Wednesday, December 29, 2010

கார் விலையை உயர்த்தியது டாடா - நானோ, ஆரியாவுக்கு விதி விலக்கு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இருப்பினும் நானோ மற்றும் ஆரியா ஆகியவற்றின் விலையை உயர்த்தவில்லை.

 
2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. 1.5 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கார்களுக்கான விலை உயர்வு இது. 

இருப்பினும் நானோ, ஆரியா ஆகிய கார்களுக்கான விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தவில்லை.

ஏற்கனவே ஹூண்டாய் மோட்டார்ஸ், ஜிஎம், வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது அந்த வரிசையில் டாடாவும் இணைகிறது.

நானோ கார்களின் விற்பனை படு மோசமான வீழ்ச்சியை சந்தித்திருப்பதால் அதன் விலையில் கை வைக்க விரும்பவில்லை டாடா மோட்டார்ஸ் என்று தெரிகிறது. மாறாக அதன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை அது முடுக்கி விடவுள்ளது.

No comments:

Post a Comment