Showing posts with label பிரவுசர். Show all posts
Showing posts with label பிரவுசர். Show all posts

Thursday, April 7, 2011

போய் வா பிரவுசரே! போய் வா!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா! உண்மை அதுதான். http://ie6count down.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. உலக அளவில் தற்போது 12% பேர், இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எப்பாடு பட்டாவது 1% ஆகக் குறைக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
இந்த தளத்தில், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.
இந்த அறிவுரைகளைப் பல மொழிகளில் மைக்ரோசாப்ட் எடுத்துரைக்கிறது. ஏனென்றால், ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் நாடுகளில் தான் இந்த பிரவுசர் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இந்த பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் 34.5% பேர். தென் கொரியா, இந்தியா, தைவான், சவுதி அரேபியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 10% பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் எப்படி? நவீனமான பிரவுசரா? பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரரா? பதிப்பு 6 என்றால் தயவு செய்து விட்டுவிடுங்கள்.

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) – 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.


இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks fromwww.xmarks.com) என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.
இந்த பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாகhttp://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday, April 5, 2011

தமிழ் குரோம் Transliterate extension


அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!




Monday, April 4, 2011

நெருப்புநரி உலவியில் கடவுச்சொற்களை காப்பாற்ற முதன்மை கடவுச்சொல்


நெருப்புநரி உலவியின் துணைக்கொண்டு இணைய பக்கங்கங்களை வலம் வரும்போது பல தளங்களில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிட்டு பல்வேறு கணக்குகளில் நுழைவோம். அந்த சூழ்நிலைகளில் நம்மை அறியாமலேயே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை சேமித்துவிடுவோம். நம்முடைய சொந்த கணினியாக இருந்தாலும், மிக முக்கியமான கடவுச்சொற்களாகிய பேங்க் சம்பந்தமான கடவுச்சொற்கள் சேமிக்கப்படும் போது அது நமக்கு பெரும் ஆபத்தாகும். இதனால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நம்முடைய கணக்கில் உள்ள பணத்தினை இழக்க நேரிடும். அல்லது நம்முடைய கணக்கானது முடக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டுமெனில் இந்த உலவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை முழுமையாக நீக்க வேண்டும். கடவுச்சொல்லை நீக்க சுட்டி. இல்லை இந்த கடவுச்சொல்களுக்கே கடவுச்சொல் இட்டு பாதுகாத்தால் எப்படி இருக்கும். கடவுச்சொல்களுக்கு எவ்வாறு கடவுச்சொல்லை உருவாக்கு என்று கீழே காண்போம்.

முதலில் நெருப்புநரி உலவியினை திறந்து கொள்ளவும். பின் Tools > Option என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தவுடன், தோன்றும் விண்டோவில் Security டேப்பினை தேர்வு செய்து, அதில் “Use a master password” என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். 


டிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய முதன்மை கடவுச்சொல்லினை உள்ளிட்டு ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இனி நீங்கள் உங்களுடைய சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லை காண வேண்டுமானால் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகுதான் காண முடியும். சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லோடு தொடர்புடைய வலைப்பக்கத்திற்கு சென்றால், முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட சொல்லி ஒரு பெட்டி தோன்று அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு அந்த தளத்தில் நுழைந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தவறு செய்தாலும் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்பதை போல, ஏற்கனவே பல்வேறுகடவுச்சொற்கள் சேமிக்கப்பட்டுள்ளது அதை பாதுக்காக்க முதன்மை கடவுச்சொல்.

Thursday, March 24, 2011

ஆன்லைன் கூகுள்குரோம் பெயின்ட்


கூகுள் நிறுவனம் புதிதுபுதிதாய் சேவைகளை வழங்கி வருகிறது அந்த வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் பெயின் என்ற மற்றுமொரு சேவையினையும் வழங்கி வருகிறது, இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருந்தப்படியே நம்முடைய எழுத்து மற்றும் கலர் போன்றவற்றில் புதிதாக மாற்றங்களை செய்ய முடியும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த  சேவை பயனுள்ளதாய் இருக்கும். இந்த சேவையின் மூலம் கூகுள் நிறுவனம் சின்னஞ்சிறு குழந்தைகளை கூட தன்பக்கம் இழுத்து வருகிறது, அது மட்டுமல்லாமல் இந்த கூரோம் பெயின் வசதியானது முக்கியமான தருணங்களில் கைகொடுக்க கூடும். இந்த தளத்தில் நாம் சாதரணமாக மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் நாம் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை விட ஒருசில கூடுதல் வேலைகளையும் இந்த குரோம் பெயின்ட் மூலம் செய்ய முடியும்.

தளத்திற்கான சுட்டி 


இந்த வசதியானது, மிகவும் சிறப்பானது ஆகும், இதன் மூலம் ஏறகனவே கூறியது போல டெக்ஸ்ட் மற்றும் கலர் போன்றவற்றை இதில் மாற்றம் செய்ய முடியும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், இதனுடைய சிறப்பம்சங்களை பெற முடியும்.

கூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய


Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உலவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.

கூகுள்குரோம் உலவியினை கொண்டு  Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உலவியில் இணைக்க வேண்டும். 

ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி


ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உலவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உலவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இந்த வசதியின் மூலமாக Youtube தளத்தில் இருக்கும் வீடியோவை எளிமையாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த டவுண்லோட் ஆப்ஷன் மூலாமாக  பல்வேறு வீடியோ பைல் பார்மெட்டுக்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இவற்றில் குறிப்பிட்டுள்ள வீடியோ பைல் பார்மெட்டுக்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படியும் Youtube தளத்தில் உள்ள வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Saturday, March 19, 2011

Goolge Chromeயின் மீண்டும் ஓர் அற்புத சேவை! Google WebStore



கூகுள் குரோம் வெப் பிரவுசர் தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஓர் அழகிய அற்புத சேவையை வழங்கி உள்ளது. Webstore என்னும் பெயரில். இந்த சேவையின் நோக்கம் என்ன என்றால், ஓர் பிரவுசர்கான அனைத்து சிறப்பு சேவைகளையும் மொத்தமாக உள்ளடக்கிய ஓர் தொகுப்பை மக்களிடையே வழங்குவது தான்.
தாங்கள் இந்த என்பதில் நுழைந்தவுடனே இதன் அருமை தங்களுக்கு விளங்கிவிடும். இங்கு உள்ள அனைத்து சேவைகளும் இலவசமே!
இந்த வெப் ஸ்டோரில் பல வகையான அழகிய, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பல வகையான கூகுள் குரோமிற்கான தீம்ஸ்கள் உள்ளன. 

மேலும் பல வகையான APPLICATIONSகள் உள்ளன. தங்களின் விருப்பமான APPLICATIONSகளை தாங்கள் நேரடியாக செல்லாமல் இங்கு இருந்தே பயன்படுத்தலாம்.

பல வகையான Extension Toolsகளும் உள்ளன. அதாவது இவற்றை பயன்படுத்தி பல பயனுள்ள செயல்களை மேற்கொள்ளலாம். உதரணமாக திரையில் தோன்றும் படத்தை சில வினாடிகளில் நமது கணினியில் பதிவிறக்கிகொள்ளலாம்.

இந்த சேவையை பெற தாங்கள் புதிய பதிவை பதிவிறக்க வேண்டும். அல்லது கீழே உள்ள குறிப்பை கிளிக் செய்வதன் மூலமும் சேவையை பெறலாம்.

Download>> Chrome New Or Go To Webstore

கூகுள் வெப் ஸ்டோரை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை காணவும்.

நண்பர்களே! சில வாரங்கள் என்னால் தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் போனது. மன்னிக்கவும். எனக்கு தேர்வு நடப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.

தாங்கள் இந்த சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு தங்களின் கருத்துகளை தெரிவிங்கள். நன்றி!

Thursday, March 3, 2011

இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு Google cloud connect


கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில்வெளிவந்துள்ளது.
இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
google doc save
விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.
google doc
இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

கூகிளில் தெரியும் புதிய tool bar தனது சோஷியல் லேயருக்கான வெள்ளோட்டமா???


கூகிள் கணக்குகளினை இன்று புதிய வடிவிலான tool bar ஒன்று அலங்கரித்துவருவதை அவதானித்தீர்களா?? இது கூகிளின் புதிய சோஷியல் லேயரினை பரீட்சிக்கும் முயற்சியாக இருக்கலாமோ??
google top barகூகிள் நிறுவனமானது பல பில்லியன் டொலர்கள் செலவில் ஒரு புதிய சோஷியல் தயாரிப்பு ஒன்றினை வடிவமத்து வருவதாகவும் அதற்கு முதலில் கூகிள் மீ என்று பெயர்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக வெளியான செய்திகளின் படிகூகிள் +1 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

gmail bug: ஜிமெயில் திருத்தும் பணியில் கூகிள்


நேற்று உங்களில் யாருக்காவது ஜிமெயிலினை திறந்து கொள்ள முடியாமல் போனதா? அப்படி பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஜிமெயில் பாவனையாளர்களில் 0.02% க்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. அதாவது 40000 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

Google-gMail-

அவ்வாறு பிரச்சினை ஏற்பட்ட பாவனையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மிகவிரைவில் இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க கூகிள் பொறியியலாளர்கள் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் கூகிள் தெரிவித்துள்ள0
து.
இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? தாங்கள் புதிதாக அப்டேட் செய்த மென்பொருள் ஒன்றே இந்த பிரச்சினையை தோற்றுவித்ததாகவும் பாவனையாளர்களின் அனைத்து மின்னஞ்ஞல்களும் பாதுகாப்பாக பெக்கப் டேப் களில் இருப்பதாகவும் கூகிள் அறிவித்துள்ளது.
இவ்வாறு குழப்பங்கள் ஏற்படும் போது பாவிப்பதற்காக பாவனையாளர்களின் அனைத்து தரவுகளும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக கூகிள் அறிவித்துள்ளது. எனவே நீங்கள் பயப்படமால் இருக்குமாறு கூகிள் வேண்டிக் கொள்கிறது.

Wednesday, March 2, 2011

கூகுளில் கேட்டது ஜிமெயிலில் கிடைக்கும்


  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு Google Alert  செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும். 

Monday, February 21, 2011

இன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 - புதிய கூடுதல் வசதிகள்

முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகுப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப்டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம். 
புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பில் பல புதிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். அனைத்து வசதிகள் குறித்தும் நீங்கள் அறிய வேண்டும் என்றால், http://www.beautyoftheweb.com/#/ new_in_rc என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைக் காணவும். 
1.முதலாவதாக, உங்கள் மனதில் எழும் கேள்வி - இதனை நான் என் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்க்க வேண்டுமா என்பதுதான். நிச்சயமாக. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தாலும், இதில் உள்ள வசதிகள் குறித்து அறிய, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். இது மிக மிக பாதுகாப்பான ஒரு பிரவுசராகும்.
2. இயங்கும் செயல்திறன் வேகம் கூட்டப்பட்டுள்ளது:இந்த வகையில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜிமெயில் போன்ற அதிக தகவல்களைக் கொண்டுள்ள ஓர் இணைய தளத்துடன் பிரவுசர் இயங்குகையில் இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்ற வகையில் திறன் கூட்டப்பட்டுள்ளது. 


3. மின் சக்தி பயன்பாட்டினை வரையறை செய்தல்:அனைத்து பிரவுசர்களும் இப்போது ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது சி.பி.யு வின் சக்தியை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த பயன்பாடு இப்போது பவர் செட்டிங்ஸ் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டரியில் நீங்கள் பிரவுசரை இயக்குகையில், சிபியுவின் சக்தி குறைவாகவே பயன்படுத்தும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியின் திறன் வீணாவது தடுக்கப்படுகிறது. இது உண்மையிலேயே புதியதொரு மாற்றம் தான்.
4. யூசர் இன்டர்பேஸ் மாற்றங்கள்: பயனாளருக்கும் பிரவுசருக்குமான இடைமுகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டேப் பாரினை, அட்ரஸ் பாருக்குக் கீழாக அமைக்கலாம். முன்பு அனைத்தும் ஒரே வரிசைய்ல் இருந்ததனால், டேப்கள் மிகவும் சிறிய பட்டன்களாக இருந்தன. இப்போது, டேப் பாரில் ரைட் கிளிக் செய்தால், அது தனி வரிசையாக இடம்பெறுகிறது. இரண்டு வரிசையாக இவை இடம் பெற்றாலும், மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த இடமே எடுத்துக் கொள்கின்றன. பிக்ஸெல்பவர் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெனு பாரினை உடனுடக்குடன் தேவைப்படும்போது தெரியும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம்; மறைத்துக் கொள்ளலாம்.
5. பின் செய்யப்படும் தளங்கள்: டாஸ்க் பாரில் ஒரு பட்டனில், எத்தனை தளங்களை வேண்டுமானாலும் இருத்தி வைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் மொத்தமாக சேர்த்துத் திறந்து பார்க்க விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை ஒரே கிளிக் மூலம் திறந்து பார்த்துக் கொள்ளலாம். 
6. பிளாஷ் மற்றும் விளம்பர தடை: இதில் புதிய ஆக்டிவ் எக்ஸ் பில்டரிங் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஷ் இயக்கம் மற்றும் விளம்பர தடைகள் இணைந்து தரப்பட்டுள்ளன. நீங்கள் பாதுகாப்பானது என நம்பும் தளங்களுக்கு மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இயக்குமாறு செய்திடலாம். மேலும் விளம்பரங்கள், அவற்றின் தன்மை உணரப்பட்டு தடை செய்யப்படுகின்றன. 
7. இயங்கும் இடம் அறிதல்: தங்களைப் பற்றிய எந்த தனி தகவலும் வெளியாகக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கு இந்த வசதி எரிச்சல் ஊட்டுவதாய் அமையும். ஆனால் இதில் சில குறிப்பிடத்தக்க வசதிகளும் உள்ளன. நீங்கள் பயணத்தில் இருக்கையில், லேப்டாப் பயன்படுத்து பவராக இருந்தால், சில இடங்கள் குறித்து அறிந்து கொள்ள இது உதவும். குறிப்பாக, கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகையில் இதன் செயல்பாடு நம் இணையப் பயன்பாட்டினை அர்த்தமுள்ளதாக அமைக்கும். ஆனால் இது குறித்து கவலைப்படவும் தேவையில்லை. நம் தனி நபர் தகவல்களை வெளியே விடாத வகையில் இதனை செட் செய்திடலாம். 
8. வெப் எம் வீடியோ: கூகுள் அண்மையில் தன் குரோம் பிரவுசரிலிருந்து எச். 264 வீடியோ தன்மையை எடுத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், கூகுள் நிறுவனத்தின் வெப் எம் (WebM) வீடியோ பார்மட்டினை இணைத்துள்ளது. 
இந்த வசதிகள் குறித்து படித்தறிகையில் பல வாசகர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது குறித்துப் பல சந்தேகங்கள் எழலாம். அவற்றில் சில கீழே தீர்க்கப்பட்டுள்ளன.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குமா? 
இயங்காது.
2. ஏற்கனவே ஒரு சோதனைத் தொகுப்பு ஒன்றைப் பதிந்து இயக்கி வருகிறேன். புதிய தொகுப்பினை, அதனை அழித்துவிட்டுப் பதிய வேண்டுமா? அதன் மேலாகவே பதியலாமா? அல்லது கூடுதலாகத் தனியே, வேறுஒரு ட்ரைவில் பதியலாமா?
பழைய சோதனைப் பதிப்பின் மேலேயே பதிந்து இயக்கலாம். 
3. விண்டோஸ் இயக்கத்தில் 32/64/128 பிட் இயக்கங்கள் என வேறுபட்ட இயக்கத் தொகுப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 உள்ளதா?
உங்களுடைய விண்டோஸ் இயக்கம் எத்தனை பிட் இயக்கம் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பிரவுசர் பதிப்பினையே பதிந்து இயக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 32 பிட் பதிப்பு இருந்தால், விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 32 மட்டுமே பதிந்து இயக்க வேண்டும். http://www.beaut yoftheweb.com/#/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால், உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பதியலாம்

Monday, February 14, 2011

எல்லா இணையதளத்தையும் மொபைலில் பார்க்கலாம்.



கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்
தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்
நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்
வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்
சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்
மொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி
கொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு
போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க
சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி
கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான
கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை
மட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி
காட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,

சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்
என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத
அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி
இருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க
விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற
பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்
வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு
எழுத்தை மட்டும் பார்க்கலாம்.
முகவரி : http://google.com/gwt/n

Tuesday, January 11, 2011

இன்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து

கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.


ஆதாரம் & மூலம்: 
கூகிள் வலைப்பூ.
இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.
ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்:

1) Tabbed Browsing

பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.

2) 
Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.

3) மாதம் ஒரு முறை 
அப்டேட் ஆகிவிடும்.

4) 
Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.

5) 
Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.

6) 
Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.

7) 
Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.

Saturday, January 8, 2011

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

        பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது. இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு காணலாம். 


இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல் அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது. இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே இயங்கு கின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. 


       புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின் வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. 

புதிய இன்டர்பேஸ்: இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு, பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன. வலது மேல் பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள், மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும் இருக்கின்றன. இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன. முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது. இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது. இந்த பிரவுசரில் எச்சரிக்கை மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன. இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும் டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும். இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது. 

மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் (Pinned Shortcuts). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம். இதற்கான டேப்பினை இழுத்து டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல, கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக எடுத்துத் தரப்படுகின்றன. இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ் விஸ்டாவுடன் அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது. 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர் குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு 9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம் தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க் பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட் பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன. 

பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும் சோதனைத் தொகுப்பு தான். மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : : http://windows.microsoft. com/enUS/internetexplorer/download/ie9/worldwide . இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு. 



Sunday, January 2, 2011

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் எபிக்

மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் 

என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Sunday, December 19, 2010

கூகிள் டாக்ஸ் புது வசதி

பி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள் டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால் ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும்.


பிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்

அடையாள இலக்கம்
உங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா? எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI)  என்ற பிரதேக எண் உள்ளது இந்த எண் மூலமாக உங்கள் கைபேசி தொலைந்தால் உடனே தடுக்க முடியும் முடிந்தால் மீட்கவும் முடியும். கட்டாயம் இதை குறித்துவையுங்கள். பொதுவாக நோக்கிய முதற்கொண்டு சாதனங்களின் எண்ணைப் பெற *#06# என்ற குறியீடைத் தட்டினால் எளிதில் பெறலாம். மேலும் சில ரகசிய உபரி தகவல்களைப் பெற தகுந்த எண்கள் சாதனங்கள் வாரியாக இங்கே உள்ளது. 

பதிவர்களுக்கு

நேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் http://www.blogger.com/ தளத்திற்குப் பதில் http://draft.blogger.com/ல் நுழையுங்கள். தேவைப் பட்டால் இந்த முகவரியை நிரந்தரமாக்க படத்தில் உள்ளது போல இதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். stats இணைப்பில் சென்றால் உங்கள் தளத்தின் போக்குவரத்துத் தெரியும் பதிவுவாரியாகவும், பரிந்துரைவாரியாகவும், வாசகர்வாரியாகவும் செம்மையாக காட்டுகிறது. இதைப் பெற எந்தவிதக் கூடுதல் நிரலிகளைச் சேர்க்க வேண்டியில்லாததாலும், இதற்கு முன கூகிள் தந்த ஆமை வேக  http://www.google.com/analytics/ கிற்கு மாற்றாகவும் இது அமைவதால் மகிழ்ச்சியே!

கடவுச்சொல் துலாபாரம் 
உங்கள் கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா? அது வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச் சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம் என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள் மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே!
http://howsecureismypassword.net/

வேகமாக BROWSE செய்ய விவேகமான வழிகள்

சில சமயங்களில் சில தளம் திறக்க அதிக நேரம் எடுக்கும் அல்லது திறக்க மறுக்கும் அத்தகைய சமயங்களில் பிரச்சனை எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டு அந்த பிரச்னையை நீக்கமுடிய்ம்
இந்த மாதிரியாக பிரச்சனைக்குரிய காரணிகள்: 

  • நாம் பயன் படுத்தும் மூன்றாம் நபர் நிரலிகள்.அதாவது  அடுத்த தளத்திலிருந்து நாம் காப்பி செய்து நமது தளத்திலிடுபவை. நம்பகமான தளங்கலானால் பிரச்சனையில்லை அப்படியில்லாத புதிய தளத்திலிருந்து நாம் காப்பிசெய்து போட்ட நிரலிகள் சிலசமயம் நம்மிடமே விளையாடும், தேவையில்லாத விளம்பரங்கள்,தேவையில்லாத ஸ்க்ரிப்ட்கள் என நேரத்தை விரயமாக்கும்.
  • சில சமயம் நாம் பயன்படுத்தி வந்த படங்களோ அல்லது ஸ்க்ரிப்ட்களோ அதன் மூலப்பக்கத்திலிருந்து நீக்கப் பட்டிருந்தால் நமது தளம் லோடாக நேரம் பிடிக்கும்
  • பொதுவாக நாம் பயன்படுத்தும் சில திரட்டிகளின் ஓட்டுப்பட்டனும் நேரம் பிடிக்கும். உதாரணமாக அண்மையில் செயல்படாமல் போன ஒரு திரட்டியின் வாசகர்கள் அனுபவித்திருப்பார்கள்.
  • முந்திய இடுகையில் கூறிய காரணங்களாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்கும் 
சரி எப்படி எளிதில் பிரச்னைக்கு வலைப்போட்டு பிடிப்பது?  வலை போட வேண்டுமானால் இந்த வலைதளங்களுக்கு போங்கள்
உங்கள் பக்க முகவரியை மட்டும் கொடுங்கள் அவை திறனாய்வு செய்து அறிக்கையை சமர்பிக்கும். அதன் படி பிரச்சனைக்குரிய நிரலிகளைக் கண்டு தூக்கிவிடுங்கள். ஒவ்வொரு தரவுகளின் தரவிறக்க நேரம் தெரிவதால் நீக்கவேண்டியத்தை நீக்கி முடக்க வேண்டியதை முடக்கி நமது வேகத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
உதாரணாமாக:

இப்படி ஒரு தளத்திற்கு ஆய்வறிக்கை வருகிறது கீழுள்ள குறிப்பின் படி பச்சை நிறம் தரவிரக்கத்தைக் குறிக்கிறது. எனவே தரவிறக்கம் ஆக இந்த படம்/ஜாவா கோப்பு  நேரம் எடுக்கிறது என கண்டுபிடித்து நீக்கிவிடவும்.
இந்த தளத்தின் மூலம் வெவ்வேறு உலாவிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் நமது தள வேகத்தைக் கணிக்கும் வசதியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் நாம் எந்தெந்த தளங்களின் கோப்புகளை பயன்படுத்துகிறோம் எனவும் சுட்டிக்காட்டும். 

இந்த தளத்தின் மூலம் விதவிதமாக கோப்புகளை சோதனைச் செய்யலாம் 

இதில் நமது தளத்திற்கு உலகளாவிய பொது தரவரிசை மதிப்புத் தரும்.

கட்டாயம் இந்த தளங்கள் வித்தியாசமானவை பயன்படுத்திப்பாருங்கள். யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த தளங்களைக் கொண்டு சீர்படுத்திக்கொள்ளுங்கள் 

மேலும் கூகிள் குரோம் மூலமும் சோதிக்கலாம் மேலதிக தகவல் இங்கே


கொஞ்சம் டெக் டிப்ஸ்
  • image Map டெக்னிக் பயன்படுத்தி ஒரே படத்தை பலமுறை பயன்படுத்தலாம்
  • JS CSS நிரலிகளை தள நிரலியுடன் சேர்க்காமல் தனி கோப்புகளில் External லிங்க்காக கொடுங்கள். இதன் மூலம் ஒருமுறை திறக்கப்பட்ட தளத்தின் கோப்புகள் cache கோப்புகளாக சேமிக்கப்படும்.
  • அதிகமான முறை ஜாவா ஸ்க்ரிப்டை திறந்து முடுவதைத் தவிர்த்து ஒரே தொகுப்பில் அனைத்து நிரலியையும் இட்டுக்கொள்ளுங்கள்.
  • முடிந்தளவு  படங்களுக்குப் பதில் css டிசைனில் கிராபிக்ஸ் செய்யுங்கள்