Saturday, March 5, 2011

ஒரு சுண்டெலியின் கதை


Surekha Panandiker எழுதிய இந்தக் கதைப் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்தவர் Mrinal Mitra. வெளியீடு: Children’s Book Trust (CBT), புது தில்லி., 1989 (முதல் பதிப்பு 1984). இது ருஷ்ய சிறுவர் நூல்களில் இருக்கும் ஓவியங்களின் தரத்திற்கு இருக்கிறது.
இந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்:
இதையும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்:
மிருணாள் மிஷ்ரா இப்போது டிஜிட்டல் ஊடகத்திலும் வரைகிறார். அவர் National Book Trust, Simon & Schuster, Scholastic, UNICEF, Oxford University Press, Cambridge University Press, Longman என்று பல பதிப்பகங்களுக்கு வரைந்து கொடுத்திருக்கிறார்.

அதிக தாகம்- ஒரு பிரச்சினையா?





தாகவிடாய், அடங்காதாகம் ஆயுர்வேதத்தில் திருஷ்ணா எனப்படுகிறது. வழக்கமாக ஏற்படும் தாகத்திற்கும் இதற்க்கும் வித்தியாசம் உண்டு. அசாதாரணமான அடங்காததாகம் ஒரு நோய்

தாகம் என்ற உணர்வு மூளையால தூண்டப்படுகிறது. இந்த உணர்வு உடலில் நீர் தேவை ஏற்ப்பட்டால் உண்டாகும் உடலில் நீர் அதிகம் உள்ள போது தாகம் எடுக்காது. தவிர, உடல் இன்னொரு விதத்திலும் தண்ணீர் சமச்சீர் விகிதத்தை, பிட்யூட்டரி சுரப்பியால் பாதுகாக்கும்.  உடலின் தண்ணீர் இருப்பு குறையும் போது பிட்யூட்டரி சுரப்பி vasopressin என்ற ஹார்மோனை சுரக்கும். இது சிறுநீரகத்தில் தண்ணீரை சேமிக்கவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கவும் கட்டைளையிட்டு உதவும். தண்ணீர உடலில் அதிகம் இருந்தால் அதையும் பிட்யூட்டரி சுரப்பி அட்ஜஸ்ட் செய்யும்.
தண்ணீர் நம் உடலில் நமது எடையின் பாதி அளவு , அல்லது மூன்றில் இரண்டு அளவு என்ற கணக்கில இருக்கும். கொழுப்பு திசுக்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். பெண்கள் ஆண்களை விட உடல் பருமன் அதிகம் இருப்பதால், பெண்கள் உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறைவாக இருக்கும்.(52லிருந்து55 சதவீதம்) ஆண்களில் தண்ணீர் அளவு 60% கூட இருக்கும். உடலின் தண்ணீரை இங்கும் அங்கும் மாற்றும் சக்தி நம் உடலில் உள்ளது. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் தண்ணீர் குடித்தால் நல்லது. குறைவாக குடிப்பதை விட, அதிகமாக தண்ணீர் குடித்தல் நல்லது.

நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் மூலம் தண்ணீர் வெளியாகிறது. எண்ணெய் மிகுந்த உப்பான உணவுகள் தாகத்தை அதிகரிக்கும். வாந்தியிலும்,பேதியிலும் தண்ணீர் வெளியேறும். தண்ணீர்  சிறுநீரக கற்களை தவிர்க்க, சிறுநீர்ப்பைகளில் தொற்றுநோய் வராமல் பாதுகாக்க, இவையெல்லாம் சாதாரணமான நடைமுறை தண்ணீர் தேவைகள், ஆனால் அடங்காத தாகம் வேறுவிதமானது.

நீரிழிவு வியாதிகள் ஒரு வகை diabetes insipidous, இதற்கும் diabetes mellitus க்கும் உள்ள ஒரே ஒற்றுமை -அதிக அளவு சிறுநீர் கழித்தல் இவை இரண்டும் வேறு, வேறு. diabetes insipidous, ல் பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவு ஹார்மோன் vasopressin ஐ சுரக்காததால் அடங்காத தாகம் ஏற்படும். 4லிட்டரிலிருந்து 40 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. சிறுநீர் அபரிமிதமாக, அதுவும் இரவுகளில்  போகும்.இதே நிலை நீரிழிவு வியாதியிலும் (diabetes mellitus)  இதில் இன்சுலின் இல்லாததால்  சிறுநீர் அதிகம் வெளியேறி அடங்காத தாகம் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, அதிக உடல் உழைப்பு, பலவீனம், நரம்புத்தளர்ச்சி, இவற்றால் வாதமும், கோபதாபம், கெடுதலான உணவுகள், பட்டினி, இவற்றால் பித்தமும் உண்டாகி தாகவிடாயைத் தூண்டும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்:

காய்ச்சப்படாத புதுப்பால் இரண்டு கிளாஸ் குடிக்காலாம்.

கொத்தமல்லி விதைகள், நெல்லிக்கனிகள், சுக்கு, உலர்ந்த திராட்சை, இவற்றால் செய்த கஷாயத்தை  குடித்தால் தாகம் அடங்கும்.

மாவிலை, நாகப்பழ மர இலைகள், அத்தி இலைகள், இவற்றின் சாறுகள், 5-10 மி.லிட்டர் அளவில் மூன்று வேளை குடிக்கலாம்.

மஞ்சள் சேர்ந்த கஷாயம் குடிக்கலாம்.

சந்தனப்பொடி சேர்த்த இளநீர் அடங்காத தாகத்திற்கு நல்லது.

ஜம்பீராதி பானகம். நெல்லி ரசாயனம், குடூச்சி, சத்வா, போன்ற மருந்துகள் குணம் தரும்.

போனஸ் தகவல்:

சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தண்ணீர் அருந்துதல் செரிமானத்திற்கு நல்லது

குளிப்பதற்கு முன்  தண்ணீர் அருந்துதல் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வருவதை தவிர்க்கலாம்.

SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க


நண்பர்களே! sento- மெனுவை பயன்படுத்தாத கணினிப்பயனாளர்களே இல்லை எனலாம்.இவற்றில் நமக்குத்தேவையான டிரைவையோ போல்டர்களையோ எப்படி சேர்ப்பது என்பதைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீங்கள் செல்ல வேண்டிய வழி:
மை கம்ப்யூட்டர்>சி டிரைவ்>டாகுமென்ட் அன்ட் செட்டிங்ஸ்>அட்மினிஸ்ரேட்டர்
அல்லது உங்கள் பயனர்பெயர் உள்ள போல்டர்.
இவ்வாறு சென்றால் அங்கு சென்ட்டூ போல்டர் இருப்பதை காணலாம். இந்த போல்டர் ஹைட் செய்யப்பட்டு இருப்பதால் சிறிது மங்கலாக தெரியும். போல்டர் அங்கு இல்லையென்றால் இவ்வாறு செல்லுங்கள்
05

ஸ்டார்ட்மெனு>கன்ட்ரோல்பேனல்>போல்டர்ஆப்சன்>வியூ  (அல்லது)
மைகம்ப்யூட்டர்>டூல்ஸ்>போல்டர்ஆப்சன்>வியூ –சென்றவுடன் அங்குள்ள
show hiddenfiles and folder –என்பதை தேர்வுசெய்து ஓ.கே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது உங்களுக்கு சென்ட்டூ போல்டர் வந்திருக்கும்.
கீழே உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் உள்ளதை பாருங்கள்.
01

படத்தில் உள்ளவாறு சென்ட்டூ போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.பிறகு மைகம்ப்யூட்ரையும் ஓப்பன் செய்யுங்கள்.படம் கீழே:
02
மேலே  உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் மற்றும் மைகம்ப்யூட்டர் இரண்டையும் ஓப்பன் செய்து விண்டோவை சுருக்கி அருகருகே வைத்துள்ளேன்.இப்பொழுது மைகம்ப்யூட்டர் விண்டோவில் உள்ள உங்களுக்கு விருப்பமான,தேவையான டிரைவ் அல்லது போல்டரை சென்ட்டூ போல்டருக்கு இழுத்துவிட்டுவிடுங்கள். அதாவது டிராக் அன்ட் டிராப் செய்யுங்கள். இப்படி நான் சில டிரைவ்களை சென்ட்டூ போல்டரில் இழுத்துவிட்டு உள்ளேன். படம் கீழே:
03
இழுத்துவிட்டு விட்டீர்களா? அவ்வளவுதான் நண்பர்களே! இப்போது ஏதேனும் போல்டரிலோ அல்லது பைலிலோ ரைட்கிளிக் செய்து சென்ட்டூ ஆப்சனுக்கு சென்று பாருங்கள். நீங்கள் இழுத்துவிட்ட டிரைவ் அல்லது போல்டர் அங்கு வந்திருக்கும். இனி நீங்கள் எந்த பைலையும்,போல்டரையும் உங்களுக்கு விருப்பமான டிரைவ் அல்லது போல்டருக்கு சென்ட்டூ ஆப்சன் மூலம் அனுப்ப அல்லது காப்பி செய்ய இயலும்.படம் கீழே:
04
நன்றி! நண்பர்களே இந்த விடயம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் புதியவர்களுக்காக என்னால் இயன்ற வரை எளிதாக எழுத முயன்றுள்ளேன்.இந்தப் பதிவைப்பற்றி கருத்துளை தெரிவிக்கலாமே….மீண்டும் இந்தப் பதிவை பொறுமையாக படித்த உங்களுக்கு என் நன்றி..

ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற:


நாம் கணினியில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பலவகையான ஆப்சன்களை தேடிப்பிடித்துப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். இந்தப்பதிவில் நாம் காண இருக்கும் மென்பொருளின் மூலம்  நீங்கள் அதிகமாக அடிக்கடி பயன்படுத்தும் பயன்பாடுகளை ரைட்கிளிக் மெனுவில் கொண்டுவரலாம்.

மென்பொருளின் பெயர்: shelltoys
தரவிறக்கம்:  இங்கே சொடுக்குங்கள்
மென்பொருளின் விளக்கப்படம்:
14

நண்பர்களே! மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு பைலில் ரைட்கிளிக் செய்தால் மேலே உள்ள படத்தில் கண்டபடி செல்டாய்ஸ் என்பதில் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் நீங்கள் பலவிதமான பயன்பாடுகளை காணலாம். உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நண்பர்களே… மேலே உள்ள மெனுவில் கடைசியாக உள்ள செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.
001

மேலே உள்ள படத்தில் உள்ளவாறு நீங்கள் ரைட்கிளிக் மெனுவில் வேண்டாதவற்றை நீக்கவோ, வேண்டிய ஆப்சனை சேர்க்கவோ முடியும்.
002
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு இடது புறத்தில் உள்ள ஹாட்கீஸ் என்பதை தேர்வு செய்தபின்பு எனேபிள் ஹாட்கீஸ் என்ற செக் பாக்சை தேர்வு செய்து பின்பு செட் ஹாட்கீஸ் என்பதையும் தேர்வு செய்தால் தோன்றும் சிறிய விண்டோவில் ஒவ்வொரு மெனுவிற்கும் தனித்தனியாக சுருக்குவிசைகளைப் பெற முடியும்.
003004
மேலே படத்தில் உள்ளவாறு இடதுபுற மெனுவில் கிளிப்போர்டு என்பதை தேர்வு செய்து எனேபிள் கிளிப்போர்டு என்ற செக்பாக்சை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்பு இதற்கான சுருக்குவிசையை செட்ஹாட்கீ என்பதை கிளிக் செய்து உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்பு உருவாக்கிய சுருக்குவிசையை அழுத்துங்கள்.உங்களுக்கு கிளிப் போர்டு விண்டோ வரும்.மேலும் இந்தப்பகுதியில் எத்தனை முறை நீங்கள் காப்பி செய்வதை சேமிக்க வேண்டும் என்பதையும். கணியை மறுதுவக்கும் போது சேமித்தவற்றை நீக்கவேண்டுமா, வேண்டாமா? என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.கிளிப் போர்டு விண்டோ கீழே உள்ளவாறு இருக்கும்.
006
கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஏதேனும் ஒரு போல்டரை ரைட்கிளிக் செய்து செல்டாய்சை தேர்வுசெய்து வரும் மெனுவில் போல்டர் கலர் என்பதை தேர்வு செய்து ச்சூஸ் கலர் என்பதில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி போல்டரின் கலரை மாற்றிக்கொள்ள முடியும்


007
008
நண்பர்களே பயன்படுத்துங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி

புகைப்படங்களை ஜூம் செய்ய....


 நம்மிடம் உள்ள புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழக்கமாக நாம் பெரிதாக்க முயற்சி செய்கையில், அதனுடைய resolution பாதிக்கப்படுவது இயல்பு. சில சமயங்களில் நமது மொபைல் போன்களில் எடுக்கும் படங்களை பெரிதாக்கி பிரிண்ட் செய்யும் பொழுது படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கலாம். 


நமக்கு தேவையான அளவில் படங்களை பெரிதாக்க ஒரு இலவச மென்பொருள் SmillaEnlarger (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த மென் பொருள் கருவிக்கு installation தேவையில்லை. தரவிறக்கி unzip செய்தபிறகு SmillaEnlarger ஃபோல்டருக்குள் உள்ள SmillaEnlarger.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது. 

கீழே உள்ள படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை இந்த கருவியை பயன் படுத்தி எப்படி பெரிதாக்குவது என்று பார்ப்போம்.

 
 SmillaEnlarger -இல் இந்த கோப்பை திறந்த பிறகு, இடது புறமுள்ள Output Dimensions பகுதிக்கு சென்று தேவையான அளவு - மாற்றங்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

இப்பொழுது cropping பேனில் படத்தில் ஒரு சிறிய பகுதியை தேர்வு செய்தவுடன்,

 
Thumbnail preview -இல் அந்த சிறிய பகுதி பெரிதாக, நாம் கொடுத்துள்ள அளவிற்கு தெளிவாக தெரிவதை கவனிக்கலாம். 
Enlarger Parameters பகுதியில் sharp, paint போன்ற வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். 


இதில் பல புகைப்படங்களை ஒரே  சமயத்தில் கையாளும் வசதியும் உள்ளது. 

 

இப்படியும் படம் எடுக்கலாம்



ஓர் எலியின் தற்கொலை முயற்சி



2010ன் புதிய கண்டுபிடிப்பு. ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!'


மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

ஆறு வகை மாரடைப்புமாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.

முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.
கோல்டன் ஹவர்முதல் 2 மணி நேரம் "கோல் டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.
இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.
கள்ளக்குறிச்சி பெண்
என்னிடம் சிகிச்சைப் பெற்ற பெண்மணி வயது 42, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். ஒரு மாதம் முன், ஆஞ்சியோ கிராம் செய்துப் பார்த்ததில் ஆஞ்சியோ கிராமில் எந்த அடைப்பும் இல்லை. மறுநாள் ஊர் திரும்பும் வழியில் மூச்சிரைப்பு படப்படப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம், ரத்த நாள சுருக்கம், கண்ணுக்கு தெரியாத மைக்கிராஸ் கோப் இதயத்தினுள் இருக்கும் நாளங்களில் சுருக்கம் அடைப்பும், இஸ்மியாவும், அர்த்திமியாவும் தான் காரணம்.
கூலித்தொழிலாளிஇதே போல இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, 20 வயது திருமணமான கூலித் தொழிலாளி பெண் சேலத்தைச் சேர்ந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இதை மருத்துவ சங்கத்தில் பேசும் போது, சில மருத்துவர் சிரித்தனர். இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுப் போனேன். இன்று ரத்த நாளத்தின் சிறியக் குழாய்கள் ஸ்பெசம் என்ற சுருக்கம் என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது.
மூன்றாவது வகைநீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.
நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.
ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.
ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.
என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம், 98401 60433.


"பளீச்' அறிகுறிகள்* மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
* வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
* திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
* உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.
தவிர்க்கலாம் நிச்சயம்என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.
அதை தவிர்க்க முடியும்... அதற்கு...
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
* உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.
டென்ஷன் "நோ' டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.

அனைத்தும் ஒரிஜினல் புகைப்படங்கள்