Saturday, December 17, 2011

ரசிகர்களை ஏமாளிகள் ஆக்கிய ரஜினி - குமுறும் ரசிகர்கள்

ரஜினி வாக்கு தவறாதவர் என்பதுதான் அவரது ரசிகர்களுக்கு தெரிந்த மேலோட்டமான உண்மை. ஆனால் ரஜினி மட்டுமல்ல, ரஜினியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வாக்குக் கொடுத்தால் அதை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் உதாரணமாகி இருக்கின்றன. 

முதல் சம்பவம் :

சமீபத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒன்றினைந்து ஒருகோடி செலவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியின் 62-வது பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

இந்த விழாவில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவும் அவரது கணவர் அஸ்வினும் கலந்து கொள்வதாக விழாக்குழுவுக்கு வாக்களித்தார்களாம். ஆனால் ரஜினி வீட்டு பணியாள் கூட விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மாறாக திரையுலகில் இருந்து பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய கருணாஸ், பகிரங்கமாக “ இந்த விழாவுக்கு ரஜினி சார்பில் ஒருவர் கூட வராதது.அவரது ரசிகர்களை அவமதிக்கும் செயல்” என்று கடுமையாகச் சாடினார்.

இதற்கு அங்கே திரண்டிருந்த மொத்த ரஜினி ரசிகர்களும் கைதட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதை மட்டுமல்ல தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு விருந்தளிப்பதாகக் கூறி ரஜினி ஏமாற்றியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை என்று காட்டமாகவே கூறினார்கள் சென்னையைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும்!
இரண்டாவது சம்பவம்:

ஒரு படத்தின் ‘டைட்டில்’ சம்பந்தபட்டது. கடந்த வாரம் ரஜினியிடமிருந்து தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு, திடீரென ஒரு கடிதம் வந்தது. ‘பெருமான்- தி ரஜினிகாந்த்’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்படுவதை தாம் சமீபத்தில்தான் கேள்விப்பட்டதாகவும்,கடவுளோடு தன்னை ஒப்பிடும் அந்த டைட்டிலை உடனே தடை செய்யவேண்டும் என்றும் அந்தக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி.

அவரது வேண்டுகோள், சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பாளரான பிருந்தா தாஸுக்கு உடனே தெரிவிக்கப்பட்டு, ரஜினியின் விருப்பப்படி தலைப்பும் முடக்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் ராஜேஷ், ரஜினியின் இந்த திடீர் முடிவு தனக்கு மிகவும் ஆச்சரியமளிப்பதாகக் கூறுகிறார்.

உடல்நலம் குன்றி ரஜினி மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு முன்பே அவரை நேரில் சந்தித்து, சம்மதமும், ஆசியும் வாங்கிய பிறகுதான் படத்தையே ஆரம்பித்தோம். ரஜினியின் இடத்தை வேறொரு துறையில் அடைய விரும்பும் இளைஞனின் கதை இது.படம் ரிலீஸை நெருங்கும் வேலையில் ரஜினியின் இந்த திடீர் பல்டியை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று சோககீதம் இசைக்கிறார் ராஜேஷ்.

காதலை பரிமாறும் அழகான தருணங்கள்!


காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.

படிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:
திருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.

காதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.

காதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

பேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள்.

உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.

விடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி.

எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.

வாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.

ஆசைக்கு இணக்க மறுத்த மருமகனை *** உறுப்பில் தாக்கிய மாமியார்!


சேலம் மாவட்டம், எடப்பாடி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சி கொத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்முருகேசன். இவருக்கு வயது 32. ஜே.சி.பி வாகனத்தின் ஓட்டுனரான இவருக்கும் இதே ஊரில் உள்ள சின்னத்தாயி என்பவரின் மகள் பரிமளா (வயது 19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு கலாநிதி என்ற ஒருவயது ஆண் குழந்தையும் உள்ளது. மனைவியை பிரசவத்துக்கு தாயார் வீட்டுக்கு அனுப்பிய முருகேசன், மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த ஒரு வருடமாக அங்கேயே விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள் அன்று உள்ளூரை சேர்ந்த மணி என்பவர் முருகேசனை கூட்டிக்கொண்டு சின்னத்தாயி வீட்டுக்கு சென்று பரிமளாவை முருகேசனோடு அனுப்பிவையுங்கள் அவர்கள் போய் குடும்பம் நடத்தட்டும் என்று சொல்லியுள்ளார்.

அப்போது மாமியார் சின்னத்தாயிக்கும், மருமகன் முருகேசனுக்கும் வாக்குவாதம் தொடங்கி அது சண்டையாக மாறிவிட்டது. முருகேசனின் மாமியார் சின்னத்தாயும், மாமனார் சன்முகநாதனும் சேர்ந்து முருகேசனை அடித்துள்ளனர். மாமியார் சின்னத்தாயி, மருமகன் முருகேசனை கீழே தள்ளி அவரின் பிறப்பு உறுப்பின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த தாக்குதலில் முருகேசன் பிறப்பு உறுப்பில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கிவிழுந்த முருகேசனை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மணி. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசனுக்கு அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பில் தையல் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருமகன் தாக்கியதாக கூறி மாமியார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

மருமகன் கொடுத்த புகாரின் பேரில் மாமியார் சின்னத்தாயி மீதும், மாமியார் கொடுத்த புகாரின் பேரில் மருமகன் முருகேசன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் எடப்பாடி போலீசார். இந்நிலையில், முருகேசனின் உறவினர்கள் நேற்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துசாமியை சந்தித்து கொடூரமாக நடந்து கொண்ட சின்னத்தாயி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், முருகேசனின் தாயார் ஆராயி, சகோதரர் ராமநாதன், சகோதரி அம்மாசி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

முருகேசன் மீது எவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக, அவர் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த உள்ளாடையை (ஜட்டி) எடுத்து வந்து ஆராயி கண்காணிப்பாளரிடம் காட்டினார். மருமகன் முருகேசன் மீது மோகம் கொண்ட மாமியார் சின்னத்தாயி அவரை, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார் என்றும், அதற்கு முருகேசன் உடன்படாத காரணத்தால் தான் பிரசவத்துக்கு போன மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பாமல் தன்னுடைய வீட்டிலேயே வைத்துக்கொண்டார் என்றும் மாமியார் சின்னத்தாயி மீது புகார் கூறினார்கள் முருகேசனின் உறவினர்கள்.

பேஸ்புக் ஏற்படுத்திய விபரீதம் (தமிழ்நாட்டில் நடந்த உண்மைச்சம்பவம்)

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். 

பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். 

மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டார். 

அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். 

முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். 


இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார். 


பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். 


மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில் வற்புறுத்தினார். இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 


பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்ததுள்ளது. 


அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 


மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. 


அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர். அப்போது அபிநயா திருச்சி வந்தார். 


அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். 


மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம் வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர். 


கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார். 


அப்போது அபிநயா நிருபர்களிடம் கூறியதாவது, எனது தந்தை கரூரில் பிரபல அரசியல்வாதி. எனது அம்மா தமிழ்செல்வி இறந்துவிட்டார். தற்போது நான் பிரச்சினையில் சிக்கி உள்ளதால் எனது தந்தை என்னை அவரது மகள் இல்லை என கூறுகிறார். 


இணையதளம் மூலம் முருகன் எனக்கு பழக்கமானதில் 2 பேரும் நெருங்கி பழகி காதலித்தோம். நானும், அவரும் காதலித்து பழகியதற்கு செல்போன் பேச்சும், என்னுடைய இ மெயில் உள்ள கடிதங்களும் ஆதாராங்களாக உள்ளன. அவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


கோர்ட்டு வளாகத்தில் கைதான அபிநயா அழுது புரண்டு அடம்பிடித்தால் வக்கீல்கள் ஏராளமானவர்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்று மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர்.

பெண்களே உங்களை பின்தொடர்வோர்

1.ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

4 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

5 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் .

6 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.


7 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

8. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

9. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்

2011ல் கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடியது

இணையத்தில் கூகுளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் தான் எப்பவுமே நம்பர் 1. இணையத்தில் தேடியந்திரங்கள் பயன்படுத்துபவர்களில் 98%பேர் கூகுளை தான் பயன்படுத்துகின்றனர். மற்ற தேடியந்திரங்கள் வெறும் 2% மட்டுமே பயன்படுகின்றது. தேடுதல் முடிவுகளை துல்லியமாக வழங்குவதால் அனைவரும் இந்த தேடியந்திரத்தை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதாவது 2011 ஆம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.





உலகளவில் 2011 ல் அதிகமாக தேடிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Rebecca Black என்ற பாப் பாடகியும் இரண்டாம் இடத்தில் கூகுள் பிளசும் உள்ளது.

இந்தியாவில் அதிகமாக தேடிய பட்டியல்:

இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் அன்னா ஹசாரே முதல் இடத்தை பிடித்து உள்ளார். இரண்டாம் இடத்தில் வீண் சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடி கொள்ளும் பூனம் பாண்டே உள்ளார். 



Fastest Rising Searches 

Fastest Rising People 

Top Searches 


1. Facebook 

1. Anna Hazare 

1. Facebook 

2. Ibps 

2. Poonam pandey 

2. Youtube 

3. google+ 

3. Steve Jobs 

3. Gmail 

4. World cup 2011 

4. Anushka Sharma 

4. Yahoo mail 

5. Bodyguard 

5. salman Khan 

5. Google 

6. Ra.one 

6. Justin Bieber 

6. Yahoo 

7. Anna Hazare 

7. Kajal Agarwal 

7. Irctc 

8. IPL 2011 

8. katrina kaif 

8. Rediffmail 

9. Poonam pandey 

9. Vijay Mallya 

9. Indian Railways 

10. Ready 

10. Aishwarya Rai 

10. way2sms 

Top People 

Top Movies 

Top News 

1. Katrina Kaif 

1. Bodyguard 

1. Ipl 

2. Anna Hazare 

2. Ra One 

2. World Cup 2011 

3. Salman Khan 

3. Harry Potter 

3. Cbse Result 2011 

4. Poonam Pandey 

4. Delhi Belly 

4. Diwali 

5. Justin Bieber 

5. Singham 

5. Lokpal Bill 

6. Aishwarya Rai 

6. Ready 

6. Japan Earthquake 

7. Sachin Tendulkar 

7. Mankatha 

7. Aadhar Card 

8. Kareena Kapoor 

8. Transformers 3 

8. Osama Bin Laden 

9. Steve Jobs 

9. Dookudu 

9. Pakistan 

10. Priyanka Chopra 

10. Zindagi Na Milegi Dobara 

10. F1 

மற்றும் இதற்க்கு சம்பந்தமாக கூகுள் நிறுவனம் அழகான ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. 

மேலும் பல தகவல்களை விவரமாக பெற இந்த லிங்கில் கிளிக் செய்து சென்று பார்த்து கொள்ளவும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்க

பி ஜே வின் - பெரியமேடு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பு Live ஆக காண

பெரியமேடு கிளையில் நடைபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு 

18-12-2011 Live ஆக காண 

பி ஜே வின் பகிரங்க அறைகூவல் 

கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டதாகவும், எனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்ததாகவும் சில ஆபாச செட்டப் மெயில்களைச் சிலர் பரப்பி வருவது என் கவனத்துக்கு வந்துள்ளது.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி இது வரை நான்கு முறை களவாடப்பட்டதைப் பற்றி அவ்வப்போது எனது தளத்தில் நான் தெரிவித்துள்ளேன். எனது முகவரியில் இருந்து பல முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை வெப் மாஸ்டர் துணையுடன் நான் கண்டுபிடித்துள்ளேன். இது போல் பரப்பக் கூடியவர்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேருக்கு நேராக வந்து என் முன்னிலையில் அதை நிரூபித்துக் காட்டுமாறு பகிரங்க அறைகூவல் விடுகிறேன். என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து சைபர் கிரைம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கணிணியிலும் நெட் ஒர்க வழியாக நுழைந்து பல ஃபைலகளை அந்தக் கயவர்கள் அழித்துள்ளனர். அதையும் வெப்மாஸ்டர் துணையுடன் கண்டு பிடித்துள்ளேன். இதற்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு 

பொது வாழ்வில் உள்ள யாருக்கு எதிராக எதைப் பரப்பினாலும் அதைத் தக்க முறையில் நிரூபித்து சம்மந்தப்பட்டவர் குற்றம் செய்திருந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்காகவே பரப்ப வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை அதன் நிர்வாகிகள் மீதான பாரதூரமான குற்றச்சாட்டுகளில் தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக உள்ளது. எனவே எனக்கு எதிராக அவதூறு பரப்புவோர் அதைத் தக்க முறையில் நிரூபணம் செய்யும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அல்லது தங்களின் அவதூறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.









Disable your firewall if you can't view video 

ரஜினி பொண்ணு கூட கல்யாணம் . கமல் பொண்ணு கூடரொமான்ஸ் தனுஷின் "3 "

ரஜினி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு !! கமல் பொண்ணு கூட romance பண்றதுக்கும் ஒரு யோகம் வேணும் 

2011 ல் புகழ்பெற்ற புகைப்படங்கள் - 3

2011 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புகைப்படங்களை வெளியிட்டது buzzfeed. அவற்றின் 2 ம் தொகுப்பு இங்கே 








































































2011- தமிழ் சினிமாவின் முத்துக்கள் பத்து...

சூப்பர் ஸ்டார் 

இந்த வருடம் முழுக்க ரஜினி தொடர்ந்து நியூசில் இருந்துகொண்டிருந்தார். முதலில் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ பட ரிலீஸ். அதிக பட்ச தியேட்டர்களில் படம் ரிலீசாகி, தமிழ்நாட்டையே கலக்கியது. வசூலிலும் சாதனை. ரஜினி நடிக்க, கே.எஸ். ரவிகுமார் டைரக்ஷனில் ராணா என்று அறிவிப்பு வந்த வேளையில் ரஜினிக்கு உடல் நலமில்லை. ராமசந்திராவில் ஐ.சி.யு. சிங்கப்பூரில் சிகிச்சை, சென்னையில் ஓய்வு என்று தொடர்ந்து மீடியாவின் கவனத்திலேயே இருந்தார். இடையில் நடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. லேட்டஸ்ட்டாக ‘ராணா’ இல்லை; ‘கோச்சடையான்’ என்கிறார்கள். 

அவார்டு வெறி 

மாப்பிள்ளை தனுஷ் ரொம்ப லக்கி. ‘ஆடுகளம்’ படத்தின் நடிப்புக்கு தேசிய விருது அவருக்குள் இருக்கும் நடிகருக்கான அங்கீகாரம். செல்வராகவன் டைரக்ஷனில் ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷின் நடிப்பு மெச்சூரிடி. வசனம் மாதிரி ஒரு பாட்டைப் பாடி வெறித்தனமாக எல்லோரையும் பாட வைத்து, ஹிட் ஆக்கும் ம(த)ந்திரத்தைச் செய்து காட்டினார். காதலில் தோல்வியுற்ற காதலன், காதலி ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று வாழ்த்துப் பாடிய தேவதாஸ் காலம் போய், இன்று ‘கொலை வெறி’ காலம். இந்தப் பாட்டே சாட்சி.

காமெடி பீஸ்

தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய வைகைப்புயல், அழகிரி புண்ணியத்தில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். திராவிடப் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் தூண்களே குஷ்புவும், வடிவேலுவும்தானோ என்று நினைக்க வைத்தது தி.மு.க. வின் பிரசார வியூகம். தேர்தல் முடிவு வெளியானதும் காற்றுப் போன பலூனாகி, ‘ நான் அம்மாவைப் பத்தித் தப்பா ஒண்ணுமே பேசலை’ என்று தன்னிலை விளக்கம் அளித்து, காமெடி பீஸ் ஆனார்.


குடும்ப ஆக்கிரமிப்பு


வருடத்தின் முதல் பாதியில் கலைஞர் குடும்பத்தின் ஆக்கிரமிப்பு சினிமா உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்தது. கலாநிதி, உதய நிதி, தயாநிதி, அருள் நிதி... என நிதிகளின் பிடியில் என்று புகார் எழுந்தது. தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிதி வகையறாக்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். ‘மங்காத்தா’ கூட சன் பிக்சர்ஸ், ராடன் என்று கை மாறிய பிறகே திரைக்கு வந்தது.

அரசியலாயுதம்

‘காவலன்’ படத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயலலிதாவை சந்தித்து, முறையிட்டார். தொடர்ந்து ஜெ.வுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவைத் தெரிவிக்க, அப்புறம் விஜய் குடும்பத்தின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று. சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அப்பா தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார். அம்மாவுக்கும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையில் போஸ்டிங். அடுத்து வெளியான ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ‘வேலாயுதம்’ நன்றாகவே அறுவடை செய்துவிட்டது.

விருது வேட்டை

ஆறாம் முறையாக வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றார். ‘ஆடுகளம்’ சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை (வெற்றி மாறன்), சிறந்த நடிகர் (தனுஷ்), சிறந்த எடிட்டிங் (கிஷோர்), நடன இயக்குனர் (தினேஷ் குமார்) என்று விருதுகளைக் குவிக்க, சிறந்த தமிழ்ப்படமாக சீனு.ராமசாமி இயக்கிய ‘தென் மேற்குப் பருவக் காற்று’ தேர்வானது. ஆர்ட் டைரக்ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றுக்கான விருதுகள் ‘எந்திரன்’ படத்துக்கு.

மணி ரத்ன கரிகாலன்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல் போன்றவர்கள் விரும்பியும் முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர சவாலை மணி ரத்னம் சினிமாவாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அது சாத்தியமா? என்று சந்தேகப்பட்டோர் அதிகம். எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குனர் வஸந்த் என்று பக்க பலத்துக்குக் கை கோத்துக் கொண்டு களமிறங்கினார் மணி. சூர்யா, விக்ரம் என்று ஆரம்பித்து விஜய் வரை தேடல் நடந்தது. ஆனால், பொருளாதாரம் மிரட்டவே, மறுபடியும் பொன்னியின் செல்வன் திட்டம் முடங்கிப் போனது.

ஒரு கோடி ரூபாய் செட்

இந்தி ‘தபாங்’ படத்தை தரணி டைரக்ஷனில் சிம்பு, ரிச்சா ஜோடி நடிக்க ‘ஒஸ்தி’ யாக எடுக்க முடிவு செய்த போது இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான ‘முன்னி’ பாடலை, தமிழில் யார் பாடுவார்? யார் குத்தாட்டம் போடுவார்? என்று சஸ்பென்ஸ் இருந்தது. தமிழில் வாலி பாடல் எழுத, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ராஜேந்தர் பாடியிருக்கும் ‘கலாசலா’ பாட்டுக்கு சிம்புவுடன் ஆட்டம் போட்டார் மல்லிகா ஷெராவத். அந்தப் பட்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் செட்.

பாடிப் பறந்த குயில்

பாலக்காட்டில் இசைக்குடும்பத்தில் பிறந்து, எம்.எஸ்.வி. மூலமாக ‘நீதிக்கு தண்டனை’ படத்தில் யேசுதாசுடன் டூயட் பாடி தமிழ் சினிமா பின்னணிப் பாடகர் உலகத்துக்கு 14 வயதில் அறிமுகமானவர் ஸ்வர்ண லதா. ‘கருத்தம்மா’ படத்தில் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காகத் தேசிய விருது பெற்றவர். 37 வயதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது துரதிருஷ்டவசமானது.

கோடியைத் தாண்டிய ‘கோ’

திரையிட்ட 5 நாட்களில் ஐந்து கோடி ரூபாய் வசூலித்து, சாதனை படத்தது ‘கோ’ படம். 100 நாட்கள் ஓடிய படம். 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படத்தின் வசூல் 50 கோடியாம். ரங்கம் என்று தெலுங்கில் ரிலீஸ் ஆகி அங்கேயும் நூறு நாள். இப்போது ஒண்ணரை கோடிக்கு இந்தி உரிமை விற்பனை, கஜினிக்கு அடுத்து, பாலிவுட்டால் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கும் தமிழ்ப் படம் இதுதானாம்.

பெண்களே! இது முழுக்க முழுக்க உங்களுக்கான சமூக வலைத்தளம்

யாரை பார்த்தாலும் சமூக இணையதளத்தில் சேர்ந்து தன்னுடைய கருத்துகளையும்,புகைபடங்களையும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சமூக இணைய தளத்தில் இணைந்து அதை நல்ல முறையாக பயன்படுத்துபவரும் உண்டு ..அதற்கு அடிமையானவர்களும் உண்டு.சமூக இணைய தளம் பல வித சர்ச்சைகளும் ஏற்படுவது உண்டு. சில வாரங்களுக்கு முன்பு கூட சோனியா காந்தியை பற்றி தரக் குறைவாக செய்தி வெளியிட்டிருந்தது பேஸ்புக் இணைய தளம்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் சில அரசியல் வாதிகள்.

தொலைத்தொடர்பு துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபில் சமூக இணைய தளங்களுக்கான தணிக்கை வேண்டும் என்று கூறி பெரிய சர்ச்சைக்குள்ளனர். சமூக இணைய தளத்தில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் கபில் சிபில் க்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இன்னொரு புறம் வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்,அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது.இதனால் பேஸ்புக் இல் இதற்காக தனி இணைய தளத்தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோற்க்கன ஆன்லைன் சேவை யை உருவாக்கி உள்ளார்.அதாவது இந்த இணையதளத்தில் ரத்தம் கொடுப்போர் பற்றிய தகவல்கள் அடங்கி இருக்கும்

இணைய தளம் :socialblood.org 

சமூக இணைய தளத்தில் நன்மைகள் பல இருந்தாலும் ,அதற்கு அடிமையானவர்களும் உண்டு.அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல தொல்லைகள் இந்த சமூக இணைய தளம் மூலமாக நிறையவே வருகிறது.இதற்கெனே ஒரே தீர்வு பெண்களுக்கென தனி சமூக இணைய தளம் உள்ளது.இந்த தளத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடிய முடியும்.

ஆண்களின் தொல்லையை தடுப்பதற்காகவும் மற்றும் பெண்கள் வன்முறையை தடுப்பதற்காகவும் பெண்களுக்கென ஒரு சமூக இணைய தளத்தை தொடங்கி உள்ளார் கனடா வைச் சேர்ந்த ஒரு பெண்மணி.இந்த இணைய தளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப் பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்றஇணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம்: https://www.luluvise.com/

ரத்த தானம் வேண்டுவோர்க்காண ஆன்லைன் சேவை!


இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இதுவரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .இணையதள முகவரி: 

http://www.friends2support.org/
இத்தளதிற்கு சென்று என்ன ரத்தப் பிரிவு தேவை என்பதையும்,இந்தியாவில் எந்த எந்த மாநிலத்தில்,எந்த மாவட்டத்தில்,எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்தல் போதும்.உங்கள் மாவட்டத்தில் ரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு ரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம்.
5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு ரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான்.ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுபினராக பதிந்து கொள்ளலாம்

.எங்கோ கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கு அரிய வகை ரத்தம் தேவைபடும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகபடுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும்.

உதவுங்கள் முகம் தெரியாத நண்பர்களுக்கு.

முல்லை பெரியார். மலையாளிகளின் ஜாதி, அரசியல், மொழி, இனவெறி

வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் அருட்கொடை. பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஒரே நாட்டிலுள்ள பல மாநிலத்தவர்கள் அவர்களிடையே மாறுபடும் பழக்கவழக்கங்கள்,கலாச்சாரம், பண்பாடு இவைகளை மிக எளிமையாக பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் செய்யாமலே அவர்களுடன் கொஞ்சம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நெருங்கி பழகும் குணமும் இருந்தால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம். ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு தமிழனை நீ எந்த நாட்டுக் காரன் என்று விசாரித்தால் யோசிக்காமல் நான்(இந்தி) இந்தியன் என்று சொல்வார்கள், (நானும் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்). அதற்கு பிறகு இந்தியாவில் நீ எங்கே என்று அவர் மேலும் தொடங்கும் போது மெட்ராஸி என்று சொல்லுவார்கள். ஆனால் இதே கேள்வியை மலையாளிகளிடம் கேட்டால் எடுத்தவுடனே நான் கேரளா என்பார்கள். அப்புறம் கேரளா எங்கு இருக்கிறது என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிறது என்பார்கள்.

இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரூமை உள்வாடகை விடுவதற்காக பொது இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டும் போது South Indian Only என்ற வாசகத்தை பயன்படுத்துவர்கள். அதே மலையாளிகள் கேரளா ஒன்லி என்று மலையாள மொழியில் நோட்டீஸ் அடித்து ஒட்டுவார்கள். மலையாளம் வாசிக்க தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். அப்படியொரு குறுகிய மாநில,இன,மொழி வெறி கொண்டவர்கள்.

அதே போன்று பத்திரிக்கை வாசிப்பது செய்திகளை தெரிந்துக் கொள்வது இதில் மலையாளிகளுக்கு ஆர்வம் ஆதிகம். இரண்டுக்கும் மேற்பட்ட மலையாள நாளிதழ்கள் சவூதியில் அச்சடிக்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் முழுநேரமும் செய்தி சானல்கள் ஒடிக் கொண்டு இருக்கும். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்ற ஹோட்டல்களில் முக்கால்வாசி டிவி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் அழுகுனி டிவி சீரியல்களும், குத்து பாட்டுக்களும் ஓடிக் கொண்டு இருக்கும். இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு வகையான ஊடகத்தை வளைத்து திரித்து தங்கள் கருத்தை திணிக்கும் கள்ளத்தனம். இந்த முல்லை பெரியாறு விவாகரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க, பிழைக்க துடிக்கும் பிழைப்புவாதிகள். இரு மாநில மக்களின் நல்லுறவை குலைத்தாவது லாபமடைய நினைக்கும் மனநிலை அரசியல், ஆன்மிக, மாநில, மொழி, இனம் என்ற போர்வையில் எத்தனை வகையான கள்ளத்தனங்கள்.

இதில் மீடியாக்களின் பொறுப்பற்ற விளம்பரத்தனமான பார்வைகள் மிக அசிங்கமானவை. காலையில் சிற்றுண்டி சாப்பிட இங்குள்ள (சவூதி - ரியாத்திலுள்ள) கேரளா ஹோட்டலுக்கு போயி சேட்டா ஒரு செட் புரோட்டா என்று ஆர்டர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் கேரளா கைராளி டிவி நியூஸ் சானலில் முல்லை பெரியாறு ஒடிக்கிட்டு இருந்தது.

அதில் தமிழக கேரளா எல்லையில் உள்ள மலையாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கவர் ஸ்டோரி செய்தி. பேட்டி எடுப்பவர்களிடம் தமிழ் கலந்து பேசும் மலையாளிகள் எங்கள் வீட்டுக்குள் தமிழ்காரவுங்கே புகுந்து ஆடு, கோழி பணம் இவைகளை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள் பாதுகாப்பில்லை என்று அழுகிறார்கள். அதை பார்த்து விட்டு ஆபிஸ்க்கு வந்து தமிழ் செய்திகளை பார்த்தால் தமிழக மக்கள் மலையாளிகளால் பாதிக்கப்பட்ட செய்திகளை கதை கதையாக செய்தி சானல்கள் ஒப்பித்து பாதிக்கப்பட்டவர்களை செய்தியாளர் களத்தில் சந்தித்து கள செய்திகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

மலையாள செய்தி சானல்களை தொடர்ச்சியாக பார்க்கும் மலையாளி, தமிழர்கள் இன வெறியர்கள் அவர்களுக்கெதிராக எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பது போலவே தமிழ் நியூஸ்களை பார்க்கும் தமிழக மக்களும் உசுப்பேத்தப்படுகிறார்கள். இருபக்கமும் கொம்பு சீவி விடும் வேலையை மீடியாக்கள் திறம்பட செய்கின்றன.

எத்தனையோ தமிழர்கள் கேரளாவில் பல தலைமுறையாக அங்கேயே பிறந்து வளர்ந்து மாநில மொழி பேசி மலையாளிகளாக மாறி போயிருக்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மலையாளிகள் அவர்களின் மொழி மறந்து தமிழ் பேசி தமிழர்களாக மாறி இருக்கின்றனர். இப்படி இருக்கிறவர்களை இது போன்ற தருனங்களில் அங்கு தமிழர்கள்கிறுக்கர்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பக்கத்து வீட்டு தமிழனாகி போன மலையாளியை தூக்கி போட்டு மிதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நன்மொழிகளை வழங்கியவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல இது. நியாயமான முறையிலான போராட்டங்களின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரியான வழிமுறையாகும். ஆனால் இதுபோன்ற அநீதியான செயல்களை யார் இரு பக்கமும் செய்கிறார்கள்? இங்கு தான் கள்ள பயல்கள் வருகிறார்கள்.

முதல் வகையான கள்ளர்கள் சமூக விரோதிகள்.


சுனாமி, இயற்கை பேரழிவு நடந்த போது இரக்கமுள்ள அனைத்து மக்களும் உதவி செய்து கொண்டு இருக்கும் போது சில சமூக விரோதிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். பிணங்களின் கையில் இருந்த மோதிரத்திற்காக விரலை அறுத்தவர்கள், தோட்டிற்காக காதை அறுத்தவர்கள். 



மங்களுர் விமான விபத்து நடந்து பல உயிர்கள் கருகி இறந்து கிடக்க உறவினர்கள் பிணத்தை கூட அடையாளம் காண முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் போது சில திருட்டு சமூக விரோதிகள் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள், நகைகளை கருகிய உடல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள். 




எகிப்து புரட்சி நடந்தபோது இது போன்ற சமூக விரோதிகள் கடைகளில் புகுந்தும் வீடுகளில் புகுந்தும் கொள்ளையடித்தனர். ஆனால் இதனை தொடர விடாமல் போராட்டக்காரர்களே ஒரு குழு அமைத்து சமூக விரோதிகள் தடுத்து நிறுத்தினார்கள். 

இலண்டன் கருப்பு இனத்தவரின் போராட்டங்களின் போது ஊடுருவி சமூக விரோதிகள் கடைகளை கொள்ளையடித்தை இங்கிலாந்தின் மீடியாக்கள் கருப்பர்கள் கொள்ளையர்கள், திருடர்கள். அதற்காகத்தான் கலவரம் செய்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தியது. அதன் பிறகு சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்தவர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.


முல்லை பெரியாறு போன்ற போராட்ட பிரச்சனைகளை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மலையாளிகள் வீடுகளில் புகுந்தும், கேரளாவில் தமிழர்கள் வீடுகளில் புகுந்தும் திருடுகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள் இந்த சமூக விரோதிகள் தான். இவர்களை அடையாளம் காண வேண்டும். அதை விட்டு விட்டு இதை ஒரு மாநிலத்தவரின் பன்பாக பார்க்கக் கூடாது


இரண்டாவது கள்ளர்கள் சந்தர்ப்பவாத,வகுப்புவாத அரசியல்வாதிகள்.


திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்டக்காரர்கள் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணைகட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்ட ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்.


தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "டேம்-999 " என்ற இந்த படத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மத்திய அரசு தயாராக இல்லையெனில் தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் குழுக்கள் பலமுறை சோதனை நடத்தி அணை பலமாக உள்ளது என தெளிவுப்படுத்தியும் கூட மக்களிடம் பீதியை ஏற்படுத்த கேரள அரசு செயல்பட்டு வருவதாக ஊருக்கு ஊரு பேச்சு என்பது போல் அறிக்கை விடுகிறார்.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் சுத்த அரசியல் கள்ளத்தனங்கள்.

இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அதனுடைய நியாயங்களை ஆதரிப்போம்.

நன்றி: நண்பர் ஹைதர் அலி 
 ரியாத்