Wednesday, March 2, 2011

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய


நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.


மென்பொருளை பயன் படுத்தும் முறை:
  • இதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள். 
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
  • அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
  • இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
  • அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


Downloads: 

நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா?

நாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.
இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உள்ளது. நாம் அனுப்பிய மெயிலை படித்தவுடன் நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். அதை எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.

  • முதலில் உங்கள் மெயிலில் நுழைந்து கொள்ளுங்கள். எப்பவும் மெயில் அனுப்புவது போல Compose பகுதிக்கு சென்று நீங்கள் அனுப்ப வேண்டிய செய்திகளை எப்பவும் போல டைப் செய்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது உங்கள் மெயில் அனுப்ப தயாராக உள்ளதா இப்பொழுது இந்த லிங்கில்SpyPig செல்லுங்கள்.

  1. உங்கள் ஈமெயில் முகவரியை கொடுங்கள்.
  2. நீங்கள் அனுப்பும் மெயிலில் சப்ஜெக்ட்டில் கொடுத்துள்ளதை இங்கு கொடுங்கள்.
  3. இதில் உள்ள picture களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கீழே உள்ள Create My SpyPig என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  4. பட்டனை க்ளிக் செய்த உடனே கீழே வந்திருக்கும் அந்த படத்தை காப்பி செய்து உங்கள் மெயில் பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள் இவற்றை 60 வினாடிகளுக்குள் செய்து முடிக்க வேண்டும். 
  • அவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் மெயிலை வழக்கம் போல அனுப்பி விடுங்கள். 
  • இனி நீங்கள் அனுப்பிய மெயில் படிக்க பட்டவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல அறிவிப்பு செய்தி வரும்.
  • நீங்கள் நீங்கள் மெயில் அனுப்பிய நேரமும் நீங்கள் அனுப்பிய மெயில் படிக்கப்பட்ட நேரம்,இடம்,கணினியின் ஐ.பி. எண் ஆகிய அனைத்து விவரங்களும் வந்திருக்கும்.
  • மற்றும் எத்தனை முறை உங்கள் ஈமெயில் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் வரும்.
  • இனி அவர்கள் உங்கள் மெயிலை ஓபன் செய்யும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும்.
  • இதே முறையில் நீங்கள் மற்ற மெயில்களை அனுப்பினால் யாரும் நம்மிடம் மெயிலை படிக்கவில்லை என்று பொய் கூற முடியாது.

பேஸ்புக் முகவரியை மாற்றுவது எப்படி?

 நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. கீழே தொடரவும்.
என்னுடையது முதலில் http://www.facebook.com/yamsasi2003
  • இது நீங்களும் மாற்ற முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும். 
  • (கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மற்றுமே மாற்ற முடியும் ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்)
  • உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதி படுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்
  • இப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் பேஸ்புக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்களா?


நாம் நம்முடைய கருத்துக்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக உள்ள தளம் பேஸ்புக் எனும் சமூக வலைத்தளம்.  இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகி நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒருவர் நினைத்தால் மற்றொரு கணக்கின் பாஸ்வேர்ட் அறிய நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆதலால் நம் கணக்கை பாதுகாப்பாக வைத்து கொள்வது நம்மிடம் தான் உள்ளது. இப்படி நம் பேஸ்புக் கணக்கை நமக்கு தெரியாமல் வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என அறிய.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது கணக்கு பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் என்பதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள கணக்கு பாதுகாப்பு என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள இரண்டு கட்டங்களிலும் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள சேமி என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • இதை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் கணினியை தவிர மற்ற கணினியில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்தால் உங்கள் மெயிலுக்கும் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பதிந்து இருந்தால் உங்கள் போனுக்கும் எச்சரிக்கை செய்தி வரும். 
  • அப்படி எச்சரிக்கை செய்தி வரும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிகொள்ளுங்கள். 
டுடே லொள்ளு 
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. 
 உண்மை தாங்க நம்புங்க ப்ளீஸ்.

இந்த பாலோயர் லிஸ்ட்ட பார்த்து கூகுள் நிறுவனமே ஆடிப்போயிருக்கு 

சரிண்ணே பாராட்டுனது போதும் விடுன்னே 

 வழக்கத்தை விட கொஞ்சம் கம்மியா போச்சு 


இந்த அட்மயா நமக்கு தரவேண்டிய பணம் 

மேல உள்ள அனைத்தையும் நான் எத்தனை தடவை உண்மை என்றாலும் யாரும் நம்ப மாட்டீங்க (என்னது அந்த கமெண்ட்டை மட்டும் நம்புறீங்களா, சரி ரகசியமாக வச்சிகோங்க யாரிடமும் சொல்லாதிங்க ), எதுவுமே உண்மை கிடையாது. ஆனால் எப்படி இது சாத்தியமாகும்.  இந்த வசதியை வைத்து கொண்டு ஆங்கில தளங்கள் நம்மை எப்படி ஏமாற்றுகின்றன அடுத்த பதிவில்.
எந்த இணைய பக்கத்தையும் எளிதில் நம் விருப்பம் போல் மாற்றலாம்   

பேஸ்புக்கை உங்களின் ஜிமெயில் கணக்கில் கொண்டுவர

 கூகுளுக்கு நிறைய கிளை தளங்கள் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு விஷயத்துக்கு வருவோம். நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயிலையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும் ஆனால் பேஸ்புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணைத்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
  • பேஸ்புக் தளத்தை திறக்காமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
  • உங்கள் அலுவலகத்தில் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் இது வேலை செய்யும்.
  • ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் பதிவிற்கு கருத்துரைகள் இடலாம். நம் விருப்பங்களையும் தெரிவிக்கலாம்.
  • இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Settings - Labs க்ளிக் செய்யவும் உங்களுக்கு வரும் விண்டோவில் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget டேபை க்ளிக் செய்யவும்
  • அங்கு வந்திருக்கும் விண்டோவில் கீழே உள்ள URL காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml

  • URL பேஸ்ட் செய்தவுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்துவிடும். 
  • இப்பொழுது நீங்கள் ஜிமெயிலை Refresh செய்யுங்கள். இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பாருங்கள் பேஸ்புக் விட்ஜெட் சேர்ந்து இருக்கும். அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் அதில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம். 
  • பதிவில் சந்தேகம் இருப்பின் கருத்து பகுதியில் தெரிவிக்கவும்.
நாம் செல்லும் இணைய தளங்களில் விளம்பரங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் செய்திக்கோ Flash பைல்களை சேர்த்து இருப்பார்கள் இந்த பைல்களால் நாம் செல்லும் இணைய பக்கம் திறக்க அதிக நேரம் எடுக்கும். அதனால் நாம் நமக்கு தேவையான தகவலை பெறாமல் அந்த தளத்தை விட்டே வெளியேறி விடுவோம். இனி அப்படி வர வேண்டியதில்லை இந்த நீட்சியை உங்கள் குரோம் உலவியில் நிறுவி விட்டால் போதும் இனி நீங்கள் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தில் உள்ள Flash பைல்கள் தடை செய்யப்படும். 



டுடே லொள்ளு 

மவனே யாராவது ஓட்டும் கமெண்ட்டும் போடாம போனீங்க