புதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போது நாம் உருவாக்கிய தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா? தேவையான இடங்களின் சரியான செய்தியை கொடுத்திருக்கிறோமோ அத்தனை வயதினரும் படிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது
இணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சோதித்து கொள்ள வேண்டும் நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது பயன்படுத்தப்போகும் வார்த்தையை சோதிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.read-able.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இணையதளத்தை
சோதிக்க வேண்டும் என்றால் Test by URL என்ற மெனுவை சொடுக்கி
வரும் Web Address என்ற கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை
கொடுத்து Calculate Readability என்ற பொத்தானை சொடுக்கினால்
போதும் அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் முழுமையாக
சோதிக்கப்பட்டு நமக்கு முடிவுகள் காட்டப்படும். எத்தனை வயதுள்ள
குழந்தைகள் உங்கள் தளத்தை படிக்கும் படி இருக்கிறது என்றும்
ஒவ்வொன்றும் விரிவாக நமக்கு காட்டப்படும். இங்கு வரும் பச்சை
நிறம் அனைத்து வயதினமும் படிக்கும் வண்ணம் சிறந்த தளமாக
இருக்கிறது என்பதை காட்டவும், சிகப்பு வண்ணம் வார்த்தைகள்
அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்படி இல்லை என்பதை
காட்டுவதற்காகவும் உள்ளது. இணையதளம் உருவாக்கும் முன்
வார்த்தைகளை சோதிக்க விரும்புபவர்கள் Test by Direct Input
என்ற மெனுவை சொடுக்கி நேரடியாக வார்த்தைகளை கொடுத்து
சோதித்துக்கொள்ளலாம். Winmani.wordpress.com என்ற நம்
தளத்தை கொடுத்து சோதித்து பார்த்தோம் முழுவதும் பச்சையாக
காட்டியதை படம் 2 காட்டுகிறது. இணையதளம் உருவாக்க
விரும்புபவர்கள் முதல் இணையதளம் வைத்திருக்கும் அனைவரும்
தங்கள் தளத்தை சோதித்துக்கொள்ள இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.
|
No comments:
Post a Comment