Wednesday, December 29, 2010

இணைய பாதுகாப்பு - சாட்டிங், கிரெடிட் கார்ட் பாதுகாப்பு, கேமரா

இணையம் கைக்குள் உலகத்தை கொண்டுவந்துவிட்டது என்று சொல்வதை நிஜமாக்கி காட்டியிருக்கிறது. மின்காந்தமும் அதன் விளைவாக மின்சாரமும் முக்கிய கண்டுபிடிப்பாக இருந்த அறிவியலில் இப்போது கணினி மிகப்பெரிய சாதனையாக உள்ளது, அறிவியலின் அடுத்த கட்டம் DNA மரபணு, அண்டம் என விரிகிறது.


சரி, நாம் இங்கே பார்க்கப்போவது இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தத்தொடங்கிவிட்ட இணையம் அதாவது இன்டெர்நெட். அதில் பயனாளர்களின் பாதுகாப்பு. எவ்வாறு பாதுக்காப்பாக இணைய்ததில் உலா வரலாம்,எதை செய்யக்கூடாது, எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்பது பற்றி நடைமுறை மற்றும் பட்டறிவு கொண்டு அலசுவோம்.

ஏன் எதை எதிலிருந்து?

ஏன் பாதுக்காப்பாக இருக்கவேண்டும் அல்லது எதை பாதுகாக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஆனால் நம்மை பாதுகாக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் விளையும் என அறிந்து வைத்திருந்தால் பாதுகாத்தலின் அவசியம் புரியும்.

பொதுவாக ஒரு ஆணோ பெண்ணோ இணையத்தில் உலா வரும் போது அதிகமாக பயன்படுத்தும் சேவைகள் மின்னஞ்சல், தகவல் அறிதல் மற்றும் தகவல் பரிமாற்றம் இவைகளாகும்.

இவ்வாறான சேவைகளை பயன்படுத்தும் போது நம் சொந்த தனிப்பட்ட தகவல்களை பரிமாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? ஏன் என்றால் கணினி பயன்படுத்துவோர் அனைவருமே கணினி வல்லுநர்கள் அல்ல. இப்போது மிகச்சிறிய வயதிலேயே கணினி அறிவு கட்டாயமாகிறது மற்றும் வயதானவர்களுக்கும் தேவைப்படுகிறது. அதனால் சில மு்ககியமான தகவல்களை அறிந்து வைத்திருத்தல் எப்போதும் நலம் பயக்கும். அறியாமல் அல்லது தவறாக பயன்படுத்துதல் சில சமயம் பொருள் நஷ்டம், மான நஷ்டம், மன உளைச்சல், ஏன் உயிருக்கே உலை வைக்கும் சம்பவங்களும் ஏராளம்.

இந்த கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது

சாட் செய்யும் போது
பண பரிமாற்றத்தின் போது
இணைய உலாவும் போது
வைரஸ் மென்பொருட்கள்
சமூக தொடர்பு இணையதளங்களில்
...சில டிப்ஸ்

சாட் செய்யும் போது

இப்போது மொபைல் மூலமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னோடி முன்பு யூனிக்ஸ் OS ல் இருந்த இந்த சாட் வசதி. இப்போது வெறும் எழுத்து சாட் இல்லாமல் அது பேசுதல், பார்த்தே பேசுதல் வரை வந்திருக்கிறது. சரி நாம் வெளியே போகிறோம், பலர் நம்மை பார்க்கிறார்கள், பலருடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இதே போல் தானே இணைய சாட் வசதி, இதில் என்ன பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று கேட்டால் சரிதான். ஆனால் நாம் நேரடியாக ஒருவருடன் பேசுதல் என்பதின் அளவும் இணையம் வழி பேசுதல் என்பதன் அளவும் வகையும் வேறுபடுகிறது.

இணையம் வழி என்றால் மறுமுனையில் பேசுபவர் எப்படிப்பட்டர், எங்கிருக்கிறார், என்னசெய்துகொண்டிருக்கிறார், ஆணா பெண்ணா, வயதானவரா இல்லையா, அவரது நோக்கம் என்பது போன்ற விசயங்கள் தெரியாது. நேரடியாக பேசுவதில் இதில் சிலதை ஓரளவு கணிக்க முடியும்.

ஆணா பெண்ணா?

மறுமுனையில் இருப்பவர் ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்வதிலேயே மிக பலரும் சோதனைக்குள்ளாவதுண்டு.
ஒருவர் அது பெண்தான் என நம்புகிறீர்கள், அவர் எவ்வாறெல்லாம் தங்களை ஏமாற்றுவார் என அறிந்துவைத்துக்கொள்ளல் அவசியம்.

போட்டோ பார்த்திருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கு மிக பொருந்தும். அந்த நபர் ஒரே ஆளின் பல வகை படத்தை அனுப்பினாலும் அது பெண்தான் அல்லது அதே நபர் தானே என உறுதியாக சொல்ல முடியாது, ஏனெனில் இணையத்தில் பலருடைய படங்கள் கிடைக்கின்றன. அதை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அவர் போட்டோ தருவது நீங்களும் தரவேண்டும் என்பதற்கு அடையாளமாக இருக்கலாம்.

வெப்கேம் வீடியோ பார்த்திருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கும் மிகமிக பொருந்தும். ஏன் என்றால் ஒரு ஏற்கெனவே பதியப்பட்ட வீடியோவை சாட்டில் தன்னுடைய கோமரா வீடியோ என காட்ட கணினியை செய்து வைத்திருந்தால் பார்ப்பதை உண்மை என நம்பிவிடுவீர்கள்.

இதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

முக்கியமாக அதை பார்க்கும் போதே நிகழ் காலத்தில் நடந்தது போல் இல்லாமல் வேகமாக இருந்தாலோ அல்லது தெளிவில்லாமல், கேமரா கோணம் அதிக மாறி அசைந்தாலோ, சாதாரண வீடியோ படம் பார்க்கும் எண்ணத்தை கொடுத்தலாமோ இருந்தால் கொஞ்சம் யூகிக்கமுடியும், ஆனால் அதுவோ உண்மையாக இருக்கவேண்டியதில்லை.

ஆனால் அந்த வீடியோவின் மேல் எப்போதாவது வேறு படங்களோ எழுத்துக்களோ விண்டோக்களோ, டெக்ஸ்டாப் திரையோ தெரிந்தால் கண்டுபிடித்துவிடலாம். சரியாக இது நிஜமான தற்சமய வீடியோதான் என உறுதியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அந்த நபரிடம் ஏதாவது செய்யச்சொல்லுங்கள், சிரிக்கவோ, கையை காட்டவோ, இப்படி ஏதாவது. நிகழ் நேரத்தில் இது நடந்தால் கேமரா என தெரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே வெப்கேமராவில் எடுக்கப்பட்ட அல்லது பார்க்கும்போது பதியப்பட்ட வீடியோ எனில் கண்டுபிடிப்பது கடினம். (அதிகமாக பெண் அல்லது வேறு நபர் என சொல்லி சாட் செய்பவர் தான் இவ்வாறு நம் கேமராவையும் பார்க்க இவ்வாறு செய்யக்கூடும்)

அவருடன் வாய்வழியாக பேசியிருக்கிறீர்களா?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது இதற்கும் மிகமிக பொருந்தும். ஏன் என்றால் உங்களை ஏமாற்ற இதற்கும் கேமார மாற்றியது போல இதை செய்துவிடுவார்கள், இது நிகழ் காலத்திலேயே நடக்கும் ஆததால் கண்டறிவது கடினம். ஒரு பெண் பேசுவது போலவே இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்கும். கவனம். பேசுவது பெண்தானே என எல்லாவற்றையும் உளராதீர்கள், முக்கியமாக ஆண்களும் ஏமாறிவிடவேண்டாம்.

மொபைல் நம்பர் தருகிறார்களா?

பலர் மொபைல் நம்பர் கேட்கும் போது வேறு ஏதாவது பெண்களின் மொபைல் எண்களை தந்துவிடுவார்கள். நீங்கள் அழைத்தால் ஹலோ கேட்டு ராங் நம்பர் என வைத்துவிடுவார்கள். ஆனால் அந்த பெண்ணே இதற்கு உடந்தையாக இருந்தால் கண்டறிவது கடினம், இவ்வாறான தவறுகள் இணைய விபச்சார கும்பலில் நடக்கும். அதனால் தொலைபேசி எண் தந்துவிட்டாலே அவள் அப்படிப்பட்டவள் என தவறாக நினைத்துவிடாதீர்கள், அது அவர்களின் தன் நம்பிக்கையையையும் நம் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.

சரி இப்போது நம் பக்கத்தில் இருந்து பார்போம்.

போட்டோ கேட்பார்கள், கேமரா இருந்தால் பார்க்கமுடியுமா என கேட்பார்கள், மொபைல் எண் அல்லது சாட்டிலேயே வாய்வழி பேசமுடியுமா என கேட்பார்கள். இது முக்கியமாக பெண்களுக்கு.
இதில் எதை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பது முழுமையாக உங்களுடை பொறுப்பு.

உங்கள் போட்டோவை யார் பார்த்தாலும் பரவாயில்லை, பிரச்சனையில்லை என்றால் தாராளமாக கொடுக்கலாம். அப்படி கொடுக்கவேண்டாம் என்றால் சாட்விண்டோவில் கூட கொடுக்கவேண்டாம். பார்க்க மட்டும் தானே என நினைத்து கொடுத்தால் தவறு. அவர்கள் பார்க்கும் போதே அப்படத்தையும் சேமித்துவிடமுடியும், அப்புறம் அவர்கள் அதை தவறாக பயன்படுத்தவும் முடியும். அதாவது மற்றவர்களுடன் பவகும் போது உங்கள் விபரங்களையோ போட்டோவையோ கொடுத்து ஏமாற்ற வாய்ப்புள்ளது.

இதே போல் தான் வெப்கேமராவும். அவர் அதை பார்க்கும் போதே அதை வீடியோவாகவே சேமித்துக்கொள்ள முடியும். இதனால் மிக நெருங்கியவராக இருந்தாலும் அளவோடு நிறுத்திகொள்ளுதல் நலம்.

மிக முக்கியமாக இணைய மையங்களில் (Browsing center) இருந்து இணையம் பயன்படுத்துபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவும், ஏனென்றால் தலமையிடத்திலிருந்து உங்கள் கணினி திரையை பார்க்கும் வசதி செய்திருந்தால் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதாவது உங்களை கணினி திரையை அவர்களும் பார்வையிடமுடியும் என்பதை மறவாதீர்கள்.

அரட்டையில் உரையாடியதை சேமிக்கிறீர்களா?

நாம் அரட்டையில் உரையாடும் போது அதை அப்படியே சேமித்து வைத்துக்கொள்ள பல தளங்கள் வாய்ப்பளிக்கிறது. இத பல நேரங்களில் மிக நல்ல வசதி. ஆனால் என்றாவது ஒரு நாள் உங்கள் மின்னஞ்சல் பிறர் கைக்கு கிடைத்துவிட்டால்? யோசியுங்கள், தேவையான உரையாடல் மட்டும் சேமித்துவைத்துக்கொள்வது நல்லது.

அரட்டைக்கு எந்த முகவரியை பயன்படுத்துகிறீர்கள்?

எப்போதுமே பொதுவான அரட்டைக்கு நம் தனிப்பட்ட மின்னச்சல் ஐடியை பயன்படுத்தாமல் அதற்கென்று பொதுவான ஐடியை பயன்படுத்துவது நல்லது. அதுவும் அலுவலக சூழலில் அல்லது பொது கணினிகளில், இணைய மையங்களில் இருந்து கொண்டு personal ஐடிகளை பயன்படுத்துவதை தவிற்கலாம்.

இதைத்தவிர நம் மின்னஞ்சல் முகவரியை நம் துணைக்கும் பிற்காலத்தில்
பார்வையிட அனுமதிப்போம் என்பதை மறவாதீர்கள்.

இன்னும் சில

• அந்த நபருடன் எத்தனை நாள் பழக்கம் இதற்குமுன் நேரடியாக பழகியவரா இல்லையா என்பதை ஒருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.

• அந்த நபர் எவ்வாறு எங்கே நமக்கு அறிமுகமானார் என நினைவில் கொள்ளுங்கள்.

• அவர்களாக உங்களை சாட்க்கு அழைத்தார்களா அல்லது நீங்களாக இணைந்தீர்களா என்பதையும் யோசியுங்கள்.

• நாம் பேசும் விசயம் அல்லது மறுமுனையில் இருப்பவருக்கு சொல்லும் விசயங்கள் நிஜமாகவே தேவைதானா என ஒருமுறை யோசியுங்கள்.

• மின்னஜ்சல் ஐடியில் நடிக நடிகை போட்டோ வைத்திருப்பவர்கள், g.i.r.l, f, fe, s.e.x.y, 4u போன்ற வார்த்தைகள் வைத்திருப்பது இவைகளின் மேல் ஒரு சந்தேகக் கண் வைத்திருப்பது நல்லது. அது அவர்களது பொழுதுபோக்கு ஐடியாக இருக்கக்கூடும். (விபச்சார கும்பலில் சேர்ந்த ஆண் பெண்கள் ஆட்களை கவருவதற்காக இவ்வாறு பல கவற்சியான ஐடிக்களை பயன்படுத்தக்கூடும், ஆனால் இவ்வாறு இருந்தலே அவர்களை தவறாகவும் நினைக்கவேண்டாம்)

• ஒருவர் அடிக்கடி தேவையில்லாமல் தங்களை தொந்தரவு செய்கிறார் என்றால் தெரியாநிலை(invisible ) மோட் இருந்தால் அதை பயன்படுத்தலாம், அப்போது அவர் தாங்கள் நிகழ் நிலையில்(online) இல்லை என்று நினைக்கலாம். அல்லது அவர்களை தடுத்துவிடலாம். தேவையில்லாத நபர் சாட்டுக்கு அழைத்து மறுத்தும் மறுபடியும் அழைக்கிறார் என்ரால் அவர் சாட்டில் சேர்த்தபிறகு தடுத்து(block) விடலாம்.

• சாட் செய்வதற்கு முகபிரபலமான தளங்களின் நிஜமான முறையை மட்டும் பின்பற்றி அரட்டையடிக்கலாம். அதாவது yahoo, gmail, live பயந்படுத்துகிறீர்கள் என்றால் அவரவர்கள் கொடுத்துள்ள வழிமுறைகளில் மட்டும் உபயோகப்படுத்துங்கள், வேறு மென்பொருளில் இருந்து yahoo, gmail, live போன்று பயன்படுத்த வசதி இருந்தாலும் அதை பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். அல்லது அதன் நிஜமான தளத்தில் இந்த மாற்றுதளத்தினைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா என அறிந்து அவ்வாறு இருப்பின் மட்டுமே பயன்படுத்தவும்.

• Yahoo, gtalk, msn messenger தரவிரக்கம் செய்வோர்கள் அந்தந்த தளத்திலிருந்து மட்டுமே தரவிரக்கம் சேய்யவும், இதேபோல போலி மென்பொருட்கள் வேறு தளத்தில் கிடைக்கலாம், அதை பயன்படுத்துவதை தவிற்கவும். அதாவது yahoo வேண்டும் என்றால் yahoo தளத்தில் இருந்து தரயிரக்கம் செய்யப்பட்ட மென்பொருளை மட்டுமே பயன்படுத்துங்கள், இதே yahoo அரட்டை மென்பொருள் வேறு தளத்தில் கிடைக்கிறது என்றால் அது hack செய்யப்பட்ட பொருளாக இருக்கக்கூடும். அதை பயன்படுத்தினால் உங்கள் கணினியில் உள்ள மற்ற விபரங்கள், உங்கள் கேமரா போன்றவற்றை திருடலாம், அல்லது அதை hack சேய்தவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதே போல் அது செயல்படும்.

• உங்களுக்கு அடுத்தவர் குறிச்சொல்லை(பாஸ்வேர்ட்) திருடலாம் என செய்முறை விளக்கத்துடன் மடல் வந்தால் அதை உடனடியாக அழிப்பது நல்லது, அதில் கூறிய படி செய்தால் திருடப்படுவது உங்கள் குறிச்சொல்லாகும், இதற்காகவே பலரும் gmail, yahoo, live போன்ற பிரபலமான தளங்களில் pwdsupport, password.support, password.retrieve, போன்று பல பெயர்களில் மின்னஞ்சல் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு ஏற்கெனவே முயற்சித்து விட்டீர்கள் என்றால் உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவும்.

• உங்கள் பிள்ளைகள் யாருடன் சாட் செய்கிறார்கள் என்பதில் கவனம் தேவை.

• வேறு ஒருவர் எப்படிப்பட்டவர் என அறிய யாராவது நம்மை வேறு முகவரியில் இருந்து சோதிக்கக்கூடும் என்பதையும் மறவாதீர்கள்.

படிப்பவர்களுக்கு

• இந்த கட்டுரையை படிப்பவர்கள் இதில் கூறப்பட்ட வழிமுறையை தவிர்த்து வேறு வழியாக ஏமாற்றலாம் என்பதையும் நியாபகத்தில் கொள்க.
• இக்கட்டுரையில் பிற்காலத்தில் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் ஏற்படலாம்.
• இந்த கட்டுரை தங்கள் நண்பர்களுக்கு உதவும் என நினைத்தால் தளத்தில் பதியவோ அல்லது தனிமடலாக அனுப்பவோ எவ்வித மாற்றம் செய்யப்படாமல் எழுதியவர் பெயருடன் (நாந்தேன். ஹிஹி) அனுப்ப முழு உரிமை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment