Tuesday, April 12, 2011

உங்களுடைய வலைப்பூவை பரிசோதிக்க ஒரு இணையதளம்

புதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போது நாம் உருவாக்கிய தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா? தேவையான இடங்களின் சரியான செய்தியை கொடுத்திருக்கிறோமோ அத்தனை வயதினரும் படிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது 



இணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சோதித்து கொள்ள வேண்டும் நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது பயன்படுத்தப்போகும் வார்த்தையை சோதிக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.read-able.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இணையதளத்தை
சோதிக்க வேண்டும் என்றால் Test by URL என்ற மெனுவை சொடுக்கி
வரும் Web Address என்ற கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை
கொடுத்து Calculate Readability என்ற பொத்தானை சொடுக்கினால்
போதும் அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் முழுமையாக
சோதிக்கப்பட்டு நமக்கு முடிவுகள் காட்டப்படும். எத்தனை வயதுள்ள
குழந்தைகள் உங்கள் தளத்தை படிக்கும் படி இருக்கிறது என்றும்
ஒவ்வொன்றும் விரிவாக நமக்கு காட்டப்படும். இங்கு வரும் பச்சை
நிறம் அனைத்து வயதினமும் படிக்கும் வண்ணம் சிறந்த தளமாக
இருக்கிறது என்பதை காட்டவும், சிகப்பு வண்ணம் வார்த்தைகள்
அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்படி இல்லை என்பதை
காட்டுவதற்காகவும் உள்ளது. இணையதளம் உருவாக்கும் முன்
வார்த்தைகளை சோதிக்க விரும்புபவர்கள் Test by Direct Input
என்ற மெனுவை சொடுக்கி நேரடியாக வார்த்தைகளை கொடுத்து
சோதித்துக்கொள்ளலாம். Winmani.wordpress.com என்ற நம்
தளத்தை கொடுத்து சோதித்து பார்த்தோம் முழுவதும் பச்சையாக
காட்டியதை படம் 2 காட்டுகிறது. இணையதளம் உருவாக்க
விரும்புபவர்கள் முதல் இணையதளம் வைத்திருக்கும் அனைவரும்
தங்கள் தளத்தை சோதித்துக்கொள்ள இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.

500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம்

சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது.

500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது


இணையதள முகவரி : http://trends.booshaka.com
இந்த்தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப்பற்றிய தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search
என்ற பொத்தானை அழுத்தியதும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த
வார்த்தைப்பற்றி தற்போது பேஸ்புக்-ல் என்ன பேச்சு நடைபெறுகிறது
என்பதை நொடியில் அறியலாம். இதைத்தவிர News , Music , Sports,Politics
Gossip,TV,Fashion,Movies,Deals,Travel,Brands,Games போன்ற எந்தத்துறை
சார்ந்து தேட வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து எளிதாக
தேடலாம். பேஸ்புக்-ல் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து
கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

பாஸ்வேட் அமைக்கும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்

ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.  எப்படிப்பட்ட திருடனும் அசைக்க முடியாத பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பலர் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். ஏனென்றால் பலர் பாஸ்வேர்ட் அமைக்கையில் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவர்களின் பெயர், குழந்தைகளின் பெயர், குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், ஊர் பெயர் ஆகியவற்றுடன் பிறந்த நாள் அல்லது திருமண நாள் ஆகியவற்றை இணைத்து வைக்கிறார்கள். இது யாராலும் அனுமானம் செய்யக் கூடியது என்பதனை மறந்துவிடுகிறார்கள். அல்லது செல்லப் பெயர் வைப்பது போல மிகச் சிறியதாக வைக்கிறார்கள். இந்த முறைகள் எல்லாம் நம் பாஸ்வேர்டை எப்படியாவது கண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருட முயற்சிப்பவர்களுக்கு எளிதாக வழி வகைக்கும் செயல்களாகும்.

ஒரு பாஸ்வேர்டினை எப்படி யாரும் தெரிந்து கொள்ள முடியாதபடி அமைக்கலாம் என்பதனையும் ஒரு பாஸ்வேர்ட் அமைப்பதில் என்ன என்ன கடைப்பிடிக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்றக் கூடாது என்பதனையும் இங்கு பார்க்கலாம்.

1. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களில் அமைக்கப்பட வேண்டும். மிக உறுதியானதாக வேண்டும் என்றால் 14 கேரக்டர்களில் அமைய வேண்டும். இது எந்த வகையிலும் தொடர்ச்சியானதாக இருக்கக் கூடாது.

பாஸ்வேர்டை ஒரு சொல்லில் அமைப்பதைக் காட்டிலும் இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு சொல் தொடராக ("pass phrase")  அமைப்பது இன்னும் நல்லது. இதனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். நமக்கும் மனதில் வைத்திருப்பது எளிது.  rendu idli  என்று வைத்தால் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.

2. எழுத்துகள், எண்கள் மற்றும் அடையாளக் குறிகள் (*&%#@) ஆகிய மூன்று வகைகளையும் இணைத்து உருவாக்குவது நல்லது. இதுவே 15 கேரக்டர்களில் அமைந்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கும். சரி இது எப்படி நம் மனதில் ஞாபகமாக இருக்கும் என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்ட வழிகளில் சிந்தியுங்கள். முதலில் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் புரோகிராம் ஸ்பேஸ் இணைந்த சொல் தொடர்களைப் பாஸ்வேர்டாக ஏற்றுக் கொள்ளுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் உங்களுக்கு பிரியமான ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள்.  My son is three years old. இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள சொற்கள் அனைத்திலும் முதல் எழுத்துக்களை எடுத்து ஒரு பாஸ் வேர்ட் அல்லது பாஸ் பிரேஸ் அமையுங்கள். எடுத்துக் காட்டாக இந்த வாக்கியத்தில் இருந்து msityo  என்ற சொல் கிடைக்கிறது. இதிலும் கூட இடையே ஏதேனும் ஒரு எழுத்தை கேபிடல் லெட்டராக அமைக்கலாம். அடுத்து இதனுடன நீங்கள் விரும்பும் ஸ்பெஷல் கேரக்டர் அல்லது எண்களை இதனுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.  m$sit3yo  என்று கூட அமைக்கலாம். இந்த பாஸ்வேர்டை ஏதேனும் ஒரு இணைய தளத்தில் கொடுத்தால் அது ஸ்ட்ராங்கானதா என்று சொல்லும்.

இனி தவிர்க்க வேண்டியவற்றைப் பார்க்கலாம்.

1. தொடர் எழுத்துக்கள் அல்லது எண்களைத் தவிர்த்திடுங்கள். 1234567 என்பது போலவோ abcdefgh  என்றோ இருக்கக் கூடாது. அல்லது கீ போர்டில் உள்ள அடுத்தடுத்த எழுத்துக்கள் இணைந்ததாகவோ இருக்கக் கூடாது. இதனை ஒருவர் எளிதில் அனுமானித்துவிடலாம்.

2. S க்குப் பதிலாக $ அல்லது O வுக்குப் பதிலாக 0  என அமைத்தால் இந்த் லாஜிக்கைப் பயன்படுத்தி பிறர் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

3. உங்கள் பெயரில் ஒரு பகுதி, பிறந்த நாள், பான் கார்டு எண் அல்லது உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் மேற்படி விஷயங்களை பாஸ்வேர்டில் அமைக்க வேண்டாம்.

4. சொற்களைப் பின்புறமாக அமைத்தல் (Password Drowssap  / ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து அமைத்தல் (Computer Cmuer)  போன்ற வழிகளும் கூடாது. பொதுவாக மக்கள் தவறிழைக்கும் சொற்களையும் (Indhia, Telifon)  பயன்படுத்தக் கூடாது. சிலர் வேண்டுமென்றே சொல்லக் கூசும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் இன்னொரு நாளில் நம் குழந்தைகளிடம் பாஸ்வேர்ட் என்ன என்று சொல்ல முடியாது.

5. ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. இமெயில் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, சில குறிப்பிட்ட தளங்களில் நுழைய வேறு என வெவ்வேறு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும்.

6. ஆன்லைனில் உங்கள் பாஸ்வேர்ட்களை எல்லாம் ஸ்டோர் செய்து வைத்தல் கூடாது.

7. பாஸ்வேர்ட்களை வேற்று நபர்களிடம் சொல்லவே கூடாது.

8. பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திருந்தால் அவற்றை மற்றவர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். நமக்கு உற்றவர்கள் வேறு நபர்களிடம் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பாஸ்வேர்டை வெளியிடுவதும் கூடாது.

9. இமெயிலில் அல்லது இமெயில் வழியாக வந்துள்ள படிவங்களில் பாஸ்வேர்டை டைப் செய்து அனுப்புவது கூடவே கூடாது.

10. பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட் 14 கேரக்டர்களில் அமைந்து மிகவும் ஸ்ட்ராங்காக யாரும் அணுக முடியாதபடி இருந்துவிட்டால் ஓர் ஆண்டு வரை கூட மாற்றாமல் வைத்திருக்கலாம்.

11. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இன்டர்நெட் மையங்கள், சைபர் கபேக்கள், பகிர்ந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், கருத்தரங்குகளில் தரப்படும் கம்ப்யூட்டர்கள், விமான மற்றும் இரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் இமெயில் பார்ப்பது, பேங்க் பேலன்ஸ் கையாள்வது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

12. எப்படிப்பட்ட பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தினாலும் வல்லவனுக்கு வல்லவனான சில திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உடனே சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற ஆன்லைன் வர்த்தக மையங்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டில் நீங்களாக தெரியப்படுத்தும் வரை வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லுங்கள். உடனே பாஸ்வேர்டை மாற்றும் வழிகளை மேற்கொள்ளுங்கள். ஏதேனும் திருடு நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே அதற்கான காவல்துறை நிலையங்களில் முறையாகத் தெரிவித்து நடவடிக்க எடுக்கச் செய்யுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத்தான் பாதகமாக அமைந்திடும்

தேடு பொறிகளில் கூகிளை முந்திக்கொண்டு மற்றொரு SEARCH ENGINE

ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது..


மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்' என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.

அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.
18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.

தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.

தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.

காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.

நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.

கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.

புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம்.

ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான "பின்கூல்' என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார்.

பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு.

(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?


நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப் கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.


டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.

2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம். இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது.

மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம். பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.

5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்

இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாறுவது எப்படி?


Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis5BLBIHjOVZ9nQXG1-ojKyzv37_05z1ZI88ynQovdwqwlRmi6LKqYwGCA5sr_5EZ6sJLz80wIVidnGOrRNC6-43KYdam_tQtvCUVcFLvEuV7XABeqPEj6mzpSVGqi2bVytwuOVy97dhnM/s400/image.jpg

நீண்ட இடைவெளியின் பின் இப்பதிவை இடுகின்றேன்.....

இப்பதிவானது இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி அலசுகின்றது. இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல.

இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு.

முதலாவது,
இரண்டு கணனிகளிலும் நெட்வர்க் கார்ட் (Network Card) இருக்க வேண்டும்.
மற்றையது,
இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்.

இரண்டு கணணிகளுக்கிடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக இரண்டு கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன் படுத்தப்படுகிறது.. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க) வழமையான ஈதர்நெற் (Ethernet) கேபிலிலிருந்து வேறுபட்டது.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPmKK4RpwXs_qSnM5zrYVSci0wErVT8zkesJwoquGOke-Rt1VDVvwlKibbds6iIumv6qhQxE3SI1hneMP2-DhOVusc5_NoTT80h1yJmypbquuXLH4PBje4vtxs6SS6WbQ9bkknsef40oiL/s400/crossovercable.gifDescription: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO0AK6DXDz0GjKEEUB_f7zJ1dO-yjnIexFY1Yt3CcC5sKauS06OcNp_ztVCqScPAiK5euTt6HpJsvKX0TTf9MxM9MVNuwMnYGWkT_hIDMaFI1PYK1wxnben9AjXOFGmFpHn2oc1e1nfzok/s400/use+for+all+crossover+cables.jpgDescription: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjybUA-k30drHhsrrkj5D6HuxA5OgfbWgMRZ1ZtpNhOQt6nQl3jVvipW9WHJ_NLnFRgkkaYY4mrnG9LAx7gapZOGNWx8_Kl_0c9klpmURB8cgU6pSmfSRuTSS2GFHiGfecKFVOUaaepB7JO/s400/images.jpg
Cross-Over கேபில்

இரண்டு கணினிகளையும் cross-over கேபிலால் இணைத்த பின், அடுத்ததாக இரண்டு கணனிகளிலும் ஐபி முகவரிகளை (IP address) மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு முன், எவ்வாறு ஐபி முகவரிகளை விண்டோஸ் எக்ஸ்பீ (Windows XP) இயங்கு தளத்தில் மாற்றியமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பீ (Windows XP) கணனியில்,

படி 1:
Start
பின் Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPIwBdvXHLQPbCpphqoAg-76RpE0UIE5bYpts0xIsGRL9t2jRzrww1KEoDHh-4A19WyOaoA3xthFh9Y0qghN2c3IbmNFNlKQtSNXVscr2VsLKBOtO5smETuA73mZabVnXSkIS16k0ogC1T/s400/ftp1.pngபடி 2:
அதன் பின், புதிதாக வந்திருக்கும் விண்டோ பின்வருமாறு காணப்படும்.
  • Local Area Network என்பதன் கீழ் உள்ள நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிற விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் இருக்கும்.
(அதாவது இன்னும் இரண்டு கணினிகளும் தொடர்பாடலை மேற் கொள்ள தயாராயில்லை என்பதே ஆகும்).

படி 3:
அடுத்து அந்த மஞ்சள் நிற ஐக்கன் மீது ரைட் க்ளிக் (Right Click) செய்து, புதிதாக வரும் மெனுவிலிருந்து Properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General ரப் இன் (Tab) கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனையும் க்ளிக் செய்யுங்கள்.

அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwm8IPtgOO5S8zqYPh-mQcfSeq4OpXqSINLJjejlawwyVQU6fQNvLoGQNxoHzg4WN-HO57ntKZcl96Pf6NxhCXldEBkUMT2uE5wN2bBfov3tUymG80tx0uYyFwzXJLjlt6_DHdc9PHHiN0/s400/lan-properties.jpg
படி 4:

புதிதாக தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ளவாறு அதன் ஐபி முகவரியை மாற்றியமையுங்கள்.

முதலாவது கணனியில் (கணனி-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும்,
இரண்டாவது கணனியில் (கணனி-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்க.

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8lN6Ag_1UhV6nE8I-cwXDEZNwU0abNFpBpKxq5cybnCR3cQFnrqpZCkAMfxbOTIy32g3RQNt2xRaCZ_OdShc7Vq0Isy7OSS0DfwFPfp7Mh67tedO2TfHSu9-a9ezOYFiM8dKYHEIZ25Mp/s400/tcp-properties.jpg
இப்போது உங்கள் இரண்டு கணனிகளையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். நீங்கள் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் செய்தது சரி தானா? என்பதை உறுதி செய்து கொள்ள பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.

படி 1:
  • Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்க.
  • புதிதாக வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் மஞ்சள் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம் அல்லது ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருக்கும்.
கவனிக்க:
நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கன் மேல் பூட்டு வடிவில் இருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. ஏனென்றால், இது Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதை சரி செய்ய,
இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள். இது Firewall இயக்க நிலையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இரண்டு கணணிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் கணினி-1 இன் ஐபி முகவரிகளை (IP address) பெற,
  • Start → Run ஐத் தெரிவு செய்யுங்கள். அதன் பின் தோன்றும் விண்டோவில் "cmd"என type செய்யுங்கள்.
  • புதிதாக தோன்றும் விண்டோவில் "ipconfig" என type செய்து enter கீயை அழுத்துங்கள்.
  • அந்த விண்டோவில் ஐபி முகவரிகள் பற்றிய விபரம் பின்வருமாறு தெரியும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0 (
இது வேறுபடும்)
Default Gateway: 192.168.0.1 (
இது வேறுபடும்)
Preferred DNS Server: 192.168.0.1 (
இது வேறுபடும்)

இரண்டாவது கணனியிலும் கீழே உள்ளவாறு ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள் (இதற்கும் மேலுள்ள முறையைப் பின்பற்றுக).

IP Address: 192.168.0.2

Subnet Mask: 255.255.255.0

Default Gateway: 192.168.0.1

Preferred DNS Server: 192.168.0.1