Thursday, February 3, 2011

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல்களும் தீர்வுகளும்


கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன.



கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில்USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன. பழைய வகை சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப் பட்டிருந்தன.

மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பெரும்பாலும் பயன்பட்டு வந்தன. பின்னர் இவற்றின் பயன்பாடு அதிகமாகவும், வேகத் தேவை கூடுதலாகவும் ஆன போது, USB 2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
Start –> My Computer சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின்Device Manager ல் கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial Bus controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும்.


உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 2.0 இருந்தால் அங்குEnhanced Host Controller or USB 2.0 Controller என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும்.

நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும்.

பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் சிஸ்டம் புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும். அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா?

வீடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைச் சரி செய்திட, கீழ்க்குறித்தபடி செயல்பட வேண்டும்.

Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும்.

இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப் படாததாக இருக்க வேண்டும்.

இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் பிரிவை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.

யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும்.

அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத் தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப் பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும்.

இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.



Read more: http://therinjikko.blogspot.com/2010/11/blog-post_29.html#ixzz1CvQaS5hs

உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன்


எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்ற‌ன. நவீன மொபைல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.



பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். மொபைல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எறியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு மொபைல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே? இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. 
சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது. இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.

இமெயில் அனுப்ப முடியாது.வை பை வசதி எல்லாம் இல்லை, பேஸ்புக் பார்க்க முடியாது.கேமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியாது. இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.

அவ்வளவே. உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்திருக்கிறது.மொபைல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜான்ஸ்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை. 

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து. 

அலங்கார ரிங்டோன் எல்லாம் இல்லாமல் தொழில்நுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த மொபைல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.

அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும். அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம். 

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில் தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும். 

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய, அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான மொபைல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது. நவீன வாழ்வின் சிக்கல்கள் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.



Read more: http://therinjikko.blogspot.com/2010/11/blog-post_19.html#ixzz1CvOMuR4q