசமானதெனக் குறிப்பிட்டார்.

குடும்பக் கணினியுடன் நீங்கள் சில தளங்களைத் தடுத்து வடிகட்டும் மென்பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் சமூக வலையமைப்புக்களில் இடம்பெறும் இவ்வாறான விடயங்களைப் பிள்ளைகளிடமிருந்து பாதுகாக்க இந்த வடிகட்டி உதவாது.

சமூக வலையமைப்பென்பது இன்னமும் குழந்தை நிலையிலேயே உள்ளது என்றும் சிறுவர் ஒன்லைன் பாதுகாப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்தப் பாதுகாப்புச் சட்டம் 1998இல் 13 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளினைப் பாதுகாக்கப் போடப்பட்டிருந்தது.

இதனால் 2006 இல் Xanga என்ற இணையத்தளம், 13 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளைத் தமது கணக்குகளில் இணைக்க அனுமதித்தமைக்காக அதற்கு சமஸ்டி வர்த்தக சம்மேளனத்தினால் 1மில். டொலர்கள் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

எனினும் இந்தச் சட்டம் சமூக வலையமைப்பிற்குள் சிறுவர்கள் அந்த வயதிற்குள் நுழைவதை மட்டுமே தடுக்கின்றதென்றும் அவ்வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

எப்டி இருந்த நான், இப்டி ஆய்ட்டேன் - விஜய் ஆதங்கம்

1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.

விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ் 
( நண்பன் )படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

---------------------------------

2.டைரக்டர் - படத்துக்கு கதை என்னனு முடிவு பண்ணியாச்சு.

விஜய் - முதல்ல டைட்டிலை முடிவு பண்ணுங்க சார்,என் படத்துல யாரும் கதையை எதிர்பார்க்க மாட்டாங்க.

------------------------------

3.விஜய் - தீபாவளிக்குள்ள என் படம் ரிலீஸ் ஆகிடுமா?

புரொடியூசர் - அது தாராளமா ரிலீஸ் ஆகிடும்,ஆனா படம் ரிலீஸ் ஆனதும் வெட்டு,குத்துனு கலவரம் ஆகி நீங்கதான் உள்ளே போயிடுவீங்கனு நினைக்கிறேன்.
---------------------------

4.விஜய் - அப்பா,அந்த புரொடியூசரை பகைச்சுக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?இப்போ பாருங்க,பட போஸ்டர்ல உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 5 மெகா ஃபிளாப் குடுத்த விஜய் நடிக்கும்னு பட விளம்பரம் குடுத்திருக்கறதை...
-------------------------------


5. விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?
----------------------------

6.அரட்டை அரங்கம் விசு விஜயை ஹீரோவா போட்டு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?

வலன் அவன் கேவலன்

--------------------------

7.ஷங்கர் சார்,3 இடியட்ஸ் படத்தை ரீமேக் பண்ணப்போறீங்களாமே,ஹீரோஸ் யாருனு முடிவு பண்ணீட்டீங்களா?

ஒரு இடியட் மட்டும் இப்போதைக்கு முடிவாகி இருக்கு.(கமிட் ஆகி இருக்கு)

-------------------------

8.விஜய் - டைரக்டர் சார்,இந்தப்படத்துல நான் அரசியல்ல இறங்கற மாதிரி பாலிடிக்ஸ் பஞ்ச் டயலாக்ஸ் பேசி இருந்தேன்,ஏன் கட் பண்ணீட்டீங்க?

டைரக்டர் - இது சீரியஸ் படம்,இதுல காமெடி பண்றதுக்கு இடம் இல்லை.

----------------------------

9.எஸ்.ஏ.சந்திரசேகர் சார்,உங்க பையனை வெச்சு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அவ்வளவு ரிஸ்க் எடுக்க,வேற புரொடியூசரா சிக்காம இருக்காங்க?

----------------

10..விஜய் - 5 படங்கள் தொடர்ந்து ஊத்திக்குச்சு,6வது படமும் ஃபிளாப் ஆனா என் எதிர்காலம் என்னாகும்?100 படத்தை நான் டச் பண்ண முடியுமா?


விடுங்க .6வது படமும் ஃபிளாப் ஆனா ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு அப்படினு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.,

கலைஞர் எழுதும் கவிதைகள் பாரதிதாசனிடமிருந்து காப்பியடிக்கப் பட்டவைகளா?



கலைஞருக்கு சுயமாக கவிதைகள் எழுதத் தெரியாதா? ஆனந்த விகடனின் கூற்று. 


எதேச்சையாக நடந்ததா,ஜூனியர் விகடன் அழகிரி சர்ச்சையின் காரணமாக நடந்ததா தெரியவில்லை.ஆனந்த விகடனில் கலைஞரின் வாழ்த்துச்செய்தி சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது.

எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் நேரில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் வாழ்த்துச்செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்,

அதில் “எங்கெங்கு காணினும் வெற்றியடா,ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா” என வசன் கவிதையாக கலைஞர் எழுதி இருந்தார்.

ஆனந்த விகடனின் நானே கேள்வி நானே பதில் பகுதியில் இதை பற்றிய நையாண்டி வந்துள்ளது.பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதை வரிகளின் ரீமிக்ஸ் தான் கலைஞரின் வாழ்த்துச்செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா"

இது தான் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதையின் ஆரம்ப வரிகள்.

இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர்தமிழ்நாட்டில் ஏராளம்.

போகட்டும்.நமது வலைப்பூ நண்பர் பரிசல்காரன் அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு பத்திரிக்கைத்துறையில் தடம் பதிக்கும் அவருக்கு நமது வாழ்த்தை சொல்வோம்.

அதே போல் நண்பர் காட்டுவாசி அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்றும் ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.அவருக்கும் நமது வாழ்த்தை சொல்வோம்.

ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.

இதையடுத்து, சென்னைப் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த அவசரக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகைகளையும், செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். 
தமிழகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் செய்தி ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் வாசித்த கடிதத்தின் விவரம் வருமாறு: 

மதிப்புக்குரிய ஊடக நண்பர்களுக்கு, 

வணக்கம்...

ஜூனியர் விகடன் 8.8.2010 தேதியிட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் 'மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்ற செய்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 10.8.2010 அன்று காலை நாளிதழ் ஒன்றில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கை அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கிற்கு இத்தகைய சவாலை ஏற்படுத்தப்போவதாக இவர்கள் கூறியிருப்பது, இந்திய தேசத்தின் அரசமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள்ளது. 

இதற்கிடையே செய்தியை எழுதியவர்கள் இன்னார்தான் என்று தாங்களாகவே முடிவு செய்த சிலர் பத்துக்கும் மேற்பட்ட வகையில் மிரட்டல் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரமெங்கும் ஒட்டியுள்ளனர். அதில் நிருபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு,

 அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும், வழியேற்படுத்த வேண்டி தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்.

தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை தனிப்பட்ட ஒரு பத்திரிகைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எண்ணிவிடாமல் ஒட்டு மொத்த ஊடக சுகந்திரத்துக்குமான மிரட்டலாக கருதி ஊடக நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக்குரல் எழுப்பியிருப்பதை நன்றியோடு வரவேற்கிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் முறைப்படி இறங்கியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடக சுகந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்து திரண்ட அத்தனை நண்பர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

1. ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த ஜனநாயக விரோதச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 
2. ஜூனியர் விகடன் சார்பில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுவை - சென்னை பத்திரிகையாளர் மன்றம் டி.ஜி.பி.க்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க வேண்டும். 

3. இன்று காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

4. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுவோம். 

5. பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பகிங்கரமாக அச்சுறுத்தல் விடுத்த நபர்கள், சங்கங்களின் அமைப்புகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைப்போம்.

6. பத்திரிகைகளை விமர்சித்து மிரட்டி வெளியான விளம்பரத்தை சில பத்திரிகைகள் வெளியிட்டது பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பத்திரிகை உரிமையாளர்களை சந்தித்து நமது வருத்தத்தை பதிவு செய்வோம்.

7. ஜூனியர் விகடன் சம்பவம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிரான சம்பவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளார் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

8. பத்திரிகை உரிமையாளர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல ஒரு குழு அமைக்கப்படும்.

9. பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்துக்கு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், "பத்திரிகை அலுவகத்துக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான பொய்ப் புகார்களை திரும்பப் பெற வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

பத்திரிக்கையாளரின் நண்பர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என பத்திரிக்கைத்துறை நண்பர்கள் தங்களூக்குள் அங்கலாய்த்துக்கொள்கின்றன.

இந்த ஆண்டு கவர்ச்சிப் பெண்களாக வெற்றி வாகை சூடிய நடிகைகள் பட்டியல்

ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் நடிகை கரீனாகபூர் என லண்டனில் ஒரு வார இதழ் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ‘கிளாமர் குயினாக’ திகழ்ந்த நடிகை கேத்ரினா கைப் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

லண்டனிலிருந்து வெளியாகும் ‘ஈஸ்டர்ன் ஐ’ என்ற வார இதழ் ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார்? என்ற சர்வேயை எடுத்து வெளியிட்டு வருகிறது.

‘பாடிகார்ட்’ மற்றும் ‘ரா ஓன்’ ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்த கரீனா மற்றவர்களை விட ஒரு சதவீத ஓட்டுக்களை அதிகம் பெற்று ஆசிய பெண்களிலேயே மிகவும் கவர்ச்சியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு கடும் போட்டி இருந்தது.
ட்விட்டரில் பலர், அவருக்கு இணையாக மற்றவர்களுக்கும் வாக்களித்திருந்தனர். 3 ஆண்டுகளாக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கவர்ச்சி பட்டத்தை தக்க வைத்த கேத்ரினா கைப் இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து ‘ஈஸ்டர்ன் ஐ’ வார இதழ் ஆசிரியர் அஸ்ஜாத் நஸீர் கூறியதாவது கரீனா, கேத்ரினா என இரு அழகிகளுக்குமான போட்டி, அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திப் படவுலகம் இவர்களை சார்ந்தே இருக்கும் என்பதை புலப்படுத்துகிறது. நாங்கள் சர்வேக்கு எடுத்துக் கொண்ட லிஸ்டில் பாப் ஸ்டார்ஸ், பிரபலங்கள், மாடல் பெண்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

கரீனாவுக்கும், கேத்ரினாவுக்கும் பரவலான ஆதரவு இருந்தது. மற்ற நடிகைகள் அவர்கள் பெற்ற பாப்புலாரிட்டிக்கு ஏற்ற அளவே வாக்கு பெற்றனர்.

புதுமுகங்களில் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூஸன் அதிக ஓட்டுக்களை பெற்று 16வது இடத்தில் இருந்தார்.

பிரியங்கா சோப்ரா 3வது இடமும், பிபாஷா பாசு 4வது இடத்தையும், பிரிடா பின்டோ 5வது இடத்தையும், தீபிகா படுகோனே 7 வது இடத்தையும் பெற்றனர்.இவர்கள் தவிர முதன்முதலாக போட்டிக்குள் நுழைந்த ஜாக்குலின் பெர்னான்டஸ் 12வது இடத்தையும், நர்கீஸ் பக்ரி 23வது இடத்தையும், சோனக்ஷி சின்கா 38வது இடத்தையும் பெற்றனர். ஐஸ்வர்யாராய் 6வது இடத்தையும், சோனம் கபூர் 9வது இடத்தையும், லாரா தத்தா 15வது இடத்தையும், மாலாய்கா அரோராகான் 19வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பாலுமகேந்திரா பற்றி அறியாத அந்தரங்கங்கள்

பாலுமகேந்திராவின் படப் பாடல்கள் என்றுமே தனித்த சிறப்பு மிக்கவை. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை… இசைஞானி இளையராஜா.

அழியாத கோலங்கள் (சலீல் சவுத்ரி) என்ற ஒரு படம் தவிர, பாலு மகேந்திராவின் மீதி எல்லா படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

முதல்முறையாக பாலு மகேந்திராவின் பட பாடல்களை மட்டுமே பாடும் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களை தேடிப் பிடித்து பாராட்டு நடத்துவதில் தனி இடம்பிடித்துவிட்ட ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் தலைவர் சிவசங்கர்.

பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் அவர் படங்களில் வந்த மறக்கமுடியாத பல பாடல்களைப் மேடையில் பாடவிருக்கிறார்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்.

4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.

பாட்டோடு நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.

இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்றால் நம்ப முடிகிறதா.

உங்களுக்குத் தெரியாத இதுபோன்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை இந்த விழாவில் ரசிகர்களுக்கு பந்தி வைக்கப் போகிறார்கள்.

இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.

வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது. பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற்போது, இணைய தளங் கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொ டர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு’’ என்றார்.

அந்த இளம்பெண் சபரிமலையில் கைது


எச்சரிக்கை. நீங்கள் வேவு பார்க்கப்படுகிறீர்கள்

http://www.enayamthahir.com/
நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன. 
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
http://www.enayamthahir.com/
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.
5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம். 
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை. விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.

நான் வாய் திறந்தால் நிறைய பேர் "உள்ளே' போக நேரிடும்: மாஜி அமைச்சர் ராஜா

http://www.enayamthahir.com/
 நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்' என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பத்து மாதங்களுக்கு மேலாக, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும், ராஜா, இன்னும் ஜாமின் கோரவில்லை. வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு, சமீபத்தில் அவர் வந்த போது, பத்திரிகையாளர் ஒருவரிடம் அவர் கூறியதாவது:திகார் சிறை வாழ்க்கை, தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும், என்னை பக்குவப்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறேன். ஏறக்குறைய 12 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறேன்.
http://www.enayamthahir.com/
இந்த இரண்டிலுமே, கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன.இந்த வழக்கில் நான், நிரபராதி என அறிவிக்கப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும், நான் குறிப்புகளாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். எப்போதுமே நான் சிறையில் இருந்து விடுவேன் என நினைத்து விடாதீர்கள். முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். அதற்குப் பின், இந்த வழக்கில் ஜாமின் கோருவது குறித்து முடிவு செய்வேன். நான் குற்றவாளி அல்ல. தற்போது எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நான் எந்த தவறும் செய்யவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

'ரெண்டு நாளில் மாத்திக் காட்டுறேன்!' - கலெக்டர் மாற்றத்தின் பின்னணியில் சிரிக்கும் தோல் தொழில் அதிபர்!

''ஜெயலலிதா ஆட்சி எப்படிச் செயல் படுகிறது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம், ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமாரின் மாறுதல்!'' என்று அதிகார வட்டாரத்தை முழுமை யாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள்!


அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்கு வளைந்து கொடுக்கவில்லை என்றால், காந்தியே கலெக்ட ராக இருந்தாலும்... டிரான்ஸ்ஃபர்தான். இந்த விஷயத்தில், தி.மு.க - அ.தி.மு.க. என்ற பாகு பாடும் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாறுபாடும் கிடையாது. இதற்கான உதாரணங்களில் ஒருவர் ஆகி இருக்கிறார் இந்த ஆனந்தகுமார்!

மொடக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான கிட்டுசாமி, கலெக்டரை வீட்டில் பார்க்கச் சென்றபோது... சந்திக்கவில்லை, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாஜலம், கலெக்டரின் செல்லுக்குப் பல முறை தொடர்புகொண்டபோதும் அவர் போனை எடுக்கவே இல்லை. அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, கலெக்டர் வெளியே போனார். திரும்பி வரவே இல்லை.... இப்படிப் பல்வேறு கதைகள் உலவுகின்றன.

இவை எல்லாம் கூடுதலான காரணங்கள்தான். உண்மையான விஷயமாக ஈரோடு வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. ''கலெக்டரை மாற்றியது தோல் தொழிற்சாலை அதிபர் ஒருவர்!'' என்கிறார்கள். நம்மிடம் பேசிய புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் முகிலன், ''ஈரோட்டில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அந்த வாய்க்கால் முற்றிலும் மாசுபட்டுவிட்டது. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர... 'சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை நேரடியாக யாரும் வாய்க்காலில் கலக்கவிடக் கூடாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஈரோட்டைச் சேர்ந்த கே.கே.எஸ்.கே. தோல் பதனிடும் தொழிற்சாலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில்விட்டனர். இதுபற்றி கலெக்டர் ஆனந்தகுமாருக்குப் புகார் போனது. உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்குச் சென்று, அவர் ஆய்வு செய்தார். சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர், வாய்க்காலிலும் காவிரி ஆற்றிலும் கலப்பதை உறுதி செய்தார். உடனடியாக, சம்பந்தப்பட்ட கம்பெனியின் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில், தொழிற்சாலைக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தோல்கள் புராஸஸிங்கில் இருந்துள்ளன. திடீரென்று மின் இணைப்பைத் துண்டித்ததும் எல்லாமே வீணாகிவிட்டதாம். இதனால், தோல் கம்பெனியின் உரிமையாளர் ஹைதர் அலி கோபமாகி, கலெக்டரைப் பார்த்துச் சத்தம் போட்டதாகவும், 'உங்களை ரெண்டே நாளில் இங்கு இருந்து தூக்குறேனா இல்லையான்னு பாருங்க!’ என்று சவால்விட்டுச் சென்னை சென்றதாகவும் சொல்கிறார்கள். அங்கு ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருக்கிற ஒருத்தரைப் பிடித்து கலெக்டரை மாற்றியுள்ளார். அவருக்கு மாறுதல் உத்தரவு வந்த பிறகுதான் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கே வந்திருக்கார் ஹைதர்அலி. முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது!'' என்று கொட்டித் தீர்த்தார் முகிலன்.


இந்த சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஈரோட்டில் இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு விசிட் அடித்தாராம் கலெக்டர். ''கேன்சர் நோயால் ஏன் இந்த மாவட்டத்தில் அதிகமான ஆட்கள் பாதிக்கப்படுகிறார்கள்?'' என்று கேட்டபோது, ''தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளே இதற்குக் காரணம்!'' என்று அங்கு உள்ள மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். தோல் தொழிற்சாலைக்குச் செல்லும் மின்சாரத்தை உடனடியாக கலெக்டர் கட் பண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால், கலெக்டரை மிஞ்சியவர்களாக தோல் தொழிற்சாலை முதலாளிகள் இருப்பதும், அவர்கள் கலெக்டரை மாற்றும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும் எல்லா ஆட்சிகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகிவிட்டது.

கலெக்டர் மின் இணைப்பைத் துண்டித்த தோல் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹைதர்அலி தரப்பில் பேசினோம். ''எங்களோட நிறுவனங்கள் எல்லாமே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழுடன் முறைப்படிதான் நடக்கின்றன. கலெக்டர் மாற்றத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ, காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைபோல ஆகிடுச்சு. தொழில் போட்டி காரணமாக சிலர் எங்க மீது இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்புறாங்க...'' என்கிறார்கள்.

தூய்மையான அரசாங்கம் நடத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ள முதல்வர்தான் இதற்கு உண்மையான பதிலைத் தர வேண்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம், கி.ச.திலீபன்

படங்கள்: க.தனசேகரன்

''ராஜமாணிக்கம்தான் இப்போதும் சி.எம். செக்ரட்டரியா?''

ஈரோடு கலெக்டர் ஆனந்தகுமாரின் அதிரடி மாற்றத்தை விட, காமராஜ் புது கலெக்டராக வந்திருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி. ''தி.மு.க. ஆட்சியின் செல்லப் பிள்ளை ஐ.ஏ.எஸ்.களில் இவரும் ஒருவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் நெருங்கிய நண்பர். செய்தித் துறை இயக்குநராக இருந்த இவரை மதுரை மாவட்ட கலெக்டராகத் தனக்கு வேண்டும் என்று கேட்டு அழகிரிதான் அழைத்துச் சென்றார். தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடியாக அவரை அங்கு இருந்து ஈரோட்டுக்கு மாற்றியது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இவர் தி.மு.க. ஆள் என்று சொல்லி ஈரோட்டில் இருந்து மாற்றினார்கள். ஆனால், இவரையே 30 நாட்களுக்குள் ஈரோடு கலெக்டராகப் நியமித்துள்ளார்கள். முதல்வரின் செயலாளர் ஒருவரை காமராஜ் போய் பார்த்துள்ளார். அதன் பிறகுதான் இவர் மீது கருணை பிறந்துள்ளது. ராஜமாணிக்கம், காமராஜ், முதல்வரின் செயலாளர் ஆகிய மூவரும் இணை பிரியாத ஆட்கள் என்பது முதல்வருக்குத் தெரியுமா?'' என்கிறார்கள் கோட்டையில் சிலர்.

ஆனால், காமராஜுக்கு நெருக்கமானவர்களோ, ''அவர் எந்தக் கட்சி அபிமானியும் இல்லை. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து முடிப்பார். அந்த நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான் இது!'' என்கிறார்கள்.

ஐந்து லட்ச முதலீடு செய்து கோடிகளைக் அள்ளிய படம்

ஹீரோக்களுக்கு கோடிகளை ஊதியமாக கொட்டிக்கொடுத்து தயாரிக்கப்படும் திரைப்படங்களே ஓரிரு நாட்களில் ஊத்திக்கொள்ளும் நிலையில், வெறும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஒன்று கேரளாவில் முப்பது நாட்களைத் தாண்டி ஓடுவதோடு கோடிகளையும் குவித்துக்கொண்டிருக்கிறது.


மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப் ஆகிய சூப்பர் ஸ்டார்களையே யோசிக்க வைத்திருக்கும் இத்திரைப்படத்தின் ஹீரோவைப் பார்த்து கேரளத்திரையுலகமே இப்போது அலறிக் கிடக்கிறது. சேனல்கள் இவரை மையமாக வைத்து தொடர்ந்து டாக் ஷோக்கள் நடத்தி வருகின்றன. பட்டிதொட்டிகளிலும் பட்டிமன்றங்கள்