Wednesday, December 15, 2010

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்





நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/

8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/

7. DL 4 ALL-   RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.

6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/

5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/

4. FILE HIPPO -  RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/

3. SOFTPEDIA -  RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/

2. BROTHER SOFT -  RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/

1. CNET  -  RANK 159 
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com

இந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும்.

அதிக அளவுடைய பைல்களை ஈ-மெயிலுக்கு அனுப்ப- Zeta Uploader

ஈ-மெயில் மூலமாக நாம் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும் உதாரணமாக ஜிமெயில் மூலமாக 25MB அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் சென்றால் தனித்தனி ஈ-மெயிலாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் நாம் கட்டண சேவையின் மூலமாக மட்டுமே அதிக அளவுடைய பைல்களை அனுப்ப முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். மேலும் நாம் அனுப்ப நினைக்கும் பைலானது முழுமையாக சேர வாய்ப்பு இருக்காது, சில நேரங்களில் ஹேக்கர்களால் திருடபடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல பல பிரச்சினைகள் உள்ளது.

நம்மிடம் உள்ள அதிக அளவுடைய பைலினை நம்மால் இணையம் மூலமாக அனுப்ப இயலாது, அதுபோன்ற சூழ்நிலையில் ஏதாவது ஒரு தளத்தில் நம்முடைய டாக்குமெண்ட்டையோ அல்லது மென்பொருளையோ பதிவேற்றி தரவிறக்க லிங் கொடுக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றும். அது போன்ற சூழ்நிலையில் நாம் இணையத்தில் எதாவது ஒரு தளத்தை தேடி பிடித்து பார்த்தால் இந்த சேவை குறிப்பிட்ட அளவு மட்டுமே, முழுமையாக பெற பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி வரும். இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் சமாளிக்கும் வன்னமாக உள்ளதுதான் Zeta Uploader என்னும் மென்பொருள ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவி கொள்ளவும். பின் நீங்கள் அனுப்ப நினைக்கு பைலினை தேர்வு செய்யவும், பின் ஈ-மெயில் முகவரியினை உள்ளிடவும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈ-மெயில் முகவரியினை குறிப்பிட கமா , குறிப்பிடவும், பின் எதைப்பற்றி குறிப்பிட நினைக்கிறீர்களோ அதனை Message என்ற பாக்சில் குறிப்பிடவும். பின் upload now பட்டனை அழுத்தவும் சிறிது நேரத்தில் உங்களுடைய பைலானது நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஈ-மெயில் மூலமாக அனுப்பபடும், அந்த லிங்கினை கிளிக் செய்து பைலை பதிவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பு: அவசரமான சூழ்நிலையில் மட்டும் இந்த மென்பொருளின் உதவியை நாட வேண்டும். ஏனெனில் உங்களுடைய கோப்பானது திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

கூகுளின் இன்னொரு சூப்பர் வசதி


கம்ப்யுட்டர் உலகில் கூகுள் பற்றி தெரியாதவர் யாரும் இருக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத  உண்மை. அப்படி உள்ள கூகுள் நிறுவனம் தினம் தினம் புது புது வசதிகளை வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டுள்ளது. அப்படி கொடுத்துள்ள வசதிகளில் சூடான வசதி இன்று நாம் காணபோகிறோம்.  

கூகுள் நிறுவனம் தேடு பொறியில் படங்களை மட்டும் தேட Image Search என்று ஒரு தனி வசதி இருப்பது அனிவரும் அறிந்ததே. நாம் நமக்கு தேவையான படங்களை Google Image Search மூலம் நாம் தேடி பயன்படுத்தி கொள்ளலாம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்படி தேடும்போது சில படங்கள் மட்டும் முதல் பக்கத்தில் இருக்கும் நாம் மேலும் படங்களை பார்க்க வேண்டுமானால் 2,3,4...... பட்டன்களை அழுத்தினால் அந்தந்த பக்கங்கள் திறக்கும் அப்படி திறக்கும் போது ஒவ்வொரு பக்கமும் லோடு ஆகி வரும் நம் நேரம் விரையம் ஆகும் இதுவுமில்லாமல் எந்த பக்கத்தில் எந்த படம் இருக்கிறது என்பதை யாராலும் அறிய முடியாது ஓபன் செய்தால் மட்டுமே அறிய முடியும்.


இந்த குறைகளை எல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட Google Image Serch Engine வெளியிட்டு உள்ளது. இதில் உள்ள வசதிகள் ஏராளம் சில உங்கள் பார்வைக்கு.

பயன்கள்:

இப்பொழுது நாம் தேடுகின்ற படம் ஒருபக்கத்தில் இல்லையென்றால் இன்னொரு பக்கத்தில் இருக்கிறதா என்று நாம் தேடி அலைய வேண்டியதில்லை. அனைத்து பக்கங்களில் உள்ள படங்களும் நமக்கு தெரியும். இதன் மூலம் நமக்கு தேவையான படத்தை உடனே save செய்து கொள்ளலாம். நாம் ஒவ்வொரு பக்கம் லோடு ஆகி வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை இதன் மூலம் நம் பொன்னான நேரம் மிச்சமாகும்.

 நாம் நமக்கு தேவையான அளவுள்ள படங்களை மட்டும் தேடி கொள்ளலாம். 


நமக்கு தேவையான படத்தின் மேல் கர்சரை நகர்த்தினால் அந்த படத்தின் preview நமக்கு தெரியும்.

 எந்த நிறத்தில் நமக்கு படம் வேண்டுமோ அந்த நிறங்களில் மட்டும் தேடி கொள்ளலாம்(இந்த வசதி முன்பே இருந்தது)


  • show sizes என்பதை  கிளிக் செய்தால்  அந்தந்த படத்தின் அளவுகள் அந்த படங்களின் கீழ் தெரியும் வசதி. 
இன்னும் ஏராளமான வசதிகள் உள்ளன உபயோகித்து பாருங்கள் http://www.google.com/imghp?hl=en

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

 நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
பயன்கள்:   
  •  உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
  • வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
  • வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
  • வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
  • இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
  • அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து  கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.


அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.


இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts

பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட வேண்டி இருக்கும். சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள காண்டக்ட் லிஸ்ட் ஓட்டு மொத்தமாக டெலீட் செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்து விடலாம். ஆனால் நீங்கள் டெலீட் செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.

* உங்கள் ஜிமெயிலில் www.gmail.com அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து Contact என்பதை க்ளிக் செய்யுங்கள்.


* படத்தில் காட்டியுள்ளதை போல Contacts என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
* அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் More Actions என்பதை க்ளிக் செய்யுங்கள்.

* அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

* இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் டெலீட் செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்ப கொண்டு வரமுடியும்
* நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.


* நீங்கள் வேண்டுமென்றே உங்கள் காண்டக்ட் லிஸ்ட் அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம் (என்ன காசா பணமா).

டுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி
நாம் சில நம் இணைய பக்கங்களை Screen shot எடுக்க சில மென்பொருளோ அல்லது நம்முடைய கீபோர்டில் உள்ள Screenshot வசதியின் மூலமோ நாம் பயன்படுத்துகிறோம். அந்த வரிசையில் மிகவும் எளிமையான மிகவும் பயனுள்ள குரோம் நீட்சியை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த படத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் இந்த நீட்சியின் மூலம் சுலபமாக செய்யலாம்.

வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்

விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு
ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி
தான் இந்த பதிவு.

சிறப்பு அம்சம்:
* பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.

* அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.

குறைகள் :
* ஹார்டுவேர் – பயன்பாட்டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர்
வேகமும் தேவைப்படுகிறது இது மிக அதிகம்.
* (Home,Premium,Professionla,Enterprise,Ultimate)
என்ற ஒவ்வொன்றிலும் சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.
* 64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெறமுடிகிறது.
* போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட்,
மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.
* எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.

நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!

(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்'களுக்காக)

                        உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ...  அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...  'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான  விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு,  தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ...போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது  தாமதமாக வர...(!?)  அல்லது  வந்த வலி குறைய...  வேண்டுமானால்,  பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..!



(Courtesy:- Safety Letter, Saline Water Conversion Corporation, Saudi Arabia.)

1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.

2#      திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.

3#   சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )

4#      உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின்  விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள )  ஏதாவது ஒரு நிலையான  கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

5# விசைப்பலகை,  நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும்  அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும். 

6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

7#  முழங்கை கோணம் தோராயமாக  90°  இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

8#     'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.

9#   முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி  சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.

10#     ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால்,  உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2  நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது.

கூகுள் கணினி பற்றிய அடிப்படையை நம் பெற்றோருக்கு சொல்லிக்கொடுக்கிறது

கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் தெரியாமல் இருக்கும் நம்
பெற்றோருக்கு  கணினிப் பற்றிய தகவல்களை வீடியோவுடன் புரிய
வைக்க கூகுள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

புதுமைகள் செய்வதில் தங்களுக்குள்ளே போட்டி போட்டு கொள்ளும்
கூகுள் நிறுவனத்தில் இருந்து பெற்றொருக்கு கணினி பற்றிய
அடிப்படை பாடத்தை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு
தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கூகுளின் இருந்து வெளிவந்த
தளம் என்ற வார்த்தையை கேட்டதுமே கண்ணை மூடிக்கொண்டு
பல பேர் இதில் சேர்ந்துள்ளனர்.

இணையதள முகவரி : http://www.teachparentstech.org
பெற்றொருக்கு கணினி பற்றி சொல்லிக்கொடுக்க கூட நேரம் இல்லையே
என்று சொல்லும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும். பெற்றொருக்கு இருக்கும் அடிப்படை கேள்விகளில் இருந்து
copy & paste , adjust the time on your clock , change your
desktop background , change your wallpaper (PC) , make text bigger
(or smaller) , take a screenshot, change your screensaver (Mac) ,
change your screensaver (PC)  இணையதளம், மீடியா வரை அனைத்து
தகவல்களையும் வீடியோவுடன் சொல்லி எளிதாக புரிய வைக்கிறது.
வெளிவந்த சில நாட்களில் 13723 பேர் இந்ததளத்தின் மூலம் பயன்
அடைந்துள்ளனர் நாமும் நம் பெற்றொருக்கு இந்ததளத்தை அறிமுகப்
படுத்தி அவர்களுக்கு கணினி அறிவை வளர்ப்போம்.

சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி

சோசியல் நெட்வொர்க்-ல் பிரபலமான டிவிட்டர், FriendFeed, Flickr,
Yahoo News மற்றும் Blog comments (பின்னோட்டம்) போன்றவற்றை
எளிதாக சில நொடியில் பார்க்கின்றனர் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
நினைத்ததை அப்படியே சொல்லுங்கள் என்று அனைவரின் மனதிலும்
இருக்கும் இரகசியங்களை வெளிகொண்டு வருவதற்காகவும் நம்
குண நலன் என்ன என்பதை அடுத்தவர்கள் தெரிந்து கொண்டு
அதற்கு தகுந்தபடி நம்மை ஏமாற்றுவதும் சோசியல் நெட்வொர்க்
என்று சொல்லக்கூடிய இணையதளங்களில் பெரும்பாலும் நடந்து
கொண்டு இருக்கிறது. எப்படி நாம் கொடுக்கும் டிவிட்டர் செய்தி ,
பின்னோட்டம் போன்றவற்றை எளிதாக தேடி எடுக்கின்றனர். இதற்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://spy.appspot.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள்  எந்த வார்த்தை வேண்டுமானாலும் கொடுத்து
Spy என்ற பொத்தானை அழுத்தி தேடலாம் அடுத்து வரும் திரையில்
நாம் கொடுத்த வார்த்தை எந்த சோசியல் மீடியாக்களில் எல்லாம்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எளிதாக அடுத்து வரும்
திரையில் காட்ட்டும். இதைப்போல் பல தளங்கள் நாம் சோசியல்
மீடியாக்களில் பேசும் உரையாடலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
முக்கியம் இல்லாத செய்திகளையும் வாழ்த்துக்களையும் மட்டுமே
சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். கூடவே
தங்கள் சுய விபரங்களை எக்காராணம் கொண்டு பகிர்ந்து
கொள்ளாமால் இருந்தால் இதைப்போன்ற தளங்களைக் கண்டு
அஞ்ச வேண்டியதில்லை.

அனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்

இலவசமாக கிடைப்பது டிப்ஸ் தான் என்று பல பேர் கூறினாலும் அந்த
டிப்ஸ் கூட எங்கு சென்று தேடுவது , எங்கு முழுமையாக கிடைக்கும்,
டிப்ஸ் மட்டுமல்ல ட்ரிக்ஸ்-ம் கூட , அனைத்து துறையில்
இருப்பவர்களுக்கும் டிப்ஸ் மற்றும்  ட்ரிக்ஸ் சொல்லிக் கொடுக்க ஒரு
தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகுளில் சென்று தேடினால் கிடைக்காதது ஏதும் இல்லை என்று
சொல்லும் அளவிற்கு வந்தாலும் சில நேரங்களில் நாம் தேடும்
தகவல்கள் கிடைப்பதில்லை, உதாரணமாக பின்வரும் துறைகளில்
டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தேட வேண்டும் என்று வைத்துக்
கொள்வோம்.
Autos,Business,Careers & work, Computers & internet,
Education,Electronics , Family,Fashion, style & personal, care,Fitness,
Food & drink, Gambling, Health,Hobbies & games, Home & garden,
Legal, Music & dance,Outdoor,Parenting,Personal finance,Pets,
Self defense,Self improvement,Shopping,Socializing,Special events,
Sports,Travel,Video Games,
சரியான தேடல் முடிவு கிடைப்பதில்லை ,அப்படி கிடைத்தாலும்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளமாக சென்று தான் படிக்க வேண்டி
இருக்கிறது. டிப்ஸ் என்று சொன்னவுடன் நாம் கேட்பது இதை
யாரவது  இதற்கு முன் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று
இந்த கேள்விக்கும் பதிலாக அனுபவத்தில் கிடைக்கும் தகவல்களை
மட்டுமே பகிர்ந்து கொள்கிறது ஒரு தளம். யார் வேண்டுமானாலும்
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி தங்களுக்கு தெரிந்த டிப்ஸ்
மற்றும் ட்ரிக்ஸ்-ஐ பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.tipsbase.com
எந்தத்துறையில் இருந்தாலும் அனைவருக்கும் பயன்தரும் வகையில்
இந்ததளத்தில் பல டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் கிடைக்கிறது. டிப்ஸ் மற்றும்
ட்ரிக்ஸ் பற்றி தேடுபவர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

Google க்கு எமனாகும் FaceBook

இணைய உலக சூப்பர் ஸ்டார் கூகிள் மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக், இந்த இரண்டு இணையதளங்கள் சண்டை தான் இப்போதைய சூடான செய்தி. ஆம் சமீபகாலமாக அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக் மேல் ஒரு கண்ணாகவே இருந்து வந்தது கூகிள். ஃபேஸ்புக்கின் வளர்ச்சியை
கண்டு சற்று கடுப்பாகவே இருந்து வருகிறது கூகிள். போத குறைக்கு கூகிளில் வேலை செய்து வந்த சில முன்னணி மற்றும் பிரபல பணியாளர்களை ஃபேஸ்புக் தங்கள் வசமாக இழுத்துவிட்டனர். ஃபேஸ்புக்கின் அதித வளர்ச்சி தான் கூகிளின் ஒர்குட் மற்றும் பஷ் (buzz) போன்ற சேவைகளின் தோல்விக்கு காரணம் என எண்ணுவதால் கூகிளுக்கு ஃபேஸ்புக்கிற்க்கு ஜென்ம
எதிரி போல் இருக்கிறது.

தனது பணியாளர்கள் ஃபேஸ்புக்கிற்க்கு செல்வதை தடுப்பதற்க்காக கூகிள் தனது பணியாளர்களுக்கு சில சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் உலகம் முழுவதுமுள்ள பணியாளர்களுக்கு (சுமார் 23000 பேர்) 10% ஊதியத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வர இருக்கிறது. இதை கூகிளின்
சிப் எக்ஸிகுடிவ் Eric schmidt அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வை ரகசியமாக வைக்க எண்ணிய கூகிளிற்க்கு அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று இந்த அறிவிப்பை, Eric schmidt ன் இமெயில் காப்பியுடன் வெளியிட்டது. அனைத்திற்கும் காரணம் ஃபேஸ்புக் தான் என்ற கடுப்பில் கூகிள், ஃபேஸ்புக்கிற்க்கான தனது
தாக்குதலை தொடங்க ஆரம்பித்திருகிறது. முதல் தாக்குதலாக ஃபேஸ்புக் கூகிளின் ஜிமெயில் கணக்குகளை தரவிறக்கும் சேவையை (Gmail contact API) தடை செய்தது. இதற்கு பதிலாக ஃபேஸ்புக் வேறு வழியாக ஜிமெயில் கணக்குகளை தரவிறக்க வழி செய்தது. அதற்கும் இப்பொழுது கூகிள் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர் அவர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து நண்பர்களின் கணக்குகளை ஃபேஸ்புக்கிற்க்கு எடுக்கும் போது, அவர்க்களுக்கு கீழே உள்ள பக்கம் தெரிகிறது. இதன் மூலம் ஃபேஸ்புக்கிற்க்கு கிடைக்க இருக்கும் புதிய பயனாளர்கள் குறைய கூடும் என கூகிள் எதிர்ப்பார்க்கிறது.

மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்

நாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.

எந்த ஒரு வேலை செய்தாலும் பணம் கிடைக்க கொஞ்ச நாளாவது ஆகும்
நேர்வழியில் உங்கள் கற்பனை திறன் மூலம் கோடி கோடியாக பணம்
அள்ளலாம். பிக்காஸோ என்றால் நமக்கு தெரிந்தது அவர் ஒரு ஒவியர்
பல காலங்கள் வரை அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று அவர்
ஒவியம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது என்றால்
அது மிகையாகாது.அவரின் ஒவியம் $100 நூறு மில்லியன் டாலர்
விலைக்கு சென்றது பலருக்கும் தெரியும்.இவரைப் போல் நாமும்
ஒவியத்தால் சம்பாதிக்கலாம்.எனக்கு ஒவியம் வரையத்தெரியாது
என்கிறீர்களா ?  எனக்கு ஒவியம் என்றால் என்னவென்றே தெரியாது
என்கிறிர்களா ? கவலையை விடுங்கள்.உங்களுக்காகவே ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதளமுகவரி: http://www.mrpicassohead.com

படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று Play என்ற பட்டனை அழுத்தி
படம் வரைய ஆரம்பிக்கலாம் அடுத்து தோன்றும் பக்கத்தில் எந்த
முகஅமைப்பு வேண்டுமோ அந்த முகஅமைப்பை தேர்வு செய்து
இழுத்து வரைபலகையில் விடவும். வடிவத்தை பெரியதாக்க
”Scale up” என்பதையும் சிறியதாக்க ”Scale down ”  என்பதையும்
வடிவத்தை திருப்ப ” Flip ” என்பதையும் இதைத் தவிர Rotate
மற்றும் Delete வசதியும் உள்ளது.  மூக்கு , கண் ,வாய் ,முடி
என்று உங்கள் விருப்பபடி எதை வேண்டுமானாலும் தேர்வு
செய்து வரையலாம். வரைந்து முடித்த பின் Save என்ற பட்டனை
அழுத்தி சேமிக்கலாம் படம் 2- ல் காட்டப்பட்டுள்ளது.

படம் 2
இமெயில் மூலம் உங்கள் நண்பருக்கு அனுப்பலாம். ஏதோ ஒரு
விளம்பரத்தை தினசரி பல மணி நேரம் கிளிக் செய்து பணம்
சம்பாதிக்கலாம் என்று என் சகோதரர்களை ஏமாற்றும் கும்பலிடம்
இருந்து அவர்களை பிரித்து சில நிமிடங்கள் மட்டுமே செலவு
செய்து உங்கள் கற்பனையால் ஒரு ஒவியத்தை இங்கு தீட்டி
அதை பிரிண்ட் செய்து ஒவியகண்காட்சியில் வையுங்கள்.
இலட்ச ரூபாய்க்கு கூடபோகலாம். உதாரணமாக நாம் வரைந்த
ஒவியம் படம் 1- ல் காட்டப்பட்டுள்ளது.

கூகுல் ஒஎஸ் வெளிவரும் தேதி மற்றும் வெளிவராத பிரத்யேக தகவல்கள்’


கூகுலின் மற்றுமொரு அதிசியம் தான் கூகுல் ஆப்ரேட்டிங் சிஸ்டம்
அனைத்து இதர சேவையையும் இண்டெர்நெட்டில் இலவசமாக வழங்க
காத்திருக்கிறது. இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் முதலில் நெட்புக்
கம்யூட்டரில் மட்டும் வர இருக்கிறது. கூகுள் மேப்ஸ்,ஜிமெயில்,
கூகுள் டாக்ஸ், கூகுள் வாய்ஸ் என்று அனைத்தும் இதனுடன் சேர்ந்து
வர இருக்கிறது. இதன் விலை $ 300 டாலரிலிருந்து தொடங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் ஒஎஸ் கான்பிகரேசன் பற்றிய வெளிவராத சில தகவல்கள்
* 10.1 inch TFT HD ready, multi touch screen (1280×720)

*  2GB RAM
*  NVIDIA Tegra 2 chipset
*  Wi-Fi
*  ARM CPU (better performance and uses less power than Atom)
*  64GB SSD
*   3G
*   3.5mm audio jack
*   USB ports
*   Multi-card reader
*   4-6 cell batter with 8-12 hours of battery life
*    Webcam
இந்த டிசம்பரில் மக்களின் கையில் தவழும்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56





அறிந்ததை சோதித்துப் பாருங்கள்-டெலிபதி

ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.

ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.

அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.

ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ”ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது” என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
படம் 1
http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.
படம் 2
உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.
படம் 3
அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.
படம் 4
அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.
படம் 5
இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.
படம் 6
புத்தாண்டின் இந்த முதல் பதிவு கண்டிப்பாக நமக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.

புதிய ஆத்திசூடி


அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு
ஆலய வாசலில் தாவணி பாரு
இங்கிலீஷிலே எப்பவும் பேசு
ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு
உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி
ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி
எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு
ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை
ஐ லவ் யூவென சொல்லிப் பழகு
ஒவ்வொருநாளும் சட்டை மாற்று!
ஓஹோவென்று ஃபிகரைப் புகழ்
ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள்
அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை
கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
காசில்லார்க்குக் காதலி இல்லை
கிண்டல் செய்வது மாணவர்க்கழகு
கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு
குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு
கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு
கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை
கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு
கைபேசி மாடலை அடிக்கடி மாற்று
கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசு
கோபம் வந்தால் வீட்டிலே காட்டு
கௌபாய் போல ஊரை சுற்று
சத்யம் தியேட்டர் சாலவும் நன்று
சாகிறவரைக்கும் மொக்கை போடு
சிகரெட் பிடித்தால் மறைந்து ஊது
சீறும் பல்சரை தினசரி ஓட்டு
சும்மாயிருந்தால் கவிதை எழுது
சூடும் சொரணையும் காதலர்க்கில்லை
செல்போன் ரிங்டோன் அடிக்கடி மாற்று
சேரும் நண்பர்கள் ஜேப்பைக் கவனி
சைட்டடிப்பதற்கு கூலிங்-கிளாஸ் போடு
சொட்டைத்தலையில் தொப்பியை அணி
சோதாநண்பர்கள் உடன்வரும் சனி
தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை
தாய் ரிமோட் எடுத்தால் நெடுந்தொடர் தொல்லை
திரைப்படப்பாட்டைத் தினசரி ஓது
தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
துட்டுள்ளவரை தான் உடன்வரும் நட்பு
தூக்கம் வரும்வரை எஃப்.எம்.கேளு
தெளிவுடையோரைத் தூர விலக்கு
தேடிப்போனால் பாட்டியும் முறைப்பாள்
தைத்ததை விடவும் ரெடிமேட் நன்று
தொலைந்த செல்போன் திரும்ப வராது
தோழனுடன்போய் ஜொள்ளுதல் தீது
நமீதா நாமம் நயம்பட உரை
நான்கில் ஒரு ஃபிகர் நிச்சயம் தேறும்
நித்தம் செல்லை டாப்-அப் பண்ணு
நீள எஸ்.எம்.எஸ். அனுப்புதல் தவிர்
நுரைவரும் பீரை வெயிலில் பருகு
நூல்விடாமல் ஃபிகர் கிடைக்காது
நெட்டை ஃபிகரும் ஒட்டடைக்கு உதவும்
நேரம் கிடைத்தால் பாடமும் படி
நையப்புடைப்பது அப்பா கடமை
நொண்டிச்சாக்கு தினசரி புகல்
நோட்டில்லேன்னா கேட்டுக்கு வெளியே!
படங்கள் தனியாய்ப் பார்ப்பது பாவம்
பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து
பில்லியன் சீட்டிற்கு ஃபிகரே பெருமை
பீஸைத் தின்றால் ஹால்-டிக்கெட் இல்லை
புத்தகம் இருப்பது ஃபோட்டோ வைக்க
பூசை என்பது தண்ணியடித்தல்
பெண்கள் காலேஜ் புண்ணியதீர்த்தம்
பேசிக்கொல்வது பெண்டிர் இயல்பு
பையனைப் போலே பல்லைக்காட்டாதே
பொதுவிடம் என்றால் முதுகில் கவனம் வை
போன செமஸ்டர் திரும்ப வராது
மன்மதக்குஞ்சு நீயென்றுணர்
மாமிகள் நட்பு ஆபத்துக்குதவும்
மிஞ்சும் பெண்ணிடம் கெஞ்சுதல் நன்று
மீட்டர் இல்லா ஆட்டோ காதல்
முற்பகல் காட்சியை முதல்நாள் பாரு
மூன்றாண்டில் டிகிரி முடிப்பவன் மேதை
மென்ட்டல் என்பவன் தினசரி படிப்பவன்
மேட்னி போகக் கூட்டணி சேரு
மையிடும் பெண்கள் பழையபஞ்சங்கம்
மொறைக்கிற பெண்ணைத் துரத்துதல் தவிர்
மோட்சம் அளிப்பது ஃபிகரின் புன்னகை
வண்டியிருப்பது ஊர் சுற்ற உதவும்
வாட்டமளிப்பது கோடை விடுமுறை
விடாமல் தொடரும் வித்தையில் தேறு!
வீட்டுக்குப் போனால் விழுந்திடும் உதை
உடான்ஸ் விடுகையில் கவனம் தேவை
ஊக்கம் தருவது ஓரக்கண் பார்வை
வெட்டிப்பொழுதில் வெளியே திரி
வேஸ்ட் எனப்படுவது ஃபிகர்களில் இல்லை
வைதிடும் பெண்ணைக் கைதொழுதிடு
ஒரு ஃபிகர் இருக்க மறு ஃபிகர் தவிர்
ட்டைவாய்நண்பனை ஒதுக்கிடல் நன்று

வலையுலகப் படைப்பாளிகள்


எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்திற்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு , அது பிரசுரமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால் அது நடக்காவிட்டால் , அந்தப் படைப்புகள் குப்பைக்கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்க வில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள். பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள். விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றை எல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவி இருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயனிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகி விட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் தெரியாதவர்களை படிப்பறிவில்லாதவர்கள் எனச் சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லா விட்டால் முகவரி இல்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்த வரை, வலைப்பூக்கள் தான் கருத்துகளைச் சொல்லும் படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுனர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களயும் வலைப்பூக்கள் நம்க்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைகுள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான் விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம். நாடு, இனம் மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போலவே பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிச்லகாரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல்விளக்கு, க.பாலாசி, நசரேயன் , நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள் நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக் கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேறகத் தகுந்த ஒன்று. வலைப்பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகள் வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள். அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட தொலைக்ட்சி விமர்சனங்கள், என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல் சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃப்ஹீமாஜஹான், நளாயினி, புதிய மாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி ப்ரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான், அபூர்வமான் படைப்புகளை பதிவிடுகின்றனர். தமிழ் இலக்கியங்களையும் மரபு வழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல் படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன். சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்த்க வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர் தொழில் நுட்பம் தொடர்பான் தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷணன், மாலன், ஞானி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதென்றால் வலைப்பூக்கள் ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீன பரிமானங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெறச் செய்ததில் வலைப்பதிவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் சில காலம் போனால் மரபு வழி ஊடகங்களுக்கு இணையாக , வலைப்பூக்கள் மாதிரியான இணைய வழி ஊடகங்களுக்கும் செல்வாக்கு கிடைத்துவிடும். இதை மரபு வ்ழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும் ஊடகங்களின் பரிமானம் மாறிக்கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக் கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயார்கிக் கொண்டிருக்கின்றன.

60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.

எந்த நாட்டைப் பற்றிய தகவல்கள் அறிய வேண்டும் , ஒவ்வொரு
தளமாக சென்று தேடவேண்டாம் அனைத்து நாட்டின் தகவல்களையும்
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விக்கிப்பீடியா மட்டுமல்ல அதைவிட பல அறிய தகவல்களையும், பல
வகையான Statistics ரிப்போர்ட்களையும், கூகுளில் சென்று தேடினாலும்
கிடைக்காத பல முக்கியமான தகவல்களையும் ஒரே இடத்தில் தந்து
நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://data.un.org
படம் 2
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
தகவல்களை அறிய வேண்டுமோ அந்த நாட்டின் பெயரைக் கொடுத்து
தேடவேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நாட்டின் மக்கள்
தொகை முதல் பல தரப்பட்ட தகவல்களையும் காட்டுகிறது.
இதைப்போல் தகவல்களை கொடுக்க பல தளங்கள் இருக்கிறது என்று
நாம் நினைத்தாலும் இந்ததளத்தின் சிறப்பு என்னவென்றால் 32 டேட்டா
பேஸ்களையும், 60 மில்லியன் ரெக்கார்ட்களையும் (32 databases -
60 million records) கொண்டு ஒரு தகவல் உலகமாகவே செயல்படுகிறது.
எந்த வகையான தகவல் வேண்டுமானலும் இந்ததளத்தில் சென்று
தேடலாம். அறிவைத் தேடும் பலருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக
இருக்கும்.

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.


நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக
ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup)  செய்து வைக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மொபைல் பேக்கப்
மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள்
கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்
அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்
துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல்
தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.mobyko.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்
கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும்
மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம்
மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என
அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால்
ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்பு இருக்கும் அனைத்து
இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில்
எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்
தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.