ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் நடிகை கரீனாகபூர் என லண்டனில் ஒரு வார இதழ் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ‘கிளாமர் குயினாக’ திகழ்ந்த நடிகை கேத்ரினா கைப் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
லண்டனிலிருந்து வெளியாகும் ‘ஈஸ்டர்ன் ஐ’ என்ற வார இதழ் ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார்? என்ற சர்வேயை எடுத்து வெளியிட்டு வருகிறது.
‘பாடிகார்ட்’ மற்றும் ‘ரா ஓன்’ ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்த கரீனா மற்றவர்களை விட ஒரு சதவீத ஓட்டுக்களை அதிகம் பெற்று ஆசிய பெண்களிலேயே மிகவும் கவர்ச்சியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு கடும் போட்டி இருந்தது.
ட்விட்டரில் பலர், அவருக்கு இணையாக மற்றவர்களுக்கும் வாக்களித்திருந்தனர். 3 ஆண்டுகளாக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கவர்ச்சி பட்டத்தை தக்க வைத்த கேத்ரினா கைப் இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இது குறித்து ‘ஈஸ்டர்ன் ஐ’ வார இதழ் ஆசிரியர் அஸ்ஜாத் நஸீர் கூறியதாவது கரீனா, கேத்ரினா என இரு அழகிகளுக்குமான போட்டி, அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திப் படவுலகம் இவர்களை சார்ந்தே இருக்கும் என்பதை புலப்படுத்துகிறது. நாங்கள் சர்வேக்கு எடுத்துக் கொண்ட லிஸ்டில் பாப் ஸ்டார்ஸ், பிரபலங்கள், மாடல் பெண்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
கரீனாவுக்கும், கேத்ரினாவுக்கும் பரவலான ஆதரவு இருந்தது. மற்ற நடிகைகள் அவர்கள் பெற்ற பாப்புலாரிட்டிக்கு ஏற்ற அளவே வாக்கு பெற்றனர்.
புதுமுகங்களில் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூஸன் அதிக ஓட்டுக்களை பெற்று 16வது இடத்தில் இருந்தார்.
பிரியங்கா சோப்ரா 3வது இடமும், பிபாஷா பாசு 4வது இடத்தையும், பிரிடா பின்டோ 5வது இடத்தையும், தீபிகா படுகோனே 7 வது இடத்தையும் பெற்றனர்.இவர்கள் தவிர முதன்முதலாக போட்டிக்குள் நுழைந்த ஜாக்குலின் பெர்னான்டஸ் 12வது இடத்தையும், நர்கீஸ் பக்ரி 23வது இடத்தையும், சோனக்ஷி சின்கா 38வது இடத்தையும் பெற்றனர். ஐஸ்வர்யாராய் 6வது இடத்தையும், சோனம் கபூர் 9வது இடத்தையும், லாரா தத்தா 15வது இடத்தையும், மாலாய்கா அரோராகான் 19வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
|
No comments:
Post a Comment