Wednesday, December 29, 2010

இணைய பாதுகாப்பு - சாட்டிங், கிரெடிட் கார்ட் பாதுகாப்பு, கேமரா

இணையம் கைக்குள் உலகத்தை கொண்டுவந்துவிட்டது என்று சொல்வதை நிஜமாக்கி காட்டியிருக்கிறது. மின்காந்தமும் அதன் விளைவாக மின்சாரமும் முக்கிய கண்டுபிடிப்பாக இருந்த அறிவியலில் இப்போது கணினி மிகப்பெரிய சாதனையாக உள்ளது, அறிவியலின் அடுத்த கட்டம் DNA மரபணு, அண்டம் என விரிகிறது.


சரி, நாம் இங்கே பார்க்கப்போவது இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தத்தொடங்கிவிட்ட இணையம் அதாவது இன்டெர்நெட். அதில் பயனாளர்களின் பாதுகாப்பு. எவ்வாறு பாதுக்காப்பாக இணைய்ததில் உலா வரலாம்,எதை செய்யக்கூடாது, எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்பது பற்றி நடைமுறை மற்றும் பட்டறிவு கொண்டு அலசுவோம்.

ஏன் எதை எதிலிருந்து?

ஏன் பாதுக்காப்பாக இருக்கவேண்டும் அல்லது எதை பாதுகாக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஆனால் நம்மை பாதுகாக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் விளையும் என அறிந்து வைத்திருந்தால் பாதுகாத்தலின் அவசியம் புரியும்.

பொதுவாக ஒரு ஆணோ பெண்ணோ இணையத்தில் உலா வரும் போது அதிகமாக பயன்படுத்தும் சேவைகள் மின்னஞ்சல், தகவல் அறிதல் மற்றும் தகவல் பரிமாற்றம் இவைகளாகும்.

இவ்வாறான சேவைகளை பயன்படுத்தும் போது நம் சொந்த தனிப்பட்ட தகவல்களை பரிமாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? ஏன் என்றால் கணினி பயன்படுத்துவோர் அனைவருமே கணினி வல்லுநர்கள் அல்ல. இப்போது மிகச்சிறிய வயதிலேயே கணினி அறிவு கட்டாயமாகிறது மற்றும் வயதானவர்களுக்கும் தேவைப்படுகிறது. அதனால் சில மு்ககியமான தகவல்களை அறிந்து வைத்திருத்தல் எப்போதும் நலம் பயக்கும். அறியாமல் அல்லது தவறாக பயன்படுத்துதல் சில சமயம் பொருள் நஷ்டம், மான நஷ்டம், மன உளைச்சல், ஏன் உயிருக்கே உலை வைக்கும் சம்பவங்களும் ஏராளம்.

இந்த கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது

சாட் செய்யும் போது
பண பரிமாற்றத்தின் போது
இணைய உலாவும் போது
வைரஸ் மென்பொருட்கள்
சமூக தொடர்பு இணையதளங்களில்
...சில டிப்ஸ்

சாட் செய்யும் போது

இப்போது மொபைல் மூலமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னோடி முன்பு யூனிக்ஸ் OS ல் இருந்த இந்த சாட் வசதி. இப்போது வெறும் எழுத்து சாட் இல்லாமல் அது பேசுதல், பார்த்தே பேசுதல் வரை வந்திருக்கிறது. சரி நாம் வெளியே போகிறோம், பலர் நம்மை பார்க்கிறார்கள், பலருடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இதே போல் தானே இணைய சாட் வசதி, இதில் என்ன பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று கேட்டால் சரிதான். ஆனால் நாம் நேரடியாக ஒருவருடன் பேசுதல் என்பதின் அளவும் இணையம் வழி பேசுதல் என்பதன் அளவும் வகையும் வேறுபடுகிறது.

இணையம் வழி என்றால் மறுமுனையில் பேசுபவர் எப்படிப்பட்டர், எங்கிருக்கிறார், என்னசெய்துகொண்டிருக்கிறார், ஆணா பெண்ணா, வயதானவரா இல்லையா, அவரது நோக்கம் என்பது போன்ற விசயங்கள் தெரியாது. நேரடியாக பேசுவதில் இதில் சிலதை ஓரளவு கணிக்க முடியும்.

ஆணா பெண்ணா?

மறுமுனையில் இருப்பவர் ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்வதிலேயே மிக பலரும் சோதனைக்குள்ளாவதுண்டு.
ஒருவர் அது பெண்தான் என நம்புகிறீர்கள், அவர் எவ்வாறெல்லாம் தங்களை ஏமாற்றுவார் என அறிந்துவைத்துக்கொள்ளல் அவசியம்.

போட்டோ பார்த்திருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கு மிக பொருந்தும். அந்த நபர் ஒரே ஆளின் பல வகை படத்தை அனுப்பினாலும் அது பெண்தான் அல்லது அதே நபர் தானே என உறுதியாக சொல்ல முடியாது, ஏனெனில் இணையத்தில் பலருடைய படங்கள் கிடைக்கின்றன. அதை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அவர் போட்டோ தருவது நீங்களும் தரவேண்டும் என்பதற்கு அடையாளமாக இருக்கலாம்.

வெப்கேம் வீடியோ பார்த்திருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கும் மிகமிக பொருந்தும். ஏன் என்றால் ஒரு ஏற்கெனவே பதியப்பட்ட வீடியோவை சாட்டில் தன்னுடைய கோமரா வீடியோ என காட்ட கணினியை செய்து வைத்திருந்தால் பார்ப்பதை உண்மை என நம்பிவிடுவீர்கள்.

இதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

முக்கியமாக அதை பார்க்கும் போதே நிகழ் காலத்தில் நடந்தது போல் இல்லாமல் வேகமாக இருந்தாலோ அல்லது தெளிவில்லாமல், கேமரா கோணம் அதிக மாறி அசைந்தாலோ, சாதாரண வீடியோ படம் பார்க்கும் எண்ணத்தை கொடுத்தலாமோ இருந்தால் கொஞ்சம் யூகிக்கமுடியும், ஆனால் அதுவோ உண்மையாக இருக்கவேண்டியதில்லை.

ஆனால் அந்த வீடியோவின் மேல் எப்போதாவது வேறு படங்களோ எழுத்துக்களோ விண்டோக்களோ, டெக்ஸ்டாப் திரையோ தெரிந்தால் கண்டுபிடித்துவிடலாம். சரியாக இது நிஜமான தற்சமய வீடியோதான் என உறுதியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அந்த நபரிடம் ஏதாவது செய்யச்சொல்லுங்கள், சிரிக்கவோ, கையை காட்டவோ, இப்படி ஏதாவது. நிகழ் நேரத்தில் இது நடந்தால் கேமரா என தெரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே வெப்கேமராவில் எடுக்கப்பட்ட அல்லது பார்க்கும்போது பதியப்பட்ட வீடியோ எனில் கண்டுபிடிப்பது கடினம். (அதிகமாக பெண் அல்லது வேறு நபர் என சொல்லி சாட் செய்பவர் தான் இவ்வாறு நம் கேமராவையும் பார்க்க இவ்வாறு செய்யக்கூடும்)

அவருடன் வாய்வழியாக பேசியிருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கும் மிகமிக பொருந்தும். ஏன் என்றால் உங்களை ஏமாற்ற இதற்கும் கேமார மாற்றியது போல இதை செய்துவிடுவார்கள், இது நிகழ் காலத்திலேயே நடக்கும் ஆததால் கண்டறிவது கடினம். ஒரு பெண் பேசுவது போலவே இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்கும். கவனம். பேசுவது பெண்தானே என எல்லாவற்றையும் உளராதீர்கள், முக்கியமாக ஆண்களும் ஏமாறிவிடவேண்டாம்.

மொபைல் நம்பர் தருகிறார்களா?

பலர் மொபைல் நம்பர் கேட்கும் போது வேறு ஏதாவது பெண்களின் மொபைல் எண்களை தந்துவிடுவார்கள். நீங்கள் அழைத்தால் ஹலோ கேட்டு ராங் நம்பர் என வைத்துவிடுவார்கள். ஆனால் அந்த பெண்ணே இதற்கு உடந்தையாக இருந்தால் கண்டறிவது கடினம், இவ்வாறான தவறுகள் இணைய விபச்சார கும்பலில் நடக்கும். அதனால் தொலைபேசி எண் தந்துவிட்டாலே அவள் அப்படிப்பட்டவள் என தவறாக நினைத்துவிடாதீர்கள், அது அவர்களின் தன் நம்பிக்கையையையும் நம் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.

சரி இப்போது நம் பக்கத்தில் இருந்து பார்போம்.

போட்டோ கேட்பார்கள், கேமரா இருந்தால் பார்க்கமுடியுமா என கேட்பார்கள், மொபைல் எண் அல்லது சாட்டிலேயே வாய்வழி பேசமுடியுமா என கேட்பார்கள். இது முக்கியமாக பெண்களுக்கு.
இதில் எதை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பது முழுமையாக உங்களுடை பொறுப்பு.

உங்கள் போட்டோவை யார் பார்த்தாலும் பரவாயில்லை, பிரச்சனையில்லை என்றால் தாராளமாக கொடுக்கலாம். அப்படி கொடுக்கவேண்டாம் என்றால் சாட்விண்டோவில் கூட கொடுக்கவேண்டாம். பார்க்க மட்டும் தானே என நினைத்து கொடுத்தால் தவறு. அவர்கள் பார்க்கும் போதே அப்படத்தையும் சேமித்துவிடமுடியும், அப்புறம் அவர்கள் அதை தவறாக பயன்படுத்தவும் முடியும். அதாவது மற்றவர்களுடன் பவகும் போது உங்கள் விபரங்களையோ போட்டோவையோ கொடுத்து ஏமாற்ற வாய்ப்புள்ளது.

இதே போல் தான் வெப்கேமராவும். அவர் அதை பார்க்கும் போதே அதை வீடியோவாகவே சேமித்துக்கொள்ள முடியும். இதனால் மிக நெருங்கியவராக இருந்தாலும் அளவோடு நிறுத்திகொள்ளுதல் நலம்.

மிக முக்கியமாக இணைய மையங்களில் (Browsing center) இருந்து இணையம் பயன்படுத்துபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவும், ஏனென்றால் தலமையிடத்திலிருந்து உங்கள் கணினி திரையை பார்க்கும் வசதி செய்திருந்தால் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதாவது உங்களை கணினி திரையை அவர்களும் பார்வையிடமுடியும் என்பதை மறவாதீர்கள்.

அரட்டையில் உரையாடியதை சேமிக்கிறீர்களா?

நாம் அரட்டையில் உரையாடும் போது அதை அப்படியே சேமித்து வைத்துக்கொள்ள பல தளங்கள் வாய்ப்பளிக்கிறது. இத பல நேரங்களில் மிக நல்ல வசதி. ஆனால் என்றாவது ஒரு நாள் உங்கள் மின்னஞ்சல் பிறர் கைக்கு கிடைத்துவிட்டால்? யோசியுங்கள், தேவையான உரையாடல் மட்டும் சேமித்துவைத்துக்கொள்வது நல்லது.

அரட்டைக்கு எந்த முகவரியை பயன்படுத்துகிறீர்கள்?

எப்போதுமே பொதுவான அரட்டைக்கு நம் தனிப்பட்ட மின்னச்சல் ஐடியை பயன்படுத்தாமல் அதற்கென்று பொதுவான ஐடியை பயன்படுத்துவது நல்லது. அதுவும் அலுவலக சூழலில் அல்லது பொது கணினிகளில், இணைய மையங்களில் இருந்து கொண்டு personal ஐடிகளை பயன்படுத்துவதை தவிற்கலாம்.

இதைத்தவிர நம் மின்னஞ்சல் முகவரியை நம் துணைக்கும் பிற்காலத்தில்
பார்வையிட அனுமதிப்போம் என்பதை மறவாதீர்கள்.

இன்னும் சில

• அந்த நபருடன் எத்தனை நாள் பழக்கம் இதற்குமுன் நேரடியாக பழகியவரா இல்லையா என்பதை ஒருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.

• அந்த நபர் எவ்வாறு எங்கே நமக்கு அறிமுகமானார் என நினைவில் கொள்ளுங்கள்.

• அவர்களாக உங்களை சாட்க்கு அழைத்தார்களா அல்லது நீங்களாக இணைந்தீர்களா என்பதையும் யோசியுங்கள்.

• நாம் பேசும் விசயம் அல்லது மறுமுனையில் இருப்பவருக்கு சொல்லும் விசயங்கள் நிஜமாகவே தேவைதானா என ஒருமுறை யோசியுங்கள்.

• மின்னஜ்சல் ஐடியில் நடிக நடிகை போட்டோ வைத்திருப்பவர்கள், g.i.r.l, f, fe, s.e.x.y, 4u போன்ற வார்த்தைகள் வைத்திருப்பது இவைகளின் மேல் ஒரு சந்தேகக் கண் வைத்திருப்பது நல்லது. அது அவர்களது பொழுதுபோக்கு ஐடியாக இருக்கக்கூடும். (விபச்சார கும்பலில் சேர்ந்த ஆண் பெண்கள் ஆட்களை கவருவதற்காக இவ்வாறு பல கவற்சியான ஐடிக்களை பயன்படுத்தக்கூடும், ஆனால் இவ்வாறு இருந்தலே அவர்களை தவறாகவும் நினைக்கவேண்டாம்)

• ஒருவர் அடிக்கடி தேவையில்லாமல் தங்களை தொந்தரவு செய்கிறார் என்றால் தெரியாநிலை(invisible ) மோட் இருந்தால் அதை பயன்படுத்தலாம், அப்போது அவர் தாங்கள் நிகழ் நிலையில்(online) இல்லை என்று நினைக்கலாம். அல்லது அவர்களை தடுத்துவிடலாம். தேவையில்லாத நபர் சாட்டுக்கு அழைத்து மறுத்தும் மறுபடியும் அழைக்கிறார் என்ரால் அவர் சாட்டில் சேர்த்தபிறகு தடுத்து(block) விடலாம்.

• சாட் செய்வதற்கு முகபிரபலமான தளங்களின் நிஜமான முறையை மட்டும் பின்பற்றி அரட்டையடிக்கலாம். அதாவது yahoo, gmail, live பயந்படுத்துகிறீர்கள் என்றால் அவரவர்கள் கொடுத்துள்ள வழிமுறைகளில் மட்டும் உபயோகப்படுத்துங்கள், வேறு மென்பொருளில் இருந்து yahoo, gmail, live போன்று பயன்படுத்த வசதி இருந்தாலும் அதை பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். அல்லது அதன் நிஜமான தளத்தில் இந்த மாற்றுதளத்தினைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா என அறிந்து அவ்வாறு இருப்பின் மட்டுமே பயன்படுத்தவும்.

• Yahoo, gtalk, msn messenger தரவிரக்கம் செய்வோர்கள் அந்தந்த தளத்திலிருந்து மட்டுமே தரவிரக்கம் சேய்யவும், இதேபோல போலி மென்பொருட்கள் வேறு தளத்தில் கிடைக்கலாம், அதை பயன்படுத்துவதை தவிற்கவும். அதாவது yahoo வேண்டும் என்றால் yahoo தளத்தில் இருந்து தரயிரக்கம் செய்யப்பட்ட மென்பொருளை மட்டுமே பயன்படுத்துங்கள், இதே yahoo அரட்டை மென்பொருள் வேறு தளத்தில் கிடைக்கிறது என்றால் அது hack செய்யப்பட்ட பொருளாக இருக்கக்கூடும். அதை பயன்படுத்தினால் உங்கள் கணினியில் உள்ள மற்ற விபரங்கள், உங்கள் கேமரா போன்றவற்றை திருடலாம், அல்லது அதை hack சேய்தவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதே போல் அது செயல்படும்.

• உங்களுக்கு அடுத்தவர் குறிச்சொல்லை(பாஸ்வேர்ட்) திருடலாம் என செய்முறை விளக்கத்துடன் மடல் வந்தால் அதை உடனடியாக அழிப்பது நல்லது, அதில் கூறிய படி செய்தால் திருடப்படுவது உங்கள் குறிச்சொல்லாகும், இதற்காகவே பலரும் gmail, yahoo, live போன்ற பிரபலமான தளங்களில் pwdsupport, password.support, password.retrieve, போன்று பல பெயர்களில் மின்னஞ்சல் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு ஏற்கெனவே முயற்சித்து விட்டீர்கள் என்றால் உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவும்.

• உங்கள் பிள்ளைகள் யாருடன் சாட் செய்கிறார்கள் என்பதில் கவனம் தேவை.

• வேறு ஒருவர் எப்படிப்பட்டவர் என அறிய யாராவது நம்மை வேறு முகவரியில் இருந்து சோதிக்கக்கூடும் என்பதையும் மறவாதீர்கள்.

படிப்பவர்களுக்கு

• இந்த கட்டுரையை படிப்பவர்கள் இதில் கூறப்பட்ட வழிமுறையை தவிர்த்து வேறு வழியாக ஏமாற்றலாம் என்பதையும் நியாபகத்தில் கொள்க.
• இக்கட்டுரையில் பிற்காலத்தில் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் ஏற்படலாம்.
• இந்த கட்டுரை தங்கள் நண்பர்களுக்கு உதவும் என நினைத்தால் தளத்தில் பதியவோ அல்லது தனிமடலாக அனுப்பவோ எவ்வித மாற்றம் செய்யப்படாமல் எழுதியவர் பெயருடன் (நாந்தேன். ஹிஹி) அனுப்ப முழு உரிமை அளிக்கப்படுகிறது.

வந்துவிட்டது GOOGLE - இன் புதிய IMAGE FORMAT - WEBP


நாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே. 

அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம்.

இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட் ஆவதற்கு வசதியாக கூகுள் புது வகையான இமேஜ் பார்மேட்டை அறிமுகப்படுத்துகிறது. அதாவது படங்களுக்கென ஏற்கனவே நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட இமேஜ் பார்மேட்களில் ஜேபிஇஜி பார்மெட் தான் இதுவரைக்காலமும் மிக குறைந்த பைல் சைசில் தரமான புகைப்படங்களை வழங்கி வந்தது.

இப்பொழுது அதைவிடவும் மிக மிகக் குறைவான பைல் சைசில் அதே மாறாத தரத்துடன் புதியவகையிலான இமேஜ் பார்மேட்டை வெப்பி என்ற பெயரில் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெப்பி பார்மேட்டானது ‌ஜேபிஇஜி இமேஜைக் காட்டிலும் சராசரியாக 40% குறைவான பைல் சைசில் கிடைக்கிறதாம்.

இதுகுறித்து கூகுள் உயர் அதிகாரி ரிச்சர்ட் ராபர்ட் கூறுகையில் ” தற்போது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் இமேஜ் பார்மேட்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்க்கப்பட்டவை.

ஆகவே கூகுளின் சில பொறியியலாளர்கள் ஜேபிஇஜி போன்ற அதிவேகமாக லோட் ஆகும் குறைந்த பைல் சைசில் மாறாத தரம் பெற்ற இமேஜ் பார்மேட்டினை உருவாக்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு பகுதியாக புதிய இமேஜ் பார்மேட்டின் முன்மாதிரி வெளியிடுகிறோம். ” என்கிறார்.

கூகுள் நிறுவனம் இந்த புதிய வகை இமேஜ் பார்மெட் அனைத்து வகை இணைய உலாவிகளிலும் (இண்டர்நெட் பிரவுசர்) தெரியும் வகையில் உலாவிகளின் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும்

பண்புகளை கொண்டது இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)
 

1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.


 

2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படி பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.

அரசாங்கத்தின் இலவசப் பட்டியலின் நீளம் இப்படிப் போகிறது

தமிழக கிராம, நகர்புறங்களில், படிப்பறிவற்ற பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், கருவிலேயே குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம், “அயோடின்’ சத்து குறைவு. இதை தவிர்க்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில், “அயோடின்’ உப்பு பாக்கெட் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உப்பை பயன்படுத்தினால், கருச்சிதைவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு மூளை, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். 

கருச்சிதைவை தடுக்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில் “அயோடின்’ உப்பு, நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இளம் பெண்களுக்கு “சானிடரி நாப்கின்’ ஆகியவை இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

ஊனமுற்ற குழந்தை பிறப்பு தவிர்க்கப்படும். இத்திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அடுத்த இலவசம்: “சானிடரி நாப்கின்’ பயன்படுத்தாததால், கிராமப்புற இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க, அரசு ஆஸ்பத்திரிகளில், நோயாளிகள் நல நிதியிலிருந்து நாப்கின்கள் கொள் முதல் செய்து, இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

பொழுதுபோக்கு பௌதிகம் - யா.பெரல்மான்

 முழுப்புத்தகம் வாசிக்க இங்கே கிளிக செய்யவும்
http://enayamtahir.blogspot.com/2010/12/blog-post_9971.html


நத்தையின் வேகம் விமானத்தின் வேகத்தைவிட எத்தனை மடங்கு குறைவு என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? வெள்ளை நிறத்தை விட, கறுப்பு நிறம் அதிக வெப்பத்தை உள்வாங்கும் என்பதை நீங்கள் எந்த வகுப்பில் படித்தீர்கள்? ஆப்டிகல் இலூஷன்(Optical Illusion) எனப்படும் மாயபிம்பப்(காட்சிப் பிழை) படங்களை பார்க்கும்பொழுது அவை நம் கண்களில் எப்படி செயல்படுகின்றன என்று சிந்தித்திருக்கிறீர்களா? ஸ்லோமோஷன் காட்சிகளை எப்படி எடுக்கிறார்கள் என்பது எந்த வயதில் உங்களுக்குத் தெரியும்? தண்ணீர் குடிக்கிறீர்கள்; தண்ணீர் எப்படி உங்கள் வாய்க்குள் செல்கிறது(விண்வெளியில் இருந்தால் அப்படி செல்லாது!)?




மேற்சொன்ன விஷயங்களில் சில உங்களுக்கு, "இதெல்லாம் என்ன அற்ப விஷயம்!"
என்று தோன்றியிருக்கலாம். ஆனால் அந்த அற்ப விஷயங்களுக்கு பின்னால் எவ்வளவு விஞ்ஞானம் ஒளிந்திருக்கிறது என்பதை மிக எளிமையாக புரியும்படி இந்த புத்தகம் விளக்கிச் செல்கிறது. தண்ணீர் குடிப்பது போன்ற அற்ப விஷயங்களை மட்டுமல்ல, ஒரு செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதையில் நிறுவ எவ்வளவு வேகம் கொடுக்க வேண்டும் என்பது கூட அதே எளிமையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற விஷயங்களெல்லாம் எனக்கு பத்து வயதிலேயே தெரிந்ததற்கு, பெரல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம் முதல் இரு தொகுதிகள், சிறு வயதிலிருந்தே எங்கள் விட்டிலிருந்ததுதான் காரணம். எந்தவொரு விஷயத்தையும், அவை சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும், அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தத்துவத்தை அலசி ஆராயும் எனது சிந்தனை போக்குக்கும் இதுதான் காரணம். ஒரே ஒரு சின்ன விஷயம். இதைப் படித்து முடித்ததும், உங்களுக்கு உலகத்தில் எல்லாமே தெரிந்து விட்டதாக ஒரு நினைப்பு தோன்றும். அதிலிருந்து இறங்கி வர சில நாள்/வாரங்கள் ஆகலாம். இன்னொரு சின்ன விஷயம், இது கதையோ கட்டுரைத் தொடரோ அல்ல என்பதால் இதை ஒரே மூச்சில் முழுதாக உங்களால் படித்து முடிக்க முடியாது. அப்படி இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிப்பது ஒரு வகையில் வீண்தான். கொஞ்சம் கொஞ்சமாக, முதலில் விருப்பமுள்ள பிரிவுகளை படிக்கத் தொடங்கினால், பிறகு மற்ற பிரிவுகளும் படிப்பதற்கு தானாகவே விருப்பம் வந்துவிடும்.

முன்னேற்ற பதிப்பகத்தார் பிரசுரித்த இந்த இரு தொகுதிகள் போக பெரல்மான் மேலும் சில தொகுதிகள் எழுதியிருந்தாலும், அவை தமிழில் பிரசுரமானதாகத் தெரியவில்லை. இந்த இரு தொகுதிகள் கூட இப்பொழுது விற்பனையில் இல்லை. ஆனால் இப்பொழுது பல பேர், முன்பு தங்கள் வீட்டிலிருந்ததாக சொல்லக் கேட்கிறேன். ஒரு ஆர்வலர், இதை மீண்டும் எளிமைப்படுத்தி தமிழில் புத்தகமாகப் போடப்போவதாக கேள்வி! நடக்குமா என்றுதான் தெரியவில்லை?

கார் விலையை உயர்த்தியது டாடா - நானோ, ஆரியாவுக்கு விதி விலக்கு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இருப்பினும் நானோ மற்றும் ஆரியா ஆகியவற்றின் விலையை உயர்த்தவில்லை.

 
2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. 1.5 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கார்களுக்கான விலை உயர்வு இது. 

இருப்பினும் நானோ, ஆரியா ஆகிய கார்களுக்கான விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தவில்லை.

ஏற்கனவே ஹூண்டாய் மோட்டார்ஸ், ஜிஎம், வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது அந்த வரிசையில் டாடாவும் இணைகிறது.

நானோ கார்களின் விற்பனை படு மோசமான வீழ்ச்சியை சந்தித்திருப்பதால் அதன் விலையில் கை வைக்க விரும்பவில்லை டாடா மோட்டார்ஸ் என்று தெரிகிறது. மாறாக அதன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை அது முடுக்கி விடவுள்ளது.

இந்தியா எப்போது இந்த அளவு வேகத்துக்கு மாறப்போகிறதோ


ஆம்ஸ்டர்டாம்: நம்ம ஊரில் பிராட்பேண்ட் சர்வீஸின் வேகம் இன்னும் 256 Kbps-லேயே நொண்டியடித்துக் கொண்டிருக்க, பல வெளிநாடுகளில் 100 mbps -க்கும் அதிகமான வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் வசூலிக்கப்படுவதை விட குறைந்த தொகையே அங்கெல்லாம் வசூலிக்கப்படுவதாக சொல்கிறார்கள். இப்போதுதான் இந்தியால் 4 Mbps, 8 Mbps என்று வேகம் சற்றே அதிகப்படுகிறது. ஆனால் கட்டணம் தீட்டிவிடுகிறார்கள்.

ஆனால் கூகுள் நிறுவனம் தனது ஃபைபர் நெட்வொர்க் மூலம் 1 GB வேகம் கொண்ட அதிநவீன பிராட்பேண்ட் இணைப்புகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது.
இந்த அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியைப் பெறும் முதல்நாடு நெதர்லாண்ட்ஸ்தான்.
முதல் கட்டமாக நெதர்லாந்தின் ரெஜிஃபைபர் நிறுவனம் கேபிஎன் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளத கூகுள்.
இதன் மூலம் தனது 3 லட்சம் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும், எஃப்டிடிஎச் மூலம் ஒரு ஜிபி வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவை வழங்க ரெஜிஃபைபர் திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக ஸீவோர்ல்ட் நகரம் இந்த சேவையை பெற உள்ளது.
அமெரிக்காவிலும்…
கூகுளின் இந்த புதிய திட்டத்தை அமெரிக்காவில் செயல்படுத்துமாறகு ஒபாமா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டுதான் கூகுள் இயங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அமரிக்காவின் அழைப்பை ஏற்று, போர்ட்லேண்டில் முழுமையான 1 ஜிபி பிராண்ட்பேண்ட் சேவையை கூகுள் வழங்குகிறது.
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டுக்குள் 5 லட்சம் வீடுகளுக்கு 1 ஜிபி பிராண்ட்பேண்ட் வசதி தரப்பட்டுவிடும் என கூகுள் அறிவித்துள்ளது.
இதற்கு தோதாக நாடு முழுவதும் புதிய ஆப்டிகல் பைபர் கேபிள்களை மாற்ற அமெரிக்க நகர மேயர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நம்மாளுங்க இன்னும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் பஞ்சாயத்தையே முடிப்பதைக் காணோம்.. எல்லா வசதிகளையும் கொண்ட இந்தியா எப்போது இந்த அளவு வேகத்துக்கு மாறப்போகிறதோ

மீண்டும் ‘வேலையைக் காட்டிய’ செல்போன் நிறுவனங்கள்!

எண்களை மாற்றாமல் நெட்வொர்க்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியை அமல்படுத்தும் விஷயத்தில் இந்திய தொலைத் தொடர்புத் துறையும், செல்போன் நிறுவனங்களும் செய்துவரும் தாமதம், பகிரங்கமாகவே மக்களை ஏமாற்றும் சமாச்சாரம்.
 வாடிக்கையாளர்களை முடிந்த வரை சுரண்டுவது… உண்மை அம்பலமான பிறகும் கூட திருட்டுத்தனத்தைத் தொடர்வதென்பது அநேகமாக இந்தியாவில் மட்டுமே தொடர்ந்து நடக்கும் சமாச்சாரம். இதில் தனியார் துறை, அரசுத் துறை என்ற பேதமே இல்லை…



ண்களை மாற்றாமல், வேறு மொபைல் நெட்வொர்க்குக்கு மாறிக் கொள்வது’ என்பது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்தியாவில் பேசப்பட்டு வரும் சமாச்சாரம். இந்த வசதி வெளிநாடுகளில் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்டது

ஆனால் அந்த வசதியை இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் அநியாயத்துக்கு அடம் பிடிக்கின்றன தனியார் செல்போன் நிறுவனங்கள்.
என்ன காரணம்?
‘வெரி சிம்பிள்… பயம்தான், இருக்கிற வாடிக்கையாளர்களையும் இழந்துவிடுவோமா என்ற பயம்தான் இந்த தள்ளிப் போடலுக்கு முழு காரணம்’ என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பயத்தின் விளைவு இதோ, 6வது முறையாக மீண்டும் ஒத்திப் போட்டுள்ளது தொலைத்தொடர்புத் துறை.
செல்போன் எண்களை மாற்றாமல், நெட்வொர்க்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி 2003-ம் ஆண்டே பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஆனால் அந்த நாடுகளை விட அதிக வாடிக்கையர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் இந்த வசதியை செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அளிப்பது குறித்து முதல் முதலில் 2006-ம் ஆண்டுதான் பேசப்பட்டது. உடனடியாக இதனை இந்தியாவில் அமல்படுத்த போதுமான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதி பிஎஸ்என்எல் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் – ஏர்டெல் உள்பட- அப்போது இல்லை.
இந்தியாவில் இன்று 650 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 12க்கும் மேற்பட்ட மொபைல் நெட்வொர்க்குகள் அவர்களுக்கு செல்போன் சேவை அளித்து வருகின்றன.
வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்தும் கூட, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை தனியார் செல்போன் நிறுவனங்கள் என்பதே உண்மை.
இன்றைய நிலையில், பல்வேறு நெட்வொர்க் மூலமும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 15 பில்லியன் அழைப்புகளுக்கும் மேல் செய்கிறார்கள். எனவே ஒரு மொபைல் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாறும்போது, கூடுதல் வாடிக்கையாளர்களைத் தாங்கும் சக்தி அந்த நெட்வொர்க்குக்கு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உறுதியை ஓரிரு மொபைல் ஆபரேட்டர்கள் தவிர வேறு யாரும் வழங்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஏசி – நீல்சன் சர்வேயின்படி, 5ல் ஒரு மொபைல் வாடிக்கையாளர், இருக்கும் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாற விரும்பியது தெரியவந்தது. இதே சர்வே மீண்டும் சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட போது 5-ல் இரண்டு வாடிக்கையாளர் தற்போதுள்ள நெட்வொர்க்கில் அதிருப்தியுடன் உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆக இன்றைய சூழலில் இந்த வசதியை அறிமுகப்படுத்தினால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் வேறு நெட்வார்க்குக்குப் போகும் அபாயம் உள்ளது.
இதனைச் சமாளிக்க, பெரும் சலுகைகள், கட்டணக் குறைப்புத் திட்டங்கள், புதிய வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டி வரும். ‘ஒரு செகண்ட் பில்லிங்’ என்று சொல்லிக் கொண்டு, வரும் அழைப்புக்கும் (இன்கமிங்) பணம் பறிக்கும் தகிடுதத்தங்களைத் தொடர முடியாமல் போகும் என்ற பயமே தனியார் நிறுவனங்களை வாட்டுகிறது.
இதன் காரணமாகவே, விரும்பிய நெட்வொர்க்குக்கு மாறும் வசதியை இவை தள்ளிப் போட்டு வருகின்றன என்கிறார்கள்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிலை என்ன?
நிறைய வசதிகள் இருந்தாலும், தனது மோசமான வாடிக்கையாளர் சேவை காரணமாக வாடிக்கையரிடம் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்து வைத்துள்ளது பிஎஸ்என்எல். இன்றைய சூழலில் நெட்வொர்க் மாறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் முதல் அடி பிஎஸ்என்எல்லுக்குத்தான் என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்நிறுவன சென்னை வட்ட அதிகாரிகள் சிலர்.
அதே நேரம் கட்டண தில்லுமுல்லுகளில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கப்பதாக ஏர்டெல், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த உண்மை புரிந்திருப்பதால், இந்த நிறுவனங்களும் நெட்வொர்க் மாற்றத்தை அடியோடு வெறுக்கிறார்களாம்.
எப்போதுதான் நெட்வொர்க் மாற்றம் சாத்தியமாகும்?
ஆரம்பத்தில் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக துறையின் அமைச்சர் ஆ ராசா கூறினார். அடுத்த சில வாரங்களில் இது டிசம்பர் 2009-ஆக தள்ளிப் போடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2010 என கெடு வைத்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஏப்ரல் 2010 ஆனது. பின்னர் ஜூலை 2010-க்கு தள்ளி வைத்தார்கள். இதுவே கடைசி டெட்லைன் என்று வேறு உறுதி கூறினார்கள்.
ஆனால் ஜூலையும் போனது. ஒருவழியாக நவம்பர் ஒன்றாம் தேதி, அதாவது இன்று, விரும்பிய நெட்வொர்க்கு மாறும் வசதியை ஹரியாணாவில் சோதனை முறையில் அமலாக்கப் போவதாக தெலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா கூறினார்.
ஆனால் இந்த முறையில் எதுவும் நடக்கவில்லை. தேதி மாற்றம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ம் தேதி நிச்சயம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு தருவோம் என்று அறிவித்துள்ளது தொலைத் தொடர்புத் துறை. அப்படியெனில் அமைச்சர் ராசா சொன்னது..?
அதை நினைத்துப் பார்க்கும் நிலையிலா அவர் இருக்கிறார்!!
‘உறுதியான ஒரு டெட்லைனை அறிவித்து, அதற்குள் அனைத்து நிறுவனங்களும் ‘விரும்பிய நெட்வநொர்க்குக்கு மாறும் வசதியை’ அறிமுகப் படுத்த வேண்டும். இல்லையேல் அபராதம் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அரசு அறிவிக்க வேண்டும். பயன்பாட்டாளர் மீது அக்கறை இருந்தால் அரசு இதைச் செய்யும்’ என்கிறார் ஒரு பிஎஸ்என்எல் அலுவலர்.
இந்த அரசிடம் இனியாவது அதை எதிர்ப்பார்க்கலாமா

இனி இந்தியா முழுக்க லோக்கல் தான்

தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன்களில் இனி எஸ்டிடி கட்டண முறையே (Subscriber Trunk Dialling – STD) இல்லாமல் செய்யப் போகிறது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.

இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து அழைப்புகளையும் இனி லோக்கல் கட்டணத்தில் இன்டர் ஸடேட் அழைப்புகளாக மாற்றப் போவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
 முதல் கட்டமாக இன்று (டிசம்பர் 1) அனைத்து வில் போன்களிலிருந்தும் (WLL) 1 ரூபாய் கட்டணத்தில் மூன்று நிமிடங்கள் பேசிக் கொள்ளும் வசதி அறிமுகமாவதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் (பெங்கால்) சவும்யா ராய் அறிவித்துள்ளார். எஸ்டிடி கோட் எல்லாம் அதேதான். ஆனால் எஸ்டிடி கட்டணம் கிடையாது. 1 ரூபாய்க்கு டெல்லிக்கும் பேசலாம்… அதைத் தாண்டியும் பேசிக்கொள்ளலாம்.

அதே நேரம் லேண்ட்லைனிலிருந்து செல்போனுக்கு அழைத்தால் 1 நிமிடத்துக்கு ரூ 1 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இதுவரை லேண்ட்லைன் இணைப்பு பெறுவோர், எஸ்டிடிக்கென்று தனியாக எழுதிக் கொடுக்க வேண்டும். இனி அதற்கான அவசியம் இல்லை. இனி அனைத்து லேண்ட்லைன்களுக்கும், இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
பிஎஸ்என்எல் இந்த அதிரடி முடிவுக்கு வர முக்கியக் காரணம், தரைவழி இணைப்பில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதுதான். தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 35000 இணைப்புகளை துண்டித்துக் கொண்டுள்ளனர் வாடிக்கையாளர்கள். பெங்கால் வட்டத்தில் இது 40000!
இந்த புதிய அறிவிப்பு மூலம் லேண்ட்லைன் துண்டிக்கப்படுவது பெருமளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்லின் இந்த முடிவு மற்ற தனியார் துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதே எஸ்டிடி கட்டணத்தின் அடிப்படையில்தான். தற்போது அவை கட்டாயமாக இந்தக் கட்டணத்தைக் குறைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை பிஎஸ்என்எல் ஏற்படுத்தியுள்ளது.

நோக்கியா, சாம்சங் இரண்டுமே ஆட்டங்கண்டு போயுள்ளன.

முதல் முதலாக இந்திய மொபைல் சந்தையில் இரட்டை சிம் கார்ட் வசதி கொண்ட போன்கள் வந்த சீனாவிலிருந்துதான். அதன் பிறகு சாம்சங்கும் நோக்கியாவும் போட்டிபோட்டுக் கொண்டு இரட்டை சிம் வசதி கொண்ட போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.

பொதுவாக பிராண்டட் மொபைல்களில் ஹை எண்ட் மாடல்கள் என்று போனால் குறைந்தபட்சம் ரூ 10000-க்கு மேல் செலவழிக்க வேண்டும். அப்போதுதான் ஜிபிஆர்எஸ், பிராட்பேண்ட், ஃபேஸ்புக் அக்ஸஸ் என பல பல வசதிகள் கிடைக்கும். ஆனால் இத்தனை வசதிகளையும் ரூ 2000 -லேயே பெற முடியும் ஜி பைவ் உள்ளிட்ட சீன மாடல்களில்.
இதன் விளைவு, இந்திய மொபைல் மார்க்கெட்டில் அசைக்க முடியாத பிராண்டுகளாகத் திகழ்ந்த நோக்கியா, சாம்சங் இரண்டுமே ஆட்டங்கண்டு போயுள்ளன. சமீபத்திய சந்தை கணக்கெடுப்புகளின்படி இந்திய மொபைல் சந்தையில் இரண்டாம் இடம் வகிப்பது ஒரு சீனத் தயாரிப்பு மொபைல்தான். அது ஜி பைவ்.

இந்த அந்தஸ்தில் இதுவரை கோலோச்சி வந்தது கொரிய நிறுவனமான சாம்சங். இப்போது சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது ஜி பைவ்.
2010- காலண்டர் ஆண்டில் மொபைல் போன் கருவிகள் விற்பனை விவரங்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் நோக்கியா முதலிடத்தில் உள்ளது. அதன் மார்க்கெட் அளவு 31.5 சதவீதம். ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீதம் குறைவாகும். இந்த 5 சதவீதத்தைக் கைப்பற்றி இருப்பது ஜிபைவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த சாம்சங் 8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்போதைய நிலவரப்படி 10.6 சதவீத மார்க்கெட் ஷேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ஜி பைவ்.
மிகக் குறைந்த விலையில் ப்ளாக்பெரி மாடலில் உள்ள அத்தனை வசதிகளோடும் ஜிபைவ் மொபைல்கள் கிடைப்பதால், மக்கள் நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல்களை விட்டு, ஜி பைவுக்குத் தாவி விடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிபைவ் மாடலில், அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போனின் அதிகபட்ச விலையே ரூ 3000 தான் என்பது குறிப்பிடத்தக்கது