Monday, May 23, 2011

இது பேஸ்புக் செய்த சதி


சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.

மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.

இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும்.

வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.

கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.

வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.

பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.

வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.

உங்களுக்கு ரூபாய் 40 கோடிக்கு எ டி எம் கார்டு வேண்டுமா?

 பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது.

அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 40 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர்.
இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

கை கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்


நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறநங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.

தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்



பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக்கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.
கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்


நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.

கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்

கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.

குறுகிய நிலையில் உறங்குபவர்




உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உலைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.

ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்



சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.

ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்


எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்



ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.

ஒரு பக்கமாகவே உறங்குபவர்



நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்



நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.