Monday, April 18, 2011

மொபைலில் GMAIL,YAHOO,FACEBOOK போன்றவற்றில் ஒரே நேரத்தில் பல அக்கௌன்ட்களில் ஆன்லைனில் இருக்கலாம்

        உங்களுக்கு ஜி மெய்லிலோ, யாஹூவிலோ அல்லது FACE  BOOK கிலோ இரண்டோ அல்லது மூன்றோ அக்கௌன்ட்கள் இருப்பதாக வைத்து கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருக்க முடியாது.  அதுவும் மொபைலில் நினைத்து பார்க்கவே முடியாது.

       இதற்கென தனி மொபைல் மென்பொருள் வந்துவிட்டது. NIMBUZZ போல. ஆனால் இதன் சிறப்பு என்னவென்றால் ஒரே நேரத்தில் பல அக்கௌண்டில் ஆன்லைனில் இருக்க முடியும்.

    முதலில் இந்த மொபைல் மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர் இதற்கென தனியாக ஒரு அக்கௌன்ட் க்ரியேட் செய்து கொள்ள வேண்டும். NIMBUZZ போல. பிறகு GMAIL,YAHOO,FACEBOOK போன்ற ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக USENAME மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே செல்லவேண்டும். அவ்வளவுதான்.

       இனி என்ன தரவிறக்க சுட்டி தானே 

ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.
சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம். 

1. டேஸ்ட்கிட் (Tastekid): புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To): ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/
கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:
1. ஜூங்கல் (Joongel): இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது. ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி: http://www.joongel. com/index.php
2.ஸ்குரூகிள் (Scroogle): கூகுள் தேடுதளத்தில் தேடுகையில், குக்கீஸ் நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய பெர்சனல் விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது:www.scroogle.org/cgibin/scraper.htm.
3.சூப்பர் குக் (Supercook): பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும். இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.
இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/
இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன. 
1. ஜாமென்டோ (Jamendo): ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி:http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது. 
2. நட்சி (Nutsie): உங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி:http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.
1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection): இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/
2. கீ எக்ஸ் எல் (keyxl): ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/
மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.
1. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net): இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள். இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும். பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/
2. வெப் 2 கால்க் (web2calc): இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/
3. ரெய்னி மூட் (rainymood): ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/
4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி: http://whathappenedinmybirthyear.com/
மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம். 

தற்போதைய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன.

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. பலவீனமான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட்வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மேலும் மேலும் பல புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாகவும், சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்நேரமும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம் தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.

இந்த ஆண்டில், இவ்வாறான தீய விளைவுகளுக்கு வழி தரக்கூடிய ஐந்து முக்கிய பிரிவுகளை, வைரஸ் எதிர்ப்பு ஆய்வு நிறுவனங்கள் பட்டிய லிட்டுள்ளன. குறிப்பாக, சோபோஸ் (Sophos) பாதுகாப்பு நிறுவன தொழில் நுட்ப ஆய்வாளர் கிரஹாம் க்ளூலி முக்கிய சில பிரிவுகள் குறித்து எச்சரிக்கை தந்துள்ளார். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். இவர் தலைமை மேற்கொண்டிருக்கும் குழு, பழைய புதிய மால்வேர் தொகுப்புகளாக, தினந்தோறும் 95,000 வகைகளை ஆய்வு செய்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

1. முதல் அபாயம் - மொபைல் சாதனங்கள்: இங்கு மொபைல் சாதனங்கள் என்றுகுறிப்பிடப்படுவது மொபைல் போன்கள் மட்டுமல்ல. அவற்றையும் சேர்த்து நாம் செல்லும் வழியெல்லாம் செயல்பட எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்களாகும். முதலாவதாக, மொபைல் போன்களில் ஸ்மார்ட் போன்கள் இவ்வகை அபாயத்திற்கு ஆளாகின்றன. உலக அளவில் 85% இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நாடுகளில் இவர்களில் பலர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் விலையும் குறைந்து வருவதால், இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போன்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அப்ளிகேஷன்கள் வழியாகப் பல வைரஸ்களும் மால்வேர் தொகுப்புகளும் பரவத் தொடங்கிவிட்டன. அண்மையில் மார்ச் 1 அன்று கண்டறிந்தபடி, கூகுள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தர்ட் பார்ட்டி தொகுப்புகளில் ட்ராய்ட் ட்ரீம் (DroidDream) என்னும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உள்ள தொகுப்பினை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெறுகிறது. இதன் மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை, போனுக்கு இந்த வைரஸ் டவுண்லோட் செய்து கொள்கிறது. 

இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் உள்ள அனைத்து தொகுப்பு களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தை யும் நீக்கியது.
அதே போல மற்ற போன்களில் பரவி இருந்த இதே வைரஸையும் தானாகவே நீக்கியது. 

சீனாவில், இவ்வகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறியப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எனவே மொபைல் போனுக்கான அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்கையில், இணைய தளம் சென்று, அந்த அப்ளிகேஷன்கள் பாதுகாப் பானவை தானா என்று உறுதி செய்து கொண்டு செயல்பட அனைத்து வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

2. சமுதாய இணைய தள வழி: பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்கள் , மக்களிடையே நல்லுறவினை வளர்க்கும் அதே வேளையில், வைரஸ்கள் வளர்ந்து பரவு வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறி வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கள் தயாரிக்கும் பிட் டிபண்டர், இது குறித்துக் கூறுகையில், பேஸ்புக் தளத்தில் உள்ள 20% பேர், மிக எளிதாக மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர் என்று அறிவித்துள்ளது. இந்த தளங்களில் ஸ்கேம்கள் வழியாக பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றினைத் தூண்டுதல்களாகக் கொண்டு இவை இந்த தள உறுப்பினர் களைச் சிக்க வைக்கின்றன. போலியான சில அப்ளிகேஷன்கள் வழியாகவும் இவை பரவுகின்றன. சிக்கிடும் நபர்களின் மொபைல் போன் எண், பிறந்த நாள், ஊர், பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்த தகவல்களைத் திருடி, அவர்களைப் போல போலியான ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்ற முயல்கின்றனர். 

எனவே உங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோவினைப் பார்க்க அழைக்கும் ஸ்கேம் தகவல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அல்லது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

3. போலி ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்: அண்மைக் காலத்தில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பெயரில், போலியான சில அறிவிப்புகள் வெளியாகின்றன. இவற்றை நம்பி செயலில் இறங்குபவர் களின் கம்ப்யூட்டர் தகவல்கள் முழுமையாகத் திருடப்படுகின்றன. சோபோஸ் நிறுவனம் இது வரை 8,50,000க்கும் மேற்பட்ட போலி ஆண்ட்டி வைரஸ் அறிவிப்புகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்திகளை வழங்கியுள்ளது. இவற்றை “scareware” என இந்நிறுவனம் அழைக்கிறது. முதலில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் பெயரில், இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தருவதாக, மக்களை இது ஏமாற்றுகிறது. சிக்குபவர்களுக்கு, ஏதேனும் ஒரு புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஆய்வு செய்வதாகக் கூறுகிறது. பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் மோசமான வைரஸ் வசம் சிக்கியுள்ள தாகவும், அதனை நீக்க ஒருமுறை கட்டணம் செலுத்தித் தங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டிச் சிக்க வைக்கிறது. இதற்கு இணங்குபவர்களிடம் உங்களின் கிரெடிட் கார்ட் மூலம் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லிக் கேட்டுப் பின்னர், அந்த கிரெடிட் கார்டில் உள்ள பணம் அனைத்தையும் சுரண்டி விடுகிறது. 

இது போல அறிவிப்பு வருகையில், சம்பந்தப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தரும் நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு நீங்களாகச் சென்று, அவ்வாறு ஏதேனும் புதிய புரோகிராம் உள்ளதா என்று அறிந்து கொள்வதே நல்லது.

4. பி.டி.எப். டாகுமெண்ட் வழி: இந்த வழி மிக மிகப் பழைய வழி என்றாலும், இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இமெயில் வழியாக ஸ்பேம் மெயில்களை, இணைக்கப் பட்ட பைல்களுடன் அனுப்பி, அவற்றை டவுண்லோட் செய்து திறந்தவுடன் கம்ப்யூட்டரில் பரவி தகவல்களைத் திருடுவது இந்த பழக்கத்தின் வழியாகும். 

இப்போது இவ்வாறு இணைக்கப் படுவது பெரும்பாலும் பி.டி.எப். பைல்களாகத் தான் உள்ளன. ஏனென்றால், வைரஸ்களை பி.டி.எப். பைல்களில் இணைப்பது மிகவும் எளிதான ஒரு வழியாகும். 2010 ஆம் ஆண்டில், இவ்வாறு மோசமான நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட மெயில்களில் 65% மெயில்களில் பி.டி.எப். பைல்களே வைரஸ்களுடன் அனுப்பப்பட்டன என்று கண்டறிந்துள்ளனர். இது முந்தைய 2009 ஆம் ஆண்டில், 52.6% ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 76% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதனைத் தடுக்க, நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை எப்போதும் இயக்க நிலையிலும், அப்டேட்டட் நிலையிலும் வைத்திருக்கவும். இமெயில்களுடன் வரும் இணைப்பு களை, நீங்கள் எதிர்பார்த்த இணைப்பாக இல்லாமல் இருந்தால் திறக்க வேண்டாம். அப்படியே திறக்க வேண்டும் என எண்ணினால், ஆன்லைனில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்து முடிவுகளைக் கூறும் தளங்களுக்கு அவற்றை அனுப்பி, முடிவு பெற்ற பின்னரே திறக்கவும்.

5. இணைய வழி நிறுவன யுத்தம் : வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் நிறுவனங்கள், இப்போது ஒருவரை ஒருவர் காலை வாரும் வேலைக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். போட்டி நிறுவனத்தின் சர்வருக்கு மால்வேர்களை அனுப்பி, அந்நிறுவனத்தின் ரகசிய தகவல்களைத் திருடும் வேலை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடைபெறு கின்றன. விக்கிலீக்ஸ் தளத்தை முற்றுகையிட்ட முயற்சி மற்றும் எகிப்து, லிபியா மற்றும் துனிஷியா நாட்டில் தொடங்கிய போராட்டங்கள் ஆகிய வற்றின் பின்னணியில் இது போன்ற இணையக் கெடுதல் வேலைகள் இருந்ததாகத் தெரிகின்றன. இன்னும் இந்தியாவில் இந்த வேலை தொடங்கப் படவில்லை. ஆனால் அந்த நாளும் சீக்கிரம் வரலாம் என்றே நிறுவனங்கள் கருதுகின்றனர். இந்த முயற்சிகள் தனிப்பட்ட நபரைப் பாதிப்பதில்லை.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது

அதன் பின்னரே காமம் வரும்

கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:

காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:

புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:

மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:

மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:

காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:

குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம்,

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்.

.

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:

காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:

புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:

மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:

மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:

காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:

குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் காதல் ரொம்ப வீக்குகுங்க. கொஞ்சம் மாத்தி யோசிங்க

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.