Friday, April 29, 2011

45 ஆயிரம் இந்தியர்களை வேலைக்கமர்த்த மலேசிய அரசு முடிவு!


மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மலேசியாவைப் பொறுத்தவரை கட்டுமானத் தொழில், ஓட்டல்கள், பெரிய தோட்டங்கள் போன்றவற்றில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில ஏஜன்டுகள், வெளிநாட்டு ஆசை காட்டி பலரையும் மலேசியாவிற்கு அழைத்துச் செல்கின்றனர். கவர்ச்சியான சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த சூழலில், 45 ஆயிரம் இந்தியர்களை புதியதாக நியமிக்க மலேசிய அரசு முன்வந்துள்ளது. இருப்பினும், போலிகளிடம் யாரும் ஏமாற வேண்டாம் என, இந்தியத் தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலேசியாவில் பணி வாய்ப்பை தரும் நிறுவனத்தின் பின்னணி, வேலை வாங்கித் தரும் ஏஜன்ட் ஆகியோரைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு பின், பணியில் சேர வேண்டும் என்று தூதரக அதிகாரிகள் கூறினர். மலேசியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் வரை சம்பள பாக்கி வைத்துள்ளன. அத்துடன், இந்தியர்களை இழிவாகவும் நடத்தி வருகின்றன. இவ்வாறு பிரச்னையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில், நல்ல ஓட்டல்களில் பணியாற்றிய சிலரிடம், மலேசியாவில் மாதம் 35 ஆயிரம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, அவர்களை அழைத்து வந்த ஏஜன்டுகள், மலேசியாவில் ஒட்டல் வேலைக்கு சேர்த்தனர். ஆனால், நாளடைவில், அது பிளாட்பாரத்தில் உள்ள ஓட்டல் என்பது தெரிந்தது. இவ்வாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நன்றி-இந்நேரம்.காம் தகவல்-masdooka 

டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்


நாம் இணையத்தில் இருந்து பெரிய பைல்களையும் மற்றும் திரைப்படங்கள், கட்டண மென்பொருட்கள் ஆகியவைகளை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் டோரென்ட் மூலமாக தான் டவுன்லோட் செய்வோம். இணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யஏராளமான தளங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட தளங்களே வாசகர்களுக்கு மிக சிறந்த சேவையை தருகின்றன. அதில் சிறந்த பத்து தளங்களை கீழே அதில் உள்ள வசதிகளுடன் பட்டியலிட்டு உள்ளேன் கீழே பார்த்து பயனடைந்து கொள்ளவும்.
  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #1772
  • இணையத்தில் பிரபலமான தளமாகும். துவக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த அபார வளர்ச்சியை பெற்று உள்ளது.
  • இந்த தலத்தில் முழுக்க முழுக்க வீடியோக்கள், மற்றும் பாடல்கள் நிறைந்து காணப்படுவதாலே அனைவராலும் இந்த தளம் விரும்பப்படுகிறது.
  • இந்த தளத்தில் நீங்கள் ஒரு குறிச்சொல்லை கொடுத்து தேடினால் ஒரே வினாடியில் உலகளவில் உள்ள முடிவுகளை உங்களுக்கு தரும்.
  • இந்த தளத்தில் சுமார் 12 மில்லியன் டவுன்லோட் பைல்கள் 400 தளங்களில் இருந்து பெறப்பட்டு நமக்கு கொடுக்க படுகிறது.
  • நாம் கொடுக்கும் குரிசொல்லுக்கு ஏற்ப verify செய்யப்பட பைல்களையே நமக்கு கொடுக்கும். போலியான பைல்களை காண்பிக்காது.
ISOHunt
  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #245
  • இந்த தளம் 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. துவக்க படும் பொது குறைந்த அளவே வீடியோக்களும் பாடல்களும் இந்த தளத்தில் காணப்பட்டன.
  • ஆனால் தற்போது 37 மில்லியன் டவுன்லோட் பைல்களும் சுமார் 500 தளங்களில் இருந்து பெற்று தகவல்களை நமக்கு தருகிறது.
  • இந்த தளம் Isohunt, lite, Isohunt.hk போன்ற மூன்று வெவ்வேறு சர்வர்களால் நிவாகிக்க படுகிறது.
  • இந்த தளம் கூகுளிடம் இருந்து பாராட்டுதல் வாங்கிய தளமாகும்.
  • ஆனால் தற்போது இந்த தளத்தில் சில ஆபாச விளம்பரங்கள் வெளியிடபடுகிறது.

  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #175
  • பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் தளமாகும்.
  • இது ஒரு தேடியந்திரம் படி செயல்படுகிறது. மற்ற தளங்களில் இல்லாத ஒரு வசதி இது இது எந்த தளங்களில் இருந்து தகவல் எடுத்தது என்பதை அறிந்து கொள்ள முடியம்.
  • இந்த தளத்தில் விளம்பர பிரச்சினை அறவே இல்லை.
  • இந்த தளம் உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் டோரென்ட் பைல்களை பெற இந்த தளத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.
  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #4899 இடத்தை பெற்று உள்ளது.
  • இந்த தளம் 2005 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த தளத்திலும் ஏராளமான டோரென்ட் பைல்கள் கிடைக்கின்றன.
  • Bit Torrent பைல்களை டவுன்லோட் செய்ய இரண்டாவது பெரிய தளமாக இது திகழ்கிறது. 
  • இந்த தளத்தில் பல கட்டண மென்பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் எந்த வித அனுமதியும் இன்றி.

  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #89 வது இடத்தை பெற்றுள்ளது. 
  • இந்த தளம் 2003 ஆம் ஆண்டு வெளியிட பட்டது. சில காப்பி ரைட் செய்யப்பட பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய விரும்புவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.
  • இந்த தளம் தான் இணையத்தில் Bit Torrent பைல்களை டவுன்லோட் செய்யும் மிகப்பெரிய தளமாகும். 
  • இந்த தளத்தில் 27 மில்லியன் டோரென்ட் பைகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த தளம் உலகின் பல்வேறு மொழிகளில் காணப்படுகிறது.
  • இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #389 வது இடத்தை பெற்றுள்ளது.
  • இந்த தளத்தில் சுமார் 4 மில்லியன் டோரென்ட் பைல்கள் காணப்படுகிறது. 
  • இந்த தளம் கூகுளை போலவே வேலை செய்கிறது. மற்றும் இந்த தளத்தில் நாம் ஒவ்வொரு பைலுக்கும் ரேட்டிங் கொடுக்கும் வசதி உள்ளதால் சிறந்த பைல்களை நம்மால் கண்டறிய முடிகிறது.
  • மற்றும் இந்த தளத்தில் டோரென்ட் மெயில் வசதியும் உள்ளது. இதில் நம் மெயில் ஐடியை கொடுத்து பதிவு செய்து கொண்டால் புதிய டோரென்ட் பைல்களை சேர்க்கும் போது உங்களுக்கு அதனை பற்றி மெயில் அனுப்புவார்கள்.
  • இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #4297 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
  • இந்த தளம் Forum படி செயல்பட கூடியது. 
  • இந்த தளத்தில் நாம் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆனால் மட்டுமே இவ்வசதியை பெற முடியும். இது ஒரு இலவச சேவையாகும்.



  • இந்த தளம் புதிய தளமாகும் ஆகையால் அலெக்சா தரவரிசையில் இன்னும் இடம்பெற வில்லை.
  • இருந்தாலும் இந்த தளத்தில் எல்லா வகை டோரென்ட் பைல்களும் இலவசமாக கிடைக்கும். 
  • இந்த தளத்திலும் நாம் பைல்களை அப்லோட் செய்யும் வசதி உள்ளது.
  • இந்த தளம் பல மொழிகளில் கிடைக்கிறது. பல உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கிறது.
  • இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #5782 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
  • இந்த தளம் 2005ல் meganova என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2007 ல் Seedpeer என்ற பெயர் மாறி தற்போது வரை இந்த பெயரடோ சேவையை வழங்கி வருகிறது.
  • இந்த தளம் சிறப்பாக செயல்பட்டாலும் பல புதிய டோரென்ட் பைல்களை சேர்க்க வில்லை என்ற பிரச்சினை வாசகர்களுக்கு உள்ளது.
You Torrent

  • அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #47972 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
  • இந்த தளம் ஒரு புதிய தளமாகும். சிறிது காலத்திலேயே இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது.
  • இந்த தளம் பார்ப்பதற்கு ஒரு பிளாக் போலவே காணப்படும். அழகாகவும் இருக்கும்.
  • இந்த தளத்தில் நாம் டவுன்லோட் செய்யும் பைல்களை சமூக தளங்களுக்கு பகிரும் வசதியும் உள்ளது ஆகையால் நம் நண்பர்களுக்கு இதை தெரிவிக்கலாம்.
  • இந்த டொமைன் முதலில் pirateBay.com நிறுவனத்திடம் இருந்துள்ளது, பின்னர் இதை $20000 USD கொடுத்து இந்த நிறுவனம் வாங்கி உள்ளது.

உங்கள் போட்டோவையே படங்களின் மீது வாட்டர் மார்க்காக போட

பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் பிளாக்கரில் நாம் குறிப்பிடப்படும் செய்தி வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்க நம் பதிவில் அதற்க்கு சம்பந்தமான போட்டோவை இணைப்போம். ஒரு போட்டோ என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால் நாம் போட்டோவில் போதும் போது வாசகர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் உபயோகிக்கும் போட்டோவை நம் தளத்தில் மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுக்க அந்த போட்டோக்களின் மீது நம் தளத்தின் பெயரையோ அல்லது நம்முடைய பெயரையோ வாட்டர் மார்க்காக போடுவோம். அப்படி வாட்டர்மார்காக எப்படி நம்முடைய போட்டோவையே போடுவது என கீழே பார்ப்போம். இந்த வேலையை சிறப்பாக நமக்கு செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.


மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருள் பயன்படுதுவதர்க்கு மிகவும் எளிதாக உள்ளது. குழைந்தைகள் கூட இந்த மென்பொருளை உபயோக படுத்தும் அளவிற்கு எளிதாக உள்ளது.
  • இந்த மென்பொருளில் வாட்டர் மார்க்காக போட்டோக்களையும், எழுத்துக்களையும் நம் விருப்பம் போல் போட்டு கொள்ளலாம்.
  • போட்டோவின் அளவுகளையும், அடர்த்தியையும் நம் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • வாட்டர்மார்க்கை போட்டோவில் எந்த இடத்தில் தேவைஎன்றாலும் நகர்த்தி வைத்து கொள்ளலாம். 
  • இது முழுக்க முழுக்க சிறிய அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • டவுன்லோட் பட்டனை அழுத்தி முதில் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் அந்த விண்டோவில் உள்ள Open பட்டனை அழுத்தி நீங்கள் வாட்டர்மார்க் போட விரும்பும் படத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • pinnar நீங்கள் வாட்டர்மார்க்காக போட்டோவை போட ninaithaal Add Image Watermark என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இது போல விண்டோ வந்ததும் மேலே அம்புக்குறியிட்டு காட்டபட்டிருக்கும் காலி இடத்தில் க்ளிக் செய்து நீங்கள் வாட்டர்மார்க்காக வைக்க வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பின்பு அங்கு உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்கள் போட்டோவின் அளவையும், அடர்த்தியையும்(Opacity) வைத்து கொண்டு OK  க்ளிக் செய்தால் உங்கள் படத்தின் மீது வாட்டர்மார்க்காக நீங்கள் தேர்வு செய்த போட்டோ வந்திருக்கும். 
  • அந்த படத்தில் உள்ள வாட்டர்மார்க்கின் மீது க்ளிக் செய்து அதை உங்கள் விருப்பம்போல் நகர்த்தி கொள்ளலாம்.
  • இதே போல நீங்கள் வாட்டர் மார்க்காக வெறும் எழுத்துக்களையும் போட்டு கொள்ளலாம். 
  • வாட்டர் மார்க் செய்து முடித்ததும் File க்ளிக் செய்து Save as என்பதை அழுத்தி படத்தை சேமித்து கொள்ளுங்கள்.

வேலை வாய்ப்புக்கான கூகுல்



வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்.

அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம். வேலை வாய்ப்புக்கான் கூகுல் என்றும் சொல்லலாம்.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;    http://www.jobsearch.in

இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம்,

நாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம், புகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம் எளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை எழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று தெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு உதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.uploadnsell.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம் உருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே உலக அளவில் விற்கலாம். Choose File என்ற பொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து Product Information என்பதில் நாம் விற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க வேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய தகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும் கொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும் விற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக் செய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது இமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்.

வாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால் வழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos, நாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை எளிதாக விற்க உதவும்.

1G, 2G, 3G,4G என்றால் என்ன?


இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.


1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
 


2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
 


2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
 


3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.  


 4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors): 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]

2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)