Friday, April 29, 2011

தனி மனித சுதந்திரத்திற்கு தடை போடும் புதிய தொழில்நுட்பம்: ஐபோனின் அடுத்த பரிணாமம்.



வெளியே சென்று சிறிது நேரம் தாமதம் ஆனாலே ஏன் இவ்வளவு தாமதம்? எங்கு சென்றீர்கள்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும்.சொன்னால் தானே பிரச்சனை ஆகிவிடுமே. அதனால் "ஓபீசில் ஓவர் டைம்" என்று சமாளிப்பவர்கள் உண்டு. ஆனால் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் இப்படி சொல்ல முடியாது.
காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மாலையில் வீடு வந்து சேர்கிற வரையில் எங்கெங்கு போனோம் என்பதை ஐபோனில் உள்ள "டிராக்கர்" வசதி தெரிவித்து விடும்.இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பேசுவது, எஸ்.எம்.எஸ் மட்டுமின்றி கமெரா, மீடியா பிளேயர் மற்றும் 3ஜி இணைப்புகள், ஜிபிஎஸ் வசதி, இமெயில், இணையம் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டவை ஸ்மார்ட்போன்கள்.
உலக அளவில் இதில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். இதில் ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் "டிராக்கர்" என்ற மென்பொருள் உள்ளது. ஐபோன் எந்த இடத்தில் இருக்கிறது என்பது இதன் உதவியுடன் தொடர்ந்து பதிவாகும்.எத்தனை மணிக்கு எந்த இடத்தில் ஐபோன் இருந்தது என்பது நமது கணணியில் நிமிட வாரியாக தானாக பதிவாகிவிடும். ஏறக்குறைய டைரி போல இதை பயன்படுத்த முடியும். இந்த வசதி வேண்டாம் என்று மறுக்க முடியாது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களது இருப்பிடம் பற்றிய அனைத்து தகவல்களும் கணணியில் சேகரமாகிக் கொண்டே இருக்கும். வேண்டாத நண்பர்களோ, வெறுப்பில் இருக்கும் மனைவியோ இதன் மூலம் உங்களை உளவு பார்க்க முடியும்.தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் இந்த வசதியை ஐபோன் ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment