நாம் கணினியில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பலவகையான ஆப்சன்களை தேடிப்பிடித்துப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். இந்தப்பதிவில் நாம் காண இருக்கும் மென்பொருளின் மூலம் நீங்கள் அதிகமாக அடிக்கடி பயன்படுத்தும் பயன்பாடுகளை ரைட்கிளிக் மெனுவில் கொண்டுவரலாம்.
மென்பொருளின் பெயர்: shelltoys
தரவிறக்கம்: இங்கே சொடுக்குங்கள்
மென்பொருளின் விளக்கப்படம்:
நண்பர்களே! மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு பைலில் ரைட்கிளிக் செய்தால் மேலே உள்ள படத்தில் கண்டபடி செல்டாய்ஸ் என்பதில் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் நீங்கள் பலவிதமான பயன்பாடுகளை காணலாம். உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நண்பர்களே… மேலே உள்ள மெனுவில் கடைசியாக உள்ள செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு நீங்கள் ரைட்கிளிக் மெனுவில் வேண்டாதவற்றை நீக்கவோ, வேண்டிய ஆப்சனை சேர்க்கவோ முடியும்.
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு இடது புறத்தில் உள்ள ஹாட்கீஸ் என்பதை தேர்வு செய்தபின்பு எனேபிள் ஹாட்கீஸ் என்ற செக் பாக்சை தேர்வு செய்து பின்பு செட் ஹாட்கீஸ் என்பதையும் தேர்வு செய்தால் தோன்றும் சிறிய விண்டோவில் ஒவ்வொரு மெனுவிற்கும் தனித்தனியாக சுருக்குவிசைகளைப் பெற முடியும்.
மேலே படத்தில் உள்ளவாறு இடதுபுற மெனுவில் கிளிப்போர்டு என்பதை தேர்வு செய்து எனேபிள் கிளிப்போர்டு என்ற செக்பாக்சை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்பு இதற்கான சுருக்குவிசையை செட்ஹாட்கீ என்பதை கிளிக் செய்து உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்பு உருவாக்கிய சுருக்குவிசையை அழுத்துங்கள்.உங்களுக்கு கிளிப் போர்டு விண்டோ வரும்.மேலும் இந்தப்பகுதியில் எத்தனை முறை நீங்கள் காப்பி செய்வதை சேமிக்க வேண்டும் என்பதையும். கணியை மறுதுவக்கும் போது சேமித்தவற்றை நீக்கவேண்டுமா, வேண்டாமா? என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.கிளிப் போர்டு விண்டோ கீழே உள்ளவாறு இருக்கும்.
கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஏதேனும் ஒரு போல்டரை ரைட்கிளிக் செய்து செல்டாய்சை தேர்வுசெய்து வரும் மெனுவில் போல்டர் கலர் என்பதை தேர்வு செய்து ச்சூஸ் கலர் என்பதில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி போல்டரின் கலரை மாற்றிக்கொள்ள முடியும்
நண்பர்களே பயன்படுத்துங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி

|
No comments:
Post a Comment