Saturday, March 5, 2011

SendTo-மெனுவில் கூடுதல் ஆப்சனை சேர்க்க


நண்பர்களே! sento- மெனுவை பயன்படுத்தாத கணினிப்பயனாளர்களே இல்லை எனலாம்.இவற்றில் நமக்குத்தேவையான டிரைவையோ போல்டர்களையோ எப்படி சேர்ப்பது என்பதைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீங்கள் செல்ல வேண்டிய வழி:
மை கம்ப்யூட்டர்>சி டிரைவ்>டாகுமென்ட் அன்ட் செட்டிங்ஸ்>அட்மினிஸ்ரேட்டர்
அல்லது உங்கள் பயனர்பெயர் உள்ள போல்டர்.
இவ்வாறு சென்றால் அங்கு சென்ட்டூ போல்டர் இருப்பதை காணலாம். இந்த போல்டர் ஹைட் செய்யப்பட்டு இருப்பதால் சிறிது மங்கலாக தெரியும். போல்டர் அங்கு இல்லையென்றால் இவ்வாறு செல்லுங்கள்
05

ஸ்டார்ட்மெனு>கன்ட்ரோல்பேனல்>போல்டர்ஆப்சன்>வியூ  (அல்லது)
மைகம்ப்யூட்டர்>டூல்ஸ்>போல்டர்ஆப்சன்>வியூ –சென்றவுடன் அங்குள்ள
show hiddenfiles and folder –என்பதை தேர்வுசெய்து ஓ.கே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது உங்களுக்கு சென்ட்டூ போல்டர் வந்திருக்கும்.
கீழே உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் உள்ளதை பாருங்கள்.
01

படத்தில் உள்ளவாறு சென்ட்டூ போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.பிறகு மைகம்ப்யூட்ரையும் ஓப்பன் செய்யுங்கள்.படம் கீழே:
02
மேலே  உள்ள படத்தில் சென்ட்டூ போல்டர் மற்றும் மைகம்ப்யூட்டர் இரண்டையும் ஓப்பன் செய்து விண்டோவை சுருக்கி அருகருகே வைத்துள்ளேன்.இப்பொழுது மைகம்ப்யூட்டர் விண்டோவில் உள்ள உங்களுக்கு விருப்பமான,தேவையான டிரைவ் அல்லது போல்டரை சென்ட்டூ போல்டருக்கு இழுத்துவிட்டுவிடுங்கள். அதாவது டிராக் அன்ட் டிராப் செய்யுங்கள். இப்படி நான் சில டிரைவ்களை சென்ட்டூ போல்டரில் இழுத்துவிட்டு உள்ளேன். படம் கீழே:
03
இழுத்துவிட்டு விட்டீர்களா? அவ்வளவுதான் நண்பர்களே! இப்போது ஏதேனும் போல்டரிலோ அல்லது பைலிலோ ரைட்கிளிக் செய்து சென்ட்டூ ஆப்சனுக்கு சென்று பாருங்கள். நீங்கள் இழுத்துவிட்ட டிரைவ் அல்லது போல்டர் அங்கு வந்திருக்கும். இனி நீங்கள் எந்த பைலையும்,போல்டரையும் உங்களுக்கு விருப்பமான டிரைவ் அல்லது போல்டருக்கு சென்ட்டூ ஆப்சன் மூலம் அனுப்ப அல்லது காப்பி செய்ய இயலும்.படம் கீழே:
04
நன்றி! நண்பர்களே இந்த விடயம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் புதியவர்களுக்காக என்னால் இயன்ற வரை எளிதாக எழுத முயன்றுள்ளேன்.இந்தப் பதிவைப்பற்றி கருத்துளை தெரிவிக்கலாமே….மீண்டும் இந்தப் பதிவை பொறுமையாக படித்த உங்களுக்கு என் நன்றி..

No comments:

Post a Comment