Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Tuesday, May 3, 2011

வீடியோ சாட்டிங் செய்ய எளிமையான சாப்ட்வேர்

இணைய உலகத்தில் வீடியோ சாட்டிங் செய்ய எத்தனையோ சாப்ட்வேர் இருந்தாலும் இந்த மென்பொருள் பயன்படுத்துபவருக்கு எளிமையாகவும், புதுமையாகவும் இருப்பதே இதன் சிறப்பு. 



நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் 

Sunday, May 1, 2011

வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்


இந்த Daniusoft Video Studio Express மென்பொருளானது $35.00 மதிப்புடையதாகும். இந்த மென்பொருளை வரும் 2011, பிப்ரவரி 16ம் தேதி வரை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் லைசன்ஸ் கீயுடன். நாம் இதுபோன்ற மென்பொருள்களை விலைக்கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவசமாக எந்த மென்பொருளும் கிடைக்காது அப்படியே இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இருக்காது. Daniusoft Video Studio Express மிகவும் சிறப்பான மென்பொருளாகும்.

மென்பொருளை இலவசமாக பெற சுட்டி


சுட்டியை கிளிக் செய்தவுடன் பேஸ்புக் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள், பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும் அதில் கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். 



இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மூலமாக வீடியோக்களை எளிமையாக எடிட் செய்ய முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad  ஆகிய சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும். மென்பொருளை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.

Friday, April 8, 2011

விபரீதமான நிர்வாண திருமணம் : வீடியோ இணைப்பு


பிரித்தானியர்களான கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள்.
இவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாமையால் திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதனால் உள்ளூர் வானொலி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி கொண்டதன் மூலம் அவர்கள் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் பங்கொண்ட போதும் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் என்பது சதாராணமல்ல முழு நிர்வாணக்கோலத்தில் இத்திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.
திருமண வைபவத்துக்கு குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்த போதும் இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய போது மிகவும் கூச்சமாக இருந்த சங்கடப்பட்டனர் இத் தம்பதியினர்.

உலகின் வியத்தகு தருணங்கள் வீடியோ இணைப்பு


வியக்க வைக்கும் தருணங்கள் . உங்களால் முடியாத செயல்கள் வீடியோவாக

ஆடைகளின்றி ஓர் நகர்வலம் : வீடியோ இணைப்பு


ஆசைகள் எத்தனையோ இருந்தாலும் இவர்களின் ஆசையோ கொஞ்சம் வில்லகம் பிடித்தாக இருக்கின்றது.
மெக்சிக்கோ நாட்டில் ஒரு குழுவினர் ஆடைகள் இன்றி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது ஆண், பெண் பாகுபாடின்றி தமது கோரிக்கையை முன் வைத்து  சைக்கிளில் நகர் வலம் வந்து உள்ளனர். இது ஒரு வேடிக்கையான விடயமல்லவா.
இதை நீங்களும் காண…


Cyclists get naked in a fleshy Mexican protest by itnquirky

2.08 செக்கனில் ஓர் உலக சாதனை : வீடியோ இணைப்பு


முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி.
சின்ன விடயமானாலும் அதனை வித்தியாசமாய் செய்தால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும். அந்த வகையில் இங்கு ஒரு சிறுவன் பார்ப்பதற்கு இலகுவாக இருந்தாலும் கடும் முயற்சி பயனால் உலக சாதனை படைத்துள்ளான். அப்படி என்ன செய்திட்டார் என்று கேட்கிறீர்களா?
10 வயதான மரிலாண்ட் என்னும் சிறுவன் வெறும் பிளாஸ்டிக் கப்புகளை வைத்து மிக விரைவாக பல்வேறு கோணங்களில் அடுங்கி சாதனை படைத்துள்ளான். அதாவது வெறும் 2.08 செக்கனில் இவ் உலக சாதனையை படைத்துள்ளான்.
இப்படி உங்களுக்குள்ளும் நிறைய திறமைகள் ஒழித்திருக்கும். நீங்கள் முயற்சி பண்ணி பாருங்கள் அதனை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் நிச்சயம் உங்கள் திறமைகளை பாரிஸ்தமிழ் வெளியுலகுக்கு காட்டும்.

Tuesday, April 5, 2011

வீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4


Picture






















திரைப்படங்களைக் கூட சிறிய சிப்களில் சுருக்கி எடுத்துச் செல்லும் வசதியை எம்பி4 என்னும் தொழில் நுட்பத்தில் அமைந்த கோப்புக்கள் நமக்குத் தருகின்றன. பாடல்களை எங்கும் எதிலும் எடுத்துச் சென்று கேட்பதற்கு நமக்கு எம்பி3 கோப்புக்கள் உதவுகின்றன. நக அளவு சிப்பில் நம்மால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிந்து எடுத்துச் சென்று கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஓடியோ கோப்புக்களை சுருக்கித் தரும் எம்பி3 என்ற தொழில் நுட்பம் தான் காரணம்.


ஆனால் வீடியோ கோப்புக்கள் எப்போதும் அளவு கூடியவையாகவே இருந்து வருகின்றன. இவற்றை எப்படி ஓடியோ கோப்புக்கள் போலவே சுருக்கிப் பதியலாம் என்ற ஆவலில் நமக்குக் கிடைத்த கோப்புக்களே எம்பி4 பைல்களாகும்.


எம்பி4 கோப்புக்கள் என்பவை சுருக்கப்பட்ட வீடியோ கோப்புக்களாகும். வீடியோ கோப்புக்கள் அளவில் பெரியவை. இதனால் எடுத்துச் செல்வதில் பிரச்னை மட்டுமின்றி அவற்றை இயக்குவதிலும் பிரச்னை ஏற்படு கிறது. ஆனால் எம்பி4 வடிவில் அவை சுருக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன.


எம்பி3 கோப்புக்கள(Files) போலவே எம்பி4 பைல்களும் சுருக்கப்பட்டவையாகும். இதனால் ஒளிக் காட்சி மற்றும் ஒலியின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.. எம்பி 4 என்பதனை ஆங்கிலத்தில் MPEG4 AVC என அழைக்கின்றனர். இதில் AVC என்பது Advanced Video Codingஎன்பதன் சுருக்கம்.



எம்பி 3 பிளேயர் இருப்பது போல எம்பி 4 பிளேயர் இருக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், இருக்கிறது. மற்ற மீடியா பிளேயர்களைப் போலவே அதுவும் செயல்படுகிறது. மேலும் எம்பி4 பிளேயரில் பழைய எம்பி3 பைல்களையும் மற்ற வீடியோ பைல்களையும் இயக்கலாம்..


எம்பி4 தொழில் நுட்பம் பல சிறப்புகளையும் சில உறுத்தல்களையும் கொண்டுள்ளது. சிறப்பு என்று கூறுகையில் அதன் தன்மைதான் முதலில் வருகிறது. எம்பி4, 1Mbps வேகத்தில் சிறந்த டிவிடி தன்மையுடன் கூடிய எம்பி4 டிவிடிக்களை உருவாக்க முடியும். இணைய(இன்டர்நெட்) இணைப்பு இருந்தால் இந்த வேகத்தில் இவற்றை பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்திட முடியும். ஒரு சி.டி யில் 150 இற்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை எம்பி4 வடிவில் சேமிக்கலாம் என்றால் நம்புவீர்களா?.


உறுத்தல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்பி4 தொழில் நுட்பத்திலேயே பல காப்புரிமை பிரச்சனைகள் இருக்கின்றன. இப்போது இணையத்திலேயே திருட்டுத்தனமாகக் பிரதி செய்யப்பட்ட திரைப்படங்கள் கிடைக்கின்றன. எம்பி4 தொழில் நுட்பம் பரவலாகும்போது விரைவாக பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதால் இந்த வகை திருட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பொறுத்திருந்துதான் இதனைப் பார்க்க வேண்டும்.

Monday, March 28, 2011

பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
  • வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த பக்கம் முழுவதும் லோட் ஆகும் வரை பொறுமை காக்கவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் திறக்கும் அதில் Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 
  • இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
  • இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

Sunday, March 27, 2011

பலபெண்களை காதல் வசப்படுத்தி ...போட்டோ,வீடியோ எடுத்து..(18+)



 
னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளைகிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!
தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.
பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.
''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!
''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.
''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.
அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.
சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.
அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண் களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!
தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.
''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.
'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!
இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.
ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.
ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.
ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.
இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.
'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்

பெண்களே அவதானம் ...... யாராக இருந்தாலும் போட்டொ,வீடியா எடுக்க அனுமதிக்காதீர்கள்..........இந்த பதிவையும் பாருங்கள்
பெண்களே! பெண்களே!உஷார்
Download As PDF

உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!


உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!
2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒ
ரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் இது. பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்.

பறக்கும் கொத்து பரோட்டா பார்த்ததுண்டா?? வீடியோ இணைப்பு!


பறக்கும் கொத்து பரோட்டா பார்த்ததுண்டா?? வீடியோ இணைப்பு!
வேலை தெரிஞ்சவன்தான் வேலை தெரியாதவன்தான் வீரமான வேலைக்காரன்….பாடல் ஞாபகம் வரும் இந்த கணொளியை பார்க்கும் போது. என்ன ஒரு உழைப்பு.. என்ன ஒரு திறமை… பறோட்டாவையே பறக்க விடும் இந்த வேலைக்காரருக்கு ஒரு சபாஷ்..!

விமானம் தயாரிப்பது எப்படி பார்க்கவேண்டுமா?? வீடியோ இணைப்பு!


விமானம் தயாரிப்பது எப்படி பார்க்கவேண்டுமா?? வீடியோ இணைப்பு!
விமான பயணம் என்றாலே நமக்கு அலாதியான இன்பம் அப்படி நாம் செல்லும் விமானம் தயாரிக்கும் வீடியோ வெறும் இரண்டு நிமிடத்தில் சிறப்பானதாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இது .FLY DUBAI என்ற விமான நிறுவனத்திற்கு போயிங் நிறுவனம் தயாரிக்கும் வீடியோவே  இது

வால் முளைத்த இளைஞன் (வீடியோ உள்ளே)


வால் முளைத்த இளைஞன் (வீடியோ உள்ளே)
மேற்கு  வங்கத்தின் Jalpaiguriமாவட்டத்தின் Alipurduarபிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரியும்Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத்துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு13 அங்குல(32.5Cm)நீளமும்,1அங்குல(2.5Cm)தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது

Thursday, March 24, 2011

இனயம் மாலிக் முஹம்மது அப்பா ஆண்டு விழா (வீடியோவில் காண)


updated  ഇനയം മാലിക് മുഹമ്മദ്‌ അപ്പാ ആണ്ടു വിഴാ  




ഇനയം മാലിക് മുഹമ്മദ്‌ അപ്പാ ആണ്ടു വിഴാ

വീഡിയോയില്‍ കാണുക 

கூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய


Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உலவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.

கூகுள்குரோம் உலவியினை கொண்டு  Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உலவியில் இணைக்க வேண்டும். 

ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி


ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உலவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உலவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இந்த வசதியின் மூலமாக Youtube தளத்தில் இருக்கும் வீடியோவை எளிமையாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த டவுண்லோட் ஆப்ஷன் மூலாமாக  பல்வேறு வீடியோ பைல் பார்மெட்டுக்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இவற்றில் குறிப்பிட்டுள்ள வீடியோ பைல் பார்மெட்டுக்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படியும் Youtube தளத்தில் உள்ள வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Tuesday, March 8, 2011

நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!



Super DVD Creator 9.8
Super DVD Creator 9.8 Build 20080323
 நண்பர்களே! நீங்களே வீடியோ டிவிடி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. சூப்பர் டிவிட் கிரியேட்டர். என்பதுதான் அது.
உதாரணமாக உங்களிடம் இது போன்ற வீடியோ கிளிப்ஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
VTS_01_1.VOB
VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
ஆனால் இப்படி இருந்தால் டிவிடி பிளேயரில் படம் ஓடாது. இது போன்ற பைல்களை நீங்கள் வெவ்வேறு டிவிடி-களில்  இருந்து காப்பி செய்து வைத்திருக்கலாம். இவை அனைத்தையும் ஒரே வீடியோ டிவிடி-யாக மாற்றி தர இம்மென்பொருள் உதவும்.
                                       இம்மென்பொருளை தரவிறக்க:

இது ஒரு டிவிடியை உருவாக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்கிறது
இப்போது எப்படி ஒரு டிவிடி-யை உருவாக்குவது என்று பார்ப்போம்...

01. இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கினால் கீழ்கண்ட விண்டோ வரும்.
 இதில் டிவிடி கம்பைலர் என்பதை தேர்வு செய்யுங்கள்




02. இரண்டாவதாக வரும் விண்டோவில் தோன்றும் படங்களை தேர்வு செய்து
பின்னனி படமாக மெனுவிற்கு அமைத்துக் கொள்ளலாம். இதில் உங்கள் விருப்பமான படங்களையும் பிரவுஸ் செய்து கொடுக்கலாம்


இதில் கீழ் இருக்கும் பிளஸ் குறியில் கிளிக் செய்யுங்கள்


 03. அடுத்து வரும் விண்டோவில் இப்படி பைல்களை தேர்வு செய்து ஒப்பன் என்று கொடுங்கள்.




04.தேர்வு செய்த பைல்கள் இப்படி ஒப்பன் ஆகி காட்சியளிக்கும்

இதில் நெக்ஸ்ட் என்பதை தேர்வு செய்யுங்கள் 


05.இந்த விண்டோவில் ஸ்டார்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்



06.ஸ்டார்ட்டை தேர்வு செய்த பிறகு இப்படி ஒரு மெசேஜ் வரும் நேரடியாக டிவிடி-ல் பதிவு செய்ய விரும்பினால் யெஸ் என்றும் தற்காலிகமாக போல்டரில் சேமிக்க விரும்பினால் நோ என்றும் கொடுங்கள்.பொதுவாக நோ என்று கொடுத்து போல்டரில் சேமித்து பிறகு டிவிடியில் நீரோ போன்ற மென்பொருள் மூலமாக பதிந்து கொள்வது நல்லது.





 07. சிறிது நேரம் காத்திருங்கள். அதாவது கீழ்கண்ட விண்டோ வரும் வரை. இந்த விண்டோ வந்த பிறகு ஸ்டார்ட் பட்டனுக்கு மேலா உள்ள விஓபி என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோ சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்யலாம். அல்லது அனைத்து விண்டோவையும் குளோஸ் (மூடி விட்டு)செய்து விட்டு நேரடியாக சேமிக்கப்பட்ட போல்டரை திறந்து கொள்ளலாம்




08. சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்தால் இப்படி இருக்கும்



நண்பர்களே! என்னால் முடிந்த வரை விளக்கி விட்டேன். உங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் கூறுங்கள். இதே போன்ற வேலைகளுக்கு இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன. எனக்கு தெரிந்து விஓபி கிளிப் பைல்களை இவ்வளவு விரைவாக வீடியோவாக மாற்றித் தரும் மென்பொருள் வேறு இல்லை என்றே நினைக்கிறேன் . அப்படி வேறு இருந்தால் கூறுங்கள். நானும் அறிந்து  கொள்வேன்.

கருவளர்ச்சி வீடியோ படங்களுடன்

தாயின் வயிற்றிலுள்ள கரு ஒவ்வொரு வாரமும் 

மூன்றாவது வாரம் 


நான்காவது வாரம் 



ஐந்தாவது வாரம் 


ஆறாவது வாரம் 


ஏழாவது வாரம் 


எட்டாவது வாரம் 


ஒன்பதாவது வாரம் 


பத்தாவது வாரம் 



பதினொன்றாவது  வாரம் 


பனிரெண்டாவது வாரம்


பதிமூன்றாவது  வாரம்


பதினான்காவது வாரம்


பதினைந்தாவது வாரம்


பதினாறாவது வாரம்


பதினேழாவது வாரம்


பதினெட்டாவது வாரம்


இருபதாவது வாரம்


இருபத்தி ஒன்றாவது வாரம்


இருபத்தி இரண்டாவது வாரம்


இருபத்தி மூன்றாவது வாரம்




இருபத்தி நான்காவது வாரம்




இருபத்தி ஐந்தாவது வாரம்




இருபத்தி ஆறாவது வாரம்


இருபத்தி ஏழாவது வாரம்


இருபத்தி எட்டாவது வாரம் 


இருபத்தி ஒன்பதாவது வாரம் 


முப்பதாவது வாரம் 



முப்பதொன்றாவது வாரம்


முப்பத்தி இரண்டாவது வாரம்


33


34


35


36


37


38


39


40



41



42